வெள்ளி, 31 ஜனவரி, 2014

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்: வெயிட்டேஜ் முறை இரத்து செய்திட வழக்கு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல, இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது.
அதாவது பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே 15, 25, 60 மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.இது தேர்ச்சி சதவீதத்துக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்

தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் பாடங்களில் எளிதாக 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசணை 252 ஐ இரத்து. செய்திட வேண்டும் எனவும். சென்னை உயர்நீதி மன்றத்தில் சிலர் வழக்குதொடுத்துள்ளனர். இன்று (31.01.2014) அம் மனுக்கள் விசாணைக்கு வந்தன. மனுக்களை விசாணைக்கு ஏற்றுக்கொண்ட நீதியரசர் சுப்பையா அரசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்தவாரத்துக்கு ஒத்தி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சென்னை உயர்நீதிமன்றத்தில் PG/TET I / TET II-வழக்குகள் இன்றைய( 31 .01.14 ) விசாரணை நிலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி 31 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி விசாரணைக்கு வந்தன TET I / TET II வழக்குகள் அனைத்தையும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்தார். PG TRB OTHER THAN TAMIL வழக்குகளுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது குழு கூட்டம் 01.02.2014 சனியன்று காலை 10மணிக்கு திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது .






Sent from my iPad

பல்கலைக்கழகங்களைக் காப்போம்

சென்னைப் பல்கலைக் கழகத்தின் கம்பீரப் பொலிவு கொண்ட பேரவை (செனட் ஹவுஸ்) வாயிலின் எதிர்ப்புறச் சுவரில் கடந்த பல வாரங்களாக ஒரு விளம்பரப் பலகை தொங்கிக்கொண்டிருந்தது. "இறுதி ஆண்டு புராஜக்ட் எந்த துறைக்காயினும் அணுகலாம்; சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை குறைந்த விலையில் கிடைக்கும்." தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை புராஜக்ட் முதல் பிஹெச்.டி. ஆய்வுகள் வரை மாணவர்களால் பெரும்பாலும் எழுதப்படுவதில்லை; மார்க்கெட்டில் வாங்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். பல்கலைக்கழக வாயிலிலேயே விளம்பரம் செய்வதில் என்ன தவறு என்று ஒரு கெட்டிக்கார வியாபாரி எண்ணியிருக்கலாம். இத்தகைய ஆய்வு அறிக்கை தயாரித்துக் கொடுக்கும் 'வல்லுநர்கள்', 'ஆய்வு ஆலோசகர்' என்ற பெயரில் விசிட்டிங் கார்டு வைத்துக்கொண்டு, தங்கள் தொழிலில் பெருமையும் லாபமும் அடைகின்றனர் என்று கேள்விப்படுகிறோம். கல்லூரி ஆசிரியருக்கான நேர்முகத் தேர்வுகளில், அவர்களது பிஹெச்.டி ஆய்வு தொடர்பான கேள்விகள் கேட்டால் சிலருக்குத் தங்கள் ஆய்வின் அடிப்படைகளே தெரிவதில்லையென்று சொல்லப்படுகிறது.

"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக ஆக்குவோம்" என்ற அரசின் சூளுரைகள் பட்டமளிப்பு விழாக்கள்தோறும் கேட்கின்றன.

வேறெங்கும் இல்லாத விநோதம்

தமிழ்நாட்டில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் 21, மத்தியப் பல்கலைக்கழகங்கள் 2, பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற தனியார் பல்கலைக்கழகங்கள் 21. மொத்தம் 44 பல்கலைக்கழகங்கள் இருப்பது அல்ல பிரச்சினை. இதனினும் அதிகப் பல்கலைக்கழகங்கள் தேவை. இவற்றில் பல 'ஒருதுறை பல்கலைக்கழகங்கள்'. பொறியியல், மருத்துவம், விவசாயம், ஆசிரியர் கல்வியியல், சட்டம், உடற்கல்வி, கால்நடை அறிவியல், தோட்டக் கலை போன்ற ஒவ்வொரு துறைசார் அறிவுக்கும் தனிப் பல்கலைக்கழகம். இந்தத் துறைகள் குறித்த கல்வியை மற்ற பொதுப் பல்கலைக்கழகங்களில் பெற இயலாது; இந்தப் பல்கலை மாணவர்கள் அந்த, குறுகிய துறைப் பாடங்கள் தவிர வேறேதும் கற்க இயலாது. இது உலகில் வேறு எங்கும் இல்லாத விநோதம். பல்கலைக்கழகம் என்பதன் பொருளே பல கலைகள் உறவாடி, பரிமாறிக்கொள்ளும் களம், அறிவுத் துறைகளின் பிரிவுகள் கடந்த, பிரபஞ்சப் பொதுமையில் கலந்த ஒரு அங்கமாகத் தன் துறையை உணரும் வெளி. பொறியியல் கற்கும் மாணவர் சட்டம் கற்க வேண்டுமென்றாலோ, மருத்துவராகப் பயிற்சி பெறும் மாணவருக்கு வரலாற்றிலும் ஆர்வம் உண்டென்றாலோ தன் பல்கலைக்கழக வளாகத்திலேயே அடுத்த கட்டடத்துக்குச் சென்று பயிலலாம். இந்தியாவிலும் பல பல்கலைக்கழகங்களில் இத்தகைய வாய்ப்புகள் உண்டு.

தமிழகப் பல்கலைக்கழகங்களில் புரையோடிக் கிடக்கும் அவலங்களைப் பட்டியலிடுவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். அவற்றில் பல திரையின்றி நிற்கும் உண்மைகள்தான். தமிழக அரசு, பல்கலைக்கழகங்களின் மீது காட்டும் அக்கறையின்மை, அவற்றைப் பஞ்சத்தில் பரிதவிக்க விடும் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு, அடிப்படை நிதித் தேவைக்கே அவை எந்தத் தரமோ நெறியோ இல்லாமல் நடத்தும் தொலைதூரக் கல்வி, பல்கலைகள் மேல் அரசு நடத்தும் அதிகாரத் தாண்டவம், சிண்டிகேட் போன்ற அனைத்துப் பல்கலைக்கழக அதிகார அமைப்புகளும் சுதந்திரமும் மாட்சிமையும் இழந்து, கல்வித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குதல், தலைமைப் பதவியிலிருந்து கடைநிலை ஊழியர் வரை அனைத்து நியமனங்களிலும் தலைவிரித்தாடும் ஊழல், தரமற்ற ஆய்வுகள், தனியார் பல்கலைக்கழகங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளை போன்ற நெடிது நீளும் பட்டியல்.

மேலும் ஒரு சுமை

ஒட்டகத்தின் முதுகில் சமீபத்தில் ஏற்றப்பட்டிருக்கும் கடைசிச் சுமை: அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்று தமிழக அரசு முடிவெடுத்து, உயர்கல்வி கவுன்சில் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தி. தனியார் பல்கலைக்கழகங்களை இது கட்டுப்படுத்தாது. பல்கலைக்கழகம் என்ற உயரிய அமைப்பின் ஆன்மாவைக் கொன்றுவிட்டு, செத்த உடலாக அதனை உலவ விட வேண்டுமென்பது தமிழக அரசின் திட்டமா என்பது புரியவில்லை. பல்கலைக்கழகங்களின் உயிர்மூச்சே அவற்றின் தன்னாட்சியும், தங்கள் தனித்துவத்துக்கு ஏற்ற வண்ணம் பாடத்திட்டங்களை உருவாக்கும் சுதந்திரமும்தான். இவற்றைப் பறிப்பது, மறுப்பது எத்தனை எளிதாக நிறைவேறியிருக்கிறது! உயர்கல்வி கவுன்சிலின் உறுப்பினர்களான துணை வேந்தர்கள் அதனை எதிர்த்தார்களா? தங்கள் புனிதப் பொறுப்பான பல்கலைக்கழகத்தின் சுதந்திரத்தையும் உரிமையையும் மாண்பையும் கெளரவத்தையும் காக்க அவர்கள் குரல்கொடுத்தார்களா? தெரியவில்லை.

உலக அரங்கில் வேறு எங்கும் நடக்காத அதிசயம் இது. உலகின் பல்கலைகளில் ஒவ்வொரு துறைக்கும் முழுச் சுதந்திரம் உண்டு. தாங்கள் சிந்தித்து, திட்டமிட்டு, உருவாக்கிய பாடத்திட்டங்களை அந்தப் பல்கலைக் கழகத்தின் கல்விக் குழுக்கள், மற்ற அமைப்புகளில் வைத்து, புதிய பாடங்களின் செழுமையை, தேவையை விளக்கி, விவாதித்து, ஒப்புதல் பெற்று, பின் நிறைவேற்றுகின்றன. தங்கள் பல்கலைக்கழகங்களுக்கு அப்பாற்பட்ட எந்த அமைப்பின், அதிகாரத்தின் ஒப்புதலையும் அவர்கள் பெற வேண்டிய அவசியமே இல்லை. ஒரு துறையின் முதுகலைப் பாடம் என்றால், அவசியமான சில பாடங்கள் தவிர, விருப்பப் பாடங்கள் ஏராளமானவை ஒவ்வொரு துறையிலும் தேர்ந்தெடுப்பதற்கு உள்ளன. அத்தகைய அவசிய, விருப்பப் பாடங்கள் இரண்டிலுமே ஒரு பல்கலைக்கும் மற்றொன்றுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை முதுகலைக் கல்வியில் அளிக்கப்படும் பல பாடங்கள் அருகில் இருக்கும் டெல்லி பல்கலையில் இல்லை; ஆனால், வேறு பல அங்கு உண்டு. துறைகளுக்கு மட்டுமல்ல இந்தச் சுதந்திரமும் உரிமையும். ஒவ்வொரு தனிப்பட்ட ஆசிரியருக்கும் இந்த உரிமையும் சுதந்திரமும் உண்டு. ஆசிரியர்கள் திறமை, புலமை, வெளியீடுகள் என்ற பல தரங்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பின், ஒவ்வொருவரது தனிப்பட்ட ஆய்வுகள் தொடர்பான பாடங்களைக் கற்றுத்தரும் உரிமை அவர்களுக்கு உண்டு. பலதரப்பட்ட புலமைகள் கொண்ட ஆசிரியரை நியமிப்பதும், அவர்கள் தத்தமது தனி ஆய்வுகளின் அடிப்படையில் புதிய புதிய பாடங்களைத் துறையில் அறிமுகம்செய்வதும் ஒரு பல்கலையின் பெருமையாகக் கருதப்படுகிறது. அத்தகைய பன்முக அறிவு, செழுமையும் பெருமையும் அளிக்கும் சாதனையாகக் கருதப்படுகிறது.

இயந்திரங்களாகும் ஆசிரியர்கள்

ஆய்வும் கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று உயிர்ப் பிணைப்பு கொண்டவை. சிறந்த பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் தங்கள் ஆய்வுகளை வகுப்பறைக்குள் எடுத்துச் சென்று, பாடத்திட்டங்களாக மாற்றுகின்றனர். அந்த ஆய்வுப் பொருளில் ஆர்வம் ஏற்படும் மாணவர், ஆய்வை முன்னெடுத்துச் செல்கின்றனர். அறிவு, ஆழமும் விரிவும் அடைகிறது. பாடத்திட்டத்தை உருவாக்கும் சுதந்திரம் இழந்த ஆசிரியர் எங்கோ உருவாக்கப்படும் பாடங்களைப் புகட்டும் இயந்திரமாகத்தான் மாறுவார். நம் பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே தாழ்ந்து கிடக்கும் ஆய்வுத்திறன் இன்னும் அதல பாதாளத்தை, துரித கதியில் சென்றடையும்.

தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்று முடிவெடுத்த பின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் எதற்கு? பல்கலைக்கழக அமைப்புகளில் முதன்மையான கல்விக் குழுக்களை கலைத்துவிடலாம். தேர்வுகளும் அனைத்துப் பல்கலைகளுக்கும் பொதுவாக, ஒரே வினாத்தாள்கள் தயாரித்து, பள்ளி இறுதித் தேர்வுகள் போன்று மாநிலம் முழுதும் ஒரே சமயத்தில் நடத்திவிடலாம். ஒரே பல்கலைக்கழகத்தின் பிராந்திய மையங்களாக அவற்றை மாற்றிவிடலாம்.

தமிழ்நாட்டின் ஒரு பல்கலைக்கழகத்தில் '...பல்கலைக்கழகத்தைக் காப்போம்' என்று ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 'தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் காப்போம்' என்ற இயக்கம் தொடங்க வேண்டியது இன்றைய வேதனை நிலை.

- வே. வசந்தி தேவி, கல்வியாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
The Hindu

Ministry of social justice & Empowerment இயக்குநர் , பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்

பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள்

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 10ஆம்தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக, முதன்மைக்கல்வி அலுவலர் சி.அமுதவல்லி தெரிவித்தார்.

தமிழகத்தில், பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 3-ஆம் தேதி துவங்கி,மார்ச் 25 வரை நடைபெறவுள்ளது. 150 மதிப்பெண்களுக்காக நடைபெறும் இந்தஎழுத்துத் தேர்வுக்கு, இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையில்விடைத்தாள்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. மாணவ, மாணவியரின் பதிவெண்ணுடன் கூடிய விடைத்தாள் கட்டு, ரகசிய குறியீடு(பார்கோடு)ஆகியவற்றுடன் இந்த விடைத்தாள்கள் தயாரிக்கப் பட்டுளளன. இதன் மூலம், பதிவெண்ணை மறந்துவிடுவது அல்லது மாற்றி பதிவெண்ணை எழுதுவது பிரச்னைகள் தவிர்க்கப்படும். தேர்வெழுதும் மாணவ, மாணவியர் கூடுதல்விடைத்தாள்களுக்காக, அடிக்கடி எழுந்து செல்ல வேண்டிய அவசியமும்இருக்காது. மேற்பார்வையாளர்களுக்கும் சுமை தவிர்க்கப்படும்.

முன்னதாக, பிளஸ்2 அறிவியல், கணிதம்-அறிவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்கள் படிக்கும் மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்வுகள்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு தேர்வு வரை, செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள் தேர்வுத்துறைக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது . இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள்இருந்து வந்தது.

இந்த ஆண்டு முதல் தினமும் செய்முறைத் தேர்வு முடிவடைந்ததும் ஆன்லைனில் மதிப்பெண்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், பிளஸ்2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 10-ஆம் தேதி துவங்கி, பிப்ரவரி 22-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலர் சி.அமுதவல்லி தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: பெரிய பள்ளிகளில் 3 முதல் 4 பேட்ஜ்களாகக் காலை, மாலையில் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். இத்தேர்வுக்கான
வினாத்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எந்தெந்தத் தேர்வை எந்த
தேதியில் நடத்துவது என பட்டியல் தயாரித்து இன்னும் ஓரிரு நாளில்முறைப்படி அறிவிப்பு செய்யப்படும், என்றார்.

