மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது.
இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் இத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கானசான்றிதழ் சரிபார்ப்பும், நியமன கலந்தாய்வும் இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நவ., 25, 26ல் நடக்கின்றன. ஆசிரியர்தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இவ்வலுவலகத்தால் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அசல் கல்வி சான்றுகளுடன் காலை 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக