செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஜாமீன் மனு மீது நாளையே (புதன்கிழமை) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது.

ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனு மீது நாளையே (புதன்கிழமை) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது.

ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அவசர மனு ஒன்றை அளித்தனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்ட அந்த அவசர மனுவில், சிறைத் தண்டனைக் காலம் 10 ஆண்டுகளுக்கு மேல் இல்லை என்பதால், 389 (1) பிரிவின் கீழ், அரசு தரப்பு பதில் இல்லாமலேயே ஜாமீன் பெற முடியும் என்றும், எனவே ஜாமீன் மனுவை நாளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை ஏற்ற கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர், ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி, ஜெயலலிதா ஜாமீன் மனுவை சிறப்பு அமர்வு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரிக்கும்.

இதனிடையே, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி'குன்ஹா இன்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.ஏ.பட்டேலை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று காலை ஏற்றுக்கொண்டது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கால அவகாசம் கேட்டார்.

இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அனுமதி தரவில்லை என்றும், அதுதொடர்பான அறிவிப்பாணை வரும் வரை விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் பவானி சிங் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டார்.

ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.


ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனு மீது ஜெயலலிதாவுக்காக வாதாடுவதற்கு, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜாராகி இருந்தார்.

ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கால அவகாசம் கேட்டார்.

இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அனுமதி தரவில்லை என்றும், அதுதொடர்பான அறிவிப்பாணை வரும் வரை விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் பவானி சிங் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டார்.

கடந்த 27-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலி தாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் கோரும் மனுவை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.

கர்நாடகத்தில் தசரா விடுமுறையையொட்டி நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டதால் மிகவும் சிரமப்பட்டு மனு தாக்கல் செய்த‌னர். ஆனால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து கருத்துக் கூற ம‌றுத்துவிட்டனர்.

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து விசாரித்தபோது, ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அசோகன், பரணி குமார் ஆகியோர் வந்தனர். கர்நாட க‌த்தை சேர்ந்த வழக்கறிஞ‌ர்கள் மட்டுமே மனுவில் கையெழுத்திட முடியும் என்பதால், பெங்களூ ரைச் சேர்ந்த 4 வழக்கறிஞர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் வேணுகோபால், சசிகலாவுக்கு ஸ்ரீநிவாஸ், சுதாகரனுக்கு மூர்த்தி ராவ், இளவரசிக்கு அம்ஜத் பாஷா ஆகியோர் கையெழுத்திட்டு சரியாக 12.10 மணிக்கு ஜாமீன் மனு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நால்வரும் நான்கு முக்கிய மனுக்களை தாக்கல் செய்தனர். ஒவ்வொரு மனுவும் சுமார் 1,000 பக்கங்கள் கொண்டது. அதில் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரியும், தங்களது சொத்துகளை பறிமுதல் செய்ய விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மூன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இது தவிர நால்வர் தரப்பிலும் தீர்ப்புக்கும்,தண்டனையை ரத்து செய்யக்கோரியும் தலா இரு இடைக்கால தடை மனுக்களையும் தாக்கல் செய்தனர்.அவர்களுடைய மனுக்கள் உடனே ஏற்கப்பட்டு பதிவெண்கள் (835,836,837,838) வழங்கப்பட்டன.

ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா தரப்பின் இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதி ரத்னகலா, விசாரணையை திங்கள்கிழமைக்கு (அக்.6) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், ''எனக்கு 66 வயதாகிற‌து. ஒரு பெண்ணாக இருப்பதால் சிறை தண்டனை மிகவும் கடினமானது. இது தவிர நீரிழிவு நோய், இதய கோளாறு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கிறது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என கோரப்பட்டுள்ளது.

இதே போல ''பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல. ஏனென்றால், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி டி'குன்ஹா எனது வழக்கில் வருமான வரி தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பை கருத்தில் கொள்ளவில்லை. நான் வழக்கு காலத்தில் (1991-96) சேர்த்த சொத்துகள் அனைத்தும் சட்ட விரோதமானவை அல்ல. என் மீது எந்த குற்றமும் கூறப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு, எனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்''என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட நிபுணர்கள் குழு தீவிரம்

இதனிடையே, நீதிபதி டி'குன்ஹாவின் இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் மட்டுமில்லாமல் இந்திய நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு இந்திய அளவில் குற்றவியல் வழக்குகளில் அனுபவம் மிக்க சட்ட நிபுணர்கள் பெங்களூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 1,232 பக்க தீர்ப்பை இக்குழுவினர் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.
திங்கள், 29 செப்டம்பர், 2014

திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் ஆஜராகிறார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் ஆஜராகிறார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி. இதற்காக லண்டனில் இருந்து அவர் தாயகம் திரும்புகிறார். திங்கள்கிழமை அவர் இந்தியா வந்தடைகிறார்.