படிக்காத 43 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்

பள்ளிகளுக்குச் செல்லாத 43 ஆயிரம் குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரை: பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கலர் பென்சில்கள், வண்ண சீருடைகள், மிதிவண்டிகள், மதிய உணவு, லேப்டாப், இடைநிற்றலைக் குறைப்பதற்கான ஊக்கத் தொகை போன்ற பல்வேறு திட்டங்களின் காரணமாகஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பள்ளிகளில் பயிலாதவர்கள் 51,447 குழந்தைகளில் இந்த ஆண்டு 43,838 குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வி முறை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொலைதூர கிராமங்கள் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில்
வசிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர சிறப்பு பயண வசதிகள் வழங்குதல்,இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள அரசுப்பள்ளிகளில் சேர்ப்பது போன்ற பதுமையான முயற்சிகளின்மூலமாகவே இதனை எட்ட முடிந்தது.

மக்கள் நலத்திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் நிறைவேற்றி வருகிறார் ...

மக்கள் நலத்திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் நிறைவேற்றி வருகிறார் என்று கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா நேற்று உரையாற்றிய போது கூறியதாவது:– ஜெயலலிதாவால் சாத்தியம் இந்த அரசு முக்கிய மாற்றங்களையும், சிறந்த சாதனைகளையும் கண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கனவு நனவாகியுள்ளது. சரிநிகர் வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளித்து, சாதாரண மக்களும் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியால் அதிக அளவில் பயன்பெறும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களுக்கான வழிவகைகளை தொலைநோக்குப்பார்வை கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயலாக்கியதன் காரணமாகவே இது சாத்தியமானது.
குறிப்பிட்ட துறைகளையும், பின்தங்கிய பகுதிகளையும் இலக்காகக் கொண்டு, சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முறையில் தீர்வு காணப்பட்டு வருகின்றது. நீண்டகால பொருளாதார வளர்ச்சியை தூண்டும் பல்வேறு கட்டமைப்பு திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை அனைத்திற்கும் மேலாக, வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் நிலைநிறுத்தும் அடித்தளமாக விளங்கக்கூடிய சட்டம், ஒழுங்கு எந்தவித குறைபாடுமின்றி பராமரிக்கப்பட்டு, நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கை இத்தகைய வளர்ச்சிப்பணிகளுக்கு பொதுமக்கள் முழுமனதுடன் ஆதரவளித்துள்ளனர்.
நடந்து முடிந்த ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற சிறப்பான வெற்றி, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் திறனும், ஆற்றலும் மிக்க தலைமையின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு மேலும் ஒரு சான்றாகும். இத்தகைய நம்பிக்கை, எதிர்காலத்திலும் தொடர்ந்திட இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அதே நேரத்தில், இந்த அரசு பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், அவற்றை உறுதியான நடவடிக்கைகளின் மூலமாக திறம்பட கையாண்டுள்ளது. தமிழ்நாடு, குறைவான நீர்வளம் உடைய மாநிலமாக உள்ளதுடன், பருவகால மாற்றங்களின் சீற்றத்திற்கு ஆளாகும் மாநிலமாகவும் உள்ளது. 2012–13–ம் ஆண்டில், கடுமையான வறட்சியை சந்திக்க நேரிட்டதால், விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு, அதனால் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. திறன்மிக்க தலைமை உரிய நேரத்தில் ஆயிரத்து 614 கோடி ரூபாய்க்கான இழப்பீட்டு நிவாரணத்தை வழங்கி, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கருணை உள்ளத்தோடு எடுத்த, நடவடிக்கையினால், பயிர் இழப்பினால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை சமாளிக்க முடிந்தது. இது தவிர, சர்வதேசப்பொருளாதார சரிவினால் இந்திய அளவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் மேலும் அதிகமாகி, தமிழகத்தின் வளர்ச்சியையும் பெரிதும் பாதித்துள்ளது. இந்த பொருளாதார சரிவை சீர்செய்ய இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இது போன்ற சோதனைகள் இருந்தபோதிலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அயராத, திறன்மிக்க தலைமையின் கீழ் அவற்றை சமாளித்து, நமது மாநிலம் இப்பிரச்சினைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டெழும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

காவிரி நதிநீர் விவகாரம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து முயன்று வரும் சூழ்நிலையிலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முழுமையாக செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினையும் மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை. இந்த சூழ்நிலையில், அற்காவதி நதியை புனரமைப்பதற்கும், ஹேமாவதி நதிநீர் கால்வாய்களை நவீனப்படுத்தவும் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணானது. இந்த அரசு, இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தத்தளித்த தமிழக பக்தர்களை மீட்டது பாராட்டுக்குரியது. ஈரான் நாட்டு சிறைகளில் எட்டு மாதங்களுக்கும் மேலாக அல்லலுற்ற, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 16 மீனவர்களை இந்த அரசு மீட்டது. ஒடிசாவில் புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்களும் மீட்கப்பட்டனர். சமீபத்தில் அந்தமான் தீவுகளில் நடந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க இந்த அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.

புதிய வருவாய் வட்டங்கள்
சாலைகள், பாலங்கள், குடிநீர் வழங்கல், அடிப்படை கட்டமைப்பு மற்றும் பொதுச்சேவைகளை அளிப்பதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 312 கருத்துருக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 2012–13–ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வருவாய் வட்டங்களோடு, கூடுதலாக மேலும் 25 புதிய வருவாய் வட்டங்களை 2013–14–ம் ஆண்டில் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகபட்ச சேவைகளை வழங்குவதை குறிக்கோளாக கொண்ட புதுமையான 'அம்மா' திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டத்தில், பல்வேறு சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள், பட்டா மாறுதல் மற்றும் பிற கோரிக்கைகளுக்காக 33.13 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

100–வது ஆண்டு சினிமா விழா
தமிழ்மொழியின் சிறப்பினை உலகெங்கும் பரப்பிட, மதுரை உலகத்தமிழ் சங்கத்திற்கென தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தரமணியிலுள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு நிர்வாக கட்டிடம் அமைக்கும் பணிக்கு 4.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. மதுரை மாநகரில் சங்கத்தமிழ் காட்சிக்கூடம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய சினிமாவின் 100–வது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியதில், இந்த அரசு முக்கிய பங்காற்றியது. நமது மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன் முறையாக, இசை மற்றும் கவின்கலை துறைகளுக்காக தனிப்பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் தேசியக்கலை கட்டிடத்தை 11 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தல், இரண்டு கோடி ரூபாய் செலவில் அரியலூரில் கல் புதையுயிரிப்படிவ அருங்காட்சியகம் அமைத்தல் போன்றவற்றின் மூலம், நமது பழம் பெருமையை போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

உலக சதுரங்க போட்டி
2013–ம் ஆண்டுக்கான புகழ்பெற்ற பிடே உலக சதுரங்க வாகையர் போட்டியை முதன்முறையாக இந்தியாவில் நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீரிய முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். தமிழக அரசு வழங்கிய 29.15 கோடி ரூபாய் நிதியுதவியோடு, சென்னையில் இந்த சிறப்பான நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

2011–12–ம் ஆண்டில் அதிக உணவு தானிய உற்பத்தியை எட்டியதற்காக, மத்திய அரசின் கிருஷி கர்மான் விருது நமது மாநிலத்திற்கு 2013–ம் ஆண்டு கிடைத்துள்ளது மன நிறைவளிக்கிறது. மாநிலத்தில், வடகிழக்கு பருவமழை அளவு 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ள சூழ்நிலையிலும், 2013–14–ம் ஆண்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் ஆதார விலை
விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2013–14–ம் ஆண்டு கரீப் பருவத்தில், சாதாரண மற்றும் சன்ன ரக நெல்லுக்கு, மத்திய அரசு அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையான முறையே ஆயிரத்து 310 ரூபாய் மற்றும் ஆயிரத்து 345 ரூபாய் ஆகியவற்றை விட அதிகமாக, அதாவது சாதாரண ரகத்திற்கு ஆயிரத்து 360 ரூபாய் எனவும், சன்ன ரகத்திற்கு ஆயிரத்து 415 ரூபாய் எனவும், இந்த அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. இதுபோன்றே, கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 100 ரூபாய் என்ற அளவில் மட்டுமே மத்திய அரசு நியாயமான மற்றும் ஆதாயமுள்ள விலையை நிர்ணயித்துள்ள போதிலும், டன் ஒன்றிற்கு 100 ரூபாய் போக்குவரத்து செலவு உள்ளிட்ட மாநில அரசின் பரிந்துரை விலையை நடப்பு நிதியாண்டிற்கு டன் ஒன்றிற்கு 2 ஆயிரத்து 650 ரூபாய் என இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
ஏழைகளுக்கு கறவை மாடுகளை வழங்கும் திட்டம் மூலமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 32 ஆயிரம் ஏழை, எளியோர் பொருளாதார மதிப்புமிக்க சொத்துக்களை பெற்றுள்ளனர். இதுபோன்றே, கிராமப்புற ஏழை,எளியோருக்கு விலையில்லா செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் மூலமாக, 3.72 லட்சம் நிலமற்ற ஏழைப்பெண்கள் பலன் பெற்றுள்ளனர்.

பொது வினியோக திட்டம்
பொது வினியோகம் மூலம் விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்புகள், சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை மற்றும் மண்எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் 1.86 கோடிக்கும் மேலான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. 2013–14–ம் ஆண்டில் உணவு மானியமாக 4 ஆயிரத்து 900 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தை முழுமையாக எட்டாது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்த தொடர் முயற்சி காரணமாக, தற்போதுள்ள பொதுவினியோக திட்ட உணவு தானிய ஒதுக்கீடு மற்றும் எடுப்பு அளவுகளை உறுதி செய்யும் வகையில், சட்ட வரைவை மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. இச்சட்டத்தில் இன்னும் பல குறைபாடுகள் உள்ளன.

பசுமை வீடுகள்
மக்களின் நலனுக்கான, சூரிய மின்சக்தி கொண்ட பசுமை வீடுகள் திட்டம் தனிச்சிறப்புடையதாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் 1.80 லட்சம் வீடுகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கான ஒதுக்கீடும் 1.80 லட்சம் ரூபாயிலிருந்து 2.10 லட்சம் ரூபாயாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் இரண்டு ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் மேலும் 1.2 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும். ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் கவனம் செலுத்தும் புதுமையான கிராமப்புற கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமாகிய 'தாய்' திட்டம், கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பெரும் பயன் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் சாலை மேம்பாட்டிற்கு தொடர்ந்து உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புற வளர்ச்சி
மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் 48 சதவீத மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகளை அளிப்பதற்காக ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் கூடிய சென்னை மாநகர வளர்ச்சித்திட்டம் மற்றும் 750 கோடி ரூபாய் ஆண்டு ஒதுக்கீட்டுடன் கூடிய ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் ஆகிய சிறப்பான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்தினார்.


Sent from my iPad

குரூப்–2 :பிப்ரவரி 5 மற்றும் 6 தேதிகளில் கலந்தாய்வு

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாகக்கிடக்கும் ஊழியர்களின் இடங்களை நிரப்ப கடந்த 2011–ம்ஆண்டு ஜூலை மாதம் 30–ந்தேதி குரூப்–2 எழுத்துதேர்வு நடத்தப்பட்டது. இதில் நேர்முகத்தேர்வு உள்ள பணிகளும் உண்டு. நேர்முகத்தேர்வு இல்லாமல் தேர்வு செய்யப்படும் பணிகளும் உண்டு. நேர்முகத்தேர்வு பணிக்கு 3 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிஅமர்த்தப்பட்டனர்.
அதுபோல நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு 4 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். எனவே மீதம் உள்ள பணியிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு உள்ள பணிஇடங்களுக்கு 4–வது கட்ட கலந்தாய்வும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு 5–வது கட்ட கலந்தாய்வும் பிப்ரவரி 5 மற்றும் 6 தேதிகளில் சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

கலந்தாய்வுக்கு வரவேண்டியவர்களின் பட்டியல், வரவேண்டிய நாள் விவரம் அனைத்தும் தமிழ்நாடு குரூப்–2அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

உயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கே.ஸ்கந்தன், மத்திய அரசுப் பணி காலத்தை முடித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக முதன்மை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் ஹேமந்த் குமார் சின்ஹா, உயர் கல்வித்துறையின் முதன்மைச்செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 95 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்

சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உதவிபேராசிரியர்கள் பணியிடங்கள் 95 காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்து அதற்கான ஆயத்தபணியில் இறங்கி உள்ளது. விரைவில் நேர்முகத்தேர்வு நடத்தி உதவிபேராசிரியர்கள் நியமனம் நடைபெற உள்ளது.

"அம்மா' திட்டத்தின் மூலம் 33 லட்சம் மனுக்கள்பெறப்பட்டு நடவடிக்கை

கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும்"அம்மா' திட்டத்தின் மூலம் 33 லட்சம் மனுக்கள்பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரை: கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகபட்ச சேவைகளை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்ட புதுமையான அம்மா திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு அலுவலர்கள்
வெள்ளிக்கிழமைதோறும் கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களின் குறைகளை குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்வதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் அரசு இயந்திரத்தை மக்களின் வீடுதேடி சென்றடையச் செய்துள்ளது. முதல் கட்டத்தில், அம்மா திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்டு,பல்வேறு சான்றிதழ்கள், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள், பட்டா மாறுதல்மற்றும் பிற கோரிக்கைகள் உள்ளிட்ட 33 லட்சம் மனுக்கள்
பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது, இரண்டாவது கட்டமாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

புதிய வட்டங்கள்:புதிதாக 25 வருவாய் வட்டங்கள்:மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக 2013-14-ஆம் ஆண்டில் 25புதிய வருவாய் வட்டங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது என்றார் ஆளுநர்.

சமூகத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்பட கல்வியில் முழு சீரமைப்பு அவசியம்-அண்ணா ஹசாரே

சமூகத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்பட கல்வியில் முழு சீரமைப்பு அவசியம் என காந்தியவாதி அண்ணா ஹசாரே வலியுறுத்தினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை (ஜன.30) நடத்தப்பட்ட "திங்க்எஜு கான்கிளேவ்' என்றஇரண்டு நாள் கல்வி மாநாட்டில் பங்கேற்ற அண்ணா ஹசாரே பேசியதாவது: சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதும்கூட, நம்முடைய கல்வி முறை சமூகத்தில் போதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது.கல்வியின் முக்கியக் குறிக்கோள் ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ளஇடைவெளியைக் குறைப்பதுதான். ஆனால், இந்த இடைவெளி அதிகரித்துக்
கொண்டுதான் போகிறது. இதற்கு கல்வி முறை சரியில்லாததே காரணம்.

நூறு சதவீத தேர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, பாடத்திட்டத்தை மாணவரிடம் திணிக்கும் பணியைத்தான்நமது கல்வி முறை செய்து வருகிறது. நாள் முழுவதும் அந்த மாணவர் என்னசெய்ய வேண்டும்; பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிறகு விளையாடவேண்டுமா அல்லது தூங்க வேண்டுமா என்பதில் கவனம் செலுத்த நாம்தவறிவிட்டோம். பாடத்திட்டத்தை மட்டுமல்லாமல் நல்ல பழக்க வழக்கங்களையும், தூய்மையாகசிந்திக்கவும் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். சுதந்திரம்பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நாமும் நம்முடைய நாடும்எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது? எதை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது என்பதை நம்மில்ஒருவராவது சிந்தித்திருக்கிறோமா? பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பற்றியோ, குடியிருக்கும் கிராமத்தைப்பற்றியோ அல்லது நாட்டைப் பற்றியோ நாம் சிந்தித்திருக்கிறோமா? இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் கல்வியின் அடிப்படை.

எனவே,இப்போதைய கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தத்தை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் சமூக மாற்றம் ஏற்படும். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களையும், அந்த தியாக கலாசாரத்தையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதோடு, நாட்டின் முன்னேற்றுத்துக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். தூய்மையான நபர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போதுதான், அரசியலிலும் நாட்டிலும் உண்மையானமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

மாநாடு தொடக்க விழாவில் சமூக சேவகியும் ஓய்வுபெற்ற முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆசிரியர் குழு இயக்குநர்பிரபு சாவ்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஊட்டி தோடர்சமூகத்திலிருந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள முதல் நபரான மாணவி பாரதி கெளரவிக்கப்பட்டார்.

வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: தமிழக அரசு அறிவிப்பு

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர்
கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
தமிழகத்தின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்குவது இதற்கானமுன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். தமிழக இளைஞர்களின்வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம்என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும்,வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்க, மாநிலவேலைவாய்ப்பு இணையதளம் என்ற தனி இணையதளம் தொடங்கப்படும்.

என்னென்ன தகவல்கள்?
வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள்,வேலை பெறுவதற்கான உதவிகள் குறித்த தகவல்களை இந்த இணையதளத்தில் பெறலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்துக்காக, சர்வதேசநிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப
உதவிகளை தமிழகம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது உரையில்
ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து பெருமிதம்தெரிவித்த அவர், காவல் துறையில்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தருவதாகக்
கூறினார். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் பாதுகாப்புப் படைக்கான 10ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்பட 24 ஆயிரத்து 503 கூடுதல்பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநர்கே.ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில்:
சென்னையில்செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் குறித்து புதிய அறிவிப்பையும்
அவர் வெளியிட்டார். வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் செல்லும் வழித்
தடத்துக்கு மத்திய அரசிடம் இருந்து விரைவில் ஒப்புதல் பெறவும், இரண்டாவது கட்டத்துக்கான புதிய வழித் தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும்ஆளுநர் தனது உரையில் கூறியுள்ளார்.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தமிழகத்தின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர்,மாநிலத்துக்குத் தேவையான நிதியை 14-வது நிதிக்குழு பாரபட்சமின்றி வழங்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி நிலையிலும், நடப்பு நிதியாண்டில்வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை மிஞ்சும் எனத் தெரிவித்த அவர்,திட்டங்களுக்கான செலவினம் வரும் நிதியாண்டில் மேலும் ரூ.5 ஆயிரம்கோடி அளவுக்கு உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை ஆகியவற்றில் முதல்வர்
ஜெயலலிதா உறுதியான நிலைப்பாட்டுடன்நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் அவரின் சிறப்பான முயற்சியால்,நீண்டகாலமாக இலங்கையால் கைது செய்யப்பட்டிருந்த 295 மீனவர்களும்,அவர்களின் 45 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாககூறி ஆளுநர்
ரோசய்யா பாராட்டுத் தெரிவித்தார்.

மக்கள் நலம் பேணும் தமிழகம்:
மற்ற மாநிலங்கள் கண்டு வியக்கும் வகையில் பல தனிச் சிறப்பு வாய்ந்த நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு,முன்மாதிரியான மக்கள் நலம் பேணும் மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாகஆளுநர் பெருமிதம் தெரிவித்தார். தேசிய அளவில் பின்னர் செயல்படுத்தக் கூடியதிட்டங்களை முன்னரே செயல்படுத்தி, தேசியத் திட்டங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது என அவர்பாராட்டினார்.

பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் இந்த அரசின் போற்றத்தக்க முயற்சிகள், சமூகப் பொருளாதார நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவியை உறுதி செய்யும் முன்னோடி மாநிலமாக தமிழகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

3,589 பணியிடங்களுக்கான தேர்வு ரத்து : மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு

தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள, 3,589 உதவியாளர்பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, சென்னை உயர் நீதி மன்றம்உத்தரவிட்டது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தியே,ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனு: கூட்டுறவு நிறுவனங்களில், உதவியாளர் பணியிடத்துக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பாணை, நவம்பர் 2, 2012ல் வெளியானது. "மொத்தம், 3,589 காலியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி,நவம்பர் 23, 2012' என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு, டிச., 9, 2012 அன்று நடத்தப்பட்டது. டிச., 20,2012ல் தேர்வு முடிவுகள் வெளியானது. உதவியாளர் பணி நியமனத்தில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கவில்லை. கூட்டுறவு துறை ரீதியான பயிற்சி பெறாதவர்களும் நியமிக்கப்பட்டனர். ஜாதி வாரியான ஒதுக்கீடு, தமிழ் மீடியத்தில்
படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. தேர்வு முறையில், விதிமீறல்கள் இருந்தன. எனவே, தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த, நீதிபதி சுப்பையா, "ஆவணங்களை பார்க்கும் போது உதவியாளர் பணிக்கான தேர்வில்,முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிய வருகிறது. எனவே, தேர்வு ரத்து செய்யப்படுகிறது. புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு, முறைப்படி தேர்வு நடத்தியே பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என,உத்தரவிட்டார்.

வியாழன், 30 ஜனவரி, 2014

PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணை detail



PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணைக்குவருகின்றன வழக்குகள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர்
> ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாளை 31 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் இதர படங்களில் (except Tamil) 6 வழக்குகளும் நாளை விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை நாளை மாலையில்தான் தெரியவரும்.

