வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2 மணி நேரத்தில் தரிசிக்கலாம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக சோதனை அடிப்படையில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்ற வர்கள் புதன்கிழமை 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் ஆன்லைன் டிக்கெட் முறை செயல்படுத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித் துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், ஆன் லைனில் ரூ. 300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் முறையை சோதனை அடிப்படையில் தேவஸ்தான நிர்வாகம் கடந்த 20-ம் தேதி அறிமுகம் செய்தது. அன்றைய தினம் ஆன்லைன் மூலம் மொத்தம் 5,000 டிக்கெட்டுகள் வழங் கப்பட்டன.

இந்த டிக்கெட்டுகளைப் பெற்றவர்கள் புதன்கிழமை (7 நாட்கள் கழித்து) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஏழுமலையான் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமலையில் உள்ள டி.பி.சி. விடுதி 129 பகுதி வழியாக சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, 14 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவ்வழியாக சென்ற பக்தர்கள் வெறும் இரண்டு மணி நேரத்தில் சுவாமியை தரிசித்து விட்டு வெளியே வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமைமுதல் ஆன்லைன் மூலம் தினமும் 10,000 டிக்கெட்டுகளை வழங்க தேவஸ் தானம் திட்டமிட்டுள்ளது. இதைப் பெற்றுக்கொள்ளும் பக்தர்கள் 14 நாட்கள் கழித்து ஏழுமலையானை தரிசிக்கலாம்.

மேலும் ஒரு நாள் முன்னதாக டிக்கெட் வழங்கும் முறையையும் நாளை அறிமுகப்படுத்த உள்ள தாக திருமலை-திருப்பதி தேவஸ் தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.