தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை, இணையதளம் உள்ளிட்டவற்றின் மூலம் தருவதற்கான வாய்ப்புகள் குறித்து முடிவு எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் அகர்வால் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதி ஏ.கே. சிக்ரி அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், மூன்று வாரத்துக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டது. இது தொடர்பாக ராஜீவ் அகர்வால் சார்பில் வழக்கறிஞர் அமித் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோருவதையும், தகவல் அளிப்பதையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்காக தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும். சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய, மேல்முறையீடு செய்ய தனியாக ஒரு கால்சென்டரை உருவாக்க வேண்டும்.இந்த சட்டத்தின்படி, ஒருவர் தனக்கு வேண்டிய தகவல்களை எழுத்து மூலமாகவோ, அல்லது மின்னணு சாதனங்கள் மூலமாகவோ கோரலாம் என்று உள்ளது. ஆனால் அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை. இது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின கீழ் தகவல்கள் கோருவதையும், பெறுவதையும் கணினிமயமாக்குவதுடன், மின்னணு சாதனங்கள் மூலம் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. |
செவ்வாய், 4 நவம்பர், 2014
இணையதளம் மூலம் ஆர்.டி.ஐ. தகவல்கள்- பதிலளிக்கும்படிமத்திய, மாநில அரசுக்கு . உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக