புதன், 31 ஜூலை, 2013

TRB PG TAMIL WRONG ANSWER KEY

      ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்துக்கான விடைக்குறிப்புகளில்  சில தவறாக உள்ளன.தாங்கள் தவறென கருதும் விடைக்குறிப்பு அதற்கான சரியான விடை ,அதற்கான ஆதாரம் ( நூல் ,ஆசிரியர் பெயர் , பக்க  எண் பதிப்பகம் ) ஆகியவற்றை தெரிவித்தால் அவற்றைத் தொகுத்து ஆ தே வாரியத்திற்கு அனுப்பிவைக்கலாம் .
அனுப்பவேண்டிய முகவரி velanthangvel @ gmail .com 
தொ.பே 7598299935

செவ்வாய், 30 ஜூலை, 2013

TRB ANOUNCEMENT REGARDING PG ANSWER KEY

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
TENTATIVE ANSWER KEY - POST GRADUATE
As per the Notification No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts was held on 21.07.2013. A total No. of 1,67,664 candidates applied for the written examination. Out of this, 7914 candidates were absent for the Examination and 1,59,750 candidates attended the Written Examination.
Now, the Board has released the tentative key answers for all the subjects for the post of Post Graduate Assistants. Candidates are given time upto 05.08.2013 to submit their representation regarding objection if any on the tentative answer keys published along with the proof for the disputed answer keys. Their representation may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board on or before 5.30PM on 05.08.2013
Utmost care has been taken in preparing the key answers list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect key answer would not confer any right of enforcement.
          

Dated: 29-07-2013

Chairman

TRB ANSWER KEY FOR PG

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TRB PG 2013 ANSWER KEY FOR ALL SUBJECTS

TRB RELEASED ANSWER KEY FOR ALL SUBJECTS
 FOR KEY ANSWERS PLEASE CLICK THE LINK GIVEN BELOW

http://www.trb.tn.nic.in/PG2013/29072013/msg1.htm

BEST WISHES

TRB PG 2013 -ANSWER KEY RELEASED- ANSWER KEY FOR TAMIL

http://www.trb.tn.nic.in/PG2013/29072013/msg1.htm                     TRB -2013     முதுகலை- தமிழ்   - TRB ANSWER KEY. 
                                QUSTION PAPPER SERIES  A
Note:வினா எண் 91 .      96 என மாற்றி வாசிக்கவும்
 ஒலியை ஆராயும் முறைகள் என்பதற்கான சரியான விடை 
                     c . மூன்று
உளவியல் வினா 91க்கு A  சரியான விடையாகும்
1.மதுரையை தென் தமிழ் மதுரை எனக்குறிப்பிடும் நூல்
B.மணிமேகலை

2.பதினெண் கீழ் கணக்கில் இடம்பெறும் அக நூல்கள்
C. 6

3 ‘.சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை’  இடம்பெரும் நூல்
B. மணிமேகலை

4. வைர வியாபாரி இடம்பெறும் நூல்
C. வளையாபதி

5 ‘பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்’ என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
D. குண்டலகேசி
6.  B
7  .C
8 . A
9  .B
10. D

11. உவமை தோன்றும் நிலைக்களன்
B. காதல்

12. பொறி நுதல் வியர்த்தல்
C. முதல்நிலை மெய்ப்பாடு

13.உவமப் போலி
D. ஐந்து

14.உள்ளுறை உவமத்தின் பயன்
A சுவை

15.தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்குஇவ்வடிகளில் அமைந்துள்ளது
B.அடைமொழி

16 “போர்க்குறிக்காயமே புகழின் காயம்….” என்று கூறிய கதாபாத்திரம்
C சீவக வழுதி

17.பவளக்கொடி நாடக ஆசிரியர்
D. சங்கரதாஸ் சுவாமிகள்

18.தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர்
B.பம்மல் சம்பந்த முதலியார்

19.வாசகர்தான் பனுவலுக்கான் அர்த்தங்க்களை வெளிக்கொணர்கிறார்- என்று கூறும் கோட்பாடு
D.அமைப்பியல்

20 சிட்டுக்குருவி எனது பலகணியின் வழியே வரின்  யான் எனை மறந்து சிட்டாகவே மாறி   விடுகின்றேன் எனக் கூறிய கவிஞர்
B. கீட்ஸ்

21.புறப்பொருள்மாலை வெட்சி படலத்தின் ‘உண்டாட்டு ‘ எனப்படுவது
 C.கள் அருந்தி களிப்பது

22 வெட்சி படலத்தின் துடிநிலை என்று கூறப்படுவது
A குடிப்பழமையைப் புகழ்தழ்

23 .கரந்தை பூ பூக்கும் காலம்
A..மாசி,பங்குனி
24.வஞ்சி மறவரின் போர்த்தொழிலைச் சிறப்பித்து கூறும் துறை
D. கொற்றவை நிலை

25.வட்கார் மேல் செல்வது
D. வஞ்சி

26.தாண்டக வேந்தர்
A. திருநாவுக்கரசர்

27.சைவத்திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளின் ஆசிரியர்
C. திருஞான சம்பந்தர்.

28.பன்னிரு ஆழ்வார்களில் கடவுளைப் பாடாது அடியாராம் நம்மாழ்வாரை பாடியது யார்?
A. மதுரகவி ஆழ்வார்

29.தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியர் பெயர் தருக
A. பொய்யாமொழிப்புலவர்

30.திருமந்தரத்தின் உட்பிரிவாக எத்தனைத் தந்திரங்க்கல் இடம்பெற்றுள்ளன
C.  9

31.கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள யாப்பு நூல்
C. யாப்பருங்கலவிருத்தியுரை

32.அணியிலக்கணம் கூறும் நூல்களில் முதன்மையானது
A. தண்டியலங்காரம்

33.தண்டியலங்கார பொருளணியியலில் தன்மையணி முதல் பாவிக அணிவரை உள்ள மொத்த அணிகள்
C. 37

34.தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு இதில் இடம்பேறும் அணி

B. வேற்றுமை அணி


35. ஐந்திலக்கணம் கூறும் முதல் இலக்கண நூல்
A. வீர சோழியம்

36.பெரும்பொழுதின் வகைகள்
B. ஆறு வகைப்படும்

37. மல்கு கார் மாலை
C. முல்லைக்கு உரித்தே

38.முல்லைத் திணை பறை
D.ஏற்றுப்பறை

39.அகப்பொருள் மெய்யுறு புணர்ச்சியின் உட்பிரிவுகள்ட்
B.பத்து வகைப்படும்

40.களவிற்குரிய கிளவித்தொகைகள்
A.பதினேழு கிளவித் தொகைகள்

41. ஞாணபீட விருது பெற்ற புதினம்
D.சித்திரப்பாவை

42. வா.செ. குழந்தை சாமியின் சாகித்திய அகதமி விருது பெற்ற திறனாய்வு நூல்
B. வாழும் வள்ளுவம்

43.ஏறு தழுவுதலை கதைக்களமாக கொண்ட புதினம்
C. வாடிவாசல்

44.குடும்பத்தேர் சிறுகதையின் ஆசிரியர்
D. மெளனி

45. பொருத்துக
A. விந்தன்            I  கமலாவின் கல்யாணம்
B. கு.அழகிரிசாமி      II அக்பர் சாஸ்திரி
C. கல்கி              III மவராசர்கள்
D தி.ஜானகிராமன்     IV திரிபுரம்

B. III   IV    I  II

46.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்ததாக கருதப்படும் இடம்
B. மதுரை

47.ஐங்குறு நூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர்
C. பெருந்தேவனார்

48.பொருநராற்றுப்படை எம் மன்னனின் சிறப்பை பாடுகின்றது
A கரிகால் சோழன்

49. சரியான விடையைத் தேர்ந்தெடு
  D.ஐந்தாம் பத்து – கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்


50.ஆன்றோர் புகழ்ந்த ஆறிவினிற் ரெறிந்து  சான்றோரு ரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒரு பது பாட்டும்  எனக்கூறியவர்
A. நச்சினார்க்கினியர்

51.தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
C.வீரமாமுனிவர்

52.பாரதியாரின் சின்ன சங்கரன் கதை என்னும் நூல்
B. உரைநடை நூல்

53.வரலாற்றுக் களஞ்சியம் என்று யாருடைய நாட்குறிப்பை குறிப்பிடுவர்
A ஆனந்தரங்கம் பிள்ளை

54. காட்டு வாத்து தொகுப்பினை வெளியிட்ட பதிப்பகம்
C.எழுத்து

55.உ.வே. சாமிநாதையர் முதன் முதலில் பதிப்பித்த  நூல்
C. சீவகசிந்தமணி

56.வைகறை விடியல்
C. மருதத் திணக்குரிய காலம்

57.இருத்தலின் உரிப்பொருளுக்குரிய திணை
C.முல்லைத்திணை

58. மருத நில தலை மக்கட்பெயர்
A. ஊரன், மகிழ்நன்

59. முல்லைத் திணைக்குரிய தெய்வம்
B. கண்ணன்

60. மருதத் திணக்குரிய பூ
C. தாமரை
61. C
62. A
63. D
64. D
65. A

66. உழவர்களின் வாழ்வியலைக் கூறும் சிற்றிலக்கியம்
A பள்ளு

67.பிள்ளைத்தமிழ் முதலாவதாக எப் பருவம் அமைகிறது
C. காப்பு பருவம்

68.முதலாழ்வார்களின் எண்ணிக்கை
D 3

69.கொல்லா விரதம் குவலயமெல்லா மோங்க  ……. இச்சை பராபரமே என்று உரைத்தவர் யார்?
A . தாயுமானவர்

70. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் பெயர் தருக
C. திரிகூட ராசப்ப கவிராயர்
71.  D
72.  D
73.  B
74.  D
75.  A

76. தமிழ் மொழி உயர் தனிச்செம்மொழி என்று முதன் முதலில் கூறியவர்
C. பரிதிமாற்கலைஞர்

77.தொல்காப்பியர் சுட்டும் உரசொலிகள்
D. ர, ழ

78 என் என்னும் சொல் யார் காலத்தில் அன் என்று மாறியது ?
B.பாண்டியர்

79. முதன் முதலாக ‘ தமிழன்’ என்ற சொல்லாட்சி காணப்படும் இலக்கியம்
C. அப்பர் தேவாரம்

80 எந்த அளபெடை சோழர் காலத் தமிழில் காரணவினை காட்டும் உருபாக இருந்தது
A. இகரம்
81. A
82. B
83. D
84. B
85. B

86.அவர் வந்தார் என ஒருவரை மட்டும் குறிப்பது
B. பால் வழுவமைதி

87.துஞ்சினார் என்று செத்தாரைக் குறிப்பது
A மங்கல வழக்கு

88. அண்ணாக் கயிறு என்பது
C. அரைஞான் கயிறு

89 தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கடன் வாங்கப்பெற்ற சொற்கள்
A .ஓலை,கறி,காசு தேக்கு90. BICYCLE  எனதன் கலைச்சொல்லாக்கம்
D. மிதிவண்டி

91.ஒலியை ஆராயும் முறையை எத்தனைப் பிரிவாக வகுக்கின்றனர்
A. இரண்டு

92.  A
93.  C
94.  B
95.  A
96.  C

97. அரேபியா எகிப்து போன்ற பகுதிகளில் பேசப்படும் மொழியினம்
D. செமிட்டிக் இனம்

98.குவி மொழி எந்த மானிலத்தில் பேசப்படுகின்றது ?
A. ஒரிசா

99.திராவிட மொழிகளின் திணை பால் பாகுபாடு ஸிறந்தது என்று கூறியவர்
C. கால்டுவெல்

100.’ தமிழ் மொழி மிக்க பழைய வரலாறு உடையதாகும்’’ என்று உரைத்தவர்
A. தீட்சிதர்

101.   C

102   D
103.  C
104.  C
105.  C

106 ஒலி வடிவிலும் வரி வடிவிலும் அமைந்த எழுத்துக்களின் தனித்தன்மையை விளக்குவது
C. நூன் மரபு

107. சகார ஞகாரம் பிறப்பு
B.இடைநா அண்ணம்


108 .கி.பி. 17. ஆம் நூற்றாண்டு சொல்லிலக்கண நூல்
A. பிரயோக விவேகம்

109. சொல்லும் பொருளும் ஒரு தாளின் இரண்டு பக்கம் போன்றது என்று கூறியவர்
  B. டிசசூர்

110 யாப்பிலக்கண கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது
 C யாப்பருங்கல விருத்தியுரை111. கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம்
A.நீதி நூல் காலம்

112. காப்பிய விதிகளைக்கூறும் இலக்கண நூல்
A. தண்டியலங்காரம்

113. உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் நீதி நூல்
D. முதுமொழிக்காஞ்சி

114. இலத்தின் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர்
 C வீரமாமுனிவர்

115. புகார்க்காண்டத்தின் இறுதிக்காதை
A. நாடுகாண் காதை

116.ஆதி நிகண்டு என அழைக்கப் பெறுவது
D. சேந்தன் திவாகரம்

117.கம்பராமாயணம் நூலுக்கு கம்பர் சூட்டிய பெயர்
 A.இராமாவதாரம்

118.வினாவிடைவடிவில் அமைந்த இஸ்லாமிய இலக்கியம்
D. மசாலா

119. உடம்பார் அழியின் உயிரால் அழிவர்- யாருடைய கூற்று
C. திருமூலர்

120 விக்கிரம சோழன் உலாவின் ஆசிரியர்
A. ஒட்டக்கூத்தர்

121. ஆற்றுப்படையில் அடியளவில் பெரிய நூல்
C. மலைபடுகடாம்

122 ‘வஞ்சி நெடும்பாட்டு ‘ என வழங்க்கப்பெறும் நூல்
B. பட்டினப்பாலை

123. வடக்கிருந்து உயிர் நீத்த சோழ மன்னன்
D. கோப்பெருஞ்சோழன்

124. சரியான விடை தேர்ந்தெடுக்க
D. பெருங்கடுங்கோ

125. நக்கீரர் பத்துப்பாட்டில் பாடிய நூல்கள்
B. திருமுருகாற்றுப்படை நெடுநல் வாடை126. D
127. B
128. D
129. B
130. B

131. சொற்களை சிறந்த முறையில் வைப்பது வசனம். சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது கவிதை என்று கூறியவர்
C. கோல்ரிட்ஜ

132.ஒவ்வொரு சொல்லையும் சுண்டிப்பார்த்து ஓசைநயம் செவ்வனே உள்ளதா என்று ஆராய்ந்து பயன்படுத்தும் கதையாசிரியர்
D.ல.சா.ராமாமிர்தம்

133 நிஜ நாடகம் நிகழ்த்திய நவீன நாடகம்
 B.துர்க்கிர அவலம்

134.தொல்காப்பியத்தில் ஆய்தல் என்ற சொல்லுக்கு கூறப்படும் பொருள்
A. உள்ளதன் நுணுக்கம்

135.‘அர்த்தங்கள் மையம் இழந்தவை, நிலையற்றவை, ஒத்தி வைப்புக்க்ள்ளானவை ‘ என விளக்கிய கோட்பாடு
D. பின் அமைப்பியல்

136.  C
137.  D
138.  D
139.  B
140.  A

141. கவிதை இலக்கியங்க்களில் பேரிலக்கியமாகத் திகழ்வது
A. காப்பியம்

142. மணநூல் என்று அழைக்கப்படுவது
D சீவகசிந்தாமணி

143. அடிகள் நீரே அருளுக என்ற கூற்றுக்கு உரியவர்
D. இளங்கோவடிகள்

144. மணிமேகலையால் யானைத்தீ பசி நோய் தீர்க்கப்ப்0அட்டவள்
D  காயச்சண்டிகை

145.குண்டலகேசிக்கு எதிராக தோன்றிய வாத நூல்
A. நீலகேசி
146. “ குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்” என  மான உணர்ச்சி மிகுந்த பாடலைப் பாடிய மன்னர்
A சேரமான் கணைக்கால் இரும்பொறை

147. பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” எனப் பாடியவர்
 C.கணியன் பூங்குன்றனார்

148. உவமையால் பெயர் பெற்றவர்
 B.கல்பொரு சிறு நுரையார்

149. கோப்பெருஞ்சோழனோடு பிசிராந்தையார் போல் நட்புக்கொண்ட மற்றொரு புலவர்
A. பொத்தியார்

150.” எத்திசை செல்லினும் அத்திசைச்சோறே” எனப் பாடிய புலவர் யார் ?
D. ஒளவையார்

TRB PG ANSWER KEY FOR ALL SUBJECTS http://www.trb.tn.nic.in/PG2013/29072013/msg1.htmhttp://www.trb.tn.nic.in/PG2013/29072013/msg1.htm
FOR ALL SUBJECT  PLASE  CLICK THE ABOVE LINK
 திங்கள், 29 ஜூலை, 2013

சனி, 27 ஜூலை, 2013

முதுகலைத் தமிழாசிரியர்தேர்வு வினாத்தாளில் அளவுக்கு அதிகமாக எழுத்துப்பிழைகள்

தமிழ்த்தாமரை:  முதுகலைத் தமிழாசிரியர்தேர்வு வினாத்தாளில் அளவுக்க...:  முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு வினாத்தாளில் அளவுக்கு அதிகமாக எழுத்துப்பிழைகள்    --   தினமணி கட்டுரை  'வைகல் எண்தேர் செய்யும் த...

