வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நேர்படபேசு...


  தருமபுரி மாவட்டம் சந்தப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில்மாதந்தோறும் நடைபெறும் நோ்படப்பேசு... நிகழ்சியில் இம்மாதம்அரூா் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு அவா்கள் கலந்துகொண்டுசிறப்பித்தார்.

 தமது தொகுதி மேம்பாட்டு நிதிதியிலிருந்து பள்ளிக்குசுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடு செய்தமைக்காக சட்டமன்ற உறுப்பினருக்குநன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்சியில் அவர் பேசியதாவத நன்குபடித்து நல்ல மதிப்பெண்களை பெறவேண்டும்ஐஏஎஸ் ஐபிஸ் டாக்டா்என்ஜினியர் ஆகவேண்டும் என்ற உங்களது கனவுகள் நனவாகட்டும்அதற்கும் முன்னால் நல்ல மனிதனாக இருக்கப் பழகுங்கள்.

மாணவப்பருவத்திலேயே சமூக அவலங்களை அறியவும அதனபோக்க வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.டாக்டா்அம்பேத்கார் காமராசர் ஜீவானந்தம் அப்துல்கலாம் போன்ற எண்ணற்றமனிதா்கள் தங்கள் வாழ்க்கையை சமூகத்துக்குஅா்பணித்தனா்.எனவே நமது கல்வி சமூக வளர்சிக்கு பயன்படவேண்டும்.குறிப்பாக பெண்கல்வியே சமூக மேம்பாட்டிற்கு முதற்படியாகும்.

தமிழ்வழியில் சமச்சீா் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவா்கள் நல்லமதிப்பெண்கள் பெற்று தொடா்ந்து சாதனைகள் படைத்து வருகின்றனா்.பத்தாம் வகுப்பு வரையே பள்ளிக்கு சென்று பிறகுதொலைநிலைக்கல்வியில் நம்பிக்கையோடு படித்த பலர் தற்போதுஆட்சிப்பணி அதிகாரிகளாக சிறப்பாக பணியாற்றி வருகின்றனா்.தன்னம்பிக்கையோடு தொடா் முயற்சி செய்தால் வெற்றி நம்மைதேடிவரும்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் அ.அண்ணாதுரை தலைமைவகித்தார். ஆசிரியா் திரு. முத்து வரவேற்க் திரு.அரங்கண்னல் நன்றிகூறினார். நிகழ்வை திரு.இ.தங்கமணி ஒருங்கிணைத்து நடத்தினார்.