பீட்ரூட்டின் சிவப்பு நிறம், அதில் நிரம்பியுள்ள சத்துகளின் அடையாளம். மண்ணுக்கு அடியில் விளையும் இந்தக் காய் தரும் பலன்கள் என்ன? பார்ப்போம்:

l பீட்ரூட் சிவப்பாக இருப்பதற்கும், அது கையில் ஒட்டிக்கொண்டால் போகாமல் இருப்பதற்கும் காரணம் பீட்டா சயனின் என்ற வேதிப்பொருள், இது மிக நல்ல ஆன்ட்டி ஆக்சிடண்ட்.

l பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகம். எனவே, தொடர்ச்சியாகப் பீட்ரூட் சாப்பிட்டுவந்தால் மூளைத்தாக்கு (ஸ்டிரோக்), ரத்த அழுத்தத்தைத் தள்ளி வைக்கலாம்.

l மூளைக்கு ரத்தம் செல்வதைப் பீட்ரூட் மேம்படுத்துகிறது. அதனால், மூப்புமறதி (டிமென்ஷியா) பாதிப்பு குறையும்.

l அதேபோல பீட்ரூட்டைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேரும் விகிதத்தைக் குறைக்கலாம்.

l எந்த ஒரு உடல் உழைப்பு சார்ந்த செயல்பாட்டைச் செய்வதற்கு முன்னதாகவும் ஒரு குவளை பீட்ரூட் ஜூஸைக் குடித்தால், உற்சாகமாக வேலை செய்வதற்கான சக்தியை அது கொடுத்துவிடும்.