சனி, 22 ஜனவரி, 2011

ம்ம்ம்ம்...

குழந்தைகள் கல்வி பெறுவது வெறும் ஏட்டுக்கல்வி என்ற அளவிலேயே நின்றுவிடக்கூடாது என்ற கருத்தினை இன்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும். போட்டிகள் நிறைந்த உலகில் மனப்பாடம் செய்து அதனை வெளிப்படுத்தும் கல்விக்குமட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.மாணவர்களின் வயதுக்கும் வகுப்புக்கும் மீறிய பாடப்பொருள் தினிக்கப்படுகிறது இந்தநிலை மாற முதலில் பெற்றோர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும்.மாறுவோம்....

வெள்ளி, 21 ஜனவரி, 2011

எண்ணங்கள்

இன்றய அறிவியல் வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை மலைக்க வைக்கிறது. நம் எண்ணங்களை வெளியிடுவதற்கு ஒரு தளமாக இணயம் அமைந்துள்ளது.உடனுக்குடன் உலகளாவிய அளவில் கருத்துபரிமாற்றத்துக்கு உடனடியாக உதவும் இந்த தளத்தை தொடங்குவதில் மகிழ்வடைகிறேன். என் முன்னோர்கள் ,ஆசிரியர்கள், நன்பர்கள்,உறவினர்கள் ஆகியோருக்கு என் மானசீக வணக்கத்தையும்.இக் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்த
அறிஞர் பெருமக்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.