ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தனித் தனி அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும்

தமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்
தனி அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம்அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அந்தச் சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர்இ.ஆர்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர்
தி.கோவிந்தன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர்
ஜி.இளங்கோ வரவேற்றார். இந்தக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
மேலும், வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு நடத்தவேண்டும், கடந்த 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில்நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்தநாள் முதல் வரைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
வட்டாரவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில்பணியாற்றியதை கருத்தில் கொண்டு கட்டாய பணி மாறுதல் வழங்கியமுறையை ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கான பயணப் படியை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50 சத இட
ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மாநில அரசு செயல்படுத்தும் இலவச பாடப்புத்தகங்கள், மடிக் கணினி, மிதிவண்டி போன்ற 14 நலத் திட்டங்களையும்பள்ளிகளில் செயல்படுத்த தனி அலுவலர் நியமிக்க வேண்டும்.
தகுதி உள்ளஅனைவருக்கும் பொதுவான 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட
வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக