பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை
பரிந்துரை செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
வேதியியல் பாடத்தில் 'பகுதி ஏ' பிரிவில் ஒரு மார்க் கேள்வியில் வினா 10 மற்றும் 22 ஆகிய இரு
கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு நான்கு விடைகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த கேள்விகளை எழுதி ஏ, பி, சி, டி., என ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டு இருந்தால் ஒரு
கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் இரண்டு கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் போனசாக வழங்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக