ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

ஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது!

ஆசிரியப் பணியின் மதிப்பு

ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.

மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். 

 போற்றத்தக்கவர்கள்!

சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.


SGT COUNSELING :நீங்களும் உதவலாம்....

அன்பான வேண்டுகோள்
தாங்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிட விவரத்தை அனுப்பி உதவிட வேண்டுகின்றோம். அது அடுத்த நாளில் நடக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பிற மாவட்டத்தினருக்கு உதவக்கூடும்
விவரத்தினை கீழ்கண்ட எண்ணுக்கு கீழ்கண்டவாறு sms மூலம் அனுப்பலாம் அல்லது தொடர்பு கொண்டு கூறலாம்.
District- no of vacants-no of candidates
example sms
velore -vacant 60- candidate 35

candidate என்பது முதல் நாள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை(பட்டியல் ஒட்டப்படும்)

அனுப்பவேண்டிய mob no: 8508472547

Emai: thamaraithamil.in@gmail.com

SGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு.

காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத்
தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது,காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில்காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு.

SGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது

SGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது

இடைநிலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கு, செப்., 1ம்தேதியும், வெளி மாவட்டங்களுக்கு, செப்., 2ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.

இதில், சென்னை, திண்டுக்கல்,கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர்ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை. எனவே, செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்லவேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும் கலந்தாய்விற்கு செல்லலாம்
வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது.
தேர்வு பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், தேர்வுக் கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன், இருப்பிட முகவரி சம்பந்தபட்டமாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, சம்பந்தபட்ட நாட்களில், காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும்.

புதிதாக பணியேற்கும் முதுகலையாசிரியர்களே...உங்களோடு ஒரு நிமிடம்புதிதாக நியமனம் பெற்று இன்று பணியில் சேரும் முதுகலையாசிரியர்களே வணக்கம்.
கடந்த 2 வருட போராட்டத்திற்குப் பின் பல்வேறு வழக்குகளைத்தாண்டி, பல இரவு  நித்திரை இழந்து ஒரு வழியாக இன்று பணியேற்க இருக்கிறீர்கள். முதலில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பள்ளிக்கல்வித்துறையில் பெரிய வகுப்புகளை (11,12 ) கையாளும் ஆசிரியர்கள் நாம். ஆனால் நமது ஊதியம், பதவி உயர்வு சார்ந்த பிரச்சனைகளையும், இந்த மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்ட வரலாறும் தங்களுக்கு தெரியுமா? இந்த மேல்நிலைப் பணித்தொகுதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என தங்களுக்கு தெரியுமா? அதை தங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.
     1966 ம் ஆண்டு கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரையை இந்திய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டதன் பேரில் தமிழகம் அரசு 1.7.1978 அன்று தமிழகத்தில் 10+2+3 முறையை அமல்படுத்தியது. அன்று சுமார் 750 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.  அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிறைய கிராமப்புற மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பெறும் நிலை ஏற்பட்டது. முதுகலையாசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.675 நிர்ணயிக்கப்பட்டது. கல்லூரி ஆசிரியர்களை விட 25 ரூபாய் மட்டுமே குறைவு என்பதாலும்,  தங்கள் சொந்த ஊருக்கு அருகிலேயே பணி என்பதாலும் மேல்நிலைக் கல்வியில் பல முதுகலையாசிரியர்கள் ஆர்வத்துடன் பணியில் சேர்ந்தனர். கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதைப் போல ஆர்வத்துடன் கற்பித்தனர்.
     இந்நிலையில் நமது பணித்தொகுதிக்கான பணிவிதிகள், தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி விதிகள் என்ற பெயரில் அரசாணை எண் 720, நாள்.28.04.1981 ன் படி வெளியிடப்பட்டது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு 10 ஆண்டு ஆசிரியப்பணி அனுபவம் நிர்ணயிக்கப்பட்டது. பணியில் சேரும் போது எந்த முதுகலையாசிரியர் 10 ஆண்டு ஆசிரியப் பணியை முடித்திருப்பார்? அதனால் 10 ஆண்டு ஆசிரியப் பணி முடித்த பட்டதாரி ஆசிரியருக்கே மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கப்பட்டது. 1988 ல் நமது முதுகலையாசிரியர்கள் 10 ஆண்டு பணியை முடித்திருந்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பின் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் 7 காலிப்பணியிடங்களில்      2 : 5 என்ற விகிதத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலையாசிரியர்களை நியமிக்கலாம் என அரசாணை எண் 1620. நாள் 18.10.1988 ன் படி மேற்காண் அரசாணை 720ன் விதி 2( b)(1) ல்  திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட்டு முதுகலையாசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.  அவர்களும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் பங்கு கேட்க, மேற்காண் விகிதம் 2 : 5 : 2 என மாற்றப்பட்டது. 9 தலைமையாசிரியர் பணியிடங்களில் 2 பணியிடங்கள் சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆசிரியராகவும் பட்டம் மட்டும் பெற்றவர் தலைமையாசிரியராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கான புண்ணியத்தை அரசாணை 542, நாள் 29.06.1994 தேடிக்கொண்டது. இதில் ஒரு பத்து வருடம் கழிந்த்து. சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மீண்டும் விகிதாச்சாரம் 2 : 5 என மாற்றப்பட்டது.
இன்று பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர், படிப்படியாக பதவி உயர்வு மூலம்  பள்ளிக்கல்வி இயக்குனராக கூட ஆக முடியும். ஆனால் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆவதற்குள் அவரது பணிக்காலம் முடிந்து விடும். அரசு நமக்கு வகுத்து தநதிருக்கும் விதிகள் அப்படி.
ஒரு பள்ளியில் முதுகலையாசிரியர் உதவித்தலைமையாசிரியராக இருப்பார். அவரிடம் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர் சில வருடங்கள் கழித்து மாவட்டக்கல்வி அலுவலராகவும், முதன்மைக்கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றிருப்பார். முதுகலையாசிரியர் தொடர்ந்து அதே பணியில் இருப்பார். தன்னிடம் பணியாற்றியவர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் வைப்பார்.
ஒரு பட்டதாரி ஆசிரியர் மேல்நிலை வகுப்புகளில் பாடம் கற்பிக்காமல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆகலாம். ஆனால் ஒரு முதுகலையாசியர் நேரடியாக நியமனம் பெற்றால் உயர்நிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியர் ஆக முடியாது.

இன்றுவரை அது தொடர்கிறது.  இது பதவி உயர்வு சார்நத பிரச்சனைகள்.
     சரி ஊதிய விஷயத்திலாவது அரசு நடுநிலையாக நடந்துகொண்டதா என்றால் அதுவும் இல்லை. 1978 ல் நமக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இருந்த வித்தியாசம் வெறும் ரூபாய்.25 மட்டும். அதாவது அடிப்படை ஊதியத்தில் 3.5 சதம் மட்டுமே வித்தியாசம் . இன்று கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.21,000. நமது அடிப்படை ஊதியம் ரூ.14100. ஏறத்தாழ 50 சதம் அதிகம். சரி கல்லூரி ஆசிரியரை விடுங்கள். நமது உடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியரின் ஊதியம் எவ்வளவு? அடிப்படை ஊதியம் ரூ.13900. முதுகலைப்பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தை சேர்த்தால்  .ரூ.14740. நம்மை விட ரூ.640 அடிப்படை ஊதியத்தில் அதிகம். அகவிலைப்படியுடன் சேர்த்து 1280ரூபாய் பட்டதாரி ஆசிரியர் கூடுதலாகப் பெறும் நிலை இந்தியாவில் எங்கும் இருக்காது...
இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமது முதுகலையாசிரியர் பணித்தொகுதிக்கென்றே உள்ளது. பதவி உயர்வு சார்ந்து பல வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடுகள் சார்ந்து விரைவில் வழக்கு தொடுக்க உள்ளோம். 
போராடாமல் எதையும் வென்றதில்லை என்பதை மனதில் நிறுத்தி சிறப்பாக செயலாற்றுங்கள். உங்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் என்றும் துணை நிற்கும்.
தொடர்ந்து பேசுவோம்..
தங்கள் பணி சாரந்த பிரச்சனைகள், அரசாணைகள், தெளிவுரைகளுக்கு தொடர்பு கொள்க,
இரா.சீனிவாசன்,
மாவட்ட செய்தித்தொடர்பாளர்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
மின்னஞ்சல்
செல்பேசி 9942618399

PG ENGLISH VACANT DISTRICT WISE

PG ENGLISH VACANT DISTRICT WISE
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர் 1
வேலூர். 60
திருவண்ணாமலை 60
கடலூர்
விழுப்புரம் 60
சேலம்
நாமக்கல்
தர்மபுரி
கிருஷ்ணகிரி 13
ஈரோடு
கோயம்புத்தூர்
திருப்பூர். 3
நீலகிரி 9
திருச்சி
கரூர்
பெரம்பலூர்
அரியலூர்
புதுக்கோட்டை. 24
தஞ்சாவூர். 2
திருவாரூர். 15
நாகப்பட்டினம் 14
மதுரை
திண்டுக்கல்
தேனி
ராமநாதபுரம். 22
சிவகங்கை
விருதுநகர்
திருநெல்வேலி
தூத்துக்குடி
கன்னியாகுமரிSent from my iPad

PG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

கடலூரில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 50 பேருக்கு பணி நியமன
ஆணை வழங்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு,பணி நியமன கலந்தாய்வு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று, நடந்தது.இதில், 50 ஆசிரியர்களுக்கு, கடலூர் மாவட்டத்தில் பணிபுரிவதற்கான நியமன ஆணையை,முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார்.
மீதமுள்ள 18 பேருக்கு, காலிப் பணியிடங்கள் இல்லாததால்,இன்று (31ம் தேதி) நடக்கும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

PG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

திருநெல்வேலியில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில்
(மாவட்டத்துக்குள்) 70 பேர் பங்கேற்றனர். அவர்களில் 6 பேருக்கு நியமன
ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்கள் வெளிமாவட்ட கலந்தாய்வில் பங்கேற்க
அறிவுறுத்தப்பட்டனர்.

PG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில்
ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டதுபோல, இங்கும் தொடங்கப்பட்டகலந்தாய்வில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே. தமிழரசு முன்னிலையில் நடைபெற்றஇந்தக் கலந்தாய்வில் 47 பேர் கலந்து கொண்டனர். ஆங்கிலம், கணிதம்,இயற்பியல், வேதியியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல்,தாவரவியல், விலங்கியல், உயிரியல், நுண்ணுயிரியல், மனை அறிவியல் ஆகியபாடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.

பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 49 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இணையவழி மூலம் தகவல் வந்தது. இதில், இணையவழி மூலம் பணியிடத்தைத் தேர்வு செய்த 34 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.

PG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

திருவாரூர் மாவட்டத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற
தேர்வு பெற்றவர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு நடைபெற்றது.
முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்
உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 20 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணையை முதன்மை கல்வி அலுவலாó ரெ. நிர்மலா வழங்கினார்.

PG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 13
ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 30) முதல்ஆக. 5 வரை மாவட்ட முதன்மை மற்றும் தொடக்கக் கல்வித்துறை சார்பில்,பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்நடைபெறுகிறது. இதன்படி, முதுகலை ஆசிரியர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்குள்ளஇடங்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற கலந்தாய்வில் 13ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

PG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் முதல் நாளில், மதுரை மாவட்டத்தில்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இருவருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
. மதுரையில்இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், முதன்மைக் கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.
முதல் நாளில், மதுரை மாவட்டத்துக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலி இடத்தைப் பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வு நடைபெற்றது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஏறத்தாழ 130 பேர் தேர்வாகியிருக்கும்நிலையில், மதுரை மாவட்டத்தில் 2 காலியிடங்கள் மட்டுமே இருந்தன.அப்பணியிடத்துக்குத் தகுதியானவர்களுக்கு பணி நியமன
உத்தரவு வழங்கப்பட்டது.

PG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 98 பேர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 2353முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடைபெற்றகலந்தாய்வு முகாமில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்இருந்து 98 பேர் வந்திருந்தனர்.

இதில், மாவட்டத்திற்குள் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கானகாலி பணியிடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், 3 இடங்கள்மட்டுமே இருந்தன.

PG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான
கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, பேகம்பூர் புனித
லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு திண்டுக்கல்மாவட்டத்திலிருந்து 99 பேர் தேர்வு பெற்றுள்ளனர். பாட வாரியாகதேர்வானவர்கள் விவரம்:
தாவரவியல் 6, வேதியியல் 6, வணிகவியல் 14,
பொருளியில் 12, ஆங்கிலம் 21, புவியியல் 3, வரலாறு 7, கணிதம் 12,
இயற்பியல் 10, நுண்ணுயிரியல் 1, விலங்கியல் 7.

இதில் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் 8 காலிப் பணியிடங்கள் இருந்தன.
வணிகவியல் 1, பொருளியில் 1, வேதியியல் 1, கணிதம் 2, வரலாறு 1,
புவியியல் 1, மனையியல் 1.

இதில் மனையியல் தவிர மற்றஅனைத்து பணியிடங்களும் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு மூலம்நிரப்பப்பட்டன.

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகளவில்காலியாக உள்ளது

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகளவில்காலியாக உள்ளது
ஞாயிற்றுக்கிழமை வெளிமாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் கேட்டு கலந்தாய்வு நடைபெறும்.தேர்வு வாரியப் பட்டியலின்படி, எந்த மாவட்டத்தில் பணிபுரிய ஆசிரியர்கள்விருப்பம் தெரிவிக்கிறார்களோ அந்த மாவட்டத்தில் பணி புரிவதற்கானநியமன ஆணை வழங்கப்படும். வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி போன்றமாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகளவில்காலியாக உள்ளதால் பிற மாவட்டத்தைச் சேர்ந்தமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அங்கு பணி புரிய வாய்ப்பு அதிகமாக உள்ளது

PG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

ஈரோடு மாவட்டத்தில் 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன்சனிக்கிழமை வழங்கினார்.

.ஈரோடு மாவட்டத்தில் பணி நியமன ஆணைக்கான கலந்தாய்வு ஈரோடு,
திண்டல் வேளாளர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
சனிக்கிழமை தொடங்கியது. இந்த கவுன்சலிங்கில் மொத்தம் 81 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 60 முதுகலை ஆசிரியர்காலிப்பணியிடங்கள் உள்ளதாக அரசுக்கு பட்டியல்
அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 40 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அரசு அனுமதியளித்து பள்ளி வாரிய
பட்டியலை அனுப்பி வைத்தது. எனவே, சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் பணி நியமன ஆணைக்கானகலந்தாய்வில் 40முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி நியமனஆணை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 81 ஆசிரியர்களில்பணி நியமன ஆணை பெற்ற 40 முதுகலை ஆசிரியர்கள் போக மீதமுள்ள 41முதுகலை ஆசிரியர்கள் வெளிமாவட்டத்தில் பணி நியமனம்
செய்யப்படவுள்ளனர்

தமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தனித் தனி அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும்

தமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்
தனி அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம்அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்தச் சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர்இ.ஆர்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர்
தி.கோவிந்தன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர்
ஜி.இளங்கோ வரவேற்றார். இந்தக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
மேலும், வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு நடத்தவேண்டும், கடந்த 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில்நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்தநாள் முதல் வரைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
வட்டாரவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில்பணியாற்றியதை கருத்தில் கொண்டு கட்டாய பணி மாறுதல் வழங்கியமுறையை ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கான பயணப் படியை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50 சத இட
ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மாநில அரசு செயல்படுத்தும் இலவச பாடப்புத்தகங்கள், மடிக் கணினி, மிதிவண்டி போன்ற 14 நலத் திட்டங்களையும்பள்ளிகளில் செயல்படுத்த தனி அலுவலர் நியமிக்க வேண்டும்.
தகுதி உள்ளஅனைவருக்கும் பொதுவான 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட
வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Sent from my iPad

PG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை

நாமக்கல்லில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கான நியமனகலந்தாய்வில் 7 ஆசிரியர்களுக்கு முதல் நாளில் பணி நியமனஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.. இதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர் இரு கணித ஆசிரியர்கள்,
இரு பொருளாதார ஆசிரியர்கள், வரலாறு, வணிகவியல், விலங்கியல்
துறைகளைச் சார்ந்த தலா ஓர் ஆசிரியர் என மொத்தம் 7ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் வழங்கினார். 125 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்தக்கலந்தாய்வை முதுநிலை தலைமையாசிரியர்கள் 6 பேர் கொண்டகுழு நடத்தியது.
இன்று (ஆக.31) வெளி மாவட்டங்களுக்கானகலந்தாய்வு நடைபெறும்.

PG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை

திருவண்ணாமலையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வில் 97
பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கான
ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்பொ.பொன்னையா வழங்கினார். ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெற்றமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வில் 119பேருக்கு பணி ஒதுக்கப்பட்டது. இதில் 114 பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். 5 பேர் கலந்து கொள்ளவில்லை. இதில் 97பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
வெளிமாவட்டங்களில் பணி நியமன ஆணை பெற விரும்புவோருக்கானகலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

PG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை

வேலூரில் நடைபெற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 100ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700பேருக்கான ஆசிரியர் பணி நியமனத்துக்கான கவுன்சிலிங்சனிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் இந்த கவுன்சிலிங் வேலூர்,சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 106 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த கவுன்சிலிங்கில்100 பேர் பங்கேற்றனர்.
.
மீதமுள்ள 6 இடங்களுக்கு 4 பேர் வரவில்லை. பயோ-கெமிஸ்ட்ரி பணியிடங்களுக்காக இருவருக்கு நாளை கவுன்சிலிங் நடைபெறுகிறது என மாவட்ட கல்வித் துறை தெரிவித்தது.

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு karur DISTRICT

31.08.14

Karur மாவட்டத்தில் vacancy after district counseling

TODAY POSITION
pg Economics, 5 vacant

All other subjects NO VACANT

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547

PG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.

PG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டமுதுநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும்நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 14,700 பேர்தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரப்புவதற்கு இணையதளம் மூலம்கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தில்வசிப்பவர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வில் 118 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில்
வேதியியல்ஆசிரியருக்கு 20 பேரும்,
உயிர் வேதியியல் ஒருவர்,
தாவரவியல் 15 பேர்
,நுண்ணுயிரியல் ஒருவர்,
இயற்பியல் 14 பேர்,
கணிதம் 15 பேர்,
ஆங்கிலம் 9பேர்,
உடல்கல்வி இயக்குநர் நிலை 1,
வணிகவியல் 7 பேர்,
பொருளியியல் 14 பேர்,
வரலாறு 11 பேர்
எனமொத்தம் 108 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேற்கண்ட பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று அழைக்கப்பட்ட 10 பேர்
வேறு மாவட்டத்துக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

முதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்கான உத்தரவு வழங்கப்பட்டது

நேற்று முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்காக மாவட்டத்துக்குள் உள்ள காலிப்
பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 906 பேருக்கு பணி நியமனத்துக்கான உத்தரவு வழங்கப்பட்டது.இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

PG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள்

. மொத்தம்உள்ள, 14,700 இடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர்,தருமபுரி உள்ளிட்ட, வட மாவட்டங்களில் தான் உள்ளன. இதனால், அதிகளவில் தேர்வு பெற்ற தென் மாவட்ட தேர்வர்கள்,, வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லை

'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்.,1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என,தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு:
தொடக்ககல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும்நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று, மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது.ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம் தேதியும், .

இதில், சென்னை, திண்டுக்கல்,கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர்ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை. எனவே, செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்லவேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும் கலந்தாய்விற்கு செல்லலாம். இவ்வாறு,இளங்கோவன்தெரிவித்துள்ளார்

சனி, 30 ஆகஸ்ட், 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி நியமன ஆணை 04.09.14 அன்று வழங்கப்படும்

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு KANCIPURAM DISTRICT

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு KANCIPURAM DISTRICT


KANCIPURAM மாவட்டத்தில் vacancy after district counseling

Kanchipuram pg Economics, Commerce vacant filled

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு VIRUDUNAGAR DISTRICT

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு VIRUDUNAGAR DISTRICT


VIRUDUNAGAR மாவட்டத்தில் vacancy after district counseling


All vacants are filled

Thanks to mr Thirumoorthy

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547


Sent from my iPad

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு PUDUKOTTAI DISTRICT

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு PUDUKOTTAI DISTRICT


PUDUKOTTAI

மாவட்டத்தில் vacancy after district counseling

PHYSICS. 2
All other. vacants are filled

Thanks to mr Thirumoorthy

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547


Sent from my iPad

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு RAMNAD DISTRICT

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு RAMNAD DISTRICT


Ramnad மாவட்டத்தில் vacancy after district counseling
கணிதம் 2
Chemistry. 8
English. 22
All other. vacants are filled

Thanks to mr Thirumoorthy

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore

coiambatore மாவட்டத்தில் vacancy after district counseling
கணிதம் 1
All other. 21 vacants are filled

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு

திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி ,தருமபுரி,dindukkal,SIVAGANGAI காலிப்பணியிடங்கள் ஏதும் இல்லை

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு DINDUKAL

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு DINDUKAL
Dindigul District PG Vacancy Status
1. Total no of candidates selected for the posting of PGA 2012-2103 in District = 101 ALL SUBJECTS
2. No of vacancy within the district = 8
ALL ARE FILLED
3. Remaining CANDIDATES=93

முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS UPDATE

முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS UPDATE
மாவட்டத்தில்
வணிகவியல். 0
ஆங்கிலத்திற்கு 8
வேதியியல் 2
கணிதம் 8
பயோ கெமிஸ்ட்ரி 1
உயிரியல் 1
பொருளியல் 7
வரலாறு 7
geography. 1
விலங்கியல் 1
ஹோம் சயின்ஸ் 0
Physics. 2
Botany. 2
காலிப்பணியிடங்களும் பணியிடமும் காட்டப்பட்டுள்ளன.

