வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கிறிஸ்துமஸ்





கிறிஸ்து ‌பிறந்த டிசம்பர் 25-ம் தேதி உலகெங்கிலும் உள்ளகிறிஸ்துவர்களும், அவரைப்
பின்பற்றுவோரும் இயேசுவின்பிறப்பை.  கிறிஸ்மஸ்  பெருவிழாவைக்கொண்டாடி வருகின்றனர். 
கிறிஸ்மஸ் உலகெங்கும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும்ஒரு அற்புதமான பண்டிகையாகும் . டிசம்பர் மாதம் ‌பிறந்த உடனேயே ‌கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கானஒரு அழைப்பு மணியாக அனைத்து ‌கிறிஸ்துவர்களின் இல்லங்களிலும்.    இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக  பெரியநட்சத்திரங்களை மின் ‌விளக்கு அலங்காரத்துடன் தொங்க ‌விட்டு,தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார்என்று  அறிவித்து மகிழ்கின்றனர் 

ஏசு கிறிஸ்த்துவின்பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் இப்பண்டிகையின் முக்கியஅம்சமாக திகழ்வது சான்டா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தாவும்அவரின் பரிசு பொருட்களும்தான்
குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய
சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்றஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள்சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா.... ஸாண்ட்ட கிளாஸ்!

 மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ்தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்கண்ணாடி சகிதமாக வலம் வரத்துவங்கிவிட்டார்! உலகில்  சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை .
.சான்டா க்ளாஸ் என்னும் சொல் செயின்ட் நிகோலாஸ் என்னும் பெயரை தழுவி நிறுவப்பட்டது.செயின்ட் நிகோலாஸ் என்பவர் நான்காம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க கிறிஸ்துவ பாதிரியாவார். ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இவரின் கொள்கையை பறைசாற்றும் விதத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஒரு பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது.    

                           கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதெல்லாம் எட்டு மான்கள் பனியில் சறுக்கும் வாகனத்தை இழுக்க, அதில் ஒய்யாரமாய் அமர்ந்துவரும் கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ்தினத்திற்கு முந்தைய நாள்தான் அனைவரது வீட்டிற்கும்வருகை தருவார். வருகைதந்து அனைவருக்கும், குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பார்      

பல்லாயிரமாண்டுகளாக கிறிஸ்துவர்கள் நம்பும் பாரம்பரியமாக கருதப்படும் இந்த வழக்கத்தை நடைமுறைபடுத்த கிறிஸ்துமஸ் தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு பரிசு பொருட்கள் வழங்கி இனிப்புகள் பகிர்ந்துகொள்வது வழக்கம். உண்மையானமகிழ்ச்சி என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது தான் என்னும்உண்மையை அனைவரும் நினைவில் கொள

உலகில் இன்றைக்கு " கிறிஸ்துமஸ் " பெருவிழாவைக் கொண்டாடுகிறவர்கள் "கிறிஸ்மஸ் மரம்"இல்லாமல் கொண்டாடுவதில்லை என்கிற அளவுக்கு ஒரு முக்கியத்துவம்
பெற்றுவிட்டதை நாமறிவோம். கிறிஸ்தவர்களிடையே எப்படி யிந்தப் பழக்கம் உருவானது?

ஒரு ஏழை விறகு வெட்டி இருந்தான்.ஏழ்மையின் உச்சத்தில் இருந்த அவனை பட்டினியின் பிடியிலிருந்த சிறுவன் ஒருவன் ஒரு கிறிஸ்மஸ்தினத்தன்று சந்தித்து பசிக்கு ஏதேனும் தர முடியுமா என்றுகேட்டான். சிறுவனின் சோர்வைக் கண்ட அந்த விறகுவெட்டி தனக்காய் வைத்திருந்த சிறு உணவை அவனுக்கு வழங்கிவிட்டு பசியுடன்தூங்கினான். மறுநாள் காலையில் தன்னுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு மரம் அழகாய் ஜொலித்தபடி புதிதாய் நிற்பதைக் கண்டு வியப்படைந்தான். நேற்றைய இரவில் தன்னுடன் உணவருந்தியது இயேசுவே என்றும், தன்னுடைய மனிதநேயத்தைப் பாராட்டி அவர் தந்த பரிசே அந்த கிறிஸ்மஸ் மரம் என்றும் அவன் நம்பினான். இது கிறிஸ்மஸ் மரத்தின் தோற்றம் பற்றி சொல்லப்படும் கதைகளில் ஒன்று

கிறிஸ்து பிறப்பு என்றதும் கண்களுக்குள் விரியும் காட்சியில் ஒளியூட்டப்பட்ட,அலங்கரிக்கப்பட்ட, சிறு சிறுநட்சத்திரங்கள் மின்னும் ஒரு கிறிஸ்மஸ் மரம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். மனிதநேயத்தின் உச்சபட்ச வெளிப்பாடாக இயேசுவின் வருகையை நம்புகிறதுகிறிஸ்தவம். உலகின் மீது கடவுள்கொண்ட தாயன்பை நினைவுபடுத்தும் கிறிஸ்து பிறப்பு தினத்தில் தவிர்க்க முடியாத ஒரு விழாக்காலச் சின்னமாக விளங்குகிறது கிறிஸ்மஸ் மரம்



T.SINGARAVELAN
DHARMAPURI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக