செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள்

சமூக நீதி காவலர் மற்றும் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வணக்கம்!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இடஒதுக்கீடு தொடர்பாக விடுதலை நாளிதழில் கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள்.

கடந்த 18.8.2013 அன்று நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி தங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வு கேள்வித் தாள் தயாரிக்க கல்வி வல்லுநர் குழுவை தமிழக அரசு மற்றும் ஆசிரி யர் தேர்வு வாரியம் அமைத்துள்ளது. விடைகளில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் வல்லுநர் குழுவே பொறுப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

மதிப் பெண் குறைப்பு இல்லை என தமிழக அரசு கூறிய நிலையில் கேள்வித்தாள் தரம் உடையதாகவும் மற்றும் விடைகள் மாற்றம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தேர்வு நடத்த, தகுதித் தேர்வின் பிறகு விடைகள் வெளியிடப்பட்டு இதில் ஏதாவது ஆட்சேபங்கள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை சந்தித்து சரிசெய்து கொள்ளலாம் என ஆசிரி யர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன் பின் ஒரு கீ வெளியிடப்பட்டது. அப்புறம் எதற்கு கல்வி வல்லுநர் குழு. தேர்வு எழுதிய ஆசிரியர் அலுவலகத்தை சந்தித்தாலே முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சென்ற முறையும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படு கிறது. அதே சமயம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் விடைகளில் குளறு படியில் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதிபதி நாகமுத்து தீர்ப்பிற்குப்பின் பின்னர் விடைகள் சரிசெய்யப்பட்டு வெளியிடப் பட்டன.

அதே சமயம் 2012 தகுதித் தேர்வு விடைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது சென்ற ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இவர் களது குளறுபடியால் 88/89 மதிப்பெண் எடுத்த ஆசிரியர்கள் மனரீதியாக மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். இவர்களை பற்றி தமிழக அரசு எதுவும் கவலைப்படவில்லை.

18.8.2013-இல் இந்த ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கீ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது முடிவான கீ இல்லை 

தமிழகத்தில் விடைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கொடுக்கப் பட்டு ஆசிரியர் தேர்வு கேலிக்கூத் தாக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்வித் தாள் முன்கூட்டியே வெளி யான செய்தியும் விசாரணையும் நடந்து வருவது ஊடகங்கள் மூலம் தெரிய வரும் நிலையிலும் வழக்குரைஞர் பழனிமுத்து பொதுநல வழக்கு செப்டம்பர் 17 அன்று நீதிமன்றத்தில் வரும் நிலையில் மற்றும் உயர்நீதி மன்றத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கபட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கூறிய நிலையில் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக செயல்பட்டு பணிவழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேள்வித்தாள் முன் கூட்டியே வெளியான விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையெனில் மறு தேர்வு நடத்தபட வேண்டும். விடை சம்பந்தமாக தேர்வு நடத்தும் அலுவ லகத்தை தேர்வு எழுதியவர்களையே அணுகச் சொல்வது எந்த தேர்வு வாரியத்திலும் இல்லாத நடைமுறை மற்றும் அந்த அலுவலகத்தின் தேர்வு குளறுபடி யானது என்பதை சுட்டிக் காட்டுகிறது. வல்லுநர் குழு செய்யும் குளறுபடிக்கு தமிழக கல்வியியல் பல்கலைக்கழகம் தகுதித் தேர்வு நடத்தினால் நல்லது.

- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
Source .: viduthalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக