திங்கள், 30 செப்டம்பர், 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல்வர் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக
ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

இது குறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட
வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள
ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட
வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்
திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை
 அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத்
துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர்
உத்தரவிட்டார். 
அவர்களும் இது குறித்து மூன்று கட்டபேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக்
கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள்
மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக
விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத்
திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும்
நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 
அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 
எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக
ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
நடத்தப்படும்.  இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள
பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும்
இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். 
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில்
உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க
பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு  சிறப்புப்
பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். 

முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள
பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப்
பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில்
தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர். தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில 
அளவிலான தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற
பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப்
பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப்
பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம்
நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும்,தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது

TRB PG TAMIL FLASH NEWS :  தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா?


 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.

இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்
உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்   மதுரை புதூர் விஜயலட்சுமி எனும் மனுதாரரால்  வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை   செப். 25ம்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறி மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு  உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது

இவ்வழக்கு  திங்கள்கிழமை 30தேதி  காலையிலேயே  10  வது வழக்காக  
விசாரணை செய்யப்பட்டது.

இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல்  ஆஜராகி  மறுதேர்வு நடத்துவதில்  உள்ள சிரமங்களை  எடுத்துரைத்தார் . பிழையான  40 வினாக்களை  நீக்கிவிட்டு  110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது  அல்லது  பிழையான  40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை  அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு  பெற்ற மதிப்பெண்களை  150 க்கு  கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை  பரிசீலிக்கும்படி  வாதிட்டார்.
   
 அனைத்து  தரப்பினரின்  வாதத்தையும் கேட்ட   விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து
வழக்கு மீண்டும்  ஒத்திவைத்தார்.நாளை  (அக் 1)இவ்வழக்கின் தீர்ப்பு  வழங்கப்படலாம் என  மனுதாரரின்  வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்

GK TAMIL- 3

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்- சீவக சிந்தாமணி

தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கைவாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.- திருக்குறள்

செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்- சிலப்பதிகாரம் 
 
 
இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை

நெடுந்தொகை - அகநானூறு

கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை

பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

மணிமேகலை துறவு, துறவு நூல்,பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை

புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு

வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை

பாணாறு - பெரும்பாணாற்றுப்படை

பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு

புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை

வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்

சின்னூல் என்பது - நேமிநாதம்

வெற்றி வேட்கை, திராவிட வேதம்,தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

திருத்தொண்டர் புராணம், வழிநூல், திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்துமூவர் புராணம் -பெரிய புராணம்

ராமகாதை, ராம அவதாரம்,கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்

குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

உழத்திப்பாட்டு - பள்ளு

இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

தமிழர் வேதம் - திருமந்திரம்

தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி- திருவாசகம்

தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

 

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி.,கணிதத்திற்கு இணையானது' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது

    எம்.எஸ்சி., புள்ளியியல்படித்தவர்களுக்கு, அரசு பணிகளில், பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு கிடையாது. அதுவே, எம்.எஸ்சி.,யில், இதர பாடங்களை எடுத்து படிப்பவர்கள், அரசு பள்ளிகளில், ஆசிரியர்பணி வாய்ப்பை பெறுகின்றனர். இந்நிலையில், எம்.எஸ்சி.,புள்ளியியல் படித்தவர்களும், அரசு பணி வாய்ப்பை அதிகளவில் பெறும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை, வெளியிட்டுள்ளது. அதன்படி,                            சென்னைபல்கலை வழங்கும் எம்.எஸ்சி.,புள்ளியியல் படிப்பு,    எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது என்றும், அரசு பள்ளிகளில்,முதுகலை ஆசிரியர்களாக பணி வாய்ப்பு பெறுவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
                          
                                   

தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா? இன்று  (செப் 30) தெரியவரும்

  . முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன. இதனால், கேள்விகளின்அர்த்தமே மாறிவிட்டன. சில கேள்விகளை, புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு, அதிக எழுத்துப்பிழைகள் இருந்தன. காங்கிரஸ் என்பதை,காதுரஸ் என்றும், அவுரங்கசீப் என்பதற்கு, அவுரதுசீப் என்றும், கணியன் பூங்குன்றனார் என்பதை, கனியன்பூதுகுன்றனார் என, பிழைகள் நீள்கின்றன
 
இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்
உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்   மதுரை புதூர் விஜயலட்சுமி எனும் மனுதாரரால்  வழக்குத் தொடரப்பட்டது. 
 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்து.
இந்த வழக்கை   செப். 25ம்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறி மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு  உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது

இவ்வழக்கு  திங்கள்கிழமை 30தேதி  காலையிலேயே  10  வது வழக்காக  
விசாரணை செய்யப்படவுள்ளது. இதன்  இறுதி உத்தரவு  இன்று  (செப் 30)  பிறப்பிக்கப்படும்  எதிர்பார்க்கப்படுகின்றது  மாலைக்குள்  தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.
 முதுகலை ஆசிரியர்  நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து  பட்டதாரிகளும் நீதிமன்றத்தின்  உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஐ.ஏ.எஸ். ஆகலாம்...நீங்களும்

 சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப்பயிற்சி மையத்தில், அடுத்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு சேர்க்கை நடக்க இருக்கிறது. டிசம்பரில் தொடங்கும் பயிற்சி வகுப்புகளில், தங்கும் வசதியுடன் 200 மாணவர்களுக்கு முழுநேரப்பயிற்சியும், தங்கும் வசதியின்றி 100 மாணவர்களுக்கு பகுதி நேரப் பயிற்சியும் வழங்கப்படும். 
எத்தனை இடங்கள்? 
300 இடங்கள் கொண்ட இம்மையத்தில், ஆதிதிராவிடர்  123, அருந்ததியர்  24, பழங்குடியினர்  3,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்  54, பிற்படுத்தப்பட்டோர்  72, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 9 
ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதிகள் பட்டப்படிப்பு படித்த 21 வயது பூர்த்தியடைந்த, 30 வயதுக்கு மேற்படாத இதர பிரிவினர் விண்ணப்பிக்கதகுதியுடையோர். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும்,பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 3ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு உண்டு. 
விடுதியில் தங்கிப்பயிற்சி பெறுவோருக்கு இலவச பயிற்சி, தங்கும் வசதி செய்துதரப்படும். கட்டணம் முழுநேரப் பயிற்சியில் பயிற்சி பெற இதர பிரிவினர் மட்டும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.பகுதிநேர பயிற்சிக்கு இதர பிரிவினர் ரூ.3000 கட்டணமாக செலுத்தவேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை 
தகுதியுடைய நபர்கள், அலுவலக வேலைநாட்களில் ஜாதி, வயது, பட்டப்படிப்பு சான்றிதழ்களின்நகல்களை, சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மற்றும்சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, விண்ணப்பத்தை பெற்று,பூர்த்தி செய்து அவர்களிடமே அளிக்க வேண்டும்.
 சென்னை மாவட்ட விண்ணப்பதாரர்கள், ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் மையத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே ஒப்படைக்க வேண்டும். சென்னை, திருச்சி, மதுரை கோவை, நெல்லை, சேலம், வேலூர், சிதம்பரம், ,
தஞ்சை, தர்மபுரி
சிவகங்கை போன்ற இடங்களில் நடக்கும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும்.
இம்மையங்களில் 10.11. 2013 அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வில் இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய,  உலக புவியியல், இந்தியஅரசியலமைப்பு, பொருளாதாரம், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பருவநிலை மாற்றங்கள்,அடிப்படை எண் அறிவு, புத்திக் கூர்மை, பகுத்தறியும் திறன், புரிந்து கொள்ளும் திறன் போன்றபகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும். நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு, சென்னை மையத்தில் வகுப்புகள் நடக்கும். 

நுழைவுத் தேர்வு, மாதிரி வினாத்தாள் http://www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் உள்ளன. 
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2013. 
விவரங்களுக்கு 044 - 2462 1475 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

TNTET NEWS UPDATE: தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக தகவல்

தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில்,முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல்வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17,18ம்தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 11 லட்சம்பேர், இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள்
அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டன.தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன்எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, தெரியாத நிலை, நீடித்து வருகிறது.இது குறித்து விசாரித்தாலே, ‘தயாராக உள்ளது; விரைவில் வெளியிடுவோம்’ என்ற பதிலை, அதிகாரிகள் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளின் முடிவுகள், மிக விரைவாக வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த தேர்வு முடிவுகள், ஆகஸ்ட்
இறுதியில் வெளியிடப்பட்டன.அதேபோல், அக்டோபர், 14ம் தேதி நடந்த இரண்டாவது டி.இ.டி., தேர்வு முடிவுகள், நவம்பர், முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. இப்படி, இரு தேர்வுகளின் முடிவுகளை,விரைவாக வெளியிட்ட டி.ஆர்.பி., இந்த முறை, ஒன்றரை மாதம் கடந்த நிலையிலும், அமைதிகாத்து வருவது, தேர்வர் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இந்நிலையில், தேர்வு முடிவில், தர்மபுரி மாவட்ட தேர்வர்கள், 
முதலிடத்தை பிடித்திருப்பதாகவும்,            இதன் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், டி.ஆர்.பி., 
  காலம் தாழ்த்தி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி     உள்ளன. 

தேர்வு துவங்குவதற்கு முதல் நாள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், டி.இ.டி., கேள்வித்தாள்,'லீக்’ ஆனதாக, தகவல்கள் வெளியாயின.இது தொடர்பாக, போலீசார் அதிரடி விசாரணை நடத்தி,கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம்தொடர்பாக, பின்னாளில், கைது எண்ணிக்கை, 15ஐ தாண்டியது.கைதான கும்பல்களிடம் இருந்து, 7.4 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, கேள்வித்தாள்களும் பறிமுதல்செய்யப்பட்டன. எனினும், அதில் இடம்பெற்றிருந்த கேள்விகளும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் ஒன்று அல்ல என்றும், கைதான கும்பல் வைத்திருந்தது, போலியான கேள்வித்தாள் என்றும், போலீசார் தெரிவித்திருந்தனர்.

 டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரும், `டி.இ.டி., தேர்வில், சிறு முறைகேடு கூட நடக்கவில்லை' என, தெரிவித்தார். இப்படியிருக்கும் போது, சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டத்தில், தேர்ச்சி அதிகம் என,தகவல் வெளியாகி இருப்பது, தேர்வர்கள் மத்தியில், புளியை கரைத்துள்ளது.
 
இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், அனைத்து வகையிலும், மிகவும் பின் தங்கிய மாவட்டம். வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இதனால், படித்த இளைஞர்கள்,அரசு வேலை வாய்ப்புகளை பெரிதும் நம்பி உள்ளனர். போட்டித் தேர்வுக்கு, கடுமையாக உழைக்கின்றனர். இதனால், பொதுவாகவே, எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும், தர்மபுரி மாவட்ட இளைஞர்கள், அதிகளவில் தேர்வு பெறுவர். அந்த வகையில், டி.இ.டி., தேர்விலும், அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருக்கலாம். இதில்,
தேவையில்லாமல், சந்தேகம் அடைய தேவையில்லை.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

Source: DINAMALAR

வாசிப்பு

By பா. ஜம்புலிங்கம் 
 தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும்,
விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன்
அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப்
பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு செய்தி 
அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முனைகிறது, அதன்
மூலமாக புரிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதை எண்ணிப்
பார்க்கவேண்டும். அதற்குப் பின்னர் அடுத்த செய்தி அல்லது நிகழ்வினைப்
படிக்க ஆரம்பிக்கும்போது அதனதன் அடிப்படை கருத்துகள் எளிதாக மனதில்
பதிந்துவிடும். காட்சி ஊடகத்தில் செய்திகளைப் படிக்கும்போதோ,
நிகழ்வுகளைப் பார்க்கும்போதோ அவை உள்ளது உள்ளவாறே மனதில் பதிந்துவிடும். 

நாளிதழ்களில் மேம்போக்காக தலைப்புச் செய்திகளை மட்டும்
பார்த்துவிட்டுச் செல்வதைத் தவிர்த்து, சற்று உன்னிப்பாகப் படித்தால் பல
புதிய சொற்களையும், சொற்றொடர்களையும், பயன்பாடுகளையும்
தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. அரசியல் தொடங்கி அறிவியல் வரை ஒவ்வொரு 
துறையிலும்அவ்வப்போது பல புதிய சொற்கள் உருவாகின்றன.
தொடர்ந்து படித்தால்தான் அவ்வப்போது அறிமுகமாகின்ற புதிய
சொற்களைப் புரிந்துகொள்ள முடியும். "அதற்கெல்லாம் தேவையில்லை',
"வாசித்து என்ன ஆகப்போகிறது?' அவ்வப்போது இணையதளங்களில்
பார்த்துவிடுகின்றோம்' என்றெல்லாம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். 

அறிவியல், பக்தி, சோதிடம், திரைப்படம் வேலை வாய்ப்பு போன்ற
குறிப்பிட்ட பகுதிகள் வெளிவரும் நாள்கள்
மட்டுமே செய்தித்தாளை வாங்குவதை விட்டு அவரவர்களின்
விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு செய்தித்தாளை தெரிவு செய்து,
அதனை தினமும் படிப்பதை நடைமுறையில் கொள்வது நல்லது.
அப்பொழுதுதான் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள முடியும். என்றாவது ஒருநாள் படிக்காமல் விட்டுவிட்டால் அன்று வந்திருந்த
முக்கியமான செய்தியையோ, கட்டுரையையோ நாம் இழக்க நேரிடும்.

கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ தினமும் 300 பக்கங்களுக்கு மிகாமல்
உலகச் செய்திகளைப் படிப்பாராம். பல அரசியல் பிரமுகர்களும், வேறு பல துறையைச் சார்ந்தவர்களும் தினமும்படிப்பதையும், எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள்ளூர்செய்தி தொடங்கி உலகச் செய்திகள் வரையில் அறிய, நாள்தோறும்
குறைந்தது 30 நிமிடங்களாவது நாளிதழைப் படிப்பதற்காக
ஒதுக்குவது நல்லது.
 அவ்வாறே நூல் படிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.
கதைகள், கட்டுரைகள், சாதனையாளர்களின் வரலாறு, ஆன்மிகம், கலை,
இலக்கியம், அறிவியல், பயணக்கட்டுரைகள் என பலவகையான நூல்கள் உள்ளன.
சார்லி சாப்ளினுக்கு புதிய சொற்கள் மேல் அலாதிப் பிரியம் என்றும்,
தினமும் ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்
என்றும், அதனை நடைமுறையில் பயன்படுத்துவார் என்றும் கூறுவர். அவர் தன்னுடைய சுயசரிதையில் அதிகமான புதிய சொற்களைப்பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  நூல் படிக்கும்.  பழக்கத்தை மேற்கொள்ளும் முன்பாக எந்த நூலைப்.  படிக்க வேண்டும் என்றஐயம் மனதில் தோன்றும். பல நூல்களைப் படிக்கப் படிக்க நாளடைவில்தானாகவே எந்த நூலைப் படிப்பது என்ற தெளிவு கிடைத்துவிடும். நூல் என்பதுநமக்கு சிறந்த நண்பன் என்பதை மனதில் கொண்டு, நாளிதழ் வாசிக்க நேரம் ஒதுக்குவதைப் போல தினமும் 50 பக்கங்களுக்குக் குறையாமல் ஏதாவது ஒரு நூலைப் படிப்பது நல்லது. 
   
படிப்பதால் மனம் தெளிவாகிறது. நினைவாற்றல் பெருகுகிறது.
நற்சிந்தனை மேம்படுகிறது. நாளிதழ்களைப் படிப்பதால் அன்றாட
நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறே நூல்களைப்
படிக்கும்போது நமக்குள் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம்
மேலிட ஆரம்பிக்கிறது
     
.ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியிடம்வரலாறு படிப்பதோடு 
மட்டுமன்றி வரலாறு படைக்கவும் வேண்டும்என்று கூறுவாராம். அவ்வாறான 
உயரிய சிந்தனையை மனதில்வைத்து வரலாற்றைப் படைக்க முடியும் என்ற 
குறிக்கோளோடு படிக்கவேண்டும். நாளிதழையோ, நூலையோ படித்து முடித்தபின்னர் நண்பர்களிடமும்,குடும்பத்தாரிடமும் படித்தவை பற்றி விவாதிக்கலாம். அதன் 
மூலம் பல புதியகருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். புதிய சொல், புதிய செய்தி,
புதிய உத்தி, புதிய நடை, புதிய வரலாறு என்று ஒவ்வொரு நிலையிலும்
ரசித்து ரசித்துப் படிக்கலாம். 

இதுவரை இப்பழக்கம் இல்லாதவர்கள் வாசிப்புப் பழக்கத்தை இன்று முதல்
தொடங்கலாம். நண்பர்களையும் இவ்விதப் பழக்கத்தை மேற்கொள்ள
அறிவுறுத்தலாம். வாசிப்புக்கென நேரத்தை ஒதுக்கி, வீட்டில்
ஒரு நூலகத்தை உருவாக்கி நூல் எண்ணிக்கையைப் பெருக்கினால் வீடும்
நாடும் வளம் பெறும்.

Thanks :DINAMANI

சனி, 28 செப்டம்பர், 2013

GENERAL KNOWLEDGE -2

* உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov) 
* அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் -தியோடர் ரூஸ்வெல்ட் 
*ஈபிள் டவர் யாரால் கட்டப்பட்டது - அலெக்சண்டர் ஈபிள் 
*நியூயார்க்கின் பழைய பெயர் - நியூ அம்ஸ்டெர்டாம் (New Amsterdam)
 * பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் - ரோஜா 
*பாகிஸ்தானின் முதல் கவர்னர் - ஜெனரல் முகமது அலி ஜின்னா 
*மூலை இல்லாத விலங்கு - நட்சத்திர மீன் 
* துணி துவைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஆல்வா பிஷ்ஷர், ஜேம்ஸ்கிங் 
*SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் - காத்மாண்டு 
* மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு - மொனாகோ 
* பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?  - ஆடம் ஸ்மித் 
*ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு? - ஜப்பான் 
 • காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது? - பென்சிலின் 
• லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி? - மலையாளம் 
• சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்? - பாரமிக் அமிலம்
 • தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்? - கார்ல் மார்க்ஸ் 
• வௌவால் ஏற்படுத்தும் ஒலி? - மீயொலி 
• மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்? - அரிஸ்டாட்டில் 
•வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? - கி.பி 1890
 * முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து 
• குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் -குளோரோஃபார்ம் 
•மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக
இருப்பது - மூளையில் உள்ள செல்கள் 
• எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல
உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு 
*இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி 
 * ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி 
•ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும்
உறங்குவதில்லை) 
• நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின் 
•ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான் 
• சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன் 
* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள் 
* கொசுக்களில் 3500 வகை உள்ளது

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

GENERAL KNOWLEDGE. -1

பெண்கள் இடம் பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும்,ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ளபல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும்
பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம். (INDIA)

* முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டில் 2007 
* முதல் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ருதா கௌர் (1947 - 57)
 * முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (1947 - 49) 
* ராஜ்சபை முதல் பெண் துணை சபாநாயகர் - வயலட் அல்வா 
*முதல் பெண் முதல்வர் (உத்திர பிரதேசம்) - சுசேதா கிருபலானு (1963 - 67)
 * குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)
 * முதல் பெண்  ஐஏஎஸ் அதிகாரி - அன்னா ராஜன் ஜார்ஜ் 
*மக்களவை முதல் பெண் சபாநாயகர் - மீரா குமார் (2009) 
*மக்சாசே விருது பெற்ற முதல் பெண்மணி  - அன்னை தெரசா (1962) 
*இந்திய தேசிய காங்கிரசின் தலைவரான முதல் பெண்மணி - அன்னிபெசன்ட்(1917)
 * காங்கிரஸ் தலைவரான முதல் பெண்மணி - சரோஜினி நாயுடு (1925) 
* ஏர்மார்ஷல் பதவி வகித்த முதல் பெண்மணி -பத்மாவதி பந்தோ பாத்யாயா (2004) 
*பால்கே விருது பெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி ரோரிச் (1969)
 * புக்கர் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர்  - அருந்ததி ராய் (1997)
 * மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீத்தா ஃபரியா பவல் (1966)
 * மிஸ்யூனிவேர்ஸ் பட்ட பெற்ற முதல் பெண்மணி - சுஸ்மிதா சென் (1994)
 * பாரதரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி - இந்திராகாந்தி (1971)
 * ஆஸ்கார் விருது பெற்ற ஒரே பெண்மணி - பானு அதய்யா 
*  முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி (1966) 
* உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - எம்.பாத்திமா பீவி (1989)
 * உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - கேரளா (அன்னா சாண்டி-1959) 
* உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - (இமாச்சல்) - லீலா சேத்(1991) 
* ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட் 
*முதல் பெண் ஐபிஎஸ் - கிரண்பேடி (1972) 
*விண்வெளி சென்ற முதல் பெண்மணி - கல்பனா சௌலா 
*எவரஸ்டில் ஏறிய முதல் பெண்மணி - பச்சேந்திரி பால் 
*ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண்மணி - சுரதி ஸாஹா 
*ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - பிலா சௌத்ரி
 * ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி - ஆஷா பூர்ணா தேவி (1976) 
*ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்ட முதல் பெண்மணி - நீலிமா கோஷ்(1952) 
*லெப்டினன்ட் ஜெனரல் பதவி வகித்த முதல் பெண்மணி -புனிதா அரோரா (2004)

கிறிஸ்துமஸ்

கிறிஸ்து ‌பிறந்த டிசம்பர் 25-ம் தேதி உலகெங்கிலும் உள்ளகிறிஸ்துவர்களும், அவரைப்
பின்பற்றுவோரும் இயேசுவின்பிறப்பை.  கிறிஸ்மஸ்  பெருவிழாவைக்கொண்டாடி வருகின்றனர். 
கிறிஸ்மஸ் உலகெங்கும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும்ஒரு அற்புதமான பண்டிகையாகும் . டிசம்பர் மாதம் ‌பிறந்த உடனேயே ‌கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கானஒரு அழைப்பு மணியாக அனைத்து ‌கிறிஸ்துவர்களின் இல்லங்களிலும்.    இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக  பெரியநட்சத்திரங்களை மின் ‌விளக்கு அலங்காரத்துடன் தொங்க ‌விட்டு,தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார்என்று  அறிவித்து மகிழ்கின்றனர் 

ஏசு கிறிஸ்த்துவின்பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் இப்பண்டிகையின் முக்கியஅம்சமாக திகழ்வது சான்டா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தாவும்அவரின் பரிசு பொருட்களும்தான்
குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய
சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்றஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள்சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா.... ஸாண்ட்ட கிளாஸ்!

 மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ்தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்கண்ணாடி சகிதமாக வலம் வரத்துவங்கிவிட்டார்! உலகில்  சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை .
.சான்டா க்ளாஸ் என்னும் சொல் செயின்ட் நிகோலாஸ் என்னும் பெயரை தழுவி நிறுவப்பட்டது.செயின்ட் நிகோலாஸ் என்பவர் நான்காம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க கிறிஸ்துவ பாதிரியாவார். ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இவரின் கொள்கையை பறைசாற்றும் விதத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஒரு பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது.    

                           கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதெல்லாம் எட்டு மான்கள் பனியில் சறுக்கும் வாகனத்தை இழுக்க, அதில் ஒய்யாரமாய் அமர்ந்துவரும் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ்தினத்திற்கு முந்தைய நாள்தான் அனைவரது வீட்டிற்கும்வருகை தருவார். வருகைதந்து அனைவருக்கும், குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பார்      

பல்லாயிரமாண்டுகளாக கிறிஸ்துவர்கள் நம்பும் பாரம்பரியமாக கருதப்படும் இந்த வழக்கத்தை நடைமுறைபடுத்த கிறிஸ்துமஸ் தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு பரிசு பொருட்கள் வழங்கி இனிப்புகள் பகிர்ந்துகொள்வது வழக்கம். உண்மையானமகிழ்ச்சி என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது தான் என்னும்உண்மையை அனைவரும் நினைவில் கொள

உலகில் இன்றைக்கு " கிறிஸ்துமஸ் " பெருவிழாவைக் கொண்டாடுகிறவர்கள் "கிறிஸ்மஸ் மரம்"இல்லாமல் கொண்டாடுவதில்லை என்கிற அளவுக்கு ஒரு முக்கியத்துவம்
பெற்றுவிட்டதை நாமறிவோம். கிறிஸ்தவர்களிடையே எப்படி யிந்தப் பழக்கம் உருவானது?

ஒரு ஏழை விறகு வெட்டி இருந்தான்.ஏழ்மையின் உச்சத்தில் இருந்த அவனை பட்டினியின் பிடியிலிருந்த சிறுவன் ஒருவன் ஒரு கிறிஸ்மஸ்தினத்தன்று சந்தித்து பசிக்கு ஏதேனும் தர முடியுமா என்றுகேட்டான். சிறுவனின் சோர்வைக் கண்ட அந்த விறகுவெட்டி தனக்காய் வைத்திருந்த சிறு உணவை அவனுக்கு வழங்கிவிட்டு பசியுடன்தூங்கினான். மறுநாள் காலையில் தன்னுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு மரம் அழகாய் ஜொலித்தபடி புதிதாய் நிற்பதைக் கண்டு வியப்படைந்தான். நேற்றைய இரவில் தன்னுடன் உணவருந்தியது இயேசுவே என்றும், தன்னுடைய மனிதநேயத்தைப் பாராட்டி அவர் தந்த பரிசே அந்த கிறிஸ்மஸ் மரம் என்றும் அவன் நம்பினான். இது கிறிஸ்மஸ் மரத்தின் தோற்றம் பற்றி சொல்லப்படும் கதைகளில் ஒன்று