TRB PG 2013 NEWS முதுகலைத் தமிழாசிரியர்தேர்வு வினாத்தாளில் அளவுக்க...

தமிழ்த்தாமரை:  முதுகலைத் தமிழாசிரியர்தேர்வு வினாத்தாளில் அளவுக்க...:  முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு வினாத்தாளில் அளவுக்கு அதிகமாக எழுத்துப்பிழைகள்    --   தினமணி கட்டுரை  'வைகல் எண்தேர் செய்யும் த...

 முதுகலைத் தமிழாசிரியர்தேர்வு வினாத்தாளில் அளவுக்கு அதிகமாக எழுத்துப்பிழைகள்    --   தினமணி கட்டுரை


 முதுகலைத் தமிழாசிரியர்தேர்வு வினாத்தாளில் அளவுக்கு அதிகமாக
எழுத்துப்பிழைகள்    --   தினமணி கட்டுரை

 'வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னோனே' எனும்
உவமைத் தொடரால் அதியமான் நெடுமானஞ்சியைப் பற்றி ஒளவையார் பாடிய
பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. நாளொன்றுக்கு எட்டுத்
தேர்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்க தச்சன் ஒருவன், ஒரு திங்கள்
முழுதும் அரிதின் முயன்று கவனத்தோடு செய்த ஒரு தேர்ச் சக்கரம்
போன்று நுணுக்கமான கூர்மையான போராற்றல் உடைய மன்னன் என்பது இத்தொடரின் பொருள். எந்தத் தேர்வாயினும் அதற்காகத் தயாரிக்கப்படும் வினாத்தாள், ஒரு திங்கள்
முயன்று செய்த ஒரு தேர்ச்சக்கரம் போன்று தெளிவானதாய் பிழையற்றதாய்
இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஒரு வினாத்தாளை பல லட்சம்பேர்
படித்து விடை தருகின்றனர். எனவே, அத்தகைய வினாத்தாளின் பிழைகளும் குறைகளும் எத்தனைபேரைபபாதிக்கும் என்பதைத் தேர்வு நடத்துவோர் உணரவேண்டும்.                        

     "இதற்கு மேல் இனி பிழைகளைச் செய்ய முடியாது' என்று எக்காளமிட்டுக்
கூறுவதுபோல அமைந்துள்ளது 21-7-2013 அன்று, ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்திய தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாள். 
ஆசிரியர் தேர்வு வாரியம் 2881 முதுகலையாசிரியர் பணியிடங்களுக்கான
போட்டித் தேர்வினை, தமிழ்நாடு முழுவதுமாக 421 மையங்களில்
ஞாயிறன்று நடத்தியது. இதில் 1.67 லட்சம் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் 600 பணியிடங்கள் முதுகலைத் தமிழாசிரியர்களுக்கானது. அநேகமாக,
இப்பணியிடங்களுக்கு ஐம்பதினாயிரம் பேர் தேர்வை எழுதியிருக்கலாம்.
இத்தேர்வுக்குரிய வினாத்தாள் 150 வினாக்களைக் கொண்டது. கொள்குறிவகையில் ஒவ்வொரு வினாவிற்கும் கொடுக்கப்பட்டுள்ளநான்கு விடைகளுள் சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அமைந்த தேர்வில், முதுகலைத் தமிழாசிரியர்
தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் அளவுக்கு அதிகமாக
எழுத்துப்பிழைகள் இடம்பெற்றுள்ளன. வினாத்தாள் முழுவதுமாக 69
சொற்களில் எழுத்துப்பிழை காணப்படுகிறது. இவற்றில் எழுத்துப் பிழையால்
பொருள் வேறுபட்டு, தேர்வாளர்கள் சரியான விடையைத் தேர்வு செய்ய
முடியாத நிலையில் அமைந்தவை 19. இப்பிழைகள் வினாக்களிலும் விடைகளிலும் அமைந்துள்ளன! 
 "துஞ்சினார்' என்று செத்தாரைக் குறிப்பது எவ்வகை வழக்கு என்னும்வினாவிற்கான விடை, எழுத்துப் பிழையால் பொருள் மாறுபட்டு நிற்கிறது.
"மங்கல வழக்கு' என்றிருக்கவேண்டிய சொல், "மதுகல வழக்கு' என்றிருப்பதால்
தேர்வாளர்கள் அப்பெயரில்ஒரு வழக்கு இல்லையே என்றெண்ணி அவ்வினாவிற்குத் தவறான விடையைத்தேர்வு செய்துள்ளனர். 
யாப்பிலக்கணக் கலைக்களஞ்சியம் என்றழைக்கப்படுவது எது எனும்வினாவுக்குரிய விடைகளில் யாப்பருதுகலக்காரிகை, யாப்பருதுகலம் எனச்
சொற்கள் அச்சாகியுள்ளன. இதனால் பலர் சரியான விடையைக் கண்டறிய
முடியாமல் திணறியுள்ளனர். 
அணியிலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையானது எது என்னும்வினாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் "தண்டியலதுகாரம்',
"மாறனலதுகாரம்' என இரண்டு சொற்களில் ஏற்பட்டுள்ள பிழை, சரியான
விடையைக் கண்டறிவதில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இடம்பெற்றுள்ளது! 
திருமந்திரத்தின் உட்பிரிவாக எத்தனைத் "தந்திர துகள்'இடம்பெற்றுள்ளது என்னும் வினாவில் "தந்திர துகள்' என்னும் பிழையானசொல்லால் பரிதவித்தவர்கள் பலர். "தந்திரங்கள்' என்றிருக்க வேண்டியசொல்தான் தமிழ்த் தேர்வு வினாத்தாளில் இந்தக் கோலத்தில்
பாரதியார் எழுதிய "சின்ன சங்கரன் கதை' எனும் பெயர் "சின்ன சதுகரன் கதை'என்றும், "ஆனந்தரங்கம் பிள்ளை' என்னும் பெயர் "ஆனந்தரதுகம்' என்றும்
இருந்தால் தேர்வாளர்கள் குழப்பமடையமாட்டார்களா? 
 "கங்கை கொண்ட' சோழனை, "கதுகைகொண்ட' சோழன் என்றும்சொல்லலாமோ என்னும் ஐயத்தினை இவ்வினாத்தாள்தேர்வாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 
அதே போன்றே "புகழ்தல்' என்னும் சொல், வேறுபொருள் தரத்தக்க வகையில்முற்றிலுமாக மாறுபட்டு "புகாதல்' என்றும் "பங்குனி' என்னும் காலப்பெயர்"பதுகுனி' என்றும் அச்சாகியிருந்தால் தேர்வாளர்கள் எப்படி எளிதாகவிடையைக் கண்டறிய முடியும்? 
இதே கோலத்தில் "கோச்செதுகணான்', "பெருதுகடுதுகோ',"பிதுகலநிகண்டு' எனச் சொற்கள் சிதைந்தும் சீரழிந்தும் அச்சாகியிருப்பதைப் பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது. 

இச்சொற்களுக்கான பொருளறியாது தேர்வாளர்கள் திகைப்பது நியாயந்தானே! இதைப்போன்று இன்னும் பிழைகள் ஏராளமாக உள்ளன. தமிழில் முதுகலைப் பட்டப்படிப்புப் படித்தவர்களால், எழுத்துப் பிழையான சொற்களை ஒருவாறாக ஊகித்து அறிய முடியாதா எனக் கேட்கலாம்.அவ்வாறு அறிந்து செயல்படுபவர்கள் மிகச் சிலரே. இதுதான்இன்றையகல்வி நிலை. எடுத்துக்காட்டாக, "பவளக்கொடி' நாடக ஆசிரியர் யார்? என்னும்வினாவுக்குரிய விடை "சங்கரதாஸ் சுவாமிகள்' என்பது. இது "சதுகரதாஸ்'என அச்சாகியிருந்ததால், அதை ஊகித்தறிய முடியாத பலர்,அவ்வினாவுக்கு "பம்மல் சம்பந்த முதலியார்' எனும் தவறான விடையைத்தேர்வு செய்துள்ளனர். 
கணிப்பொறி எழுத்துருக்களில் மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம். தக்கவரைக்கொண்டு அதைச் சரி செய்ய வேண்டுமே அல்லாது,பிழைகளை அப்படியே வெளியிடுவது பொறுப்பற்ற செயலாகும். அதுவும்தமிழில் ஏற்பட்டுள்ள இந்த இமாலயப் பிழையை யாரும்
சகித்துக்கொள்ளமாட்டார்கள். 
வினாத்தாள் பிழையால் எண்ணற்றோர்பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கல்வித்துறையும், தேர்வு வாரியமும் உணர வேண்டும். "என்று தணியும் இந்தப் பிழைகளின் போக்கு?' என்றுதான்
தமிழுலகம் ஏங்கித் தவங்கிடக்கிறது.