சனி, 30 ஆகஸ்ட், 2014

பணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டுமா?

முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறிது நேரத்தில் தொடங்குகின்றது...
பணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் ஒரு வாரத்துக்குள் பணியில் சேரவேண்டும். ஆணை கிடைத்தவுடன் உடன் பணியில் சேருவது நல்லது. தவிர்க்க இயலாத காரணங்களால் பின்னர் சேர்பவர்களுக்கு பின்னர் கிடைக்கும் பதவி உயர்வு முன்னுரிமை பாதிக்கப்படாது ஏனெனில் TRB RANK தான் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் தகுதிகாண் பருவம் முடித்தல், தேர்வுநிலை,சிறப்புநிலை வழங்குவதற்கும் மாறுதல் பெறுவதற்கு முன்னுரிமை ஆகியவை பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கோண்டே அமையும்.