PARTICULARS OF WRITS

GROUPING MATTERS- PAPER I
~~~~~~~~~~~~~~~~
1. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT No of writs-13
----------------------------------------------------------------------------------------------------------------

2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS
PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED
No of writs-16. ----------------------------------------------------------------------------------------------------------------

GROUPING MATTERS- PAPER II

3. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS ; TET EXAMS PAPER II WHERE PETITIONERS HAVE PASSED THE EXAMS IN THE REVISED RESULTS AND NO FURTHER ORDERS REQUIRED -No of writs-2

---------------------------------------------------------------------------------------------------------------


4.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT -No of writs-25



----------------------------------------------------------------------------------------------------------------

5.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-No of writs-57
----------------------------------------------------------------------------------------------------------------
6.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS -no of writs. 9
----------------------------------------------------------------------------------------------------------------

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் நாளை 31.01.2014 விசாரணைக்கு வருகின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிய கால எல்லைக்குள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத TET EXAMS PAPER I,PAPER II வழக்குகள் நாளை 31.01.2014 விசாரணைக்கு வருகின்றன. விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்

5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு

NET TAXABLE INCOME 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு .
As per the Central Finance Budget 2013, a new Income Tax Section has introduce under section 87A, where can get relief as well as Rebate Maximum Rs. 2,000/- who's taxable income up to 5,00,000/-. For more clarification about this new section under clauses 19 & 20 of the Central Budget 2013 as given below:-
Clauses 19 & 20 of the Central Budget which have already passed by the Parliament, that
The new section 87A in the income tax Act relating to get the rebate of income taxin case of below given certain clauses :-
a) The section 87A seeks to provide that an tax payer being an individual , whose total Taxable Income does not exceed 5,00,000/-( After deduction of U/s 10,16,80C and under chapter VI A). It is must be great opportunity to tax relief for below tax payers.
b) This amendment will take effect from 1st April 2013 which effect for the Financial Year 2013-14 and Assessment Year 2014-15.

மான்ய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

மான்ய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 12
ஆக உயர்த்த, இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த
முறை பிப்ரவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக மத்திய
பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மானிய
விலை சிலிண்டர்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

எழுத்தறிவற்ற இந்தியர்கள் 28.7 கோடி பேர்: ஐ.நா அறிக்கையில் தகவல்

உலகில் கல்வியறிவு பெறாதவர்கள் அதிகமுள்ளவர்கள் நாடுகள் பட்டி யலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.நா. அறிக்கையின் படி இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை 28.7 கோடியாக உள்ளது.

ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு சார்பில் 2013-14 அனைவருக்கும் கல்வி இயக்க கண்காணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 1991-ம் ஆண்டு 48 சதவீதமாக இருந்தது. இது 2006-ம் ஆண்டு 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆயினும் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, கல்வியறிவு பெறாத வயதுவந்தோரின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமுமில்லை.

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டப்பட்ட அம்சங்கள்:

இந்தியாவில் செல்வக் குடும்பத்தில் பிறந்த இளம்பெண்கள் உயர்கல்வி பெற்றுள்ளனர். ஆனால், ஏழைப் பெண்கள் கல்வி பெறவில்லை. இவ்விரண்டுக்கும் இடையே மிகுந்த ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. யாருக்கு அதிகம் கல்வியறிவு தேவையோ அவர்களுக்குக் கல்வி வழங்கும் இலக்கு தோல்வி யடைந்து விட்டதையே இது காட்டுகிறது.

வரும் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு எட்டப்படவேண்டிய இலக்கு களை அடைய, மிகவும் வசதியற்ற சூழலில் வாழ்பவர்கள் தங்கள் இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும். கல்வி சார்ந்த செலவுகளுக்காக மட்டும் ஆண்டுக்கு 12,900 கோடி டாலர்கள் (சுமார் ரூ.8 லட்சம் கோடி) அரசுகள் செலவிடுகின்றன.

படிப்பறிவில்லாத வயது வந்தோரில் 55.7 கோடி பேர் அதாவது 72 சதவீதம் பேர் 10 நாடுகளில் வசிக்கின்றனர். தொடக்க கல்விக்குச் செல விடும் தொகையில் 10 சதவீதம் தரம்குறைந்த கல்வியால் வீணா கிறது. இதனால், குழந்தைகள் கல்வி பயில்வதை உறுதி செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக, ஏழை நாடுகளில் 4-ல் ஒரு குழந்தை ஒரு வாக்கியத்தைக் கூட படிக்க முடியாத நிலையில் உள்ளது.

இந்தியாவின் வளமையான மாநிலங்களுள் ஒன்றான கேரளத் தில் ஒரு மாணவனின் கல்விக்காக ஆண்டுக்கு ரூ.42 ஆயிரத்து 548 செலவிடப்படுகிறது. இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வளமான மற்றும் ஏழ்மை யான மாநிலங்களில் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இருப்பினும், வளமான மாநிலத்தில் உள்ள ஏழை மாணவிகள் கணிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

தமிழகத்தின் நிலை

வளமான மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான கிராமப்புற மாண வர்கள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வியை (5-ம் வகுப்பு) நிறைவு செய்தனர். இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் 5-ம் வகுப்புப் படிப்பவர்களில் 44 சதவீதம் பேரும், தமிழகத்தில் 53 சதவீதம் மாணவர்களும் மட்டுமே இரட்டை இலக்க வகுத்தல் கணக்குக்கு விடை காண முடிபவர்களாக இருக்கின்றனர்.

மகாராஷ்டிரம், தமிழக மாநிலங்களில் ஊரகப் பகுதிக ளில் உள்ள வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் மாணவர் களை விட மாணவிகள் நன்றாகப் படிக்கின்றனர். 3-ல் 2 மாணவி கள் இரு இலக்க வகுத்தல் கணக்குக்குத் தீர்வு காணும் திறன் பெற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தை விட சிறிய அளவிலேயே மகாராஷ்டிர ஊரகப் பகுதி மாணவ, மாணவியர் முன்னணியில் உள்ளனர். மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரேதச மாநிலங்களில் நிலவும் வறுமை, குழந்தைகள் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஏழை மாணவர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே 5-ம் வகுப்பு வரை பயில்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் 85 சதவீத ஏழை மாணவர்கள் ஆரம்பக்கல்வியை நிறைவு செய்கின்றனர்.

இந்த இரு மாநிலங்களிலும், ஏழை மாணவிகளில் 5-ல் ஒரு வருக்குத்தான் அடிப்படைக் கணிதத்தைச் செய்யும் திறன் உள்ளது.

இடைநிற்றல்

நன்றாகப் படிப்பவர்களில் 15-வது வயதில் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் போல, கணிதத் தில் குறைவான மதிப்பெண் பெறும் 12 வயது மாணவர்கள் பள்ளியில் இருந்து இடை நிற்பது இருமடங்கு அதிகம்.

மாணவர்களின் கல்வி பாதிக்கப் படுவதற்கு, ஆசிரியர்கள் வகுப் புக்கு முறையாக வராததும் ஒரு காரணமாகும். அதாவது, ஆசிரியர் பள்ளி அல்லது வகுப்புக்கு வராமல் தவிர்க்கும் வீதம் 10 சதவீதம் உயர்ந்தால் அது 1.8 சதவீத மாணவர்களின் வருகையைக் குறைக்கிறது.

ஆசிரியர்களுடனான உறவு

அரசு இப்பிரச்சினையைக் களைய ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து நெருக்கமாகச் செயல் பட வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் தவிர்ப்பதைத் தடுப்பது மற்றும் பாலின அடிப்படையிலான வன் முறை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள், நடத்தை விதிமுறைகள் வகுக்கப் பட வேண்டும். சட்டம் இயற்றும் அமைப்புகள், மாணவர்களின் கூடுதல் திறனில் கவனம் செலுத்தும் கொள்கை களை வகுப்பதிலும், அடிப்படைத் திறன்களை மாணவர்கள் பெறு வதையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRB PG news update

ஆன்லைனில் பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள் பதிவுசெய்யப்பட உள்ளன

பிளஸ்-2 தேர்வு எழுதும் அறிவியல், கணித பிரிவு மற்றும் தொழில்கல்வி பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு உண்டு. தேர்ச்சி பெறு வதற்கு தியரியில் 150-க்கு குறைந்த பட்சம் 30 மதிப்பெண்ணும், செய்முறைத்தேர்வில் 50-க்கு 40 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும். பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்படும்.
செய்முறைத்தேர்வை பிப்ரவரி 28-க்குள் முடிக்கு மாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கருத்தில்கொண்டு சென்னை மாவட்டத்தில் 3 கட்டங்களாகவும், மற்ற மாவட்டங்க ளில் 2 கட்டங்களாகவும் செய்முறைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதுநாள் வரை செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை தேர்வுக்கு வருகை தரும் வெளி ஆசிரியர்கள் தான் பதிவுசெய்து தேர்வுத் துறைக்கு அனுப்பி வந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக செய்முறைத் தேர்வு மதிப்பெண் தினசரி தேர்வு முடிய முடிய அன்றைய தினமே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. மதிப்பெண் விவரங்கள் மாணவர்களின் தகவல் தொகுப்பில் உடனடியாக பதிவுசெய்யப்பட்டுவிடும்.
எனவே, முன்பு போல தேர்வு முடிவுகளுக்கான பணிகளின்போது செய்முறைத்தேர்வு மதிப்பெண் விவரங்களை தியரி மதிப்பெண்ணுடன் தனியாக குறிப்பிடத் தேவை யில்லை. தேர்வுமுடிவுகளின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ஆன்லைன் பதிவு முறையை தேர்வுத்துறை நடைமுறைப்படுத்துகிறது.

தர்மபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் அரசு பள்ளி விளையாட்டில் முதலிடம்!

தர்மபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் அரசு பள்ளி மாணவர்கள், அரசு சார்பில்நடக்கும் போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு சாதனைகளை படைத்து, நடப்பு கல்வியாண்டில்,ஒரு லட்சத்து, 8,000 ரூபாயை பரிசுத்தொகையாக குவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், 89 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 113 உயர்நிலைப்பள்ளியும், 311
நடுநிலைப்பள்ளி, 789 துவக்கப்பள்ளிகளும் இயங்கி வருகிறது. மாணவ, மாணவிகளுக்குள் புதைந்திருக்கும் விளையாட்டு, கலைத்திறன் ஆற்றலை வெளிப்படுத்த, அரசு சார்பில்,பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. தொடர் படிப்புகளால் முடங்கி கிடந்த மாணவர்கள், பல்வேறு போட்டிகளால்தங்களது தனித்திறமையை காட்டி, புத்துணர்ச்சி பெற்றனர்.

அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பள்ளிக்கல்வித்துறை சார்பில்,பைகா, மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. கல்வி அறிவு மற்றும் வருமானத்தில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தை மாணவர்களின், விளையாட்டு திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்று, வெற்றி பெறும் மாணவ,மாணவிகளுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.


தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக,அரசு பள்ளி அளவில், தர்மபுரி அடுத்த சோளக்கொட்டாய் அரசு பள்ளி மாணவர்கள், நடப்பாண்டில் அதிகளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, நடப்பு கல்வி ஆண்டில், ஒரு லட்சத்து, 8,000 ரூபாயை பரிசுத்தொகையாக பெற்று முதலிடம் பிடித்தனர்.

இதுகுறித்து, சோளக்கொட்டாய் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாது, உடற்கல்வி ஆசிரியர் கருணாகரன் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகம், தேசிய அளவில் நடந்த, ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, கபடி, வாலிபால்,கோகோ போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற, சோளக்கொட்டாய் அரசு பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியோடு,விளையாட்டு, கலைத்திறன் ஆகியவற்றையும் வழங்கி வருகிறோம். முறையான பயிற்சியையும், முயற்சியையும் தன்னகத்தே கொண்ட இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, எங்கள் பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

ஆண்டுதோறும் பைக்கா, முதல்வர் கோப்பை, தேசிய மகளிர் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மாநில, தேசியபோட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பரிசுத்தொகை வழங்கி வருகிறது.2013-14ம் ஆண்டில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளை குவித்ததன் மூலம், சோளக்கொட்டாய் அரசு பள்ளி மாணவர்கள், ஒரு லட்சத்து, 8,000 ரூபாயை பரிசுத்தொகையாக வென்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், அதிக பரிசுத்தொகை பெற்று, சோளக்கொட்டாய் அரசு பள்ளி முதலிடத்தில் உள்ளது, என்றனர்.

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாடு

அரசு பணியில் உள்ளவர்களின் கல்விச் சான்றிதழை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்டதுறைகளுக்கு அனுப்புவதற்காக, 14 சிறப்பு குழுக்களை அமைத்து, தேர்வுத்
துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு பணிகளில், ஒருவர் சேர்ந்ததும், அவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறிய, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட துறைகள், 'சான்றிதழ்கள் உண்மையானது தான்' என, அத்தாட்சி கொடுத்த பின் தான், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்,பணி நிரந்தரம் செய்யப்படுவார். அந்த வகையில், அரசு பணியில் சேரும் அனைத்து வகை ஊழியர்களின், 10ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2, ஆசிரியர் கல்வி டிப்ளமோ ஆகிய சான்றிதழ்கள், தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.

இவற்றை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதில்,
தேக்கநிலை இருந்து வருகிறது. இதனால், பல ஆயிரக்கணக்கான ஊழியர், ஆசிரியர், பணி நிரந்தரம்செய்யப்படுவது, தள்ளிப் போகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, 14 சிறப்பு குழுக்களை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நியமித்து உள்ளார். பிளஸ் 2 தனித் தேர்வுப் பணிகளை, தேர்வுத்துறை இயக்குனரக ஊழியர்கள் பார்த்து வந்தனர். பல பணிகள், கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்வதால், பணி பளு,சற்று குறைந்துள்ளது. இதனால், பிளஸ் 2 பணியை, சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திடம்ஒப்படைத்துவிட்டு, இயக்குனரக ஊழியர்களைக் கொண்டு, சிறப்பு குழுக்களை, இயக்குனர் அமைத்துள்ளார். ஒவ்வொரு பிரிவிலும், மூன்று பேர் இருப்பர். தேங்கியுள்ள சான்றிதழ்கள்,உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு, ஓரிரு மாதங்களில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அனுப்பி வைக்கப்படும் என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் ரோசையா உரையுடன் துவங்கியது.

தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் ரோசையா உரையுடன் துவங்கியது.அப்போது அவர் பேசியதாவது: மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இந்தஅரசு உறுதி பூண்டுள்ளது. வறுமை, வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கஅரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். பல்வேறு சவால்களை எதிர் கொண்டு, இந்த அரசு திறம்பட செயலாற்றி வருகிறது.

பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த, 2014-15ம் ஆண்டின் திட்டச்செலவு, 42, 185 கோடியாக உயர்த்தப்படும். மாநில அளவில் வேலை வாய்ப்பு இணையதளம் உருவாக்கப்படும். இது, வேலை தேடுவோர், வேலை தருவோர் ஆகியோரை இணைக்கும் தளமாக செயல்படும். இவ்வாறு ரோசையா பேசினார்.

ஒரு நேர சாப்பாட்டிற்கு அரசு 7 ரூபாய் : விலை உயர்வால் தவிக்கும் விடுதி வார்டன்கள்

தமிழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளில், ஒரு நேர சாப்பாட்டிற்கு அரசு 7 ரூபாய்
மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்வதால், தற்போதைய விலை ஏற்றத்தை சமாளிக்க முடியாமல்
வார்டன்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு சார்பில் ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கள்ளர்சீரமைப்புத்துறைகள் சார்பில் மாணவ, மாணவிகளின் விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதி மாணவர்களின் ஒரு மாத உணவு கட்டணமாக, மாணவர் ஒருவருக்கு தலா 650 ரூபாய் மட்டுமே அரசு வழங்கி வருகிறது.

இந்த தொகையை மூன்று வேளை சாப்பாட்டிற்கு பிரித்து பார்த்தால்,ஒரு மாணவருக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கு அரசு வழங்கும் தொகை 7.22 ரூபாய் மட்டுமே. தவிர,
அரசு விடுதி காப்பாளர்களுக்கு வழங்கியுள்ள விலைப்பட்டியல் 2005ம் ஆண்டு விலைப்படி வழங்கப்பட்டவை.
தற்போது, ஒவ்வொரு பொருளின் விலையும் 100 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன. தற்போதையவிலையில், இந்த 7 ரூபாயில் பொருட்களை வாங்க முடியவில்லை.தவிர, இந்த 7 ரூபாய் சாப்பாட்டில் வாரந்தோறும் மூன்று வேளை உணவு, முட்டையுடன் வழங்க வேண்டும்.
ஒரு வேளை உணவு கோழிக்கறி அல்லது ஆட்டுகறியுடன் இருக்க வேண்டும். சனி,ஞாயிற்றுக் கிழமைகளில்கட்டாயம் இட்லி போன்ற டிபன் வழங்க வேண்டும். தினமும் மாலை 5 மணிக்கு சுண்டல்,காபி கொடுக்கவேண்டும். சுண்டல், காபி கணக்கிலேயே தினமும் குறைந்தது 3 ரூபாய் செலவாகி விடும். மதிய உணவில்காய்கறி பொறியல், மோர், ரசம், சாம்பார் கட்டாயம் இடம் பெற வேண்டும். தினமும் காலையும், இரவும்வெவ்வேறு வகையான மெனு செய்து வழங்க வேண்டும் என அரசு ஒரு பட்டியலே வழங்கி உள்ளது.
இந்த பட்டியல் படிதான் உணவு வழங்க வேண்டும். இந்த விடுதிகளுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன.கடந்த 2012ம் ஆண்டு முதல் மானிய சிலிண்டர்களையும் அரசு நிறுத்தி விட்டது. இதனால் விடுதி நிர்வாகங்கள் ஒரு சிலிண்டரை 1275 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டியது உள்ளது.
குறைந்தபட்சம் ஒரு விடுதிக்கு மாதந்தோறும் 15 சிலிண்டர்களாவது தேவைப்படுகிறது. இந்த வகையில்ஒவ்வொரு விடுதிக்கும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவாகிறது. சிலிண்டர் வாங்க அதிகரித்த செலவுகளை ஈடுகட்டும் வகையில் அரசு ஒரு மாணவருக்கு, மாதம் 105 ரூபாய் அதிகரித்து மாதம் 755 ரூபாய் என ஒதுக்கீடு செய்தது. இந்த ஒதுக்கீடு பணம், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளுக்கும், கள்ளர் சீரமைப்பு நலத்துறை விடுதிகளுக்கும் வழங்கப்பட்டு விட்டது.அரசு உத்தரவு வெளியாகி ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும் ஆதிதிராவிடர்நலத்துறை விடுதிகளுக்கு வழங்கப்படவில்லை.

இதனால், இந்த துறை விடுதி வார்டன்கள் கடும் நிதி நெருக்கடியில் விடுதிகளை நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.அரசு விடுதி மாணவர்களுக்கு தற்போதைய விலை ஏற்றத்திற்கு ஏற்ப கூடுதல் நிதி வழங்க வேண்டும். தவிர ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியையும் ஆதிதிராவிட நல மாணவர் விடுதிகளுக்கு உடனடியாக அனுமதித்து,அரசு உத்தரவிட வேண்டும்.

நீங்களும் ஜெயிக்கலாம்.....

நீங்களும் ஜெயிக்கலாம்.....
ஐ.எப்.எஸ். தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், தமிழக மாணவர்கள் 15 பேர் உள்பட மொத்தம் 85 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அகில இந்திய அளவில் திண்டுக்கல் இன்ஜினீயர் வி.பி.கவுதம் 3-வது இடம் பிடித்தார்.

இந்திய வனப்பணி தேர்வு

வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வுசெய்வதற்காக ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. 2013-ம் ஆண்டுக்கான 85 ஐ.எப்.எஸ். பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதம் முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு முதல்முறையாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வோடு ஐ.எப்.எஸ். முதல்நிலைத் தேர்வு சேர்த்து ஒருங் கிணைந்த தேர்வாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தக் கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அகில இந்திய அளவில் ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு டிசம்பரில் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடந்தது.

தமிழக மாணவர்கள் சாதனை

இந்த நிலையில், ஐ.எப்.எஸ். தேர்வு முடிவை யு.பி.எஸ்.சி. புதன்கிழமை மாலை வெளியிட்டது. வட இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் குமார் ஜா முதலிடத்தையும், குணால் அங்கிரீஸ் 2-ம் இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த வி.பி.கவுதம் 3-ம் இடத்தையும் பிடித்தனர். கவுதம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் ஆவார். 22 வயது நிரம்பிய கவுதம் 2012-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. பட்டம் பெற்றார். தந்தை பழனிச்சாமி வழக்கறிஞர், தாயார் கஸ்தூர் ஆசிரியை.

ஐ.எப்.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 85 பேரில் 15 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிபெற்ற தமிழக மாணவ-மாணவிகளில் 14 பேர் சென்னையைச் சேர்ந்த சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ்குமார் உஜ்வால் என்ற மாணவரும் இதே பயிற்சி மையத்தில் படித்து வெற்றிபெற்றுள்ளார். ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவ-மாணவிகள் விவரம். (அடைப்புக்குறிக்குள் ரேங்க்) வருமாறு:

வி.பி.கவுதம் (3-வது ரேங்க்), கே.கல்பனா (9), டி.சாருஸ்ரீ (14), ஆர்.மலர்கொடி (24), எஸ்.சுந்தர் (33), பி.பூர்ணிமா (41), எஸ்.சூர்ய நாராயணன் (43), எஸ்.ராஜ்திலக் (44), வித்யாசாகரி (52), வி.செந்தில் பிரபு (56), எம்.சிவராம் பாபு (61), பி.எம்.அரவிந்த் (63), கே.கிருஷ்ணமூர்த்தி (68), எம்.ராஜ்குமார் (69), டி.தினேஷ் (77).

எம்.எல்.ஏ. மகன் வெற்றி

இவர்களில் பி.பூர்ணிமா, தமிழக சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.எஸ்.பி.) கண்காணிப்பாளர் பாண்டியனின் மகள் ஆவார். டி.தினேஷ், திருச்சி துறையூர் எம்.எல்.ஏ. இந்திரா காந்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு முந்தைய காந்தி

இந்தியாவுக்கு முந்தைய காந்தி

இருபதாம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் உலகில் இயங்கிய மிகப் பெரிய தலைவர்களில் தேசிய விடுதலைக்காகப் போராடி வெற்றி பெற்றவர்கள் மாவோவும் காந்தியும். இன்று உலகம் முழுவதும் சீனாவைப் பற்றித் தெரியும். மாவோவைப் பற்றித் தெரியும் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தியாவைப் பற்றித் தெரியாதவர்கள்கூட காந்தியைப் பற்றி அறிந்திருப்பார்கள்.

எங்கெல்லாம் அடக்குமுறையை எதிர்த்துப் போராட்டம் நடக்கிறதோ, அங்கெல்லாம் காந்தியின் போராட்ட முறை பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவரது முறையைப் பரிசீலித்து நிராகரித்தவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மத்தியிலும்கூட "இந்தியக் கிழவரின் முறை சரிதானோ?" என்ற கேள்வி எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கும்.

காந்தியின் போராட்ட முறைகளின் சோதனைக் களமாகத் திகழ்ந்தது தென்னாப்பிரிக்கா. 1893-ம் ஆண்டிலிருந்து 1914-ம் ஆண்டுவரை சிறிய அளவில் சில நூறு பேர்களின் துணைகொண்டு அங்கு காந்தியின் தலைமையில் நடந்த போராட்டங்கள்தான் பல லட்சம் பேர்கள் பங்கெடுத்த நமது சுதந்திரப் போரின் வித்துக்கள்.

குகாவின் சாதனை

காந்தியின் தென்னாப்பிரிக்க அனுபவங்களைப் பற்றி முழுமையான புத்தகம் ஒன்று ராமச்சந்திர குகாவின் 'இந்தியாவுக்கு முந்தைய காந்தி'(காந்தி பிஃபோர் இந்தியா) வெளிவரும் வரை வந்ததில்லை என்பது வியப்பைத் தருகிறது. இதனாலேயே குகாவின் புத்தகம் ஒரு சாதனை என்பதில் சந்தேகமே இல்லை. தெளிவான சொற்களில் காந்தியின் முதல் 45 ஆண்டு வாழ்க்கையை அவர் புத்தகத்தில் விவரிக்கிறார்.

நமக்கு காந்தியை இளைஞராக நினைத்துப் பார்ப்பதே கடினம். குகாவின் புத்தகம் காட்டும் காந்தி துடிப்பான இளைஞர். 1909-ம் ஆண்டு எடுத்த படம் அட்டையை அலங்கரிக்கிறது. அது, தமிழரான தம்பி நாயுடுவுக்கு காலன்பாக் என்ற காந்தியின் நண்பரும் சீடருமான யூதர் கொடுத்தது. படத்தில் இருப்பவர் திறந்த மார்பு காந்தி அல்ல. கோட்டு அணிந்தவர். ஆனால், இவரும் நமக்குத் தெரிந்த காந்தியும் ஒன்றுதான் என்பதைப் படத்தில் காலன்பாக் எழுதியிருக்கும் வார்த்தைகள் அறிவிக்கின்றன: 'நாம் அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தால், நமக்கு நாமே உண்மையுள்ளவர்களாக இருப்போம்.'

புத்தகத்தைப் படித்து முடித்ததும், காந்தியின் தென்னாப் பிரிக்க வாழ்க்கை முழுவதும் தனக்குத் தானே எவ்வாறு உண்மையுள்ளவராக இருக்க முடியும் என்ற கேள்விக்கு காந்தி பதில் தேடுவதில் செலவிடப்பட்டது என்று நமக்குத் தோன்றுகிறது.

பயணங்களின் தொடக்கம்

காந்தியின் முதல் பயணம் தாதா அப்துல்லா என்ற குஜராத்தி வணிகர் ஒருவரின் வழக்கு தொடர்பாக நிகழ்ந்தது. அதற்கு 33 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து மக்கள் அங்கு குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர். பலர் தமிழர்கள். அவர்களின் உழைப்பால் சீனி உற்பத்தி 10 ஆண்டுகளில் 50 மடங்கு

அதிகரித்ததாக ஆசிரியர் கூறுகிறார். அன்று நேடால் மாநிலத்தில் இருந்த இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை சுமார் 35,000. இவர்களுக்காக ஆரம்பித்த சிறிய போராட்டங்கள்தான் காந்தியின் அரசியல், சமூக, கலாச்சார, ஆன்மிகப் பயணங்களின் முதல் மைல்கற்கள் என்று கூறலாம். காந்தியின் செயல்பாடுகள் எல்லாம் - அவரது சொந்த வாழ்வில் நடந்தவைகூட - அவரது போராட்டங்களைச் சார்ந்தவையாக இருந்தன. எனவே, காந்தி என்ற

தனிமனிதரை நாம் அவரது பொதுவாழ்வு தந்த வெளிச்சத்திலேயே காண முடிகிறது. இந்தப் பயணங்களில் அவருக்குத் துணையாக நின்றவர்களும், தடையாக நின்றவர்களும் அவரைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள். புத்தகம் இவர்கள் கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதன் வாசிப்புத் தன்மையும் நம்பகத்தன்மையும் மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கிறது.

போராட்டங்களின் ஆன்மிக அடித்தளம்

ஆரம்பத்திலிருந்தே தனது போராட்டங்களுக்கு - அவை மக்களின் வாழ்வாதாரங்களைச் சார்ந்தவையாக இருந்தாலும் கூட - ஆன்மிக அடித்தளம் ஒன்றை நிறுவ காந்தி தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தார்.

காந்தி இந்துவாகப் பிறந்தார். கடைசிவரையில் தான் இந்து என்ற அடையாளத்தில் உறுதியாக இருந்தார். ஆனால், ஆப்ரகாமிய மதங்களோடு அவருக்கு இருந்த நெருக்கமான, செறிவு மிக்க தொடர்பு எந்த இந்துவுக்கும் இன்றுவரை இருந்ததில்லை. யூத மதத்தைப் பற்றி அவருக்கு நண்பர்களின் மூலம் ஒரு புரிதல் இருந்தது. இயேசுவின் மலைப் பிரசங்கமும், டால்ஸ்டாயின் 'கடவுளின் பேரரசு உனக்குள் இருக்கிறது' புத்தகமும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. புனித குரானையும் அவர் நிச்சயம் படித்திருந்தார்.

அவரது டால்ஸ்டாய் மற்றும் ஃபீனிக்ஸ் பண்ணைகளில் எல்லா மதங்களைச் சார்ந்தவர்களும் இருந்தார்கள். எல்லாத் தொழில்களையும் செய்தார்கள். வெள்ளையர்களும் இந்தியர்களும் கருப்பினத்தவர்களும் சேர்ந்து செயலாற்றினர். காந்தியே சொல்கிறார்: "பண்ணைகளில் மதம் சார்ந்த சண்டைகள் ஒன்றுகூட நடந்ததாக எனக்கு நினைவில்லை. உழைப்பு பளுவாக இல்லை. மகிழ்ச்சி தருவதாக இருந்தது."

அகிம்சை முறையில் போராடுவதுதான் மிகச் சிறந்த வழி என்ற உறுதி காந்திக்கு ஆரம்ப காலத்திலிருந்தே ஏற்பட்டுவிட்டது. அதன்மீது காந்தி கொண்டிருந்த தன்னம்பிக்கை வியக்கத் தக்கது. 1914-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து விடைபெறும் தருணத்தில் காந்தி சொல்கிறார்: "உலகத்திலேயே மிகப் பலம் வாய்ந்த ஆயுதம் சத்தியாக்கிரகம்."

யாருக்காகப் போராடினார்?

காந்தியின் 1906-ம் ஆண்டுப் போராட்டத்தில் அவருக்குத் துணை நின்றவர்கள் குஜராத்தி வணிகர்கள். ஆனால், 1914-ம் ஆண்டு காந்தி, தமிழ் உழைக்கும் வர்க்கத்தின் தலைவராகவே அறியப்பட்டார். கருப்பினத்தவரின் பிரச்சினை களை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்படுகிறது. அவருக்குக் கருப்பினத்த வர்களிடையே தோழர்கள் இருந்தாலும், அவர்களோடு சேர்ந்து உழைத்தாலும் கருப்பினத்தவரின் தலைவராக காந்தி தன்னை நினைக்கவில்லை. வந்த புதிதில் மேற்கத்தியரை இந்தியர்களுக்கு மேல் தட்டிலும் கருப்பினத்தவரைக் கீழ்த் தட்டிலும் வைத்துப் பார்த்த காந்திக்கு, கருப்பினத்தவர் மீது செலுத்தப்படும் அடக்குமுறையின் தன்மையை உணர்வதற்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை. 1908-ம் ஆண்டு ஆற்றிய உரை ஒன்றில், எல்லா இனத்தவர்களும் ஒன்றுசேர்ந்து இருக்க வேண்டும் என்றார்.

கருப்பினத்தவர்களும் சத்தியாக்கிரக முறையைக் கைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "இந்த நிலத்தின் பூர்வீகக் குடிகள் கருப்பினத்தவர்கள். நாம் இங்கு இருப்பது அவர்களது நல்லெண்ணத்தினால். நாம் அவர்களது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. மாறாக, வெள்ளையர்கள் வன்முறையினால் அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று காந்தி எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது. கருப்பினத் தலைவர்களான ஸெமே, ட்யூப் போன்றவர்கள் காந்தியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள்.

"இந்தியர்களின் போராட்டங்கள் தரும் பாடங்களை நாங்கள் மறக்க மாட்டோம்'"என்று ஸெமே கூறினார்.

போராட்டங்களின் வடிவங்கள்

1894-ம் ஆண்டு 'நேடால் இந்திய காங்கிரஸ்' நிறுவப்பட்ட போது, காந்தி, அரசுக்குக் கடிதங்கள் எழுதி, மனுக்கள் போட்டு, நேரில் அதிகாரிகளைச் சந்தித்து நீதி பெற முடியும் என்று நினைத்தார். 1906-ம் ஆண்டுதான் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சிறை செல்லத் தயார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. 'தலைவர்கள் மட்டும் அல்ல, மக்களும் சேர்ந்து சிறை செல்வோம்' என்ற அந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது தொடங்கிய சத்தியாக்கிரகம் பல வடிவங்களை எடுத்தது. உரிமம் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்வது, கைநாட்டு இட மறுப்பது, பதிவுப்பத்திரங்களை எரிப்பது, எல்லையை அனுமதியின்றிக் கடப்பது போன்ற போராட்டங்கள் அறவழியில் வன்முறை ஏதுமின்றித் தனியாகவும் கூட்டாகவும் நடந்தன.

போராட்டத்தின் தீவிரத்தைப் படிப்படியாக உயர்த்துவது, அரசுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வைத்துக்கொள்வது, தேவை ஏற்பட்டால் அரசுடன் எடுத்திருந்த நிலையிலிருந்து சிறிது இறங்கிவந்து ஒப்பந்தம் செய்துகொள்வது, வெற்றி அடுத்த போராட்டத்துக்கு மக்களைக் கொண்டுசெல்லும் படிக்கட்டு என்பதில் தெளிவாக இருப்பது போன்றவை காந்தியின் தென்னாப்பிரிக்கப் போராட்டத்தின் அம்சமாக இருந்திருக்கின்றன. நமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒத்திகைபோல நமக்குத் தோன்றுகிறது. அவரது தென்னாப்பிரிக்கப் போராட்டங்கள் அதிகம் ஏதும் சாதித்துவிடவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

காந்தியப் போராட்டங்கள் உடனடித் தீர்வுக்காக நடத்தப்பட வில்லை. அவை மனிதகுல விடுதலையை நோக்கி நடத்தப்பட்டவை. இன்று உலகெங்கும், குறிப்பாக தென்னாப்பிரிக்காவில், நிறவெறி, நேரடி காலனியாதிக்கம் போன்ற ஏகாதிபத்தியத்தின் போர்வாள்கள் முழுவதும் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன என்றால், அதற்கு காந்தியின் போராட்ட முறைகள் முக்கியமான ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களிலிருந்து அரேபிய வசந்தத்துக்காகப் போராடியவர்கள் வரை, காந்தியப் போராட்டத்தின் இந்த முக்கியத்துவத்தைத் தெரிந்திருந்தார்கள்.

நண்பர்கள்

காந்திக்குத் துணைநின்றவர்களில் முக்கியமானவர் காலன்பாக். காந்திக்கும் காலன்பாக்குக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி பலவிதங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, அது பாலியல் அடிப்படையைக் கொண்டது என்று ஜோசப் லெலிலாண்ட் எழுதிய புத்தகம் கூறுகிறது. இந்த முடிவு அடிப்படையற்றது என்று குகா ஆதாரத்துடன் மறுக்கிறார். காந்தி, குடும்பத்தைப் பிரிந்து காலன் பாக்குடன் ஜோகனஸ்பர்க் நகரில் தங்கியிருந்தது சமூகப் பொறுப்புகளுக்காக, பாலியல் தூண்டுதல்களால் அல்ல.

குடும்பம்

காந்தியைவிட அவரது குடும்பத்தினர்தான் தென்னாப் பிரிக்காவில் தனிப்பட்ட முறையில் அதிக துன்பங்களை அனுபவித்தனர் என்று சொல்லலாம். அன்னை கஸ்தூர்பா கணவரின் கவனிப்பு இல்லாமலும் பிடிவாதத்தாலும் பல முறை மரணத்தின் வாயில் வரை செல்ல வேண்டிய தாயிற்று. 21 வயது முடிவதற்குள் காந்தியின் புதல்வர் ஹரிலால் சத்தியாக்கிரகம் செய்து நான்கு முறை சிறை சென்றார். இருந்தாலும், காந்தி அவரிடம் பரிவோடு நடந்துகொள்ளவில்லை. அவருடைய மணவாழ்வில்கூட காந்தி பலமுறை தலையிட்டிருக்கிறார்.

மற்றொரு புதல்வரான மணிலால் பிரம்மச்சரி யத்தின் வெப்பத்திலிருந்து விடுபடுவதற்காகத் திருமண மான பெண் ஒருவருடன் உறவுகொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். மனிதர்கள் எல்லோரும் மகாத்மாக்கள் ஆகலாம் என்ற நம்பிக்கையே காந்தியைத் தன்னிடம் நெருக்கமானவர்களை சோதனைகளுக்கு உள்ளாக்க வைத்தது. அவர்கள் விருப்பப்பட்டு சோதனைகளுக்கு இணங்கவில்லை. காந்திமீது கொண்டிருந்த மதிப்பாலும் பயத்தாலும் இணங்கினர். கஸ்தூர்பா சொக்கத்தங்கமாக வெளியே வந்தார் என்றால், ஹரிலாலும் மணிலாலும் சோதனைகளால் மிகுந்த காயப்பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழரும் காந்தியும்

குகாவின் புத்தகம் முழுவதும் இழையாக வருவது காந்திக்கும் தமிழருக்கும் இடையே இருந்த, பிரிக்க முடியாத உறவு. போராட்டத்துக்காக அவருக்குத் தங்களிடம் இருந்த அனைத்தையும் தந்தவர்கள் தமிழர்கள். ஜோஹனஸ்பர்க் நகரத்தில் நடத்தப்பட்ட கடைசிப் பாராட்டுக் கூட்டத்தில் காந்தி மூன்று இந்தியர்களைக் குறிப்பிட்டார். மூன்று பேரும் தமிழர்கள். காந்தி என்ன பேசினார் என்பதுபற்றி நிருபர் எழுதுகிறார்.

"ஹனஸ்பர்க் வள்ளியம்மையைத் தந்தது, இளம் பெண்ணான வள்ளியம்மையை. அவளது உருவம் என் கண் முன்னால் இப்போது நான் பேசும்போதே நிற்கிறது. உண்மைக் காக உயிரை விட்டவர். ஜோஹனஸ்பர்க் நாகப்பனையும் நாராயணசாமியையும் தந்தது. பதின்பருவத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தவர்கள். உயிரைக் கொடுத் தவர்கள். ஆனால், நானும் திருமதி காந்தியும் இங்கு உயிரோடு நிற்கிறோம்.

நானும் திருமதி காந்தியும் விளம்பரத்தின் வெளிச்சத்தில் வேலை செய்தோம். ஆனால், இவர்கள் திரைமறைவில் வேலை செய்தார்கள் - எங்கு போகிறோம் என்பதுபற்றி அறியாமல், ஆனால் செய்வது சரியானது, செய்ய வேண்டியது என்ற நம்பிக்கையுடன். புகழ் யாருக்காவது உரித்தானது என்றால் உயிரைத் தியாகம் செய்த இந்த மூவருக்கே அது உரித்தானது."

குஜராத்திகள் மத்தியில் பேசும்போது காந்தி கூறுகிறார்:

குஜராத்தி சகோதரர்கள் எனக்கும் திருமதி காந்திக்கும் உதவிசெய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்ச் சமுதாயம் போராட்டத்தை வலுப்பெறச் செய்த அளவுக்கு அவர்கள் செய்யவில்லை என்றுதான் நான் சொல்வேன். குஜராத்திகள் தமிழர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு அவர்கள் மொழி தெரியாது. ஆனால், அவர்கள்தான் எனக்கு அதிக உதவி செய்தவர்கள்.

தமிழர்கள் மத்தியில் பேசியது:

"எனக்கு மதராஸ்பற்றிக் கொஞ்சம் தெரியும். அங்கு சாதி வேற்றுமைகள் எவ்வளவு கூர்மையாக இருக்கின்றன என்பது பற்றியும் தெரியும். அந்த வேற்றுமைகளை நீங்கள் இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தென்னாப்பிரிக்கா வந்தது வீண் என்றுதான் கூறுவேன். நீங்கள் யாரும் உயர்ந்த சாதியையோ தாழ்ந்த சாதியையோ சேர்ந்தவர்கள் அல்லர், நீங்கள் எல்லோரும் இந்தியர்கள், தமிழர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்."

குகாவின் புத்தகம் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவர வேண்டும்.

பி ஏ கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர்,
பொதுத்துறை நிறுவன மொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

TAMIL THE HINDU


Sent from my iPad

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

பகல் 12 மணிக்கு கவர்னர் உரையுடன் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், கவர்னர் ரோசய்யாவின் உரையுடன் பேரவை தொடங்குகிறது. அவர், ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அதில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும். அதன் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் வாசிப்பார்.

அத்துடன் இன்றைய கூட்டம் முடியும். இதை தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழுக் கூடி கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை முடிவு செய்யும்.

அதை தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். விவாதங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்குவார். இந்த கூட்டத்தொடர் ஒரு வாரம் நடக்கும் என்று தெரிகிறது.



ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில்...


ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம். தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர்
தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காகமாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில்மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர்.ஏற்கனவே ஆஃப்லைனில் பதிவு செய்த விவரங்களும் பள்ளிகளுக்கான DISEவிவரங்களும் அரசு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள்
அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிடஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, பணிப்பதிவேட்டிலுள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன.
 முதற்கட்டமாக அடிப்படை விவரங்களையும் புகைப்படத்தையும் தரவேற்றும்பணி பிப்ரவரிமுதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.ஏற்கனவே பள்ளிகள் குறித்த DISE விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த
தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில்முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண்,போன்றவை தற்போது பதியப்படுகின்றன.

பணிப்பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு, சரண்டர் போன்றவிவரங்களும் TPF, CPS, SPF, HF, பணிக்கொடை போன்றவற்றுக்கான வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் அடுத்த கட்டப் பணியின் போது பதிவேற்றப்பட உள்ளன.சம்பளக் கமிஷன் ஊதிய நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள், மாநிலக் கணக்காயருக்குக்கருத்துரு அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல், முன்னுரிமைப் பட்டியல்,
வாரிசு நியமனம் போன்ற அனைத்தையும் எளிதில் தெளிவாக முடிக்க e-ServiceRegister உதவிகரமாக இருக்கும் என்பதால்இம்முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். மேலும் அலுவலகத்தில் பணிப்பதிவேடு சிதிலமடைந்தாலோ, வெள்ளம், தீ,இடிபாடு போன்றவற்றால் பாழடைந்தாலோ காணாமல் போய்விட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை

பிளஸ் 2 வகுப்புக்கான  செய்முறைத் தேர்வு  பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம்


பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச்3ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 8 லட்சம் மாணவமாணவிகள்எழுத உள்ளனர். தேர்வுக்கு முன்னதாக அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் செய்முறைத் தேர்வுக்கான தேதிகளை முடிவு செய்வார்கள். இருப்பினும் பிப்ரவரி 28ம் தேதிக்குள்செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடித்து அதில் மாணவர்கள் பெற்ற அகமதிப்பெண்களை தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

இதன்படி  சென்னை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். அறிவியல் பாடங்களை எடுத்து படிக்கும் 54 ஆயிரம் மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5ம் தேதி தொடங்கி 22ம்
தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

பாரம்பரிய மருத்துவம் மீது பார்வையைத் திருப்புங்கள்!


பாரம்பரிய மருத்துவம் மீது பார்வையைத் திருப்புங்கள்!
பாரம்பரிய மருத்துவம் அல்லது மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவற்றின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இம்மருத்துவ முறைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது என்றபோதும், இவற்றுக்குரிய பொதுவான சிறப்புகள் பல: பக்கவிளைவுகள் அற்றவை; நோயின் விளைவுகளை மட்டும் குணப்படுத்தாமல் நோயை வேரோடு போக்கி முழுமையாகக் குணப்படுத்துபவை; அன்றாட உணவுகள், மூலிகைகள் மூலமாகவும் எளிய உடற்பயிற்சிகள் வழியாகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பவை; உடலை மட்டுமோ உடலின் தனி உறுப்பை மட்டுமோ கவனத்தில் கொள்ளாமல், ஒவ்வோர் உறுப்பும் ஒட்டுமொத்த உடலின் பாகம் என்னும் முழுமை உணர்வைக் கொண்டவை; மனம்பற்றிய அறிதலையும் செய்து மருந்துகளைத் தேர்பவை; முக்கியமாக, மக்களுக்குப் பெரும் செலவுகளை ஏற்படுத்தாதவை.

விஷக்காய்ச்சல் அனுபவங்கள்

ஒருகாலத்தில் எங்கோ, யாரோ சொல்ல மாற்று மருத்துவத்தின் சிறப்புகளைக் கதைபோலக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது சூழல் மாறி யிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக நுழைந்த பல நோய்களுக்கு மாற்று மருத்துவ சிகிச்சைகள் நல்ல பலன் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக, சிக்குன் குனியா காய்ச்சலைக் குணமாக்கவும் குணமான பின் பல நாட்கள் நீடித்த மூட்டுவலி, சோர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் இம்மருத்துவ சிகிச்சைகள் பெரிதும் உதவின. சமீப காலத்தில் தமிழகத்தை அச்சுறுத்திய டெங்கு காய்ச்ச லின் பரவலை விரைந்து கட்டுப்படுத்தியதிலும் இந்த மருத்துவ முறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது.

சித்த மருத்துவ முறையிலான பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு, நிலவேம்புக் குடிநீர் ஆகியவை மிக எளிதாக இந்நோயைக் குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவின. திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, பல இடங்களில் முகாம் நடத்தி உரிய மருந்துகளை விநியோகித்தது மட்டுமல்லாமல், 24 மணி நேரமும் தொடர்புகொள்ள செல்பேசி எண்களை அளித்து, மக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியது. மருந்துகளைப் பரிந்துரைத்து வாங்கிக்கொள்ளவும் வழிகாட்டியது.

இம்மருத்துவத் துறைகள் தாங்கள் வழங்கும் மருந்துகளையோ மருந்துப் பெயர்களையோ மறைத்து வைக்கவில்லை. மக்கள் எளிதாகத் தாங்களே கையாளும் படி பெயர்களையும் தயாரிப்பு முறைகளையும் தெரிவித் தும் அவற்றைப் பெறும் இடங்களையும் முறைகளையும் அறிவித்தும் வெளிப்படைத்தன்மையால் மக்களை நெருங்கிச் சென்றன. நாமக்கல் மாவட்டத்தில் சிக்குன் குனியா வேகமாகப் பரவியபோது, ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி ‘ரஸ்டாக்ஸ்’ என்னும் மருந்தை முன்தடுப்பாகப் பலர் பயன்படுத்தித் தற்காத்துக் கொண்டனர். தாகம் என வருவோர் தாமே மொண்டு பருகிச் செல்ல வாய்த்த திருவிழாத் தண்ணீர்ப் பந்தல்போல மூலிகைக் குடிநீரும் இலைச்சாறுகளும் மக்களுக்குப் பயன்பட்டன. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இவை கிடைக்கும்படி செய்து மக்களைக் காத்ததோடு, நற்பெயரையும் பெற்றது அரசு. இப்போதைய நிதி ஒதுக்கீட்டு அறிக்கையில், அரசும் இம்மருத்துவ முறைகளின் சிறப்பையும் அவை பயன்பட்ட விதத்தையும் விதந்து குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பரவலாக்க மேலும் பல நடவடிக்கைகளை அரசு எடுப்பது அவசியமாகிறது.

கல்லூரிகளின் நிலை

பாரம்பரிய மருத்துவத்தைப் பரம்பரை பரம்பரையாகச் செய்துவருவோரே கற்றுக்கொள்ள முடியும் அல்லது கற்றுக்கொடுக்க முடியும் என்றிருந்த சூழலை உடைத்தவை இம்மருத்துவக் கல்விக்கு என அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரிகள். இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையானது சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா- இயற்கை மருத்துவம் ஆகிய ஐந்து மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிக்கிறது. சித்த மருத்துவத்துக்கு சென்னை, பாளையங்கோட்டை ஆகிய இரண்டு இடங்களிலும் ஆயுர்வேதத்துக்கு கன்னியாகுமரி கோட்டாற்றிலும் ஹோமியோபதிக்கு மதுரை திருமங்கலத்திலும் யுனானி - இயற்கை மருத்துவத்துக்குச் சென்னையிலும் என ஆறு அரசுக் கல்லூரிகள் தமிழகத்தில் இருக்கின்றன. உள்கட்டமைப்புகளின் போதாமை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் கொடுக்க மறுப்பதும் தமிழக அரசு போராடி அங்கீகாரம் பெறுவதுமாக இருந்த நிலையில், இப்போது ஓரளவு ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதுடன் தமிழக அரசு இக்கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தவிர, ஆராய்ச்சிப் பிரிவுகளை உருவாக்கவும் ரூ.12 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் இவ்விதம் இக்கல்லூரி களுக்கும் ஆராய்ச்சிக்கும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும் பெருமிதமும் தோன்றும் அளவு உள்கட்டமைப்பு வசதிகள் அப்போதுதான் மேம்படும். பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், மருத்துவ முகாம்கள் நடைபெறவும் நிதி உதவி தேவை. அவற்றையும் கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீட்டைத் தொடர வேண்டும்.

மாணவர் சேர்க்கையில் மாற்றம்

இம்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கையிலும் பெருமளவு மாற்றம் தேவை. ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை நடைபெற செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆகிவிடுகின்றன. இந்தக் கல்வியாண்டில் அங்கீகாரப் பிரச்சினைகள் ஏதுமில்லாதபோதும் மாணவர் சேர்க்கைக் கெடுவான அக்டோபர் இறுதியில்தான் கலந்தாய்வு நடத்தப்பட்டு, போதிய அவகாசம்கூட இன்றி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மறுகலந்தாய்வு நடத்தக் காலம் இன்மையால், ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப முடியவில்லை. மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் மே மாதத்தில் முடிவுகளைப் பெறுகின்றனர். இப்படிப்பில் சேர வேண்டுமானால், அதன் பின் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை.

ஐந்து படிப்புகளில், தாம் சேர விரும்பும் துறை கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எந்த வழியும் இல்லை. கிடைக்கும் என்னும் உறுதியில்லாத நிலையில் வேறு ஏதாவது படிப்புகளில் சேர்ந்துவிடுகின்றனர். பின்னர், இப்படிப்பு கிடைக்குமானால், ஏற்கெனவே சேர்ந்த படிப்பிலிருந்து விலகி வருவதா வேண்டாமா என முடிவெடுக்கத் திணறுகின்றனர். ஏனென்றால், பிற படிப்புகளில் கிட்டத்தட்ட ஒரு பருவம் முடிந்து தேர்வு எழுதத் தயாராகும் நிலையில்தான் இப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. சேர்ந்த கல்லூரியிலிருந்து செலுத்திய கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறவும் இயலுவதில்லை. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய பின், அடுத்த படிப்பில் சேர எட்டு மாதக் காத்திருப்பு மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பொறியியல், ஆங்கில மருத்துவக் கல்வி ஆகியவற்றுக்கு நடைபெறுவதைப் போல ஜூலை மாதத்துக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர்கள் சேர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

எங்கே பணி வாய்ப்புகள்?

மாற்று மருத்துவப் படிப்பை முடித்தோருக்கான அரசு வேலைவாய்ப்பும் மிகவும் குறைவு. வட்டத் தலைநகர அரசு மருத்துவமனைகளில் சித்தா அல்லது ஹோமியோபதி மருத்துவத் துறை மட்டும் செயல்படுகிறது. மாவட்டத் தலைநகர் என்றால் இவ்விரு துறைகளும் இருக்கின்றன. ஒரே மருத்துவர்தான். அவர்களும் வெளிநோயாளிகளைப் பார்ப்பதோடு சரி. ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகிய துறைகள் இன்னும் அரசு மருத்துவ மனைகளில் செயல்படவில்லை. அவற்றைக் கற்கும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் கிடையாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மாற்று மருத்துவத்துக்கான அனைத்துப் பிரிவுகளும் தொடங்கி மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைப் பெற மருத்துவர்களையே நாட வேண்டியுள்ளது. அவசரத்துக்கு ஏதாவது மருந்து வாங்க வேண்டும் என்றால்கூட, மருந்துக் கடைகள் இல்லை. பெருநகரங்களில் எங்காவது ஒளிந்திருக்கும் மருந்துக் கடைகளைத் தேடிப் போக வேண்டும். கூட்டுறவு மருந்தகங்களில் மாற்று மருத்துவ மருந்துகளும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

நமது பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் தக்கவைப்பதோடு நம் பருவநிலைகள், வாழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு சிகிச்சை முறைகளை உருவாக்கியுள்ள இம்மருத்துவ முறைகள் மக்களிடம் அரசுக்கு நற்பெயரை உருவாக்குவதிலும் முன்னிற்பவையாக இருக்கின்றன. ஆகவே, அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, இம்மருத்துவ முறைகளையும் கல்வியையும் மேலெடுத்துச் செல்ல வேண்டும்!

- பெருமாள் முருகன், கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: murugutcd@gmail.com
Tamil Hindu

புதன், 29 ஜனவரி, 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிய கால எல்லைக்குள்   ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத  TET EXAMS  PAPER I,PAPER II   வழக்குகள் நாளை 30.01.2014 விசாரணைக்கு வரக்கூடும் என  எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் வழக்கு விசராணைப்பட்டியலில் TRB  வழக்குகள் எதுவும் இடம்பெறவில்லை.


சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள்NEWS UPDATE 29.01.2014


சென்னை உயர்நீதிமன்றத்தில்  இன்றய (29.01.2014)விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் விவரம்

 1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS  TET EXAMS 
 PAPER I-  FILED AFTER 26.11.2013    - No of writs 20

2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
 TET EXAMS  PAPER II  -FILED AFTER 26.11.2013  -no of writs (more than )-74.

3.CHALLENGING KEY ANSWERS  PG ASSISTANT EXAMS  TAMIL- number of    writ 1
  இவ்வழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன.              
இன்றய விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் 26.11.2013 ம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்.  தமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள  வழக்குகள் என்பதால் இவ்வழக்குகள் அனைத்தையும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாக நீதியரசர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CHALLENGING KEY ANSWERS  PG ASSISTANT EXAMS  TAMIL வழக்கிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இது தவிர உரிய கால எல்லைக்குள் தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத  TET EXAMS  PAPER I,PAPER II   வழக்குகள் நாளை 30.01.2014 விசாரணைக்கு வரக்கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளைய வழக்குகள் குறித்த விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்

சுவரும் பாடம் கற்பிக்கிறது....


புத்தகச் சுமையை குறைப்பதற்காக, ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்ற கணினி வகுப்பறைகளை பணபலம் உள்ள பள்ளிகள் தொடங்கி வருகின்றன. இதுபோன்ற வசதிகள், அரசு பள்ளிகளில் கிடைக்காது என்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ப, பள்ளிச் சுவர்களை புத்தகங்களாக மாற்றி, தமிழகத்திற்கு வழிகாட்டியாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி திகழ்கிறது .

அப்பள்ளிக்குள் நுழையும்போது தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம், கொடிப்பாடல், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி சொற்கள், தேச பக்தியுடன் வரவேற்கிறது.

உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக் கள், ஆங்கில எழுத்துக்கள், கணித எண்கள், அறிவியல் அறிஞர்களும் அவர்களது கண்டுபிடிப்புகளும், உடல் உறுப்புகள், உயிர் சத்துக்கள், தாவரங்களின் பயன்பாடுகள், எதிர்ச்சொல், நோய் பரவுவதும், நோய் தடுப்பு மருந்துகளும், நாட்டின் வரைபடங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி இலக்கண எழுத்துக்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள், வார மற்றும் மாத பெயர்கள், தமிழ் ஆண்டுகள், வினை சொற்கள், பெருக்கல் மற்றும் கூட்டல், மாவட்டம் மற்றும் மாநிலங்களின் பெயர்கள், தேசிய கொடி, தேசிய சின்னம், தேசிய பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம், தேசிய பழம், தேசிய விளையாட்டுகளின் பெயர்கள், பறவைகள், விலங்குகள், காய்கறிகள், பழங்கள், இலக்கணம், திருக்குறள் உள்ளிட்ட நூல்களும், அதனை எழுதியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பள்ளியின் சுவர்களை அலங்கரித்துள்ளது. மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழக முதல்வர்களின் பெயர்களும் படங்களும் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து தலைமை ஆசிரியை தேன்மொழி, ஆசிரியர் கிரிஜா ஆகியோர் கூறுகையில், ‘‘மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், படிக்கின்ற ஆர்வத்தை ஏற்படுத்தவும் ‘சுவரெல்லாம் கல்வி’ என்ற அடிப் படையில் புத்தகங்களில் உள்ளதை சுவர்களில் எழுதியுள்ளோம். பள்ளிக்கு புத்தகங்களை எடுத்து வரவேண்டிய அவசியமில்லை. குழந்தைகளும் ஆர்வமாகப் படிக்கிறார்கள். மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மூலமாக எளிய முறை யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி கற்றுகொடுக்கிறோம். எங்கள் பள்ளியை போன்று 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுவரெல்லாம் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதும் எங்கள் பள்ளிக்கு கிடைத்துள்ளது’’ என்றனர்.

பொறியியல் படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு தரும் தேர்வு



பொறியியல் படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தேர்வாக GATE (கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினீயரிங்) அமைந்துள்ளது. இத்தேர்வு குறித்து மாணவர்களிடையே எதார்த்தமான போக்கு உள்ளதே தவிர, இதன் முக்கியத்துவத்தை அறியாமல் உள்ளனர். இத்தேர்வு எம்.இ., எம்.டெக். சேருவதற்கான தேர்வு மட்டுமே என்ற கருத்து மாணவர்களிடம் பரவலாக காணப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. பி.ஃபார்ம், எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.டெக்., டூயல் டிகிரி படித்தவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

இத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேவையும் மிகுதியாக உள்ளது. பொறியியலில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே, இத்தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இறுதி ஆண்டில் தேர்வுக்கு தயாராகலாம் என்ற முடிவு சரியானதல்ல. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

GATE தேர்வு முழுக்க முழுக்க ஆன்-லைன் மூலமாக நடத்தப்படுகிறது. மொத்தம் 22 பாடப் பிரிவுகள் உள்ளன. கடந்த ஆண்டு வரை 21 பாடப் பிரிவுகள் இருந்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக எக்காலஜி அண்டு எவல்யூஷன் என்ற புதிய பாடத் திட்டத்தை சேர்த்து, 22 பாடப் பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பட்டப் படிப்பில் படித்த ஏதாவது ஒரு பாடப் பிரிவை தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டும்.

GATE தேர்வில் மல்டிபில் சாய்ஸ் கேள்வியும், நியூமரிக்கல் விடைத்தாள் முறையிலும் தேர்வு நடத்தப்படு கிறது. மல்டிபில் சாய்ஸ் கேள்வி என்பது 4 விடைகளில் ஒன்றை தேர்வு செய்து எழுதுவது. நியூமரிக்கல் ஆன்சர் முறையில், கேள்விக்கான விடை எண்களில் மட்டுமே இருக்க வேண்டும்.

GATE தேர்வு 65 கேள்விகளையும், 100 மதிப்பெண் களையும் கொண்டது. இதை 3 மணி நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும். நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு. தேர்வில் தகுதி பெற்றவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக். சேர்ந்தவுடன், அவர்களுக்கு பகுதி நேர ஆசிரியர் பணி வழங்கி, மாதம் ரூ.8,000 ஊதியம் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் இத்தொகையை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது.

வாரத்தில் 8 மணி நேரம் பகுதி நேர ஆசிரியர் பணி மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் லேபாரட்டரி டெமான்ஸ்ட்ரேஷன், டூடேரியல், பட்டப் படிப்பு மாணவர்களுக்கான பயிற்சி ஏடுகளை சரி செய்தல், தேர்வுத் தாள் திருத்தும் பணி, கருத்தரங்கம் நடத்துதல், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா?



முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டுகள் வந்து குவிந்தாலும், என் கல்வி சார்ந்த சுற்றத்தில் என் எழுத்துகள் அதிகம் படிக்கப்படவில்லை என்ற குறை எனக்கு உண்டு.

“தமிழ் படிச்சு என்ன ஆகப் போகிறது? வேலை கூட கிடைக்காது” என்று பலர் என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். ஆங்கில வழிக் கல்விதான் வேலைக்கு உத்தரவாதம், ஆங்கில அறிவுதான் மெத்த அறிவு, உள்ளூர் மொழி வாழ்க்கைக்கு உதவாது என்கிற எண்ணங்கள் வலுப்பெற்று வருகின்றன. கடன் வாங்கி பெரிய பள்ளியில் சேர்க்கும் எளியவர்கள் குழந்தை ஆங்கிலம் பேச ஆரம்பித்தவுடன் கொடுத்த காசுக்கு பலன் கிட்டியதாக மகிழ்கிறார்கள். ஆங்கிலம் தெரியாவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்று தீர்மானமாக நம்புகிறார்கள்.

இது உண்மையா?

ஆங்கிலம் இன்று உலகின் பிரதான வியாபார மொழி. அதன் அறிவும் தேர்ச்சியும் உங்களை தொழில் உலகில் பிழைக்க பயன்படும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், ஆங்கிலம் தெரிந்தால்தான் எந்த வேலையும் செய்யமுடியும் என்பது பொய். மொழி அறிவு எல்லா வேலைகளுக்கும் சமமாக தேவைப்படுவதில்லை. மென்பொருள் எழுதுவதற்கும், வாகனம் தயாரிப்பிற்கும், ஓட்டுனருக்கும் தேவைப்படும் மொழி அறிவை விட ஆசிரியருக்கு, விற்பனை சிப்பந்திக்கு, மக்கள் தொடர்பு அதிகாரிக்கு, மொழி பெயர்ப்பாளருக்கு அதிகம் தேவைப்படும். இது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.

சுருக்கமாகச் சொன்னால் மனிதர்களுடன் கலந்துரையாடும் வேலைகளுக்கு மொழி அறிவு அதிகம் தேவை. இயந்திரங்களுடன் பணிபுரிவருக்கு அதன் தேவை குறைவு. இந்த விகிதாச்சார அடிப்படையின்படி 80% வேலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் வேலை செய்யும் அறிவு இருந்தாலே போதும். 20%க்கும் குறைவான வேலைகளுக்குத்தான் மொழித்திறன் அதிகம் தேவைப்படுகிறது.

இதனால்தான் சீனர்கள், ஜப்பானியர்கள். கொரியர்கள், ஜெர்மானியர்கள், ரஷ்யர்கள் எல்லாரும் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் எந்த சிக்கலும் இல்லாமல் முன்னேறியிருக்கிறார்கள். இந்த ஆதார பலத்திற்கு காரணம் தாய் மொழிக் கல்வி! அத்தனை மொழியியல் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகளும் இதைத் திரும்ப திரும்பச் சொல்லி வருகின்றன. சிந்தனை மொழி, பேசும் மொழி, கற்கும் மொழி, வேலை செய்யும் மொழி அனைத்தும் ஒன்றாக இருக்கும் பொழுது அது இயல்பான இசைவுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால்தான் இவர்களின் செயல்பாடுகளில் ஒரு தன்னம்பிக்கையும் தெளிவும் உள்ளதைப் பார்க்கலாம்.

அமெரிக்கா உருவாக்க நினைக்கும் ஒரு பன்னாட்டு தட்டை கலாச்சாரத்திற்கு ஆங்கிலம் ஒரு முக்கிய கருவி. நாடுகளை பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தவும் அதன் மொழி கலாச்சாரக் கூறுகளை மட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தவும் ஆங்கிலம் அவசியமாகிறது. இதனால்தான் கன்னியாகுமரியில் தமிழனாய் பிறந்து பெரும்புதூரில் ஜெர்மானியக் கம்பெனியில் பணிபுரியும் போதும் ஆங்கிலம் அவசியம் என ஆந்திராவை சேர்ந்த மேலாளர் வலியுறுத்துகிறார்.

மெக்காலேவின் திட்டம் பரிபூரண வெற்றி என்று சொல்லலாம். அரசே தாய் மொழி தேவையில்லை, ஆங்கிலம் படியுங்கள் என்று சொல்லும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.

சுத்தமாக இந்தியில் மட்டுமே பேசி, ஆங்கிலத்தைக்கூட இந்தியில் படிக்கும் வட இந்திய இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆங்கில வழியில் படிப்பதாகக் கூறும் தமிழ் நாட்டு பொறியியல் மாணவர்களுக்கு தான் வேலைத்திறன் குறைவு. 75% மாணவர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஏன்?

புரியாமல் படிக்கும் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கடினம். செயல்முறைப் படுத்த முடியாத கல்வி தொழிற்சாலைக்கு தேவையில்லை. ஆங்கிலம் தெரியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை மென்திறன்கள் கற்பதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்களும் இந்த உளவியல் சிக்கலை அவிழ்க்க முடியாமல் திணறுகிறார்கள். இது தான் நிதர்சனம்.

பெரிய ஐ.டி. கம்பெனிகள் அள்ளிக்கொண்டு போகும் சில ஆயிரக்கணக்கான மாணவர்களை மட்டும் பார்த்து ஏமாறுகிறார்கள் பெற்றோர்கள்.

அடுத்த 5 ஆண்டுகளில் வரும் தொழில் நுட்பம் பற்றிக் கூறுகையில் ஐ.டி துறைத் தலைவர் ஒருவர் கூறினார்: “ அடுத்த 5 ஆண்டுகளில் என்ன புதிதாக வரும் என்று சொல்ல முடியாது. அந்த புதிய வேலைகள் 60% வரை இருக்கும். அதனால் தற்போதைய திறன்கள் கற்பதை விட முக்கியம் தன்னம்பிக்கையும் மாற்றத்தை எதிர்நோக்கும் மனோபாவமும்.”

கல்வி நிலையங்கள் மாணவர்களிடம் இருப்பதை வளர்ப்பதைக் காட்டிலும் இல்லாததைக் காட்டி பயமுறுத்துகின்றன. தமிழ் வழிக் கல்வி படித்து, தன்னம்பிக்கையுடன் பின் பிற மொழிகளையும் திறன்களையும் படித்தல் எதிர்காலத்தின் எல்லா சவால்களை நோக்குவதற்கும் மாணவர்களை பக்குவப்படுத்தும்.

இந்தியாவின் பன்மொழிக் கலாச்சாரம் குறையல்ல. நம் பலம். பிற மொழியாளருடன் தொழில் ரீதியாக பழக இத்தனை ஆண்டுகள் இல்லாத சிரமம் இப்போது எப்படி வந்தது?

கேரள அன்பர்கள் பிற மொழிகள் கற்றும் தாய் மொழி உணர்வுடன் தன் மக்களைக் கண்டால் சம்சாரிக்கிறார்கள். மராத்திய நாடகம் அப்படியே இருக்கிறது. வங்காளி தன் மொழியை கர்வத்துடன் தூக்கிப் பிடிக்கிறான். கன்னடர்கள் ராஜ்யோத்ஸவா தினம் என்று மாநிலம் பிறந்ததைக் கொண்டாடுகிறார்கள்.

தமிழன் எல்லா வேலைகளையும் பிறருக்கு கொடுத்து விட்டு, “தமிழும் அரை குறை ஆங்கிலமும் அரை குறை” என்று செல்லாக் காசாகி வருகிறான். சென்ற தலைமுறையில் தமிழ் வழி படித்தும் ஆங்கில புலமை, அயல் நாட்டுப் பணி என சிறப்பாக செயல்பட்டவர்கள் நிறைய பேரைச் சொல்லலாம். ஆங்கிலம் படியுங்கள். மாண்டரின் படியுங்கள். அதற்கு முன் உங்கள் தாய் மொழி படியுங்கள்.

எல்லா நேர்காணலிலும் நான் தேர்வுக்கு எனப் பார்ப்பது தன்னம்பிக்கை, எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், சிந்தனை தெளிவு இவைகளையே. இயல்பாக இவை தாய் மொழியில் வளர்பவை. நாம் நசுக்காவிட்டால் இவை தழைக்கும். ஆங்கில பயத்தில் நம் தமிழ் வேர்கள் மீது கல்வி அமைப்புகள் வெந்நீர் ஊற்றுவதை நிறுத்தட்டும்.

மதிப்பெண்கள் நிறைய கிடைக்கும் என ஆசைப்பட்டு தமிழை பத்தாம் வகுப்பிற்கு மேல் தவற விட்டவன் நான். கல்லூரியில் என் தோழன் மூர்த்தி கல்லூரித் தேர்தலில் நிற்க அரியர்ஸ் தடைகளாய் இருந்தன. அவனுக்கு ஆங்கிலம் சிரமம். அதனால் அவனுக்காக அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்து குறிப்புகள் எடுத்து, எளிய ஆங்கிலத்தில் பதில்கள் தயாரித்து அவனை அத்தனை பேப்பர்களிலும் தேற வைத்தேன். என் சிந்தனை தெளிவடைந்ததும், இரு மொழி புலமை வந்ததும், எளிய ஆசிரியப் பயிற்சி முறைகள் கற்றதும் இதனால் தான். நான் முதல் ரேங்க் வாங்க என்றும் மூர்த்தியை காரணமாகச் சொல்வேன். பின் வாசிப்பு மட்டுமே என்னை தமிழுடன் பிணைத்தது.

தேர்தலில் நின்ற மூர்த்தி, பெண்கள் வாக்குகள் இழந்ததால் (நாங்க செஞ்ச அலப்பறை அப்படி) தோற்றது தனிக்கதை!குறைந்தது 2 மொழிகளாவது தேர்ச்சி பெறுதல் இங்கு சாத்தியம். ஒன்றை வைத்து இன்னொன்று கற்கும் சுகம் அலாதியானது! ஒரு ஜோக் உண்டு.

“3 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”

Tri-lingual.

“2 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”

Bi-lingual.

“ ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்களை என்ன சொல்வோம்?”

American.

தமிழனுக்கும் நாளைய சரித்திரத்தில் இப்படி ஒரு அவப்பெயர் வர வாய்ப்புள்ளது.

டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் - தொடர்புக்கு gemba.karthikeyan@gmail.com
 Hindu tamil

ஒரு மாணவியுடன் பள்ளி


ஒரு மாணவியுடன் இயங்கி வருகிறது,விருதுநகர் மாவட்டம்நரிக்குடி அருகே உள்ள பட்டமங்களம்ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி.இதற்கு இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
பட்டமங்களத்தில் 1962 முதல் செயல்பட்டு வருகிறது,ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி . இதன் மூலம் ,பட்டமங்களம் மட்டுமன்றி, முள்ளிக்குடி,
புத்தனேந்தல் கிராம மாணவர்களும் பயன் பெற்று வந்தனர்.2008--09 கல்வியாண்டு வரை, ஓரளவு எண்ணிக்கையில்,மாணவர்கள் படித்து வந்தனர். விவசாயம் பொய்த்துப் போன நிலையில், பட்டமங்களத்தில் உள்ள 50குடும்பங்கள், பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தது.இதனால், இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

இதன்பின், 2010--11 கல்வியாண்டில்10 , 2011--12 ல்5 , 2012--13 ல் இரண்டு என குறைந்து, தற்போதைய 2013--14 கல்வி ஆண்டில்,ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும், இந்த மாணவி பெயர் பாதம்பிரியா. இதில் ஆச்சரியம் என்னவெனில், ஒரு மாணவி கல்வி பயிலும் பள்ளிக்கு, தலைமையாசிரியர், உதவியாசிரியர் என ,இரு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். பட்டமங்களம் பூமிநாதன்,"இந்தப் பள்ளியில்,
