ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

பி.எட். கட் ஆப் வெளியீடு கலந்தாய்வு 28-ல் தொடக்கம்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் சேர 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் நேற்று இரவு வெளியிடப்பட்டது. பாடப்பிரிவு மற்றும் இடஒதுக்கீடு வாரியான கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதி தெரிவித்தார். விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி முடிவடைகிறது