அவர் இங்கு வந்தடையும் முன்னர் ஜெயலலிதா சார்பில், ஜாமீன் வழங்கக் கோரியும் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில், முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார்.

அவர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத ்தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்தார்.

இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?இந்த ஆண்டு 2 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலாயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர "சி-டெட்" எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வையும், இதேபோல், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்குச் சேர ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் (டெட்) எழுத வேண்டும்.

கடைசியாக டெட் தேர்வு 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 17, 18-ந் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அதில் ஏறத்தாழ 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது நீதிமன்ற வழக்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) விதிமுறையின்படி, ஓராண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு தகுதித் தேர்வாவது நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் சி-டெட் தேர்வை சிபிஎஸ்இ இந்த ஆண்டு 2 சி-டெட் தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டது. முதல் தேர்வு கடந்த பிப்ரவரியிலும் 2-வது தேர்வு நேற்று முன்தினமும் நடத்தப்பட்டன.

ஆனால், தமிழகத்தில் டெட் தேர்வை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் தேர்வுக்கான அறிவிப்பையே வெளியிடவில்லை. தேர்வு தேதிக்கும் அறிவிப்புக்கும் சுமார் 3 மாதங்கள் காலஇடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் படிக்க முடியும்.

வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடத்துவதாக இருந்தால் இந்த மாதமே (செப்டம்பர்) அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், இன்னும் அதற்கான ஆயத்தப் பணிகளைக்கூட ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவில்லை.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர விரும்புவோர் "டெட்" தேர்வுக்கான அறிவிப்பினை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் தற்போது இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளும் புதிய "டெட்" தேர்வுக்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.


பதவியேற்பு விழாவில் கண்ணீர்விட்ட ஓ.பன்னீர்செல்வம்: படம்: எஸ்.ஆர். ரகுநாதன்
பதவியேற்பு விழாவில் கண்ணீர்விட்ட ஓ.பன்னீர்செல்வம்: படம்: எஸ்.ஆர். ரகுநாதன்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.

அமைச்சரவை இலாகாக்களில் மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | படம்: பி.அரவிந்த் குமார்

கண்ணீர் மல்க பதவியேற்பு

ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அழுத வண்ணமே இருக்கையில் அமர்ந்திருந்தார்.

பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார். மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர்.

பதவியேற்பின்போது கண்ணீர்விட்ட அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருந்தபோதே தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவராகத் தேம்பித் தேம்பி அழுதபடி இருந்தார் பா.வளர்மதி.

அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் பதவியேற்றபோது அழுதுகொண்டே உறுதிமொழியை ஏற்றனர். பா.வளர்மதி அமைச்சராக பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுதார்.

பதவியேற்பு விழாவில் கண்ணீர் மல்கிய அமைச்சர்கள். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

2-வது முறையாக முதல்வரானார்:

டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்வராக பதவியேற்றார்.

அதேபோல, இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

முதல்வர் பொறுப்பேற்றார்:

தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சந்தித்தார்.

பெங்களூர் விரைகிறார்:

தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அங்கு கையெழுத்திட்ட பின்னர் இன்று மாலை 4.45 மணி விமானத்தில் பெங்களூர் செல்கிறார். அவருடன் அமைச்சர்களும் பெங்களூர் செல்கின்றனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது முதல் பயணம் பெங்களூர் நோக்கி உள்ளது. தீர்ப்புக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலைதான் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

ஒருமனதாக தேர்வு:

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் தானாகவே பறி போனது. முதல்வர் பதவி காலியானதால், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி இழந்தது.

இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 3.20 மணிக்கு தொடங்கியது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டு மின்றி, வழக்கத்துக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் மூத்த தலைவர்கள், தேமுதிக அதிருப்தி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் டிஜிபி நடராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பெங்களூரில் இருந்து ஜெயலலிதா கொடுத்தனுப்பிய ஒரு கடிதத்தை கூட்டத்தில் படித்துக் காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல் வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மாலை 4.30 மணி அளவில் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச் சாமி உள்ளிட்டோர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். 6 மணி வரை அங்கு ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் ராஜ்பவனுக்கு புறப்பட்டனர்.

ராஜ்பவனில் ஆளுநர் கே.ரோசய்யாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவையும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் அளித்தார். சுமார் 10 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.

இதையடுத்து, ஆட்சி அமைக்க வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வம் தமிழகத்தின் 28-வது முதல்வரானார்.ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

நாட்டின் 42வது தலைமை நீதிபதியாக நீதிபதி ஹந்த்யாலா லஷ்மி நாராயணசுவாமி தத்து பதவியேற்றார்

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

TRB ANOUNCEMENT :Downloading TNTET certificates option is closed on 26-Sep-2014.TNTET certificates was uploaded on the web site of Teachers Recruitment Board. The facility of downloading the TNTET certificates was made available from 03-Sep-2014 to 25-Sep-2014. Downloading option is closed at 00.00 hrs on 26-Sep-2014.
 
 For further details contact TRB
 
044-28272455
+91 73730 08134
+91 73730 08144

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக மாவட்ட தலை நகரில் கலை போட்டிகள்

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக அந்தந்த மாவட்ட தலை நகரில் கலை போட்டிகள்
நடக்க உள்ளன. இதில் முதல் பரிசு பெறுவோருக்கு தலா ரூ. 10,000 பரிசு வழங்க
உள்ளனர்.தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றல்,
படைப்பாற்றலை வளர்க்கும் பொருட்டில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது இதில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒரு போட்டிக்கு, ஒரு மாணவர் வீதம் தலா மூன்று பேர், கல்லுாரி மாணவர்கள் இருவர் என, அந்தந்த மாவட்ட தலைநகரில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தேர்வை அந்தந்த பள்ளி, கல்லுாரி நிர்வாகம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை,கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கான போட்டி அக்., 1ம் தேதி, கல்லுாரி மாணவர்களுக்கு அக்., 9 ம் தேதி நடைபெறஉள்ளது. வெற்றி பெறும் முதல் மாணவருக்கு தலா ரூ. 10,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ. 7,000 பரிசாகவழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள், மாநில அளவில் சென்னையில் நடைபெறும்போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க உள்ளனர்.

'தமிழகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது'

'தமிழகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது' என ஆந்திரகல்வி குழுவினர் தெரிவித்தனர்.கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், கல்வி மேம்பாடு அடைந்தமாநிலங்களின் செயல்பாடுகளை அறிந்து வர, ஆந்திர அரசு திட்டமிட்டது. அதன் முதல்முயற்சியாக, ஆறு பேர் கொண்ட குழு, தமிழகத்தில் ஆய்வு செய்ய வந்துள்ளது.
சென்னையின் கல்வி நிலையங்களை ஆய்வு செய்து வந்த ஆந்திர மாநில குழுவில், மாநில உயர்கல்வி துறை செயலர், ஆர்.எம்.டாப்ரியல், உயர் கல்வி கவுன்சில் துணை தலைவர்விஜயபிரகாஷ், ஜே.என்.டி.யூ., பதிவாளர் ஹேமச்சந்திர ரெட்டி, ஈ.சி.ஈ.டி., கன்வீனர் சாய் பாபு, உயர்கல்வி துறை வழிகாட்டி அதிகாரி டேவிட் குமார் சுவாமி, தொழில்நுட்ப கல்வி துணை இயக்குனர் ஸ்ரீகாந்த்ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

அந்த குழுவினர், கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகம், ராணி மேரி கல்லுாரி,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, அண்ணா பல்கலை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின் அவர்கள் கூறியதாவது:தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்ய, சென்னை வந்தோம். தமிழகத்தில்,பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அண்ணா பல்கலையின் நிர்வாகம் சிறந்த முறையில்
நடக்கிறது. ரேண்டம் முறை, ஆராய்ச்சி படிப்புகள், கண்டு பிடிப்புகள் சிறப்பாக உள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் செயல்பாடுகளை பற்றியும் அறிந்து உள்ளோம். அதை எங்கள்மாநிலத்தில் எடுத்து கூற உள்ளோம். உயர்கல்வி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் மென் திறன் பயிற்சி,அரசு கல்லுரிகளில் வழங்கப்படும் உதவி தொகை, மடிக்கணினி திட்டங்கள் குறித்தும் ஆந்திர அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளோம்.அதை தொடர்ந்து, கர்நாடகா, குஜராத் மாநிலங்களிலும்,
ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கில வழி புத்தகத்தில் குளறுபடியான தகவல்

பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கில வழி புத்தகத்தில் குளறுபடியான தகவல்

பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கில வழி புத்தகத்தில், ஐரோப்பிய யூனியன்
உறுப்பு நாடுகள் பட்டியலில் இடம்பெற வேண்டிய நாட்டின் பெயரை விட்டுவிட்டு, இல்லாத
நாட்டின் பெயரைச் சேர்த்துள்ளது. மேலும்,ஒரு உறுப்பு நாட்டின் பெயரை சேர்க்கவும், கல்வித் துறை மறந்து உள்ளது.
சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள சமூக
அறிவியல், ஆங்கில வழி பாட புத்தகம், பக்கம் 46ல், ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆஸ்திரியாவில் துவங்கி இங்கிலாந்து வரை, 27 நாடுகள் இடம் பெற்றுள்ளன. உண்மையில், 28 நாடுகள்,உறுப்பு நாடுகளாக உள்ளன; குரேஷியா விடுபட்டுள்ளது.மேலும், 15வது உறுப்பு நாடாக,லைபீரியா குறிப்பிடப்பட்டுள்ளது. லைபீரியா, ஆப்ரிக்காவில் உள்ளது. லைபீரியாவிற்கு பதிலாக,லாட்வியா என்ற நாட்டின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். இப்படி குளறுபடியான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கியதன் மூலம் மாணவர்களும், தவறான கருத்துக்களை படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர் சிலர் கூறுகையில்,'மாணவர்களுக்கு, தவறான வரலாற்றை கூறக் கூடாது. இதில், எந்த சாக்கு போக்கும் கூறக் கூடாது. சாதாரணதவறு எனவும் கூறக் கூடாது. பாட புத்தகம் அச்சடிப்பதற்கு முன், ஒன்றுக்கு பலமுறை சரிபார்த்திருக்க
வேண்டும்' என, தெரிவித்தனர். பாட புத்தகங்களை எழுதுதல் மற்றும் சரிபார்க்கும் பணியை, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செய்கிறது. அந்நிறுவன வட்டாரம் கூறியதாவது:ஆசிரியர் குழுவினர், கவனமில்லாமல் செயல்பட்டதன்காரணமாக, இந்த தவறு நடந்துள்ளது. இந்த தவறை சரிசெய்ய, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அடுத்த
கல்வி ஆண்டில் வழங்கும் பாட புத்தகத்தில், சரியான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் பார்த்துக்கொள்வோம்.இவ்வாறு, நிறுவன வட்டாரம் தெரிவித்தது.

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும்சிறப்பு பயிற்சி

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும்சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என,சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக
தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நடந்த பணிநியமன கலந்தாய்வில் பங்கேற்ற, பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் பணி நியமன உத்தரவை பெற்று,பணியில் சேர்ந்தனர். இதில், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்.,30 மற்றும்அக்.,1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பட்டதாரி ஆசிரியர்களாக
நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2 நாட்கள் அந்தந்த மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம்,அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும், என்றார்.

தமிழகத்தில், இன்று, நடக்கஇருந்த, ரிசர்வ் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்காக தேர்வு,தள்ளி வைக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி, தமிழக பிரிவில், 35உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப, இன்று, தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தது. தமிழகத்தில், இந்த தேர்வை, 40 ஆயிரம் பேர் எழுத இருந்தனர்.இந்நிலையில்,பெங்களூரு நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கதில்,
முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டுகள்சிறை தண்டனை விதித்து, நேற்று, தீர்ப்பு அளித்தது. இதனால், தமிழகத்தில், சட்டம்,ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, பதற்றமான சூழல்
உருவாகியுள்ளது.இதையடுத்து, தமிழகத்தில், இன்று, நடக்க இருந்த, தேர்வை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள்,மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

மேல் முறையீட்டில் வெற்றி பெற்றால் அடுத்தநிமிஷமே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று மூத்தவழக்குரைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறு செய்யப்படும் மேல் முறையீட்டில் வெற்றி பெற்றால் அடுத்தநிமிஷமே ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளது எனவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவால், சிறைத் தண்டனையான நான்கு ஆண்டுகளும், அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளும் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என பல்வேறு தரப்பினரும்கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு மட்டுமே இறுதியானது அல்ல. இதற்கு மேல் இரண்டு மேல்
முறையீடுகள் உள்ளன.

இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறியது: முதல்வருக்கு அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை அனைவரும் ஒரு பக்கமாகவே பார்க்கின்றனர். இதற்கு மற்றொரு பக்கமும் உள்ளது. இந்தத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் முதல்வர்உள்பட நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்.
அந்த மேல் முறையீட்டை விசாரணை செய்து, சிறப்பு நீதிமன்றத்தின்உத்தரவுக்குத் தடை விதித்து உடனடியாக ஜாமீன் வழங்கவும் வாய்ப்பு உள்ளது. உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதன் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்.எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மீது நாடு முழுவதும் நிலுவையில் உள்ளவழக்குகளை உடனடியாக விசாரணை செய்து முடித்து வைக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். அதன் மூலம், முதல்வர் தாக்கல் செய்யும் மேல் முறையீட்டு வழக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் அதிகபட்சம்ஆறு மாதங்களுக்குள் முடித்து வைக்கவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மேல்முறையீடுகளில் முதல்வருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டால்,அடுத்த நிமிஷமே முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பதவியில் அமர முடியும். அதனால், இந்தத் தீர்ப்பை இறுதியாக நினைத்து 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது எனக் கூறுவது மிகவும் தவறானது என்றார் அவர்.
இது தொடர்பாக மற்றொரு மூத்த வழக்குரைஞர் கூறியது: கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், நீதிக்கும் விடுமுறை வழங்கப்பட்டு விட்டதாகக் கருத முடியாது.உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம், வழக்கின் தன்மை, அதன் முக்கியத்துவம்குறித்து எடுத்துரைத்து சிறப்பு அனுமதி பெற முடியும். அவ்வாறு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று உடனடியாக மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீட்டு நீதிமன்றத்தைப்
பொருத்து முதல்வருக்கு ஜாமீன் கிடைப்பது அமையும். அதனால்,சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை வைத்து மட்டும் எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது.

சனி, 27 செப்டம்பர், 2014

அடுத்த முதல்வர் குறித்து ஆலோசனை :நாளை(ஞாயிறு) அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நாளை(ஞாயிறு) நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் குறித்து ஆலோசனை செய்யப்பட
உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு கடந்து வந்த பாதை......

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி டிகுன்ஹா தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.. சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4ஆண்டு சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தும்தீர்ப்பளித்தார்.

தமிழக முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 3 மணிக்கு-DINAMANI

தமிழக முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 3 மணிக்கு வெளியாகும் என்று பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில்இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பரப்பன அக்ரஹார பகுதியில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பலர்வெளியேற்றப் பட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தீவிரபாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கு; தீர்ப்பு அறிவிப்பு மேலும் ஒத்திவைப்பு -DINAMALAR

NEWS UPDATE:1.30 PM: போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா வீட்டருகே 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குவிந்துள்ளனர். தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1.30 PM: போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா வீட்டருகே 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குவிந்துள்ளனர். தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். சுப்பிரமணியன் சுவாமி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் போஸ்டர்களை கிழித்தெரிந்தனர்.
1.25 PM: ஓசூர் செக்போஸ்டில், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் உருவ பொம்மைகளை அதிமுகவினர் எரித்து வருகின்றனர்.

1.20 PM: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்களை அப்புறப்படுத்த கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News update:1.17 PM

1.17 PM: தீர்ப்பு வழங்கப்படாத நிலையிலும், திமுக தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உற்சாகமாக காணப்படுகின்றனர்.
1.15 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், சென்னை போயஸ் கார்டனில், திமுக தலைவர் கருணாநிதி உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர்.

12.55 PM: நீதிமன்ற வளாகத்திற்குள் 4 வேன்களில் 500 போலீஸார் சென்றுள்ளனர். நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நீதிமன்ற
வளாகத்திற்குள் சென்றுள்ளன.

11.46 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக முதல்வர் - உதவி வழக்கறிஞர் திவாகரன் நீதிமன்ற வளாகத்தில் இருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிகழ்நேரப் பதிவு: . சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு-11.20 AM: ஜநீதிபதி டி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.

11.05 AM: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நீதிமன்றத்திற்குள் சென்றார்.
11.02 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதி டி.குன்ஹா நீதிமன்றத்திற்குள் சென்றார். அவரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகினர். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.
11.00 AM: அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.மோகன் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்தே வந்தடைந்தனர்.

நிகழ்நேரப் பதிவு: . சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு

10.55 AM: ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தனர்.

10.54 AM: நீதிமன்ற வளாகத்துக்குள் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவத்தை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் போலீஸார் அவரை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

10.50 AM: சரியாக 10.42 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த முதல்வர் ஜெயலலிதா காரில் இருக்கிறார். அவருடன் சசிகலா, இளவரசியும் உள்ளனர். 10.55 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

10.45 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், ஓசூர் சாலையில், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

10: 38 AM: நீதிமன்றத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா பச்சை நிற சேலை உடுத்தியிருந்தார். பச்சை நிறம் அவரது ராசியான நிறம் என்பது கவனிக்கத்தக்கது.

10.35 AM: வி.வி.ஐ.பி. பாஸ்கள் அளிக்கப்பட்ட அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள், பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

10.29 AM: நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் வந்தடைந்தனர்.

10.24 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் ஒரே காரில் பரப்பன அக்ரஹார நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

10.15 AM: செய்தியாளர்கள் வாகனங்கள் 3 கி.மீ தூரத்திலேயே நிறுத்தப்பட்டன. செய்தி சேகரிப்பதற்காக நீதிமன்றத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் செய்தியாளர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

10.10AM: நீதிமன்ற வளாகத்திற்குள், அதிமுகவினர் மதுரை ராஜன் செல்லப்பா, முத்துராமலிங்கம், சசிகலா புஷ்பா, செங்கோட்டையன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம் அமைச்சர்கள் செலூர் ராஜூ, மாதரவரம் மூர்த்தி, வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, ரமணா, சின்னையா, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.பி.,சரோஜா, காஞ்சி பன்னீர் செல்வம் மற்றும் எம்.பி.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10.05 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் பெங்களூரில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். அதேவேளையில், சென்னையில் அதிமுக தலைமைக் கழகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

10.00 AM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.குன்ஹா பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார்.

9.58 AM: செய்தியாளர்கள் வாகனங்கள் 3 கி.மீ. தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து செய்தியாளர்கள நடந்து செல்கின்றனர்.

9.54 AM: பரப்பன அக்ராஹாரா பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் கடைகள் மூடல்.

9.48 AM: முக்கியப் புள்ளிகள் வாகனங்கள் கூட ஒரு கி.மீ-க்கு முன்னதாகவே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து அவர்கள் நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9.45 AM: போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. அதிமுகவினர் மற்றும் அக்கட்சி வழக்கறிஞர்களுக்கு வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அனைவரையும் நடந்து செல்லுமாறே போலீஸார் வலியுறுத்துகின்றனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் செல்லும் வழியில் ஓசூர் சாலையில் அதிமுக தொண்டர்கள் குவிந்ததால், கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

9.40 AM: பெங்களூர் மடிவாலா முதல் எலக்டரானிக் சிட்டி வரையிலான 5 கி.மீ. தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

9.08 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதால், பெங்களூரில் அவர் வரும் வழி முழுவதும் கட்-அவுட், பேனர்களை அதிமுக-வினர் வைத்துள்ளனர்.

9.06 AM: பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறை வளாகத்திற்குள் தங்களை அனுமதிக்கக் கோரி 500-க்கும் மேற்பட்ட அதிமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூர் நீதிமன்ற வளாகத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு.

8.41 AM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, சிறப்பு நீதிமன்ற கட்டிடம் அமைந்துள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறை வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

8.41 AM: சென்னை - போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் பெங்களூர் செல்கிறார். முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் புறப்பட்டனர்.

8.40 AM: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் இணைக்கப் பட்டுள்ள நமது எம்ஜிஆர், ஜெயா என்டர்பிரைசஸ் உள்ளிட்ட 32 தனியார் நிறுவனங்கள் மீதும் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. |

வரலாறு காணாத பாதுகாப்பு

சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூரில் குவிந்துள்ளதால் நகரில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தமிழக எல்லையான ஓசூரில் தங்கியுள்ளனர். 6000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக எல்லையில் இருந்து பெங்களூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக் கப்படுகின்றன. பஸ், ரயில் மற்றும் விமானம் மூலமாக பெங்களூர் வரும் அனைத்து பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நீதிபதி டி'குன்ஹாவின் அசராத அணுகுமுறை

கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும், அசராத அணுகு முறையும் உள்ளது. |

 

நீதிமன்றத்தில் 10.55-க்கு தமிழக முதல்வர் ஆஜர்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசியுடன் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார். »


தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள நமது எம்ஜிஆர், ஜெயா என்டர்பிரைசஸ் உள்ளிட்ட 32 தனியார் நிறுவனங்கள் மீதும் தீர்ப்பு வெளியாக இருக்கின்றன.

சுப்பிரமணியன் சுவாமி வழக்கு:

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

வழக்கு குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தர விட்டார்.

இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது. மேலும் தீர்ப்பின் தேதி செப்டம்பர் 27-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:

சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.

எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளார்.

எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதம்:

ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக் கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக் கையும் தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியுள்ளார்.

மூன்று தரப்பு வாதங்களையும், வழக்கு சம்பந்தமான சுமார் 25 ஆயிரம் பக்க ஆவணங்களையும் 29 நாட்கள் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஆராய்ந்து சுமார் 1200 பக்க தீர்ப்பை தயாரித்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌ர். மூல வழக்கில் தீர்ப்பு வெளியாகும் இன்றே, வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 32 தனியார் நிறுவனங்கள் தொடர்பாகவும், ஜெயலலிதா மீதான கூட்டுசதி குற்றச்சாட்டு தொடர்பாகவும் தீர்ப்பு வெளியாகிறது.


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் முழு பின்னணி


தமிழக சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் :அடுத்த ஆண்டு முதல், தமிழ் பாடம் கட்டாயம்

தமிழக அரசு பாடதிட்டத்தை கடைபிடித்து வரும்பள்ளிகளில் மட்டும் அமலில்இருந்து வரும் கட்டாய தமிழ் பாட சட்டம்,அடுத்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ.,பள்ளி உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.இது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், பத்தாம் வகுப்பு வரை,அனைத்து மாணவர்களும், கட்டாயம் தமிழ் பாடம்படிக்கும் வகையில், தனி சட்டம்கொண்டு வரப்பட்டது.தமிழக அரசு பாடத்திட்டத்தை கடைபிடிக்கும், நர்சரி, பிரைமரி, ஆரம்ப, நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில், கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டம் அமலில்இருந்து வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயமாக உள்ளது.அடுத்த கல்வி ஆண்டில், அனைத்து பள்ளி மாணவர்களும், தமிழ் பாடத்தில், பொது தேர்வு எழுதுவர். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை அமல்படுத்தும்போது, மத்திய அரசு பாடத்திட்டத்தை அமல்படுத்தும், சி.பி.எஸ்.இ.,உள்ளிட்ட பள்ளிகளுக்கு, விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 'சி.பி.எஸ்.இ., உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பாட திட்டத்தை அமல்படுத்தும்பள்ளிகளிலும், அடுத்த ஆண்டு முதல், தமிழ் பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, கடந்த 18ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2006ல் இயற்றப்பட்டகட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின் கீழ், தமிழக அரசு பாட திட்டத்தை சேராத இதர பள்ளிகளும், அடுத்தஆண்டு முதல், தமிழ் பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும்.அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16), முதல்வகுப்பில், தமிழ் பாடம் கற்பிக்க வேண்டும். பின், படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீட்டிக்கப்படும். 2024 - 25ம் ஆண்டில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் பாடம் இடம் பெறும்.இவ்வாறு,அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது:தமிழ் அல்லாத பிற மொழியை, தாய் மொழியாககொண்ட மாணவர்களும், கண்டிப்பாக, தமிழ் பாடத்தை கற்க வேண்டும்.பொது தேர்வில், மொழிப்பாடவரிசையில், தமிழ் பாடம் தான் இடம் பெறும். ஆனால், தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை, விருப்ப பாடமாகபடிக்கலாம்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார். தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று, 565 தனியார் பள்ளி; 41, கேந்திரிய வித்யாலயா பள்ளி; 2,நவோதயா வித்யோதயா பள்ளி, ஒரு சைனிக் பள்ளி இயங்கி வருகின்றன.

முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில் தேர்வு?

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300,மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல்,வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம்nஉயர்த்தப்படும் என ஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள்பட்டியலை பள்ளி கல்வி துறை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார். இந்த பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள்,ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 900 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., மூலம் விரைவில் நடக்க உள்ளது.

கல்வி துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், "அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 பள்ளிகள்தரம் உயர்த்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் புதிதாக தலா ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,ஒரு தலைமை ஆசிரியர் என 1000 காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான புதிய ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்," என்றார்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஆண்ட்ராய்ட் ஜீனியஸ்:சென்னையின் புதல்வர் சுந்தர் பிச்சை


'இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா' என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006 -ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்து விட்டது.

கூகுள் சாம்ராஜ்யம்

எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது,கெட்டது,சரி,தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய இணைய உலகில் கூகுள் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. 52 ஆயிரம் பேருக்கும் மேலாக தற்போது இந்த கம்பெனியில் பணியாற்றுகின்றனர்.

அத்தகையப் பெரும் இணைய சாம்ராஜ்யத்தின் முதுநிலை துணைத்தலைவராகத் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார். 'ஆண்ட்ராய்ட் ஒன்' என்பதைப் புதிதாக கூகுள் அறிவித்த போது அவர் பிரபலமடைந்தார்.

ஆலமரமாய்…

சுந்தர் பிச்சை 2004-ம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார். 2011- ல் கூகுள் குரோம் ப்ரவுசர் ,

ஜிமெயில், ஆப்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான உலகளாவிய பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

2013 முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருளுக்கான பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

1998- ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் எனும் இரண்டு நண்பர்களால் இந்த கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.

ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தகவல்கள் கூகுளில் தேடப்படுகின்றன. அதி விரைவாக கூகுள் வளர்ச்சியடைந்துள்ளது.பல புதிய மென்பொருள் சேவைகளும் அதனால் வெளியிடப்பட்டுள்ளன.

ஜிமெயில் எனப்படும் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு கிளைகளை பரப்பி பிரம்மாண்டமான ஆலமரமாய் அது வளர்ந்துள்ளது.ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகள் ரூபாய் மதிப்பில் அதன் வியாபாரம் விரிந்துள்ளது.

விரியும் ஆதிக்கம்

சமீபத்தில் குரோம் ப்ரவுசர் என்னும் இணைய உலவியையும் கூகுள் வெளியிட்டது. அது தற்போது இணைய ப்ரவுசர்களின் மார்க்கெட்டில் 32 சதவீதத்தை கைப்பற்றி உள்ளது.

ஆண்ட்ராய்டு என்னும் செல்போனை இயக்கும் மென்பொருள்தளத்தையும் அது வெளியிட்டது. அதனால் செல்போன்களின் துறையில் பெரும்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கைகளில் விளையாடும் டச் ஸ்கிரீன் செல்போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் எனும் மென்பொருளும் ஒரு காரணம். தற்போது செல்போன் உள்ளிட்ட 120 கோடி கருவிகளில் ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்படுகிறது.

சென்னையின் புதல்வர்

சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தவர். மேல்படிப்புக்காக மேற்குவங்கத்தை சேர்ந்த கரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து படித்தாவர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்

எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ.

பட்டமும் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.

சுந்தர் பிச்சையைப் பற்றி கூகுள் நிறுவனத்தின் தலைவரான லாரி பேஜ் "அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கண்காணிப்பு, தொழில் முனைப்புத் திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்" எனப் பாராட்டுகிறார்.

சுந்தர் பிச்சையின் அப்பா சென்னையில் உள்ள பிரிட்டிஷ் பன்னாட்டு கம்பெனியான ஜிஇசியில் எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருந்துள்ளார். சுந்தர் பிச்சைக்கு 11வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

அடுத்த பாய்ச்சல்

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மென்பொருள் மூலம் தனது அடுத்த தயாரிப்புகளைத் திட்டமிட்டு வருகிறது. அவற்றில் தானே வழி அறிந்து செல்லும் கார், ஆண்ட்ராய்ட் டிவி மிக முக்கியமானவை கூகுள் திட்டமிடுகிற கார் தெருக்களில் ஒரு போது, இனி நீங்கள் உங்கள் காரில் எந்த இடத்துக்கு போக வேண்டும் எனக் குறிப்பிட்டு விட்டால் போதும்.

செயற்கைக்கோள்கள் மூலமாக உருவான வரைபடங்கள் மூலம் இயங்கும் கூகுள் மேப்ஸ் துணையோடு, உங்கள் கார் உலகின் எந்த மூலைக்கும் தரைவழியாகத் தானே வழிகளை அறிந்து செல்லும்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட டிவிகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது கூகுள் ஈடுபட்டுள்ளது. அப்படிப்பட்ட டிவிகள் வந்தால் அவை தற்போதைய தொழில்நுட்பங்களில் இயங்கும் டிவிகளை காலாவதி ஆக்கும். அவை புதிய தலைமுறை டிவிகளாக இருக்கும். உங்கள் குரல்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படக்கூடியவையாக இந்த டிவிக்கள் இருக்கும்.

கூகுள் கண்ணாடி எனும் கருவியை மாட்டிக்கொண்டாலே போதும் நம்மால் இணையத்தைப் பார்க்க முடியும் என அண்மையில் கூகுள் அறிவித்தது நினைவிருக்கலாம். அத்தகைய கருவிகள் இன்னமும் முழுமையாக மார்க்கெட்டுக்கு வரவில்லை. அவை எல்லாம் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன.

அத்தகைய திட்டங்களில் முக்கிய பங்காற்றுபவராக சுந்தர் பிச்சை உருவாகி உள்ளார். ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என அவர் அழைக்கப்படுகிறார்.