ஒரு மாணவி படித்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில், அதிக குழந்தைகள் படிக்க வருவர். குழந்தைகள்இல்லையென, பள்ளியை மூடி விட்டால், பள்ளி வயதில் இருக்கிற குழந்தைகள், படிப்பதில் சிரமம்.நான்கு கி.மீ., தொலைவிலுள்ள டி.வேலாங்குடி பள்ளிக்குதான், குழந்தைகள் படிக்க செல்லும்நிலை ஏற்பட்டுவிடும். குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர முடியாது. பள்ளி தொடர்ந்து செயல்பாட்டில்இருக்க வேண்டும்,”என்றார். 
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் , "பட்டமங்களம் பள்ளியில் பணி புரியும்,இரு ஆசிரியர்களில் ,ஒரு ஆசிரியரை ,வேறு பள்ளிக்கு, பணிய புரிய அனுப்பி உள்ளோம்.
தற்போது படிக்கும் மாணவியின் கல்வி நலன் கருதி, அவருக்கு, தொடர்ந்து பாடம் எடுக்கப்படுகிறது.அடுத்த கல்வியாண்டில், இந்த பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க,நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். 

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுவாமிநாதன், " இந்தப் பள்ளி உள்ள
கிராம பகுதிகளில், பள்ளி வயது குழந்தைகள் இல்லை. தற்போது படிக்க வரும், இந்த ஒரு மாணவிக்கு முழுமையான கல்வி கிடைக்க வேண்டும். பள்ளியை மூடி விட்டால், அந்தக் குழந்தையின் கல்வி கேள்விக்குறியாகி விடும்,” என்றார்.

கற்றல் குறைந்த மாணவர்களை மேம்படுத்த முடிவு : தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை


 கடலூர் மாவட்டத்தில் கற்றல்திறன் குறைவாக உள்ள, 9ம் வகுப்பு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத் தேர்வு நடக்கிறது.
அரசு பள்ளிகளில், பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த மாநில அரசு,பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள,அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளின் கல்வித் திறனை அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
 அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள, கடலூர் மற்றும் விருத்தாசலம் என,இரண்டு கல்வி மாவட்டங்களில் 227 அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடந்தது. ஆய்வின் போது, தமிழ், கணக்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் 6,954 மாணவ, மாணவிகள் உச்சரிப்புத் திறன்,வாசிப்புத் திறன், எழுதும் திறன் ஆகியவற்றில் தேர்ச்சி குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து,தேர்ச்சி குறைந்த மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், மூன்று மாதங்கள் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்காக, தேர்ச்சி குறைவான பள்ளிகள் அருகே வசிக்கும் 233 ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டனர்.
பயிற்சி கடந்தாண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது. காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரையும்,மாலை 4:30 மணி முதல், 5:30 மணி வரையும் பயிற்சி நடக்கிறது. பிப்ரவரி 15ம் தேதி வரை இப்பயிற்சி நடக்கிறது. இந்நிலையில், பயிற்சி பெற்ற தேர்ச்சி குறைவான மாணவர்களின் கல்வித்திறனை சோதிக்க திறனாய்வு தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்காக, வினாத்தாள் சென்னையில் அச்சடிக்கப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வாசிப்புத் திறன் குறைவான 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மாணவர்கள் எந்தளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க பிப்ரவரி மாதம் திறனாய்வுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வினாத்தாள் வந்துள்ளது. இதனை பிரித்து சம்பந்தப்பட்டபள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவங்கப்பட உள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி குறைவாக பெற்றால் மேலும், சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்

'பான்கார்டு'பெறுவதற்கு, இனி, 105 ரூபாய் செலுத்தவேண்டும்.


வருமான வரித்துறை வழங்கும், 'பான்கார்டு'பெறுவதற்கு, இனி, 105 ரூபாய் செலுத்தவேண்டும்.
பான்கார்டு பெறுவதற்கா னநடைமுறைகளை, வருமான வரித்துறை சில கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளது.ஒருவரே, பல பான்கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக,குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது,ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் சான்றிதழின் நகல்,முகவரி, பிறந்த தேதிக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.பின், விண்ணப்பத்தை பான்கார்டுக்கான விண்ணப்ப மையங்களில்,அளிக்கும்போது, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு காட்ட வேண்டும். சரிபார்ப்புக்கு பின், அசல் சான்றிதழ்கள் விண்ணப்பத்தாரிடம் திரும்ப அளிக்கப்படும். இது, பிப்ரவரி, 3ம்தேதி முதல் அமலுக்கு வருவதாக, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
புது பான்கார்டு வாங்குவதற்காக, வருமான வரித்துறை வசூலிக்கும் கட்டணம், வரிகள் உட்பட, 105 ரூபாய் ஆக உயர்கிறது. இப்போதுள்ள கட்டணம், 94 ரூபாய்; 11 ரூபாய் உயர்கிறது.

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை:மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கடும் எச்சரிக்கை


''இலவச மற்றும் கட்டாயகல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும்,ஆரம்பநிலை சேர்க்கையில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்தபிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில், இதை கடைபிடிக்காத பள்ளிகள் மீது,கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர்,பிச்சை எச்சரித்து உள்ளார்.
ஆர்.டி.இ., சட்டத்தின்படி, மாணவர் சேர்க்கை நடக்கும் ஆரம்பநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு), மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். இவர்களுக்கான கல்விச் செலவை,மத்திய அரசே ஏற்கிறது. சுற்றறிக்கை:கடந்த ஆண்டு, 20 ஆயிரம் குழந்தைகள், இந்த ஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர்.எனினும், 650க்கும் அதிகமான தனியார் பள்ளிகள், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை.
இந்த சூழ்நிலையில்,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை கூறியதாவது:வரும் கல்வி ஆண்டில், இந்த உத்தரவை, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும், இப்போதே சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். ஆர்.டி.இ.,ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் அனைத்தையும், முறையாக, தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என, தெரிவித்து உள்ளோம்.இதை, முறையாக கண்காணிக்க வேண்டும் என, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு, முதல் முறையாக, இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவர்சேர்க்கை நடந்தது. அதனால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்காமல்விட்டுவிட்டோம். ஆனால், வரும் கல்வி ஆண்டில், அதுபோல், விட மாட்டோம். இடஒதுக்கீட்டை அமல்படுத்ததாத பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு,பிச்சை கூறினார்
.தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'கடந்த ஆண்டுக்கான கட்டணமே, இன்னும்,அரசிடம் இருந்து வரவில்லை. 35 கோடி ரூபாய்,பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். கேட்டால், 'மத்திய அரசிடம்இருந்து, இன்னும் நிதி வரவில்லை' என, அதிகாரிகள் கூறுகின்றனர். கட்டணம் இல்லாமல்,மாணவர்களை சேர்த்துவிட்டால், பள்ளியை எப்படி நடத்த முடியும்? கட்டணத்தை முதலில் வழங்கிவிட்டு, அதன்பின், எச்சரிக்கை விட்டால், சரியாக இருக்கும்' என்றனர்.இதுகுறித்து, இயக்குனரிடம் கேட்டதற்கு, 'நிதி,விரைவில் வந்துவிடும்' என்றார்

 கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு


 பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய்நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஜெட்' வேகம்ஒவ்வொரு ஆண்டும்,அதிகபட்ச நிதி, பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப் படும். முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 10ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு, 'ஜெட்' வேகத்தில், எகிறி வருகிறது.கடந்த, 2011 - 12ல், 13,333 கோடி; 12 -13ல், 14,552 கோடி, 13 - 14ல், 16,965 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனவே, வரும் பட்ஜெட்டில், 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படலாம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, புதிய திட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகளில், அதிகாரிகள் இறங்கி உள்ளனர். இந்தஅளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்தால், மிகப்பெரும் சாதனையாக இருக்கும்.

இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள் தலைமைப்பண்பு பயிற்சி


இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள், தலைமைப்பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த, இந்தியா -இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி, தலைமைப் பண்பு பயிற்சி,செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, குஜராத் மற்றும் தமிழகம் ஆகியமாநிலங்கள்,தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை மேம்படுத்த, பயிற்சிகள்அளிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில், இரண்டாவது கட்டமாக, இளம் தலைமையாசிரியர்களுக்கு, தலைமைப் பண்பு பயிற்சி, பிப்ரவரி, 3ம் தேதியில் இருந்து, 8ம் தேதிக்குள்,மூன்று நாட்கள், அந்தந்த மாவட்டங்களில், நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், உயர் தொழில்நுட்ப முறையில்,பள்ளி நிர்வாகம், ஆசிரியர் - மாணவர் உறவு, மாணவர்களின் திறனை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட,பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன

உதவி பேராசிரியர்கள் நியமனம்:முழுநேர பிஎச்.டி., பட்டதாரிகள் ஏமாற்றம்


உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்திற்கு, மதிப்பெண்கள் வழங்குவதில், பகுதி நேர,
பிஎச்.டி., படித்து, பணிபுரிந்த அனுபவத்திற்காக, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால்,முழுநேர படிப்பாக, பிஎச்.டி., முடித்தவர்கள், ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழகஅரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,093 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம்முடிவு செய்தது. இதற்காக, தமிழகத்தில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், விண்ணப்பித்தனர்.அவர்கள், சென்னையில்
உள்ள, மூன்று அரசு கல்லுாரிகளில், கடந்த ஆண்டு, நவம்பர் 25ம் தேதி முதல், டிசம்பர், 6ம் தேதி வரை,சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர்.

மொத்த மதிப்பெண்களில், 24 மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக ஒதுக்கப்பட்டது. அதற்கான, மதிப்பெண்கள் பட்டியல், அண்மையில் இணையதளத்தில்வெளியானது.சான்றிதழ் சரி பார்ப்பில், பிஎச்.டி.,முடித்தவர்களுக்கு, 9 மதிப்பெண்களும், பணியாற்றிய
அனுபவத்திற்காக, ஆண்டுக்கு, தலா, 2 மதிப்பெண்கள் வீதம், அதிகபட்சமாக, 7.5 ஆண்டுகளுக்கு, 15 மதிப்பெண்கள் என, வரையறுக்கப்பட்டுள்ளன
.தனியார் கல்லுாரியில், பேராசிரியர்களாக பணியாற்றும் போதே,பகுதி நேரத்தில், பிஎச்.டி., படிப்பவர்கள் உள்ளனர். இதில், ஏதேனும் ஒரு தகுதியை மட்டுமே, மதிப்பெண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, விண்ணப்பமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், தேர்வு வாரியம், அனுபவத்திற்காக, 15 மதிப்பெண்கள் மற்றும் பகுதி நேர, பிஎச்.டி., பெற்றவர்களுக்கு, 9 மதிப்பெண்களும், முழுமையாகவழங்கியுள்ளது.பகுதி நேரமாக, பிஎச்.டி., படித்தவர்களுக்கு, முழு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால்,வரிசைப் பட்டியலில், அவர்கள், முன்னணி வகித்துள்ளனர். இதனால், முழுநேர, பிஎச்.டி., படிப்புப் படித்தவர்கள்,பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Source DINAMALAR

டி.இ.டி., சலுகை மதிப்பெண்தமிழக அரசு தீவிர ஆலோசனை


ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு,அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர்ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என,எச்சரித்து உள்ளார்.இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து,டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில்,தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.ஆணையத்தின் உத்தரவு குறித்து,
முதல்வரின்கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்து உள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.-
Source : dinamalar

செவ்வாய், 28 ஜனவரி, 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரணை


சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரணையில் இடம்பெறும் PG/  TET வழக்குகள் விவரம்

              HON'BLE  MR JUSTICE R.SUBBIAH TO BE HEARD ON WEDNESDAY THE 29TH DAY OF JANUARY 2014
                                              AT 2.15 Pm
 1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS  TET EXAMS 
 PAPER I  FILED AFTER 26.11.2013    - No of writs 20

2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
 TET EXAMS  PAPER II  FILED AFTER 26.11.2013  -no of writs (more than )-74.

3.CHALLENGING KEY ANSWERS  PG ASSISTANT EXAMS  TAMIL- number of  writ 1             

PG/TET I / TET II-வழக்குகள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29 .01.14 )முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக  விசாரிக்க  நீதியரசர் முடிவு



சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு  நீதியரசர்              
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக  தனியாக   பட்டியலிட நீதியரசர்  ஆர் சுப்பையா  ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று   28 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி  200 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது.இதைத்தவிர  முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்து  5 வழக்குகளும் இதர படங்களில்  4 வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தன.

வழக்குகளை விசாரித்த நீதியரசர்  ஆர் சுப்பையா PG/TET I / TET II-வழக்குகளை  நாளை( 29 .01.14ல்)முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக  விசாரிக்க முடிவுசெய்தார்.   மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்    ஏற்கனவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவுகண்ட வினாக்களைத்தவிர்த்து  தாள் 1 ல் புதியதாக 5 வினாக்கள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது  பரிசீலனைக்கு எடுதுக்கொள்ளப்படக்கூடும் என்றும்,அதேபோல் தாள் 2 ல் பல வினாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும்   சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து   TET வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

PG/TET I / TET II-வழக்குகள்   NEWS UPDATE


சென்னை உயர்நீதிமன்றத்தில்  இன்றய (29.01.2014)விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் விவரம்

 1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS  TET EXAMS 
 PAPER I-  FILED AFTER 26.11.2013    - No of writs 20

2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
 TET EXAMS  PAPER II  -FILED AFTER 26.11.2013  -no of writs (more than )-74.

3.CHALLENGING KEY ANSWERS  PG ASSISTANT EXAMS  TAMIL- number of    writ 1
  இவ்வழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன.              
இன்றய விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் 26.11.2013 ம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்.  தமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள  வழக்குகள் என்பதால் இவ்வழக்குகள் அனைத்தையும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாக நீதியரசர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CHALLENGING KEY ANSWERS  PG ASSISTANT EXAMS  TAMIL வழக்கிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இது தவிர உரிய கால எல்லைக்குள் தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத  TET EXAMS  PAPER I,PAPER II   வழக்குகள் நாளை 30.01.2014 விசாரணைக்கு வரக்கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளைய வழக்குகள் குறித்த விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்