புதன், 27 ஆகஸ்ட், 2014

பணி நியமனம் எப்போது?

பணிநிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.அப்பணியிடங்களை சரிபார்த்து அதற்குரிய அரசாணை மற்றும் சம்பளத்தலைப்புகள் வழங்கும் பணி முழுமையாக நிறைவடையவில்லை.ஏற்கனவே தொடக்கக் கல்வித்துறையிலிருந்து அத்தகைய நிரவல் பணியிடங்களுக்கு பணிமாறுதல் பெற்றவர்களுக்கும் இன்னும் அதற்கான ஆணை வழங்கப்படவில்லை.எனவே அதற்கான ஆய்வும் இறுதிசெய்யும் பணி முடிவடைந்ததும் காலிப்பணியிடங்கள் இறுதி செய்யப்பட்டுவிடும்.உடன் பணி நியமனப்பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.