ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

SGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது

SGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது

இடைநிலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கு, செப்., 1ம்தேதியும், வெளி மாவட்டங்களுக்கு, செப்., 2ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.

இதில், சென்னை, திண்டுக்கல்,கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர்ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை. எனவே, செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்லவேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும் கலந்தாய்விற்கு செல்லலாம்
வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது.
தேர்வு பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், தேர்வுக் கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன், இருப்பிட முகவரி சம்பந்தபட்டமாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, சம்பந்தபட்ட நாட்களில், காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும்.