புதன், 4 செப்டம்பர், 2013

ெப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில்,
திமுக தலைவர் கருணாநிதி தமிழக ஆசிரியர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

இந்தியக் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் திங்கள் 5ஆம்நாள், ஆண்டுதோறும், “ஆசிரியர் தினம்” என நாடு முழுதும்
கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ஆசிரியர் தின நாளில் தமிழக
ஆசிரியர் சமுதாய அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த
நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். ஆசிரியர்களுக்கு, ‘நல்லாசிரியர் விருது’ என்ற பெயரில் வழங்கப்பட்டநடைமுறையால் விருது பெறாத ஆசிரியர்கள், ‘நல்ல ஆசிரியர்கள் இல்லையா?’என்ற கேள்வி எழும் என்பதால், ‘நல்லாசிரியர் விருது’ என்ற விருதின் பெயரை,
‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ என மாற்றி வழங்கச் செய்ததையும்;
விருதுபெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுத் தொகை ரூ.1000
என்பதை முன்னர் ரூ.2000 என்றும்; பின்னர் அதனை ரூ.5000 என உயர்த்தித் தந்தும் ஆசிரியர் சமுதாயத்தை அரவணைத்து வந்துள்ளது திராவிடமுன்னேற்றக் கழக அரசு என்பதைச் சுட்டிக்காட்டி; தமிழக ஆசிரியர்சமுதாயம் என்றும் சிறந்து விளங்க வேண்டும்; அவர்கள் குடும்பம் செழிக்கவேண்டும்; அப்பொழுதுதான் தமிழ்ச்சமுதாயம் என்றும் அறிவார்ந்த
சமுதாயமாக எழுச்சிபெற்று திகழும் என்ற விழைவோடு தமிழக ஆசிரியப்
பெருமக்களுக்கு இந்த ஆண்டின் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன், வாழ்க ஆசிரியர்கள் என்று தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இந்தியாவில் ஆசிரியர்நாளைக் கொண்டாடும், 

தமிழ்த்தாமரை · இடுகை

   
 
உங்களின் இடுகையை சேமிக்கும் போதும் வெளியிடும் போதும் பிழை ஏற்பட்டது. மீண்டும் முயற்சிக்கவும். எச்சரிக்கையைப் புறக்கணி
பின்னூட்டம் அனுப்புக
 ஏழைக் குடும்பத்தில்                  பிறந்து, ஆசிரியராக பணி செய்து , இந்தியாவின் முதல்
குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.
ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள்
தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக
அளவிலும்,  தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும்
அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும்
 தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழி வழிக் கல்வியின் மகத்துவத்தை நன்றாக உணர்ந்த
இராதாகிருஷ்ணர், அனைத்து மாநிலங்களிலும்  அவரவர்
தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
பட்டப்படிப்புகளையும் தாய் மொழியிலேயே வழங்க வகை செய்யப்பட
வேண்டும் என்று வலியுறுத்தி வந்த இராதாகிருஷ்ணன் பிறந்த தமிழ்நாட்டில்
ஆங்கில வழிக் கல்வி மோகம் தலைவிரித்தாடுவது மிகுந்த கவலையளிக்கிறது.
 அதிலும், தமிழக அரசே போட்டிப்
போட்டுக்கொண்டு  அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத்
தொடங்கி, அரைகுறை படிப்பை வழங்குவதைப் பார்க்கும்போது, இந்த
சமுதாயத்தைக் காப்பாற்ற இன்னொரு இராதாகிருஷ்ணன் பிறந்துவர
மாட்டாரா? என்ற ஆற்றாமை தான் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் 
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும்
தங்களைத் தாங்களே இராதாகிருஷ்ணர்களாக கருதிக்
கொண்டு தாய்மொழி வழிக் கல்வியை வளர்க்கவும், ஒப்புவிக்கும்
திறனை மட்டும் ஊக்குவிக்கும் ஆங்கில வழிக்கல்வி முறையை விரட்டி 
அடிக்கவும் பாடுபட வேண்டும். இதற்காக இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக