ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

PG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

கடலூரில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 50 பேருக்கு பணி நியமன
ஆணை வழங்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு,பணி நியமன கலந்தாய்வு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று, நடந்தது.இதில், 50 ஆசிரியர்களுக்கு, கடலூர் மாவட்டத்தில் பணிபுரிவதற்கான நியமன ஆணையை,முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார்.
மீதமுள்ள 18 பேருக்கு, காலிப் பணியிடங்கள் இல்லாததால்,இன்று (31ம் தேதி) நடக்கும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.