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547


Sent from my iPad

PG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்

PG TRB counseling update
காலிப்பணியிடங்கள் வேலூர், திருவண்ணாமலை,விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக அளவில் காட்டப்படுள்ளதாகவும் பிற மாவட்டங்களில் குறைந்த்ஹ அளவே காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547

NEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு SIVAGANGAI

NEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு SIVAGANGAI
மாவட்டத்தில்
ENGLISH 2
All are filled

.
for all other subject very few vacants are shown

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547

NEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு DHARMAPURUI

NEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு DHARMAPURUI
மாவட்டத்தில்
வணிகவியல் 2

கணிதம் 0

பொருளியல் 5

All are filled

காலிப்பணியிடங்களும் பணியிடமும் காட்டப்பட்டுள்ளன.
for all other subject very few vacants are shown

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547

தேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியானது!

கீழ் கானும் சகோதரியின் தேர்வு முடிவை பாருங்கள்...community BCM  BUT TRB  MENTIONED AS BC. இவரது ஆசிரியர் பணி கேள்விகுறியானது ,BCMன் இறுதி cutoff 68.85


Teachers Recruitment Board 
 College Road, Chennai-60000

          DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE ASSISTANT


Roll NoCandidate NameGenderCommunityPH / VITamilMediumClaimDate of BirthTotalWeightageMarksSelected
13TE11100011NOORNISHA BEGAM SFBCT19/05/198972.75NO

  

 

BY RAJU

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு TANJORE

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு TANJORE
மாவட்டத்தில்

VERY FEW POSTS ARE SHOWN

ALL POSTS ARE FILLED BY COUNSELING TODAY. .

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு MADURAI

NEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு MADURAI
மாவட்டத்தில்


வரலாறு 1

MICRO BIOLOGY 1

no other vacancies

காலிப்பணியிடங்களும் பணியிடமும் காட்டப்பட்டுள்ளன.

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547


Sent from my iPad

முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore NEWS UPDATE

முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore NEWS UPDATE
மாவட்டத்தில்
வணிகவியல் 1
ஆங்கிலத்திற்கு 3
வேதியியல் 3
கணிதம் 3
பயோ கெமிஸ்ட்ரி 2
உயிரியல் 1
பொருளியல் 2
வரலாறு 4
geography. 1
விலங்கியல் 0
ஹோம் சயின்ஸ் 1
Physics. 1
Botany. 1
காலிப்பணியிடங்களும் பணியிடமும் காட்டப்பட்டுள்ளன.

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547


Sent from my iPad

NEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு திருப்பூர்

முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு திருப்பூர் NEWS UPDATE
திருப்பூர் மாவட்டத்தில்
வணிகவியல் பாடத்திற்கு 1
ஆங்கிலத்திற்கு 8
வேதியியல் 6
கணிதம் 6
பயோ கெமிஸ்ட்ரி 1
உயிரியல் 3
பொருளியல் 9
வரலாறு 7
விலங்கியல் 2
ஹோம் சயின்ஸ் 1
காலிப்பணியிடங்களும் பணியிடமும் காட்டப்பட்டுள்ளன.

KINDLY SEND INFORMATION OF YOUR DISTRICT

CONTACT 8508472547


Sent from my iPad

NEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு

NEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் வணிகவியல் பாடத்திற்கு 3 காலிப்பணியிடங்களும் ஆங்கிலத்திற்கு 1 பணியிடமும் காட்டப்பட்டுள்ளன.


Sent from my iPad

பணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டுமா?

முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறிது நேரத்தில் தொடங்குகின்றது...
பணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் ஒரு வாரத்துக்குள் பணியில் சேரவேண்டும். ஆணை கிடைத்தவுடன் உடன் பணியில் சேருவது நல்லது. தவிர்க்க இயலாத காரணங்களால் பின்னர் சேர்பவர்களுக்கு பின்னர் கிடைக்கும் பதவி உயர்வு முன்னுரிமை பாதிக்கப்படாது ஏனெனில் TRB RANK தான் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் தகுதிகாண் பருவம் முடித்தல், தேர்வுநிலை,சிறப்புநிலை வழங்குவதற்கும் மாறுதல் பெறுவதற்கு முன்னுரிமை ஆகியவை பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கோண்டே அமையும்.

முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறிது நேரத்தில் தொடங்குகின்றது...

முதுநிலைப் பட்டதாரிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும் மேனிலைப்
பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சலிங் இணைய தளம் மூலம் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்குகின்றது... .

தமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்

தமிழில் படித்தாலும் சாதிக்க முடியும் என,சென்னை ஆவடி செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சி,வளர்ச்சிக் கழக இயக்குநர் எஸ்.குணசேகரன் தெரிவித்தார். அரூரை அடுத்த கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் "லேசர்,நிறப்பிரிகை இயல்' எனும் தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்க ம்கொங்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ராஜாமணி தலைமையில்வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை ஆவடி செயின்ட்பீட்டர்ஸ் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சி, வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர்எஸ்.குணசேகரன் பேசியது: ஆங்கிலத்தில் படிப்பவர்தான் சிறந்தவர்கள், அறிவு மிக்கவர்கள்என்பது பொய்யானது. தாய் மொழியான தமிழில் படித்தால்கூட சிறந்தஅறிஞர்களாக, ஆராய்ச்சியாளர்களாக உயர முடியும். மனித வாழ்க்கையில்
கல்வி அறிவு, பணம் இரண்டுமே அவசியம். ஆனால், விலைமதிக்க முடியாத,களவு போகாத ஒரே சொத்து கல்வி மட்டுமே. பணத்தை சம்பாதிக்கவும்,செலவு செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும். நாம்மால் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவ வேண்டும்.பாடப்புத்தகங்களை மட்டுமே மாணவர்கள் படிக்க கூடாது.பொது அறிவு தொடர்பான புத்தகங்களையும் படிக்க வேண்டும். பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அறிவியலின் நன்மைகள், அறிவியல்பயன்பாடு, தொழில்நுட்பங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எதைப்படித்தாலும் தெளிவாக நன்கு புரிந்து கொண்டு படிக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு அறிவியல் சார்ந்த படிப்புகளை அதிகம்படிக்க வேண்டும். இளம் பருத்திலேயே ஒழுக்க நெறிகளை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள்,வயது மூத்தவர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும் என்றார் அவர்.

தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது-ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

'தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது.மனுக்களை வாங்கும் அதிகாரிகள், பதில் அளிப்பது இல்லை' என, தொடக்க கல்வி ஆசிரியர்கள்,குற்றம் சாட்டுகின்றனர். தொடக்க கல்வித் துறையில், 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள்பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறை நாட்களுக்கு பணம் பெறுதல் உள்ளிட்ட, பல கோரிக்கைகள் தொடர்பாக, அவ்வப்போது,சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தபடி உள்ளனர். இதனால்,
ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதித்து வருகிறது. கோரிக்கையை, அதிகாரிகள் கண்டு கொள்ளாதபோது,துறைக்கு எதிராக, ஆசிரியர், வழக்கு தொடரும் போக்கும் அதிகரித்து வருகிறது. மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆசிரியர் பிரச்னையை, உடனுக்குடன் தீர்க்கும் வகையில்,குறை தீர்ப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, மாதத்தின் முதல் சனிக்கிழமை,பள்ளி முடிந்தபின், மாலை வேளையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம், ஆசிரியர்,கோரிக்கை மனு அளிக்க வேண்டும். இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரி, உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.தீர்க்க முடியாத பிரச்னை எனில், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, மாவட்ட தொடக்ககல்வி அதிகாரியை சந்தித்து, மனு அளிக்க வேண்டும். இதிலும், பிரச்னை தீரவில்லை எனில், மூன்றாவது சனிக்கிழமை, சென்னையில் உள்ள தொடக்ககல்வி இயக்குனரை, நேரில் சந்தித்து பிரச்னையை கூறலாம். ஒரு ஆண்டு முன் வரை, உருப்படியாகநடந்து வந்த இந்த குறை தீர்ப்பு கூட்டம், தற்போது, வெறும் சடங்குக்கு நடந்து வருவதாக, தொடக்ககல்வி ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகத் தலைவர், சிங்காரவேல் கூறியதாவது: மற்றஅரசு துறைகளை விட, கல்வித் துறையில் தான், வழக்குகள் அதிகளவில் உள்ளன. இது, அதிகாரிகளுக்கும்தெரியும்.

கோரிக்கைகள் : ஆசிரியர்களின், சிறிய கோரிக்கை, பிரச்னைகளை கூட, மாவட்ட அளவில் உள்ளஅதிகாரிகள் தீர்ப்பதில்லை. இதனால், நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது.
குறை தீர்ப்பு கூட்டங்களில், மனு அளித்தால், என்ன பதில் என்பதை, எழுத்து பூர்வமாக அதிகாரிகள் தரவேண்டும். ஆனால், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பது இல்லை. கண்துடைப்புக்காக, குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. 'துறையின்
பதிலை அறியாமல், வழக்கு போடக் கூடாது' என, தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட வேண்டும். இதன்மூலம், ஆசிரியர், துறை அதிகாரிகளின் பதில் பெறுவதை, உறுதி செய்ய முடியும். இவ்வாறு,சிங்காரவேல் கூறினார்.


Sent from my iPad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு
இனிய வாசக பெருமக்களுக்கு கல்வதொடர்பான செய்திகள், கட்டுரைகள் ,தங்களது கோரிக்கைகள், வழக்குத் தொடர்பான செய்திகள் ஆகியவற்றை thamaraithamil.in@gmail.com எனும் முகவரிக்கு latha unicode font or anyother unicode font ல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பி வைக்கலாம் செய்திகள் தமிழ்த்தாமரையில் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு வெளியிடப்படும்.
நாளை நடைபெறும் PG கலந்தாய்வு காலிப்பணியிட விவரங்கள் மாவட்டவாரியாக தெரிந்தவர்கள் அனுப்பிவைக்கலாம்
தொடர்புக்கு
8508472547
நன்றி.

தமிழ்த்தாமரை

டாக்டர் மு.வ

மலைகளில் உயர்ந்தது இமயமலை. அதனினும் உயர்ந்தது 'எவரெஸ்ட்' சிகரம். அந்தச் சிகரம் மனிதரால் எளிதில் எட்ட முடியாததோர் உயரம். அதனை எட்டியவரை உலகம் சிகரத்தைத் தொட்டவர் என்று உச்சிமேல் வைத்துப் புகழ்கிறது. தமிழ் இலக்கியத்தின் சிகரத்தைத் தொட்டவர் ஒருவர் உண்டெனில், அவர் 'டாக்டர் மு.வ' என்று தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நாவினிக்கப் போற்றப்படும் டாக்டர் மு. வரதராசனார் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
டாக்டர் மு.வ ஓர் படைப்பிலக்கியவாதி மட்டுமன்று. அவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழிப் புலவர். ஒரு தமிழ்ப் பேராசிரியர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் அறவோர். அன்பும் பண்பும் கனிவும் கருணையும் உள்ளம் நிறையக் கொண்டவர்.

1912இல் இம்மண்ணில் தோன்றி 1974இல் இம்மண்ணுலகைவிட்டு மறையுமுன்னர், 'தோன்றின் புகழொடு தோன்றுக' என்னும் வள்ளுவப் பெருமானின் வாக்கிற்கொப்ப நிறைவாழ்வு வாய்ந்த நிறை மனிதர். அறுபத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தாலும் தாம் வாழ்ந்து முடித்த ஆண்டுகளில் 81 நூல்களை எழுதி தமிழுக்கு அணி சேர்த்தவர். அவருடைய வயதைவிட அவர் எழுதி முடித்த நூல்களின் எண்ணிக்கை அதிகம்.
சிறுவர் நூல்கள், நாவல், சிறுகதை, சிந்தனைக் கதை, நாடகம், கடித இலக்கியம், வரலாறு, இலக்கியத் திறனாய்வு, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கிய வரலாறு, சிந்தனைக் கட்டுரைகள், மொழியியல் ஆகிய தமிழ்ப் படைப்புகளோடு சங்க இலக்கியத்தில் இயற்கை (The treatment of Nature in Sangam Literature ), இளங்கோவடிகள் (Iilango Adigal) ஆகிய இரண்டு ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

நாவல்: 1. செந்தாமரை (1946), 2. கள்ளோ காவியமோ? (1947), 3. பாவை, (1948), 4. அந்த நாள் (1948), 5. மலர்விழி (1950), 6. பெற்ற மனம் (1951), 7. அல்லி (1952), 8. கரித்துண்டு (1953), 9. கயமை (1956), 10. நெஞ்சில் ஒரு முள் (1956), 11. அகல் விளக்கு (1958), 12. வாடா மலர் (1960), 13. மண்குடிசை ( 1961).

நேர்படபேசு...


  தருமபுரி மாவட்டம் சந்தப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில்மாதந்தோறும் நடைபெறும் நோ்படப்பேசு... நிகழ்சியில் இம்மாதம்அரூா் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு அவா்கள் கலந்துகொண்டுசிறப்பித்தார்.

 தமது தொகுதி மேம்பாட்டு நிதிதியிலிருந்து பள்ளிக்குசுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடு செய்தமைக்காக சட்டமன்ற உறுப்பினருக்குநன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்சியில் அவர் பேசியதாவத நன்குபடித்து நல்ல மதிப்பெண்களை பெறவேண்டும்ஐஏஎஸ் ஐபிஸ் டாக்டா்என்ஜினியர் ஆகவேண்டும் என்ற உங்களது கனவுகள் நனவாகட்டும்அதற்கும் முன்னால் நல்ல மனிதனாக இருக்கப் பழகுங்கள்.

மாணவப்பருவத்திலேயே சமூக அவலங்களை அறியவும அதனபோக்க வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.டாக்டா்அம்பேத்கார் காமராசர் ஜீவானந்தம் அப்துல்கலாம் போன்ற எண்ணற்றமனிதா்கள் தங்கள் வாழ்க்கையை சமூகத்துக்குஅா்பணித்தனா்.எனவே நமது கல்வி சமூக வளர்சிக்கு பயன்படவேண்டும்.குறிப்பாக பெண்கல்வியே சமூக மேம்பாட்டிற்கு முதற்படியாகும்.

தமிழ்வழியில் சமச்சீா் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவா்கள் நல்லமதிப்பெண்கள் பெற்று தொடா்ந்து சாதனைகள் படைத்து வருகின்றனா்.பத்தாம் வகுப்பு வரையே பள்ளிக்கு சென்று பிறகுதொலைநிலைக்கல்வியில் நம்பிக்கையோடு படித்த பலர் தற்போதுஆட்சிப்பணி அதிகாரிகளாக சிறப்பாக பணியாற்றி வருகின்றனா்.தன்னம்பிக்கையோடு தொடா் முயற்சி செய்தால் வெற்றி நம்மைதேடிவரும்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் அ.அண்ணாதுரை தலைமைவகித்தார். ஆசிரியா் திரு. முத்து வரவேற்க் திரு.அரங்கண்னல் நன்றிகூறினார். நிகழ்வை திரு.இ.தங்கமணி ஒருங்கிணைத்து நடத்தினார்.

 TNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு முன் 01,09.2014 திங்களன்று வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன				COURT NO. 2                      HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI                  HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH          TO BE HEARD ON MONDAY THE 1ST DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A.M. ------------------------------------------------------------------------------------------------                                            41.  WA.1037/2014      M/S.C.UMA           CHENNAI                    (Service)       N.R.R.ARUN NATARAJAN                         IN           Permit the petitioner     MP.4/2014       - DO -                 IN           Permit the petitioner     MP.4/2014       - DO -                 AND               WA.1038/2014                         AND          For Stay     MP.1/2014       - DO -                 AND          For Injunction     MP.2/2014       - DO -                 AND          For Direction     MP.3/2014       - DO -                 AND               WA.707/2014      M/S.DAKSHAYANI REDDY     WA.707/2014              (N/M)         S.SUREKHA           ----------------                                      R1. AND R2 SERVED ON 27/07/201                               R1. THE STATE OF TAMIL NADU                                 REP BY THE PRINCIPAL SECRETARY                               TO GOVT.SCHOOL EDUCATION DEPT.                               CHENNAI - 9                                         R2. THE TEACHERS RECRUETMENT                                BOARD REP BY CHAIRMAN                                    DPI COMPOUND                                        COLLEGE ROAD                                        CHENNAI                AND               WA.776/2014      M/S.DAKSHAYANI REDDY     CHENNAI                (W.A.)                                           AND          For Injunction     MP.1/2014       - DO -                 AND          TO DIRECTION     MP.2/2014       - DO -                 AND               WA.857/2014      M/S.DAKSHAYANI REDDY     CHENNAI                (W.A.)         S.SUREKHA                              AND          For Injunction     MP.1/2014       - DO -                 AND          TO DIRECTION     MP.2/2014       - DO -                 AND               WA.944/2014      M/S C.UMA           CHENNAI                (W.A.)         N.R.R.ARUN NATARAJAN                                    For Stay     MP.1/2014       - DO -                 TO           For Direction     MP.3/2014       - DO -                 AND               WA.942/2014      M/S.DAKSHAYINI REDDY     R1 THE PRINICPAL SECRETARY       (N/M)         S.SUREKHA           TO GOVT                                SCHOOL EDUCATION                                  DEPT. CHENNAI 9                                      R2 THE CHAIRMAN                               TEACHERS RECRUITMENT BOARD                               DPI CAMPUS                               CHENNAI 6                               R3 THE DIRECTOR OF SCHOOL                                EDUCATION                               DPI CAMPUS                               CHENNAI 6                               SPL. GP (EDN.)                               (MEMO NOT FILED)     AND          FOR INJUNCTION     MP.1/2014       DO     AND          FOR DIRECTION     MP.2/2014       DO     AND               WA.972/2014      M/S DAKSHAYANI REDDY     CHENNAI                (W.A.)         S.SUREKHA                              AND                  (II SET NOT FILED)             WP.22498/2014     M/S.B.BALAVIJAYAN                          (Service)       V.SHIVALINGAM                            AND               WP.22499/2014     DO                                                  AND          For Direction     MP.1/2014       - DO -                 AND          For Direction     MP.1/2014       - DO -                 AND          (II SET NOT FILED)     WP.22503/2014     M/S.B.BALAVIJAYAN       SALEM                 (Service)       V.SHIVALINGAM                            AND               WP.22504/2014     - DO -                 AND          For Direction     MP.1/2014       - DO -                 AND          For Direction     MP.1/2014       - DO -                 AND          (II SET NOT FILED)     WP.18587/2014     M/S.G.SANKARAN        M/S.P.RAJALAKSHMI     (Service)       S.NEDUNCHEZHIYAN       GOVT ADVOCATE                               TAKES NOTICE FOR RESPT.     AND          To Dispense With     MP.1/2014       - DO -                 AND          For Stay     MP.2/2014       - DO -                 AND               WP.20040/2014     M/S.G.SANKARAN                            (Service)       S.NEDUNCHEZHIYAN                           AND          To Dispense With     MP.1/2014       - DO -                 AND          For Stay     MP.2/2014       - DO -                                              ~~   

ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள் ளது. கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் முதலில் 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மட்டும் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டது. அதன்படி, 150-க்கு 82 மார்க் எடுத்தால் பாஸ். இதனால், தகுதித் தேர்வில் கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிமுகம்

ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்களின் பிளஸ்-2 மதிப்பெண் (15 மார்க்), இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் (25), தகுதித்தேர்வு மதிப்பெண் (60)ஆகியவை கணக்கிடப்பட்டது.

இதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு பிளஸ்-2 மார்க் (10), பட்டப் படிப்பு (15), பிஎட் (15), தகுதித்தேர்வு மதிப்பெண் (60) ஆகியவற்றை கொண்டு வெயிட்டேஜ் மார்க் மதிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 31,500 இடைநிலை ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டன.

82-க்கு வேலை 104-க்கு இல்லை

வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில் 11,254 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், 2,582 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கியது.

அதைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பிளஸ்-டூ, பட்டப் படிப்பு, பிஎட், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்த ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தகுதித் தேர்வில் 102 மார்க் எடுத்த எனக்கு வேலை கிடைக்கவில்லை, 82 மார்க் பெற்றவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:

கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 பொதுத் தேர்வானாலும் சரி, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பிலும் சரி அதிக மார்க் போடமாட்டார்கள். பிளஸ்-2 தேர்வில் 900 மார்க் வாங்கினாலே பெரிய விஷயம், அதேபோல்தான் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதும் கடினம். ஆனால், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக அதிக மார்க் போடுகிறார்கள்.

தகுதித் தேர்வு அடிப்படையில் நியமனம்

எனவே, 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் படித்து முடித்தவர்களின் மதிப்பெண்ணையும், கடந்த சில ஆண்டுகளில் படித்து முடித்தவர்களின் மதிப்பெண்ணையும் சமமாக கருத முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வதுதான் சரிசமமான போட்டியாக இருக்கும். எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்துவிட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.