கிறிஸ்து பிறப்பு என்றதும் கண்களுக்குள் விரியும் காட்சியில் ஒளியூட்டப்பட்ட,அலங்கரிக்கப்பட்ட, சிறு சிறுநட்சத்திரங்கள் மின்னும் ஒரு கிறிஸ்மஸ் மரம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். மனிதநேயத்தின் உச்சபட்ச வெளிப்பாடாக இயேசுவின் வருகையை நம்புகிறதுகிறிஸ்தவம். உலகின் மீது கடவுள்கொண்ட தாயன்பை நினைவுபடுத்தும் கிறிஸ்து பிறப்பு தினத்தில் தவிர்க்க முடியாத ஒரு விழாக்காலச் சின்னமாக விளங்குகிறது கிறிஸ்மஸ் மரம்T.SINGARAVELAN
DHARMAPURI

தமிழகத்தில்செயல்படும் 44 மாதிரிப் பள்ளிகளில் நேர்மை அங்காடிகள்

 மாணவர்களிடம் நேர்மை, நாணயம் உள்ளிட்ட பண்புகளை வளர்ப்பதற்காக
யாருடைய மேற்பார்வையும் இல்லாத நேர்மை அங்காடிகள் காந்தியடிகளின்
பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில்செயல்படும் 44 மாதிரிப் பள்ளிகளில் நேர்மை அங்காடிகள்
தொடங்கப்படுகின்றன. முதல்கட்டமாக மாதிரிப் பள்ளிகளிலும் பிறகு, அனைவருக்கும் இடைநிலைக்
கல்வித் திட்டம் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம்விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.
 இது தொடர்பாக அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் -அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் ஏ.சங்கர்வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அனைத்து மாதிரிப் பள்ளிகளிலும் நேர்மை அங்காடிகள் தொடங்கப்படவேண்டும். இந்த நேர்மை அங்காடிகளில் மாணவர்களுக்குத் தேவையானஎழுதுபொருள்கள் அவற்றின் விலையைக் குறிப்பிட்டு வைக்கப்பட்டிருக்கும்.இவற்றில் தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு,
அதற்கான தொகையை மாணவர்களே பணப்பெட்டியில் செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாதிரிப் பள்ளித் தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். கடையின் ஆரம்ப முதலாக ரூ.500-ஐ பள்ளி மேலாண்மை நிதியிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். பாதுகாப்பான ஒரு அறையை தேர்வு செய்து கடையை நடத்த வேண்டும். மாணவர்களுக்குள்ளேயே நபர்களைத் தேர்வு செய்து கடையை வழிநடத்த வேண்டும். எழுதுபொருள்களை மட்டுமே இதில் விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பொருள்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. விலைப்பட்டியலை கடையின் முன் தெளிவாக வைக்க வேண்டும். இந்தக் கடைகளில் வாங்கிய விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும். இதை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும். தினசரி விற்பனை விவரத்தை இறைவழிபாட்டுக் கூட்டத்தில் படித்துக்காட்ட
வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

 மாதிரி நாடாளுமன்றம்: நமது நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பாகமாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகமாதிரி நாடாளுமன்றத்தை பள்ளிகளில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் இந்த மாதிரி நாடாளுமன்றம்
பல ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பள்ளியின்தலைமையாசிரியரிடமிருந்து மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களைக்கொண்டு  நாடாளுமன்றம் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகள்ஆலோசனை நடத்தினர். அதன்படி, மாணவர்களில் இருந்தே மக்களவைஉறுப்பினர்களும், அவர்களில்இருந்து எதிர்க்கட்சித் தலைவர், மக்களவைத் தலைவர், பிரதமரும்  தேர்ந்தெடுக்கப்படுவர்

.    இதன்மூலம் நாடாளுமன்ற விவாதங்கள், சட்டங்களை நிறைவேற்றுதல்,வாக்கெடுப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்வர்என அதிகாரிகள் தெரிவித்தனர். இதோடு மாதிரிப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள், அறிவியல்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடத்தப்படும். மாதிரிப்பள்ளிகளில் கற்பித்தலில் பல்வேறு புதிய வகைகளும் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.