வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

கலந்தய்வுக்கு செல்வோர் கவனிக்க...

கலந்தய்வுக்கு செல்வோர் கவனிக்க...

# ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் கலந்தாய்வு நடைபெறும்
#. காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 8.30 மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.


#மாவட்டத்திற்குள் கலந்தாய்வு எனும் போது பாடவாரியாக மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் பட்டியல் தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.
மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு பெற்றுள்ள தேர்வர்கள், வரிசைகிரமமாக கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள்.
# பாடவாரியாக அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர வரிசைப்படி அழைக்கப்பட்டு பட்டியலில் உள்ள இடத்தில் தங்களுக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள் தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 1 நிமிடம் மட்டுமே தரப்படும். . எனவே முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இடங்களை வரிசைகிரமமாக தர எண் இட்டு தயாராக எடுத்து சென்றால், முதலாவது இடம் இல்லாவிட்டால் இரண்டாவது இடம் என்றவாறு தேர்ந்தெடுக்க இயலும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு முறை தங்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படலாம். எனவே அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என அனைத்தையும் தயாராக கொண்டு செல்லவும்.
குறிப்பாக வேறு மாநில பட்டம் பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின் அச்சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும்.

கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதோ (அ) முழுமையாக முடிவுற்ற பின்போ தான் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில் தாங்கள் பணிபுரிய உரிய ஆணை வழங்கப்படும்.

வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -
தங்கள் சொந்த மாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம் தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில் அடுத்த நாள் நடைபெறும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்
சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதே இடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள் பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும்.

.வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு எனும் போது, மாநில அளவில் தங்கள் தர எண் பார்க்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தர எண் பெற்றுள்ளவர்கள் மட்டும் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். தங்களுக்கான காலிப்பணியிடங்கள் கணினி திரையில் வந்து கொண்டே இருக்கும். (Scroll Down Type) தங்களுக்கு முந்தைய நபர் எந்த மாவட்டத்தில் எங்கு உள்ளாரோ அவருக்கு உரிய நேரத்தில்அவர் தனக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க இயலும். அவர் தேர்ந்தெடுத்த இடம் உறுதிபடுத்தப்பட்ட பிறகே அடுத்த தர வரிசை எண் உள்ளவர் எந்த மாவட்டத்தில் உள்ளாரோ அங்கு கணினி உயிர்பெறும். இதுபோன்று தங்களுக்கான நேரம் வரும் போது தாங்கள் தங்கள் பள்ளியை தேர்ந்தெடுக்க

இயலும். மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும் போது தேர்வர்களுக்காக வழங்கப்பட்ட நேரத்தை விட வேறுமாவட்டத்தை தேர்ந்தெடுப்பர்வர்களுக்கு மிக குறைந்த நேரமே வழங்கப்படும். எனவே அதற்கு தக்கபடி தயாராக இருக்கவும்.Sent from my iPad