வெள்ளி, 28 நவம்பர், 2014

TRB PG Tamil : பெருங்குன்றூர் கிழார்


    பெருங்குன்றூர் கிழார் (338): இவர் வேளாண் மரபினர். இவர் பதிற்றுப் பத்தின் ஒன்பதாம் பத்தைப் பாடிச் சேரமான் குடக்கோ இளஞ் சேரலிரும் பொறையிடம் முப்பத்தீராயிரம் காணம் முதலிய பரிசில் பெற்றனர். வையாவிக் கோப்பெரும் பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனுடன் சேர்த்தற்கு அவனைப் பாடி அதனையே பரிசிலாகக் கூறினர். அகப்பொருளில் குறிஞ்சித் திணையை மிகுதியாகப் பாடியுள்ளார். தலைவி பருவங்கண்டு அழிந்தமையையே புலவர்கள் பெரும்பாலும் கூற, இவர், "தலைவன் வரவை அறிந்து மின்னி இடித்து வந்த மழைக்கு விருந்து என்செய்கோ" என்று தலைவி தோழியிடம் கூறுவதாகப்(நற்.112) பாடியுள்ளார். தலைவன் பிரிவினால் தலைவி நலமழிந்து வாடுவதற்கு நீரின்மையால் வருந்தும் வேனிற்றவளையை உவமை காட்டியுள்ளார். மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கிய புலவருள் இவரும் ஒருவராவர். இவர் பாடியனவாக நாம் இப்பொழுது அறிபவை: நற். 4: பதிற். ஒன்பதாம் பத்து; அகநா. 1; புறநா. 4. பன்னிரு பாட்டியலில் இவர் பாடியனவாகச் சில சூத்திரங்கள் உள்ளன. சிறு மேதாவியார், சேந்தம் பூதனார், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரர், பரணர் முதலியோர் இவர் காலத்தவர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக