வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

மதுரைக்கிளையில் TRB வழக்குகள் விசாரிக்கும் நீதிபதிகள் சுழற்சிமுறையில் மாற்றம்

மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள TRB வழக்குகளை மார்ச் 3 முதல் நீதியரசர் கே.ரவிச்சந்திர பாபு அவர்களும் ,முதுகலை ஆசிரியர் தமிழ் அப்பீல் வழக்குகளை நீதியரசர்கள் வி.இராமசுப்ரமணியம்,வி.எம். வேலுமணி அடங்கிய அமர்வும் விசாரிக்கக்கூடும் என தெரியவருகின்றது.

கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ரூ.419 முதல்ரூ.9,344 வரை கூடுதலாக கிடைக்கும்.

கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ரூ.419 முதல்ரூ.9,344 வரை கூடுதலாக கிடைக்கும்.

இது தொடர்பாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அகவிலைப்படி மொத்தமுள்ள 4,524 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்களில், 671 சங்கங்கள் தொடர் லாபத்திலும், 3,442 சங்கங்கள் சில ஆண்டுகளில் லாபம் ஈட்டியும், மீதமுள்ள 411 சங்கங்கள் நட்டத்திலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மேற்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களின் நலனைக்கருத்தில் கொண்டு, அரசு அறிவித்த அகவிலைப்படியினை அவர்களுக்கும் வழங்கிட நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். மேற்படி கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தங்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு, 31–3–2013 உடன் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க நான் ஆணையிட்டேன். இந்தக்குழு தற்போது தனது பரிந்துரையை அரசுக்கு அளித்துள்ளது. இந்தக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த நான், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கீழ்க்காணும் ஊதிய உயர்வினை வழங்குமாறு ஆணையிட்டுள்ளேன்.

நிலுவைத்தொகை இதன்படி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக நிகர லாபத்தில் செயல்பட்டு வருவதோடு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து எந்த நிதியுதவியும் பெறாமல் சொந்த நிதியில் இருந்து செயல்படும் கூட்டுறவுச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 12 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.
3 ஆண்டுகள் தொடர்ந்து நிகர லாபத்தில் இயங்கி, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சங்க விதிகளின்படி உச்சபட்சமான 14 சதவீதம் ஈவுத்தொகையை தொடர்ந்து வழங்கி வரும் சங்கங்களில் பணியாற்றும பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கூடுதலாக ஓர் ஊதிய உயர்வு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து நிதியுதவி பெற்று தொடர்ந்து 5 ஆண்டுகள் நிகர லாபத்தில் இயங்கி வரும் கூட்டுறவுச்சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

7 சதவீதம் ஊதியம் உயர்வு
சில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நட்டத்துடன் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.
நடப்பு மற்றும் குவிந்த நட்டத்தில் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.
ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு கீழ் கடன் நிலுவையிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, இச்சங்கங்களின் கடன் நிலுவை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்த பின்னர் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் அடிப்படையில் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த ஊதிய உயர்வு மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், குறைந்த பட்சம் 558 ரூபாயும், அதிக பட்சம் 5,661 ரூபாயும் ஊதிய உயர்வு பெறுவர். இதனால் 26 கோடியே 89 லட்சம் ரூபாய் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதல் செலவினம் ஏற்படும்.

20 சதவீத ஊதிய உயர்வு
நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கீழ்க்காணும் ஊதிய உயர்வினை வழங்குமாறு நான் ஆணையிட்டுள்ளேன். இதன்படி, தொடர்ந்து 5 ஆண்டுகள் லாபம் ஈட்டி, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாணிபம் செய்யும் 27 நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும்.
தொடர்ந்து 5 ஆண்டுகள் லாபம் ஈட்டி, 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை வாணிபம் செய்யும் 37 நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும்.
நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளில் லாபம் ஈட்டி, 50 கோடி ரூபாய்க்கு கீழ் வாணிபம் செய்யும் 42 வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும்.
சில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நட்டத்துடன் இயங்கும் 14 நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் நிலுவைத் தொகையின்றி வழங்கப்படும்.
நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு 1–1–2012 அன்று நுகர்வோர் குறியீட்டு புள்ளிகள் 4,443 ஆக இருந்ததில், 2,836 புள்ளிகள் சம்பளத்துடன் இணைக்கப்படும். 1–1–2012 அன்று 60.15 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு காலாண்டில் 4 விலைப்புள்ளிகளுக்கு 0.15 சதவீதம் அகவிலைப்படி என்ற அளவிலான உயர்வு அனைத்து நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.

1,701 பணியாளர்களுக்கு பயன்
இந்த ஊதிய உயர்வினால் 120 நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் 1,701 பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 419 ரூபாயும், அதிகபட்சம் 9,344 ரூபாயும் கூடுதலாகக் கிடைக்கும். இதன் காரணமாக நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 13 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்.

அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும், கூட்டுறவு நகர வங்கிகளிலும் பணியாளர்களுக்கான இந்த ஊதிய உயர்வு, உரிய சட்ட நடைமுறைகளின்படி வழங்கப்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கூட்டுறவுப் பணியை மேற்கொள்ளும் பணியாளர்களின் வாழ்வு மேலும் சிறக்க வழிவகுக்கும். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Sent from my iPad

தென்னகத்து எல்லோரா:வெட்டுவாங்கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது கழுகுமலை என்னும் மிகப் பழமையான ஊர். அங்குள்ள மலையில் அமைந்துள்ள 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையானது இந்தக் கோயில். இது உள்ளூர் மக்களால் வெட்டுவாங்கோயில் என அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுணபாண்டியன் காலத்தில் இக்கோயில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்தான் கட்டினார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் கல்ரதங்கள் போல இது முழுவதுமாக மலைப் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் கட்டடக்கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் இக்கோயில் உள்ளது. ஆனால் இது முழுமையடையாமல் உள்ளது. சிற்பங்கள் முகமில்லாமலும், கை கால்கள் இல்லாமலும் உள்ளன.

இதற்குக் காரணம் என்ன எனத் தெரியவில்லை. ஆனால் அது குறித்த ஒரு வாய் வழிக் கதை இப்பகுதியில் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. கழுகுமலையில் சமணப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சமண மதம் செல்வாக்குடன் இருந்ததற்கு இது மிகப் பெரிய ஆதாரமாக உள்ளது. இங்குள்ள சமணப் பள்ளிச் சிற்பங்களைத் தந்தை ஒருவன் உருவாக்கியிருக்கிறான். இந்த வெட்டுவாங்கோயிலை அவரது மகன் உருவாக்கியிருக்கிறான். மகன் உருவாக்கிய சிற்பங்கள், தான் உருவாக்கிய சிற்பங்களைவிட சிறப்பாக இருந்துள்ளது. இதனால் பொறாமை கொண்ட தந்தை மகனை வெட்டிக் கொன்றுவிட்டான். இதனால்தான் இங்குள்ள சிற்பங்கள் முழுமையடையாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வெட்டுவான் கோயிலுக்கு 'தென்னக எல்லோரா' என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. இது இந்துக் கோயிலைப் போல பிரகாரம், அதிட்டானம், விமானம், கருவறை, அர்த்த மண்டபம், தெய்வங்கள் ஆகிய அம்சங்கள் உள்ளன. கற்கோயிலுக்கும், மலைக்கும் இடையிலுள்ள குடைந்தெடுக்கப்பட்ட பகுதி கோயிலின் சுற்றுப் பிரகாரமாக உள்ளது. கருவறையும், அர்த்த மண்டபமும், மலையின் உட்பகுதி குடையப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் அடிப்பகுதியும், அர்த்தமண்டபமும் முற்றுப்பெறா நிலையில் உள்ளன. விமானத்தின் உச்சிப்பகுதி முற்றுப்பெற்று அழகுடன் காட்சியளிக்கிறது. விமானத்தின் உச்சிப்பகுதியில் நான்கு பக்கங்களிலும் சுமார் 100 சிற்பங்கள் உள்ளன. கோபுரங்களில் பொதுவாகக் காணப்படும் சுதைச் சிற்பங்கள் இங்கு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இங்குக் காணப்படும் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சிவன் ஆகிய திருவுருவங்கள், நந்தியின் உருவங்கள் ஆகியவை இக்கோவில் சிவனுக்காக வடிக்கப்பட்டதைக் காட்டுகிறது. யாளிகள், பூதகணங்கள், நடனமாதர் உருவங்கள், தாமரை மலரின் விரிந்த உருவம் ஆகியவை விமானத்தில் காணப்படும் அழகிய இதர சிற்பங்கள். தற்போது இதன் கருவறையில் கணபதியின் தற்காலச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.Sent from my iPad

யானை

#நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய பாலூட்டி யானைதான்.

#யானைகள் ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசியாவிலும் வாழ்கின்றன.

#யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.

#ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு. உணவைத் தோண்டித் தின்பதற்குத் தந்தங்கள் உதவுகின்றன.

#பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.

#யானைகளால் தந்தங்களைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரையும் தோண்டிப் பருக முடியும்.

#யானைகளுக்குப் பெரிய, மெல்லிய காதுகள். யானையின் காதுகளில் அமைந்துள்ள ரத்தத் தமனிகள்தான் அவற்றின் உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கின்றன. உஷ்ணமான தட்ப வெட்ப நிலையில் காதுகள் வழியாகப் பயணிக்கும் ரத்தம் அதன் உடலைக் குளிர்விக்கிறது.

#பொதுவாக யானைகளை எந்தப் பிராணியும் உணவாகக் கொள்வதில்லை. இருப்பினும் ஆப்பிரிக்கச் சிங்கங்கள், குட்டி யானைகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள யானைகளை வேட்டையாடித் தின்னும். யானைகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மனிதர்களே. வேட்டையாடுவது, வாழ்விடத்தை ஆக்கிரமிப்பது ஆகியவற்றால் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

#யானையின் தும்பிக்கையால் ஒரு பொருளின் அளவு, வடிவம், வெப்பநிலையை உணர முடியும். உணவைத் தூக்கவும், தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றவும் தும்பிக்கை பயன்படுகிறது.

#யானையின் தும்பிக்கை 2 மீட்டர் அளவு வளரக்கூடியது. தும்பிக்கையின் கனம் 140 கிலோகிராம். ஒரு லட்சம் தசை நாண்களால் உருவாக்கப்பட்டது அது. ஆனால் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை.

#பெண் யானைகள் சேர்ந்து வாழக்கூடியவை. ஆண் யானைகள் 13 வயதில் தங்கள் மந்தையை விட்டுப் பிரிந்து செல்கின்றன. அந்த வயதிலிருந்து ஒரு ஆண் யானை தனியாகவே வாழத் தொடங்குகிறது.

#யானைகள் அருமையாக நீச்சல் அடிக்கக்கூடியவை. தும்பிக்கையை சுவாசக் குழாய் போலப் பயன்படுத்தி ஆழமான நீர்பகுதிகளிலும் யானைகளால் இருக்க முடியும்.

#யானைகள் தாவர உண்ணிகள். இலைகள், கிளைகள், மூங்கில்கள் மற்றும் வேர்பகுதிகளை உணவாக கொள்கின்றன.

Sent from my iPad

இந்திய விடுதலைப் போரில் நடத்தப்பட்ட முதல் வெடிகுண்டுத் தாக்குதல்

வங்காள மாகாணத்தை அன்றைய பிரிட்டிஷ் அரசு அக்டோபர் 16, 1905இல் இரண்டாகப் பிரித்தது. கிட்டதட்ட 2 லட்சம் சதுர மைல்கள் நிலப்பரப்பு, 8 கோடி மக்கள் தொகை கொண்ட வங்காள மாகாணத்தை நிர்வகிக்க இயலாத சூழலில்தான் இந்தப் பிரிவினை முடிவுக்கு வந்ததாக ஆங்கில அரசு அறிவித்தது. ஆனால் இது அக்காலகட்டத்தில் வங்கத்தில் எழுந்த மாபெரும் தேசிய எழுச்சியை நீர்த்துப் போகச் செய்யும் ஆங்கில அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் என இந்திய தேசிய விடுதலைப் போராட்டக்காரர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. வங்கப் பிரிவினை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் போராட்டக்காரர்களால் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.

அதன் விளைவாக ஆயுதப் போராட்டக் குழுக்கள் உருவெடுத்தன. வங்கத்தில் செயல்பட்ட யுகாந்தர் (Yugantar-New Era) இயக்கம் அதில் முக்கியமானது. விடுதலைப் போராளிகளுக்கு எதிராகக் கொடிய தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிபதி கிங்ஸ்போர்டைக் கொல்ல அந்த இயக்கம் சதித் திட்டம் தீட்டியது. இத்தாக்குதலுக்காக குதிராம் போஸ், பிரபுல்லா சாக்கி ஆகிய இளைஞர் இருவர்களுக்கு யுகாந்தர் இயக்கத்தால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இச்சதித் திட்டத்தைச் செயற்படுத்த குதிராம், பிரபுல்லா இருவரும் இன்றைய பீகார் மாநிலம் முஸாப்பூர் அருகில் உள்ள மோதிஜ்ஹில் என்னும் கிராமத்திற்கு 1908ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கிருஷோரிமோகன் பந்தபாத்யா என்பவரது வீட்டில் தங்கவைக்கப்பட்டனர். இருவரும் முறையே ஹரன் சர்க்கார், சுகுமார் ராய் ஆகிய ரகசியப் பெயர்களில் அழைக்கப்பட்டனர். நீதிபதி கிங்ஸ்போர்டின் தினசரி நடவடிக்கைகளை இருவரும் தொடர்ந்து கவனித்த பிறகு அவர் வீட்டிலிருந்து ஐரோப்பியன் கிளப்புக்குப் போகும் அல்லது திரும்பும் வழியில் தாக்கலாம் எனத் தீர்மானித்தனர். இத்திட்டம் பற்றி யுகாந்தர் இயக்க உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தினர். இக்காலகட்டத்தில் அவர்களுக்குத் தேவையான பண உதவிகளை, யுகாந்தர் உறுப்பினர்களான பரிந்திர குமார் கோஸ், அரவிந்த கோஸ் ஆகியோரிடம் இருந்து பெற்று வந்தனர்..

தாக்குதல் திட்டம்

சதித் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் தேர்ந்தெடுத்த தேதி 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி. ஐரோப்பியன் கிளப்புக்கு வெளியே குதிராம், பிரபுல்லா இருவரும் காத்திருந்தனர். இரவு 8.30 மணிக்கு கிங்ஸ்போர்டின் வண்டி வெளியே வந்தது. துரிதமாகச் செயல்பட்ட இருவரும் பாதுகாப்புக்காக ஒரு கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் வெடிகுண்டை வண்டியை நோக்கி வீசினர். இலக்கு தப்பவில்லை. வீசிய குண்டுகள் பெரும் சத்தத்துடன் வெடித்ததும் இருவரும் இருளில் மறைந்து விலகினர். இதுதான் இந்திய விடுதலைப் போரில் நடத்தப்பட்ட முதல் வெடிகுண்டுத் தாக்குதல் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் அத்தாக்குதல் நடத்தப்பட்ட வண்டியில் பயணித்தது மாஜிஸ்திரேட்டு கிங்ஸ்போர்டு அல்ல. மாறாக பாரிஸ்டர் பிரிங்கல் கென்னடியின் மகளும் மனைவியும். அவர்கள் இருவரும் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் அத்தகவல் நகர் முழுவதும் பரவியது.

கொலையாளிகளைப் பிடித்துத் தருபவருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் தருவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அருகில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் ஆயதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். பயணிகள் தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதனால் குதிராம் ரயில் பயணத்தைத் தவிர்த்து கால்நடையாகவே இருபத்தைந்து மைலைக் கடந்தார்.

குதிராம் பிடிபட்டார்

இறுதியாகப் பெரும் களைப்புடன் ஓயினி என்னும் ரயில் நிலையத்தை அடைந்து அருகில் இருந்த டீக்கடையில் தண்ணீர் கேட்டுள்ளார். அங்கிருந்த ஆயுதம் தாங்கிய போலீசார் இருவர் குதிராமைச் சந்தேகத்துடன் அணுகியுள்ளனர். காலணி இல்லாத, கடும் புழுதி படர்ந்த கால்களைப் பார்த்ததும் அவர்கள் சந்தேகம் வலுத்தது. குதிராமிடன் அவர்கள் தொடர்ந்து தொடுத்த கேள்விகளால் அது உறுதியானது. உடனே குதிராமைக் கைதுசெய்ய அவர்கள் முயன்றனர். குதிராம் தப்பிக்க முயன்றபோது அவர் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியில் ஒன்று தவறி கிழே விழுந்தது. மறைத்துவைத்திருந்த இன்னொரு துப்பாக்கியை எடுத்துப் போலீசாரில் ஒருவரைச் நோக்கிச் சுட எத்தனித்தபோது மற்றொரு போலீசார் அவனுடைய கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டார். மிகவும் களைத்திருந்ததால் அவரால் திமிர முடியாமல் இறுதியில் மாட்டிக்கொண்டார். அவரிடம் இருந்து இரு துப்பாக்கிகள், 37 தோட்டக்கள், முப்பது ரூபாய் பணம், ரயில் பாதை வரைபடம் மற்றும் ரயில் கால அட்டவணை ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட குதிராம் மே 1ஆம் தேதி முசாஃபர்பூர் கொண்டு செல்லப்பட்டார். முசாஃபர்பூர் காவல் நிலையத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிபதி வுட்மேன் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதே மே 1ஆம் தேதி திரிகுணச்சரன் கோஷ் என்பவரின் உதவியால் பிரபுல்லா கல்கத்தா புறப்பட்டார். அவருடன் ஒரே பெட்டியில் பயணித்த நந்தலால் பானர்ஜி என்பவர் பிரபுல்லாவிடம் பேச்சுகொடுத்து வந்தார். அவர் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர். அவருக்கு பிரபுல்லா மீது சந்தேகம் வலுத்தது. சிம்முராய்கட் ரயில் நிலையத்தில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்குவதுபோல முசாப்பூர் போலீசாருக்கு நந்தலால் தகவல் அளித்துள்ளார். இவை எதுவும் அறியாத பிரபுல்லா கெளரா ரயிலில் மாறுவதற்காக மொகமாகட் ரயில் நிலையத்தில் இறங்கிக் காத்திருந்தார். போலீசார் சூழ நந்தலால் பானர்ஜி வருவதைக் கண்டு திடுக்கிட்ட பிரபுல்லா அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குறி தவறிவிட்டது. அவர்கள் தன்னை நெருங்கியதை உணர்ந்த பிரபுல்லா தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.

இளைஞர் எழுச்சி

இதை அறியாத குதிராம் தன் நண்பனையும் இயக்கத்தையும் காக்கும் பொருட்டு முஸ்தாபூர் படுகொலையின் முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். பிறகு பிரபுல்லாவின் உடல் அடையாளம் காண்பதற்காக முஸாப்பூர் கொண்ட்டுவரப்பட்டபோது அதிர்ச்சியடைந்த குதிராம் அது பிரபுல்லாவின் உடல் என்பதை உறுதிசெய்தார்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மாவட்ட அமர்வு நீதிபதி இ.டபுல்யூ.பிரெத்வுடு 1908 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி குதிராமுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். குதிராம் மேல் முறையீடு செய்ய ஒரு வாரம் அவகாசம் இருந்தது. முதலில் மேல் முறையீட்டை மறுத்த அவர் பின்பு ஏற்றுக்கொண்டார். கல்கத்தா உயர் நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையைத் தொடங்கியது. நரேந்திரகுமார் பாசு என்பவர் குதிராமுக்காக வாதாடினார். குதிராமிடம் தாய் மொழியில் கேள்விகள் கேட்கப்படவில்லை,

'வழக்கின் மற்றொரு குற்றவாளிதான் குண்டை எறிந்துள்ளார், அவன்தான் முக்கியக் குற்றாவாளி' எனப் பல விதமாக வாதங்களை முன்வைத்தும் பலனில்லை. ஜூலை 13ஆம் தேதி கல்கத்தா உயர்நீதி மன்றம் மரண தண்டனையை உறுதிசெய்தது. 1908ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் தேதி குதிராம் தூக்கிலிடப்பட்டார். ஆனால் குதிராமின் மரணம் நாடெங்கிலும் இளைஞர் மத்தியில் பெரும் எழுச்சியை உண்டாக்கியது.

Keywords: குதிராம், வெடிகுண்டுத் தாக்குதல்,Sent from my iPad

ஜென் கதை- இருக்கலாம்!

ஜென் கதை- இருக்கலாம்!

ஜப்பானில் ஒரு விவசாயி இருந்தார். எந்நேரமும் வயலில் வேலையே கதியாக அவர் இருப்பார். ஒரு நாள் அவரது பண்ணையில் வேலை பார்க்க வைத்திருந்த ஒரு குதிரை ஓடிப்போய்விட்டது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், அவரது அண்டை வீட்டினர் "என்ன ஒரு துரதிருஷ்டம்" என்று அவரிடம் வருத்தத்துடன் கூறினர்.
அதற்கு அந்த விவசாயி, "இருக்கலாம்" என்றார்.
அடுத்த நாள் காலை எதிர்பாராத வகையில் அந்தக் குதிரை அவரிடமே திரும்ப வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் அந்தக் குதிரையுடன் மூன்று காட்டுக் குதிரைகளும் வந்திருந்தன. "என்ன ஒரு ஆச்சரியம்" என்று அண்டை வீட்டினர் கூறினர்.


அதற்கும் அவர் "இருக்கலாம்" என்றே கூறினார்.
அதற்கு அடுத்த நாள், பழக்கப்படாத அந்தக் குதிரைகளில் ஒன்றின் மீது ஏறிய விவசாயியின் மகன், குதிரையைச் செலுத்த முயன்றான். அந்தக் குதிரை அவனைத் தூக்கியெறிய, அவனது கால் ஓடிந்து போனது. அப்போது விவசாயியின் அண்டை வீட்டினர், அந்த அசம்பாவிதம் தொடர்பாக அனுதாபமாகப் பேசினர்.
 "இருக்கலாம்" என்று மீண்டும் கூறினார் விவசாயி.
அதற்கு அடுத்த நாள், ராணுவத்துக்கு இளைஞர்களைச் சேர்ப்பதற்காக ராணுவ அதிகாரிகள் அந்த ஊருக்கு வந்தனர். விவசாயி மகனின் கால் உடைந்திருந்ததால், அவர்கள் அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. கடைசியில் விஷயங்கள் எப்படி விவசாயிக்குச் சாதகமாக மாறிவிட்டன என்று கூறி, அண்டை வீட்டினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போதும் அவர் சொன்னார், "இருக்கலாம்".

பிளஸ் டூ : தேர்வு நெருங்கும் நேரத்தில்வீண் குழப்பம் வேண்டாம்...

பிளஸ் டூ தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் நன்றாகப் படிக்கும் சிலருக்கும்கூட, எல்லாவற்றையும் படித்து விட்டோமா? குறிப்பிட்ட பாடத்திலிருந்து முக்கியமான கேள்விகள் கேட்டுவிட்டால், நம்மால் பதில் அளிக்க முடியாதே, எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது, ஆனால் ஒரே குழப்பமாக இருக்கிறதே. பரீட்சை ஹாலில் பதில் மறந்து போய்விட்டால் என்ன செய்வது என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழும்.

தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் எதைப் பற்றியும் குழப்பிக்கொள்ளாமல், சகஜமான மனநிலையில் இருந்தாலே நிறைய மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும். இந்தக் கடைசிக் கட்டத்தில் தேர்வுக்கு எப்படித் தயாராவது என்பது குறித்துச் சில யோசனைகள்:

தேர்வுக்கு முந்தைய தயாரிப்பு

l தேர்வுக்குக் குறைந்தது பத்து நாட்களுக்கு முன்பாகவே அனைத்துப் பாடங்களையும் படித்துவிடுவது நல்லது.

l நமக்கு எந்தப் பாடம் பிடிக்குமோ, அந்தப் பாடத்தை முதலில் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்

l பதற்றம், கோபம் இல்லாமல் படிக்க வேண்டும். அப்போதுதான் மனதில் நிற்கும்

l தேர்வு நேரங்களில் கிரிக்கெட் போன்ற விளை யாட்டுகள், டி.வி. பார்ப்பது போன்றவற்றைச் சில நாட்களுக்காவது ஒதுக்கி வைத்துப் பாடத்தில் கவனம் செலுத்தினால் நிறைய மதிப்பெண்கள் பெறலாம்

l தேர்வுக்கு முந்தைய பத்து நாட்கள் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்

l தேர்வுக்கு வேண்டிய நுழைவுச் சீட்டுகள், எழுது பொருட்கள் போன்ற கருவிகளை ஒரே இடத்தில் சேகரித்து வைக்கவும்

l தேர்வு நேரத்தில் உடல்நிலையை நன்றாக வைத்திருக்க வேண்டும். தேர்வு நாட்களில் ஜுரம், தலைவலி போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

l தொடர்ந்து படிக்கும் நேரங்களில் அவ்வப்போது தேநீர், பிஸ்கெட், வெள்ளரிக் காய், பேரீச்சம் பழம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்

l வெயில் காலம் நெருங்குவதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்

தேர்வுக்குத் தயாராகும் முறை

l மொத்தமாகப் பாடங் களைப் படிப்பது நல்லதல்ல. பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் படித்தால் மனதில் தங்கிவிடும்

l தினசரி குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்

l ஒரு மணி நேரம் படித்தால் 15 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும்

l படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை எழுதினால் 16 முறை படித்ததற்குச் சமம்

l பாடங்களைத் திரும்பப் படிக்க அட்டவணை தயார் செய்ய வேண்டும். அதைத் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தயார் செய்வது நல்லது. இல்லாவிட்டாலும் இப்போது செய்யலாம்.

l ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். நன்றாகப் படித்த பாடங்களுக்குக் குறைந்த நேரம், அதிகம் படிக்காத பாடங்களுக்கு அதிக நேரம் என்று ஒதுக்க வேண்டும்

l கணக்கு, வரைபடங்கள் ஆகியவற்றுக்குத் தினசரி நேரம் ஒதுக்குவது நல்லது

l மதிப்பெண் வாரியாகப் பாடத்தைப் பிரித்துப் படிக்க வேண்டும். முதலில் அதிக மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள், கடைசியாக ஒரு வார்த்தை மதிப்பெண்கள் என்று படிக்க வேண்டும்

l படிப்புக்கு மத்தியில் நமக்குப் பிடித்த காரியங் களைச் செய்யக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் பரீட்சை பதற்றம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்

l தேர்வுக்குத் தயார் செய்யும் நேரத்தில் தியானம் செய்வது அல்லது பிடித்த விளையாட்டுகளை விளையாடுவது பதற்றத்தைத் தணிக்க உதவும்

தேர்வு சமயத்தில்

l தேர்வுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத் திற்கு முன்னதாகவே படித்து முடித்துவிட வேண்டும்

l தேர்வுக்கு முந்தைய அரை மணிநேரத்தில் எதையும் படிக்க வேண்டாம்

l தேவையான அனைத்தும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த பின் அறைக்குள் நுழைய வேண்டும்

l ஒரு மதிப்பெண்களுக்கான பதில்களை முதலில் எழுதி விட வேண்டும்.

l பிறகு தெரிந்த பதில்களை எழுத வேண்டும். தெரிந்த பதில்கள் எழுதுவதைத் தள்ளிப் போட வேண்டாம்

l கடைசி நேரத்தில் தெரியாத பதில்களை எழுதலாம். ஆனால் மனதில் பதற்றம் வேண்டாம்

l தேர்வு முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்ன தாகவே எழுதுவதை நிறுத்திவிட வேண்டும்

l அமைதியாக மனதைச் செலுத்திப் படியுங்கள், உங்கள் முயற்சிக்குத் தக்க பலன் கிடைக்கும். வாழ்த்துகள்!

Sent from my iPad

குரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும் ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதினர்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தேர்வு முடிவு தயாராக உள்ளது. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப்-4 தேர்வைப் பொருத்தவரை ஒரே ஒரு எழுத்துத் தேர்வுதான். மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தேசிய அறிவியல் தினம் : அறிவோம் அறிவியல் ஆற்றலை

அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது.
நமது அன்றாட நடவடிக்கைகள்,ஒவ்வொன்றிலும் அறிவியல்மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்தசி.வி.ராமன், "ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம்
தேதி கண்டுபிடித்தார். "நீர், காற்று போன்ற தடையற்றஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து, அலை நீளம் மாறுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல
நிறம் தண்ணீரில் தோன்றுகிறது' என்பதை கண்டுபிடித்தார். இந்த நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.மாணவர்களிடம் அறிவியல்
ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

எல்லாம் அறிவியலின் பயன்: இருளை விரட்டிய மின்விளக்கு, தூரத்தில் இருந்தாலும் உரையாட தொலைபேசி,என்ன வேலைகளையும் செய்வதற்கு கம்ப்யூட்டர், மரங்களில் நிழல்களை தங்கிய மனிதனுக்கு உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல விரும்பிய மனிதன் கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; காலால் நடந்த மனிதன் கால்மணி நேரத்தில் வேறு நாட்டிற்கே (வாகனங்கள்) செல்கிறான். வெள்ளத்தில் இருந்த பாதுகாத்துக்கொள்ள அணைகள், மேலே இருந்து தகவல்களை தருவதற்கு சாட்டிலைட்,அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, இலை தழைகளை உடுத்திய மனிதன் தற்போது பல வண்ணங்களில் வடிவங்களில் ஆடைகளை உடுத்துகிறான். பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன்; தற்போது உணவை தேர்வு செய்ய நீண்ட பட்டியலை பார்க்கிறான். இதற்கு காரணம் அறிவியல்தான்.

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். அதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது. அறிவியலை ஆக்கப்பூர்வ
விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் "அணுகுண்டால்' உருக்குலைந்த ஜப்பான்,இன்று அதே அணுசக்தியால் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதற்கு காரணம் அந்நாட்டின் விஞ்ஞானிகள்.நமது நாட்டிலும் மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்று கொள்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அறிவியல் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும். இதற்கு அறிவியல் பாடப்புத்தகத்தில் தியரியுடன், செய்முறைப் பயிற்சியையும்இணைக்க வேண்டும். செய்முறைக்குத் தேவையான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


Sent from my iPad

போலீஸ் பணியில் சேர தகுதியானவர்கள் யார்? : ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவு

"குற்ற வழக்கிலிருந்து ஒருவரை, சந்தேகத்தின் பலனை அனுபவிப்பதற்கு முன்,
விடுதலை செய்யப்பட்டிருந்தால் அல்லது வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன்,
விடுவிக்கப்பட்டிருந்தால், அவர்களை, போலீஸ் பணியில் சேரத் தகுதியில்லாதவர்களாக கருதவேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்
உத்தரவிட்டது.
போலீஸ் நியமனத்தில் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற, 17பேருக்கு, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனக் கூறி, பணி வழங்க மறுப்பதால், வேலை வழங்க உத்தரவிடக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனுக்கள் தாக்கல்செய்தனர்.
மாறுபட்ட தீர்ப்புகள் : மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, 2013ல் பிறப்பித்த உத்தரவு:குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு போலீஸ் வேலை வழங்குவது குறித்து, ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளில் ஒன்றுக்கொன்று, மாறுபட்டதாக உள்ளன. எந்த தீர்ப்பை பின்பற்றுவது என, தெளிவாக முடிவெடுக்க முடியாத நிலையில், அரசு குழப்பமடைந்துள்ளது. தற்போது, சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. தனி நீதிபதி விசாரித்தால், பொருத்தமாக இருக்காது. இவ்வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்
விசாரித்து முடிவெடுக்க, பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மதுரை ஐகோர்ட் கிளை, 2004ல் துவங்கிய பின், முதல் முறையாக, நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.தமிழ்வாணன்,ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது. பணி விதிகளில்.. அவர்கள் உத்தரவு: குற்ற வழக்கிலிருந்து ஒருவரை, சந்தேகத்தின் பலனை அளித்து,விடுதலை செய்யப்பட்டிருந்தால் அல்லது வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன், விடுவிக்கப்பட்டிருந்தால்,அவர்களை, போலீஸ் பணியில் சேர தகுதியில்லாதவர்களாக கருத வேண்டும் என, தமிழ்நாடு காவல் துறை பணி விதிகளில் உள்ளது. இதுபோல், பணியில் சேர தகுதியில்லாதவர்கள் என, மாநில அரசு உத்தரவிட்டிருந்தால், அதுவும் தவறில்லை. இது போன்ற சூழ்நிலையில், பணி நியமனம் செய்யும்அதிகாரி, சம்பந்தப்பட்டவர்களின் மனுக்களை நிராகரிக்க உரிமை உண்டு. அது சரியான நடைமுறையே என, ஏற்கனவே, மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அதையே, நாங்கள் உறுதி செய்கிறோம்.

தற்போது, நீதிபதி எஸ்.தமிழ்வாணன், "வழக்கிலிருந்து விடுதலையானவர்களை, குற்றமற்றவர்களாக கருதவேண்டும். குற்றமற்றவர்களுக்கு, பணி வழங்க மறுப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது' என, மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளார். இதுபோல், நீதிபதி ஏ.செல்வம் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார். இருவரின்கருத்துக்களையும், மரியாதையுடன் ஏற்கிறோம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Sent from my iPad

முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு,தேர்வு துறை, "செக்'

கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின்முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர்(ஓ.ஏ.,) இருப்பார்.

தற்போது, பள்ளி முதல்வரில் இருந்து, ஓ.ஏ., வரை, எவருக்கும் அனுமதி கிடையாது.
வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார்.
தேர்வு துவங்குவதற்கு முன், பள்ளி வளாகத்திற்குள், நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, நுழைய அனுமதி கிடையாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை : "தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்குள்,பள்ளி முதல்வர் முதல், ஓ.ஏ., வரை, ஒருவரும் நுழையக் கூடாது' என, தேர்வுத்துறை,கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. தேர்வில், சிறு அளவிற்கு கூட, முறைகேடு நடக்கக்கூடாது என்பதில், தேர்வுத்துறை, கவனமாக உள்ளது. இதற்காக, பல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை,துறை எடுத்து வருகிறது.

பிளஸ் 2 தேர்வு, 2,238 மையங்களிலும்; 12 ம் வகுப்பு தேர்வு, 3,183 மையங்களிலும் நடக்கின்றன. இவற்றில், பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், பல முறைகேடுகள், தனியார் பள்ளிகளில் தான் நடந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையில்உள்ள, மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடந்தது. இதேபோல், பல பள்ளிகளில் நடக்கிறது. ஆனால், ஒருசில மட்டுமே,அதிகாரிகளின் கவனத்திற்கு வருகிறது.
பெரிய தனியார் பள்ளிகளில், நுழைவாயில், "கேட்'டுக்கும்,"போர்டிகோ'விற்கும், 200 அடி மற்றும் அதற்கும் மேலும், நீளமாக இருக்கும். நுழைவாயில், "கேட்'டில், பள்ளியைச் சேர்ந்த, காவலர் தான், பணியில் இருப்பார்.
பறக்கும்படை குழு வந்தால், "கேட்'டை திறப்பதற்கே, பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்பார்.அனுமதி கிடைத்து, தேர்வு அறைகளுக்கு, பறக்கும் படை குழு செல்வதற்குள், "உஷார்' நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற சம்பவங்கள், கடந்த காலங்களில் நடந்துள்ளன.
தற்போது இயக்குனராகஉள்ள, தேவராஜன், தேர்வுத் துறையில், நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அதனால், தனியார் பள்ளிகளுக்கு, "செக்' வைக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.இது குறித்து, இயக்குனரக வட்டாரம் கூறுகையில், "தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, "சீல்' வைத்து, அங்கிருந்து எடுத்துச் சென்ற பிறகே, பள்ளி அலுவலர்கள், பணியாளர்கள் அனுமதிக்கப்படுவர்' என,தெரிவித்தது. தேர்வுத்துறையின், இந்த அதிரடி நடவடிக்கையால், தனியார் பள்ளிகள், அதிர்ச்சி அடைந்துள்ளன.

Source dinamalar


Sent from my iPad

சென்னை பல்கலை தொலைதூர தேர்வு முடிவுகள் இன்றிரவு வெளியீடு

சென்னை பல்கலை தொலைதூர கல்வி மையம் சார்பில், கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட
தேர்வுகளுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இந்த முடிவுகளை, www.ideunom.ac.in, www.kalvimalar.com,உள்ளிட்ட, இணையதளங்களில் பார்க்கலாம்.

அ11, அ12, இ11, இ12, இ13 ஆகிய, துவக்க பதிவெண்களை கொண்ட மாணவர்கள்,
மறு மதிப்பீட்டிற்கு பதிவு செய்ய, தகுதியானவர்கள். இதற்காக, 750 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். இதற்கான விண்ணப்பம், பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் இருந்து, பெற்றுக் கொள்ளலாம். மறு கூட்டலுக்கு, 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறு கூட்டல்,மறு மதிப்பீடு இவற்றிற்கு மார்ச், 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி? : கடந்தாண்டு சாதனை மாணவியின் "டிப்ஸ்'

என்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என,
தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில்,
மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி:

பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும். மனதை ரிலாக்ஸாகவைத்துக்கொண்டு, தேர்வு அறைக்குள் மாணவர்கள் நுழைந்தாலே, பாதி வெற்றி உறுதி.
ஒரு மார்க் வினாக்களுக்கு வேகமாக எழுதுவதன் மூலம், நெடுவினாவிற்கு தேவைப்படும் கூடுதல் நேரத்தை சரிக்கட்டலாம். எனவே, முடிந்த வரை இப்பகுதியை விரைவில் முடிக்க வேண்டும்.இப்பகுதியில், முழு மதிப்பெண் பெறுவது மிக முக்கியம்.

ஒவ்வொரு பாடத்திலும் கடின பகுதி என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும். அதை, அதிகாலை எழுந்தவுடன் படித்தால், வினாத்தாளில் கடின பகுதி வந்து விடுமோ என்ற கவலை, பயம் இருக்காது.

குறைந்தது ஐந்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட, வினாவங்கியில் இடம் பெற்ற, கேள்விக்கான விடையை முழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பழைய வினாத்தாள்களில் இருந்தே, அதிக ஒரு மார்க் கேள்விகள் இடம்பெறுகின்றன.

வினாத்தாள் 'புளு பிரிண்ட்' அமைப்பை, ஒவ்வொரு மாணவரும்
தெரிந்து வைத்திருந்தால், அவர்கள் தேர்வுக்கு தயாராவதில், திட்டமிட முடியும்.

புளு மை பேனாவால் எழுதும்மாணவர்கள், முக்கிய பகுதியை கருப்பு மை பேனாவால் எழுதினால், நல்லது. புளு, கருப்பு மை பேனாக்கள் தவிர வேறு கலரை தவிர்க்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். ஒருசிலரது கையெழுத்து சுமாராக இருக்கும். அவர்கள் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.

ஒரு பக்கத்தில், 20 வரிகள் எழுதினால் போதும். அப்போதுதான் திருத்துவோருக்கு நல்லெண்ணம் ஏற்படும். முதலில், நன்றாக தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவது நல்லது. ஒருசிலர் நெடு வினாவில் இருந்து எழுத துவங்குவார்கள். ஒருசிலர் ஒரு மார்க் பகுதியில் இருந்து எழுதுவார்கள். இதுவரை நீங்கள் பின்பற்றிய அந்த அந்த
முறைப்படியே, இத்தேர்விலும் தொடருவது நல்லது.

படிக்கும் போது தூக்கம் வந்தால்,முகத்தை கழுவி அதை விரட்டியடிக்கக் கூடாது. நன்றாக தூங்கிவிட்டு, பின் படிக்க துவங்குங்கள்.தேர்வு நேரத்தில், இரவு பல மணிநேரம் கண் விழித்து படித்தால், தேர்வு அறையில் உடல் சோர்வடைந்து விடும்.
தேர்வு நேரத்தில் முழு வயிற்றுக்கு சாப்பிடுவதையும், துரித உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்ப்பதன் மூலம், தேவையில்லாத உபாதை பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
கொடுக்கப்பட்டுள்ள மூன்று மணி நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டும்.பத்து நிமிடங்களுக்கு முன்பே தேர்வு எழுதி முடித்துவிட்டு,ஒரு முறை எழுதியதை திருப்பி பார்ப்பது முக்கியம்
.கடந்தாண்டுகளின் வினா வங்கியில் இருந்து,அவ்வப்போது ஒரு வினாத்தாளை எடுத்து, தேர்வு எழுதிப் பார்க்கலாம். இதை அடிக்கடி செய்தால்,தேர்வு சிரமமாக இருக்காது.


Sent from my iPad

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,),தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீதகுறைப்பு சலுகையை வழங்கிவிட்டு,மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்அளவில், 39 மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக கூடுதலாக 3 மதிப்பெண் குறைத்து 36 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில்இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இடஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து,முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.

டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில், 60க்கு கணக்கிடப்படுகிறது. பிற கல்வி தகுதிகளில் எடுக்கும் மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படுகிறது. இரண்டையும் சேர்த்து, 100க்கு, தேர்வர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில், வேலைக்கான தேர்வுப் பட்டியலை,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தயாரிக்கிறது. இதில், டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கணக்கிட்டு, அரசாணை வௌயிட்டதில், தேர்வர்களுக்கு, 39 மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக கூடுதலாக 3 மதிப்பெண் குறைத்து 36 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

டி.இ.டி., தேர்வுக்கான, 150 மதிப்பெண், 60க்கு கணக்கிடப்படுகிறது.
அதன் விவரம்:
* 90 - 100 சதவீத மதிப்பெண் எடுத்தால், 60 மதிப்பெண் (முழுமையாக வழங்கப்படுகிறது)
* 80 - 90 சதவீதம் வரை - 54 மதிப்பெண்
* 70 - 80 சதவீதம் வரை - 48
* 60 - 70 சதவீதம் வரை - 42
* 55 - 60 சதவீதம் வரை - 36

இவற்றில், முதல் நான்கு நிலை வரை, 10 சதவீதம் இடைவெளி அளவில், ஒவ்வொரு நிலைக்கும், 6 மதிப்பெண்வித்தியாசத்தில், படிப்படியாக மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடைசி நிலையில், 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான, ஐந்து சதவீத இடைவெளிக்குள் மதிப்பெண்எடுப்பவர்களுக்கு மட்டும், 36 மதிப்பெண் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. பத்து சதவீத இடைவெளியில்
வருபவர்களுக்கு, 6 மதிப்பெண் வித்தியாசம் எனில், 5 சதவீத இடைவெளிக்குள்இருப்பவர்களுக்கு,மூன்று மதிப்பெண் வித்தியாசம் வர வேண்டும். அதன்படி, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால்,மூன்று மதிப்பெண் குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், வேலைக்கான ஒட்டுமொத்ததேர்வு பட்டியலில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, பாதிப்பு ஏற்படும். ஒரு பக்கம், சலுகையை அறிவித்துவிட்டு, மறுபக்கம், இப்படி மதிப்பெண் குறைப்பது, எந்த வகையில் நியாயம் என, தேர்வர்கேள்வி எழுப்புகின்றனர்.

தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'இந்த விவகாரத்தில், நாங்கள் எதுவும் கூறமுடியாது. முறையாக பார்த்தால், கடைசி நிலை தேர்வர்களுக்கு, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால்,இதை, நாங்கள் கூற முடியாது. அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்தது. மதிப்பெண்சலுகையின் பின்னணியில் உள்ள பாதிப்பை, முதல்வர் விசாரித்து சரி செய்ய வேண்டும் என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கேட் தேர்வில் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்காதவருக்கு 165 மதிப்பெண்கள்-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) இந்தோர் மையத்தில் 8இடங்களை காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
கேட் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்ததாக தேர்வில்பங்கேற்றவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கேட் தேர்வில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 8 பேர்உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
பொது நுழைவுத்தேர்வு என்பது இந்தியாவில் உள்ள 13 ஐ.ஐ.எம்.மில் ஏதாவது ஒரு மையத்தில்சேர்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை. இதர மேலாண்மை நிறுவனங்களும்
அனுமதி சேர்க்கையில் இது போன்ற தேர்வை பயன்படுத்துகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு கேட் தேர்வு கணினி முறையில்நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் 20 நாள்களில் 40தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. இதில் கேட்கப்பட்டவினாத்தாள்கள் கடினமாக இருந்தன. இதனால், அதற்கான மதிப்பெண்களை சமமாக வழங்குவதற்காக சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.
அதில், எங்களுக்கு பின்பற்றப்பட்ட மதிப்பெண் வழங்கும் முறை தவறானது. இதில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில் முறைகேடுகள்நடந்தது தெரிய வந்தது. தேர்வின்போது வினாக்களுக்கு பதில் அளிக்காத மாணவர் அதிக மதிப்பெண்கள் பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், கேட் தேர்வில் பங்கேற்ற 1.7 லட்சம் பேரில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் பூஜ்ஜியம் அல்லது குறைந்த அளவு மதிபெண்களை பெற்றனர்.
தேர்வு மையங்கள், தேர்வு வினாத்தாள் தாயரித்தல், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடுதல் போன்ற அனைத்து நடவடிக்கைக்கும் குர்காவ்னைச் சேர்ந்த புரோமெட்ரிக் டெஸ்டிங்பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டன. தேர்வு முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. ஏனென்றால், அது முறையற்றதாகவும் முரண்பாடுடையதாகவும் இருந்தது. பல ஆயிரம் தேர்வர்களுக்கு வினாவுக்கு அவர்கள் அளித்த விடைகளுக்கு ஏற்பமதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.
கேரீர் லான்ச்சர் இந்தியா லமிடெட் நிறுவனத்தின் ஆசிரியர் ஒருவர் ஆண்டுதோறும் கேட் தேர்வில் பங்கேற்பார். கடந்த ஆண்டு நடந்த கேட் தேர்வில் அவர் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், 450 மதிப்பெண்களுக்கு 165 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது மிகவும் சாத்தியமற்றது. தேர்வு விடைத்தாள்கள் மதிப்பிடும்நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாததே இதற்கு காரணம். எனவே,2013-ஆம் ஆண்டு கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, 13 ஐ.ஐ.எம்.நிறுவனங்களில் அனுமதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி இந்தூரில் உள்ள ஐ.ஐ.எம்.மில் மனுதாரர்கள்ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இடத்தை காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

புதிய ஐடியா: இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

தேடிப்போய் கிடைத்த புதையலை விட தானாகத் தட்டுப்பட்டு கிடைத்த பொக்கிஷங்கள் எனக்கு அதிகம். உடனடி குறிக்கோள்கள் இல்லாமல் செய்த வாசிப்புகள் பிற்காலத்தில் என் குறிக்கோள்களுக்குப் பெரிதும் பயன் பட்டிருக்கின்றன. அப்படி கிடைத்ததுதான் "What if" உத்தி. இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? இதுதான் படைப்பாற்றல் திறன் பயிற்சியில் பிற்காலத்தில் பெரிதும் உபயோகிப்பேன் என்று தெரியாமல் கற்ற உத்தி.

எழுத்தாளர் சுஜாதாவின் "திரைக்கதை எழுதுவது எப்படி" புத்தகத்தில் போகிற போக்கில் இந்த பெரிய விஷயத்தை அவருக்கே உள்ள லாவகத்தில் தொட்டுச் செல்கிறார். ஒரு நல்ல சினிமா ஒரு What if ல் துவங்குகிறது என்கிறார். இது இல்லாவிட்டால் அந்த சினிமா பிழைப்பது சிரமம் என்று விளக்குகிறார். மணிரத்னம், ஷங்கர் படங்களில் இது தவறாது இருக்கிறது என்கிறார். யோசிக்கையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களின் கதைகள் அனைத்தும் இந்த வாட் இஃப் இருப்பது தெரிகிறது.

கதைக்குப் பொருந்தும் இந்த உத்தி எல்லா படைப்புப் பணிகளுக்கும் பொருந்தும். ஒரு புதிய ஐடியா வேண்டுமா, ஒரு வாட் இஃப் யோசியுங்கள் என்று சொல்லும் அளவிற்கு இது வலிமையானது.

தர்க்க சிந்தனையில்லாமல் "இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?" என்று கற்பனை செய்வது குழந்தை மனதின் செயல்பாடு. அதுதான் வாட் இஃப் உத்தி.

முதலில் சில சினிமாக் கதைகள் உதாரணங்கள் பார்க்கலாம்.

ஒரு சாமானியன் ஒரு நாள் மட்டும் முதல் அமைச்சராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?- முதல்வன்.

ஒரு மனித வெடி குண்டுப் பெண் ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டவனை காதலிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?- உயிரே.

ஒரு டைனோசார் பல நூற்றாண்டுகள் கழித்து மீண்டும் திரும்பி உயிர்பெற்று வந்தால் எப்படி இருக்கும்?- தி ஜுராசிக் பார்க்.

இவை அனைத்தும் தர்க்கரீதியாக சாத்தியம் குறைவான நிகழ்வுகள். விவாதம் செய்தால் விஷயம் நிற்காது. ஆனால் ஒரு கற்பனைக்கு இப்படி நடந்தால் என நினைக்கும் போது ஒரு கதை பிறக்கிறது.

இதையே வாழ்க்கையின் புதிய படைப்புகளிலும் பார்க்கலாம். மிருகங்கள் சண்டையிடுதல் போல மனிதர்கள் சண்டையிட்டால் எப்படி இருக்கும்? அப்படி பிறந்ததுதான் தற்காப்பு கலைகளும்.

ஒவ்வொரு கண்டுபிடிப்புமே ஒரு வாட் இஃப் முயற்சி தான்.

மனிதன் பறக்க எப்படி இருக்கும்? விமானம்.

உடலுக்குத் தேவையான மருந்தை ரத்தக்குழாயில் நேரடியாக செலுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? ஊசி.

கூரை மேல் கூரை வைத்து வீடு கட்டினால் எப்படி இருக்கும்? கான்கிரீட்.

நாம் தண்ணீர் தெளித்து அயர்ன் செய்வதற்கு பதில் அயர்ன் பாக்ஸிலிருந்தே தண்ணீர் வந்தால் எப்படி இருக்கும்? தண்ணீர் தெளிப்பானுடன் அயர்ன் பாக்ஸ் மாடல்.

கிரிக்கெட்டை பொழுபோக்கு சார்ந்த வியாபாரம் ஆக்கினால் எப்படி இருக்கும்? 20-20.

வங்கிக்கு போய் பணம் எடுப்பதற்கு பதில் வங்கியே வீட்டருகே வந்து பணம் தந்தால் எப்படி இருக்கும்? ஏ.டி.எம்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒவ்வொரு நிறுவனமும் வாட் இஃப் உத்தியைத் தன் பணியாளர்களுக்குக் கற்றுத்தந்து, அதை நடைமுறையில் பயன்படுத்தினால், நம்ப முடியாத அளவு முன்னேற்றம் கிட்டும்.

ஒரு வினோதமான விஷயம் கம்பெனிகளின் பயிற்சி தலைப்புகளில் பார்க்கலாம். படைப்புத்திறன் பயிற்சிகள் பெரும்பாலும் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன. அடிமட்ட தொழிலாளிகளுக்கு இது வழங்கப்படுவது மிகக் குறைவு. ஆனால் என் பார்வையில் கையால் வேலை செய்கிறவர்கள் அனைவருக்கும் கற்பனைத்திறன் அதிகம். மிக விரைவில் கற்று உடனே பணியில் காட்டும் உத்வேகம் தொழிலாளிகளுக்குத் தான் அதிகம் உண்டு. ஆனால் அவர்களுக்கு அறிவுரைகள் நிரம்பிய வாழ்க்கைத் தரம், குழு மனப்பான்மை என்றுதான் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிந்தனைத்திறன்கள் மற்றும் கற்பனைத் திறன்கள் சார்ந்த பயிற்சிகள் அவர்களை தங்கள் வேலையில் பெரும் உற்பத்தித்திறன் காட்ட வழி வகுக்கும். ஆக்க சக்தி தரும் சாதனை உணர்வும் ஆரோக்கிய மன நிலையும் தொழிலாளர்களின் பணி வாழ்விற்கும் நிறுவன அமைதிக்கும் வழி வகுக்கும்.

இருந்தும் இது போன்ற பயிற்சிகளை உயர்நிலை மேலாளர்களுக்குத்தான் தொடந்து மேற்கொள்ள நேர்கிறது.

ஆனால் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் எல்லாம் தொழிலாளர்களுக்கு புரியாது என்று வைத்திருக்கும் பல விஷயங்களை அவர்களிடம் கடத்தியிருக்கிறேன். பிரமிக்கத் தகுந்த புது சிந்தனைகளை அங்கு எதிகொண்டிருக்கிறேன்.

தொழிலாளர்களுக்கு இணையான கிரகிப்பு சக்தியும் ஆர்வமும் கொண்ட இன்னொரு பிரிவினர் மாணவர்கள். ஆனால் அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கவே விடக்கூடாது என்று இங்கு ஒரு அமைப்பு ரீதியான சதி நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் கற்பனை சக்தியை முதல் 20 ஆண்டுகள் மழுங்கடித்து விட்டு பின்னர் அவர்களை "லாயக்கில்லை" என்று குறை கூறுகிறோம்.

இந்த வாட் இஃப் போன்ற படைப்புத்திறன் பயிற்சிகளை வளரும் பருவத்தில் விதைத்து விட வேண்டும். அவர்கள் அதை வாழ்க்கை முழுவதும் அறுவடை செய்து கொள்வார்கள்.

இதுபோல பல சுலப வழி சிந்தனை உத்திகள் உள்ளன. இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே என்று எந்த பிரச்சினைக்கும் கையைப் பிசைய வேண்டாம். 3எம் போன்ற நிறுவனங்கள் பணி நேரத்தின் 10% புது எண்ணங்களை / புது சோதனைகளை உருவாக்க செலவிட தங்கள் பணியாளர்களை ஊக்குவிக்கிறது. இதனால்தான் இன்னொவேஷன் என்றாலே 3எம் என்று சொல்லும் அளவிற்கு உலக அளவில் வளர்ந்து நிற்கிறது.

பல நிறுவனங்களில் பிரச்சினைகளுக்கு தொழிலாளிகளிடம் தீர்வு கேட்பதில்லை. அதையும் தாண்டி புது ஐடியாக்கள் வந்தால் அதை சுட்டுத் தள்ளுவார்கள்.

புது ஐடியாவை சுட்டு வீழ்த்துவது எப்படி (அட, புத்தகத் தலைப்பு ரெடி!). இப்படித்தான்:

இதையெல்லாம் நாங்க எப்பவோ செஞ்சு பாத்துட்டோம். வேலைக்கு ஆகாது.

நல்ல ஐடியா. பிராக்டிகலா முடியுமான்னு தெரியலை.

இருப்பதே நல்லாதானே இருக்கு. எதுக்கு புதுசா?

இதுக்கு பட்ஜட் இருக்கா?

இதுக்கு ஒரு கமிட்டி போட்டு ஆராயலாம்.

நல்லா இருக்கு. நம்ம ஜனங்க ஒத்துக்க மாட்டாங்க!

ஓகே... ஆனால்..

"ஆஹா...நம்ம கம்பெனி கதை மாதிரி இருக்கேன்னு.. நம்ம பாஸ் பேசற மாதிரியே இருக்கே"ன்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இது எல்லா பணியிடங்களுக்கும் பொருந்தும். எல்லா இடங்களிலும் பல நக்கீரர்கள் பாட்டில் பிழை கண்டு பிடிப்பதையே முழு நேர வேலையாக செய்து வருகிறார்கள்.

மாற்றத்தின் முதல் முகமாக உங்கள் மகளையோ, மாணவனையோ, பணியாளரையோ அழைத்து, "இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?" என்று வாட் இஃப் விளையாட்டை ஆரம்பியுங்கள்.

மாற்றம் வரும்!

gemba.karthikeyan@gmail.comSent from my iPad

வேலை வேண்டுமா?

போன ஆண்டு ஜூன் மாதம் லாஸ்லோ பாக், டைம்ஸ் இதழுக்காக ஒரு பேட்டியை அளித்திருந்தார். பாக் சாதாரண ஆளில்லை. உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் மனிதவளத் துறையில் மூத்த அதிகாரி. அந்தப் பேட்டியில் அவர் முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறினார், "வேலைக்கு ஆள் எடுக்கும்போது ஜி.பி.ஏ-வும் (தரத்தின் அடிப்படையிலான மதிப்பெண் சராசரி) தேர்வு மதிப்பெண்களும் எந்த விதத்திலும் பயனளிப்பதில்லை. அவை நமக்கு எதையும் சொல்வதில்லை" என்கிறார் அவர். மேலும், "கல்லூரிப் படிப்பு பெற்றிராதவர்களின் எண்ணிக்கை கூகுளில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது" என்கிறார். இந்த எண்ணிக்கை சில குழுக்களில் 14% வரை இருக்கிறது.

வழி என்ன?

சமீப காலமாகப் பெரும்பாலானவர்களின் கேள்வி இதுதான்: "என் பிள்ளைக்கு வேலை கிடைப்பதற்கு வழி என்ன?" பாக் என்ன சொல்கிறார் என்பதை இவர்கள் எல்லா ரும் கேட்பது மிகவும் பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.

பாக் மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். "நல்ல மதிப்பெண்களால் நிச்சயம் பிரச்சினை இல்லைதான்" என்கிறார் பாக். கூகுளில் நிறைய வேலைகளுக்குக் கணிதம், கணக்குப் போடுதல், கணினி மொழியை எழுதுதல் ஆகிய திறன்கள் அடிப்படை. எனவே, மேற்கண்ட துறைகளில் நீங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தால், அந்தத் திறனையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், கூகுள் தேடுவது இதற்கெல்லாம் மேலே. "வேலைக்கு ஆள் எடுப்பதில் நாங்கள் ஐந்து விஷயங்களைப் பின்பற்றுகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த வேலை என்றால், கட்டளை நிரல்களை எழுதும் திறனை மதிப்பிடுவோம். நாங்கள் எதிர்பார்க்கும் முதல் விஷயம் பொதுவான புரிந்துகொள்ளும் திறன்தான். தவிர, அறிவுத் திறன் (ஐ.க்யூ.) அல்ல. ஒரு விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போதும் செயல்படக்கூடிய திறன்தான் முக்கியம். சிதறிக்கிடக்கும் தகவல்களையெல்லாம் ஒன்றுதிரட்டும் திறன்தான் முக்கியம். ஒருவருடைய இயல்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான முறையான தேர்வுகளைக்கொண்டு மேற்கண்ட குணங்களையெல்லாம் நாங்கள் கண்டறிகிறோம்" என்கிறார் பாக்.

தலைமைப் பண்பு

அடுத்த விஷயம், தலைமைப் பண்புதான் என்கிறார் அவர். "வழக்கமான தலைமைப் பண்பைவிட, வளர்ந்து வரும் தலைமைப் பண்புக்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நீங்கள் செஸ் சங்கத்துக்குத் தலைவராக இருந்திருக்கிறீர்களா? விற்பனைப் பிரிவின் துணை அதிகாரியாக இருந்திருக்கிறீர்களா? எப்படி அவ்வளவு சீக்கிரம் அந்தப் பதவியை அடைந்தீர்கள்? இதெல்லாம் வழக்கமான தலைமைப் பண்பைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விகள். நாங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு பிரச்சினை என்றால், ஒரு குழுவின் அங்கமாக இருக்கும் நீங்கள், சரியான தருணத்தில் நீங்களாகவே முன்வந்து வழிநடத்தத் தயாராக இருக்கிறீர்களா? அதே போல், சரியான தருணத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, மற்றவர் அந்தப் பொறுப்பை ஏற்க அனுமதிக்கிறீர்களா? இதெல்லாம்தான் முக்கியம். இந்தப் பணிச்சூழலில் திறன்வாய்ந்த தலைவராக இருப்பதற்கு அதிகாரத்தைத் துறக்கத் துணியக் கூடிய குணம் மிக முக்கியம்" என்கிறார் பாக்.

அப்புறம் என்னென்ன? தன்னடக்கமும் தன்னுடைய தாகக் கருதும் இயல்பும். "ஒரு விஷயத்தில் தனக்குப் பொறுப்பு இருக்கிறது என்று நினைத்து முன்வரும் குணம், அது மிகவும் முக்கியம்" என்கிறார் பாக். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முயலும் பண்பும் அப்படித் தீர்வுகாண முடியாத பட்சத்தில், தனது நிலையிலிருந்து இறங்கிவந்து பிறருடைய யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பண்புதான் அது. "தீர்வை எட்டுவதற்கு நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து என்ன செய்ய முடியும் என்பதுதான் உங்களுடைய இறுதி இலக்கு. என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன், பிறர் பங்களிப்பு செய்வதற்காக நான் இப்போது ஒதுங்கிக்கொள்கிறேன் என்னும் இயல்பு" என்று விளக்குகிறார் பாக்.

சின்ன ஈகோவும் பெரிய ஈகோவும்

மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்கள், அதாவது நாங்கள் வேலைக்கு எடுக்க விரும்புபவர்கள், தங்கள் நிலைப்பாடுகளில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். அனல்பறக்க விவாதிப்பார்கள். ஆனால், மறுக்க முடியாத ஒரு புதிய கோணத்தை நாங்கள் அவர்களுக்குக் காட்டும்போது, "ஆமாம், நீங்கள் சொல்வதுதான் சரி" என்று ஒப்புக்கொள்வார்கள். ஒரே சமயத்தில் ஒரே நபருக்குள் பெரிய ஈகோவும் சின்ன ஈகோவும் இருக்க வேண்டும்" என்கிறார் பாக்.

"நிபுணத்துவம் என்ற விஷயத்தை நாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதில்லை" என்கிறார் பாக். "நல்ல சிந்தனைத் திறன் கொண்டவர் இயல்பாகவே ஆர்வம் கொண்டவராகவும் கற்றுக்கொள்ள விரும்புபவராகவும் தலைமைத் திறனின் அறிகுறிகளைக் கொண்டவராகவும் இருப்பார். அவரை நிபுணருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 'நான் இதை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கிறேன்' என்று அந்த நிபுணர் சொல்வார். நிபுணர் அல்லாதவரும் பலமுறை இதுபோல்தான் சொல்வார் என்றாலும், அவ்வப்போது மிகமிகப் புதியதும் பிரமாதமானதுமான ஒரு விஷயத்தை அவர்கள் முன்வைப்பார்கள். அதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது" என்கிறார் பாக்.

வேலைக்கு ஆள் எடுப்பதற்கு பாக் பின்பற்றும் அணுகுமுறையை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்: திறமைகள் வெவ்வேறு வடிவங்களில் வரலாம், வழக்கத்துக்கு மாறான வகைகளிலும் அவை காணக் கிடைக் கலாம். எனவே, ஆள் எடுக்கும் அதிகாரிகள் பிரபலமான கல்லூரிகளின் பெயர்களைப் பார்த்து அசந்துவிடாமல், ஒவ்வொருவரையும் விழிப்புடனே அணுக வேண்டும். ஏனென்றால், "முறையான கல்வியை அதிகம் பெறாமல், தாங்களாகவே தடுக்கி விழுந்து கற்றுக்கொண்டவர்கள் பிரமாதமானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை எப்பாடுபட்டாவது நாம் கண்டுபிடித்தாக வேண்டும். புற்றீசல்போல் பெருகியிருக்கும் கல்லூரிகள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மலைமலையாகக் கடன்தான் அதிகரிக்கிறது. உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான, உருப்படியான விஷயங்கள் எதையும் நீங்கள் கற்றுக்கொள்வதில்லை."

கூகுளுக்குப் பெருமளவில் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள் என்பதால், அவர்களால் மரபான தர அளவீட்டு முறைகளைத் தாண்டி, அந்தத் திறமைகளைக் கண்டுபிடிக்க முடியும். பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்குப் போய் நன்றாகப் படிப்பதுதான் தங்கள் வருங்காலத்துக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளச் சிறந்த வழி என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு பாக் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்கிறார். "எச்சரிக்கை. உங்கள் படிப்பு என்பது எந்த வேலையையும் நீங்கள் செய்யக்கூடியவர் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் இந்த உலகத்துக்கு முக்கியம். அதற்குத்தான் உங்களுக்குச் சம்பளமும் கொடுக்கப்போகிறார்கள். புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தல் என்பது ஒரு குழு முயற்சியாக ஆகிவரும் இந்தக் காலத்தில், வேறு விதமான சில திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது: தலைமைப் பண்பு, தன்னடக்கம், ஒத்துழைப்பு, தகவமைத்துக்கொள்ளும் திறன், கற்றல், மறுபடியும் கற்றல் ஆகிய திறன்கள்தான் அவை. நீங்கள் எங்கு வேலைக்குச் சென்றாலும் இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்


Sent from my iPad

DISTRICT WISE CV CENTRE  ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு   PAPER 1 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் விவரம்


PAPER 1 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.சென்னை, சேலம் மதுரை, திருச்சி,கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் 12.02.2014 முதல் நடைபெறுகின்றது CLICKE HERE TO DOWNLOADE CV CENTRE FOR TET PAPER I

வியாழன், 27 பிப்ரவரி, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு PAPER 1 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் விவரம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு PAPER 1 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, சேலம் மதுரை, திருச்சி,கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் 12.02.2014 முதல் நடைபெறுகின்றது

NEWS UPDATE : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET EXAMS PAPER I AND II வழக்குகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
TRB அனைத்து வழக்குகளும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நீதிபதிகள் சுழற்சிமுறையில் மாறும்காரணத்தால் வேறு புதிய நீதிபதி வழக்கினை விசாரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

விரிவான செய்தி :தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டனர்.

கடந்த 25ம் தேதி பள்ளிக்கு வருகை புரிந்தும், பாடம் நடத்தாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ம் கட்டமாக நேற்று தற்செயல் விடுப்பு பெற்று, பள்ளிக்கு வருவதை தவிர்த்தனர். போராட்டத்தின் போது மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக, தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனர் நேற்று, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நேற்று தற்செயல் விடுப்பு பெற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் மூலம், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை அடங்கிய பட்டியல், சென்னைக்கு நேற்று காலை 11:00 மணிக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது. இதுதொடர்பாக இயக்குனரக வட்டாரம் மேலும் கூறியதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், "டெபுடேஷன்" முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 2 நாளுக்கும், சம்பளம், நிறுத்தம் செய்யப்படும். மேலும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

சங்கத்தின் பொதுச்செயலர், ரங்கராஜன் கூறுகையில், "55 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். சங்கத்தின் செயற்குழுவை கூட்டி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்" என்றார்.

தேர்வுப்பணியா? தேர்தல் பணியா? குழப்பத்தில் ஆசிரியர்கள்

2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை

2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி பலரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பலர் நீதிமன்றத்தினை நாடிவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

இதன் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் 7–ந்தேதி தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்டு, 85 மதிப்பெண் பெற்றேன்.

ஆனால், தேர்வில் 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் மட்டுமே வெற்றி என்று தமிழக அரசு தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்திருந்ததால், நான் தோல்வி அடைந்தேன்.
இதன்பின்னர், 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதிலும், அதே தகுதி மதிப்பெண் முறை கடை பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக கல்வித்துறை செயலாளர் கடந்த பிப்ரவரி 6–ந்தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் என்ற தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை வழங்கி, அதாவது 55 சதவீதம் (82 மதிப்பெண்) என்று தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சலுகை 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். ஆனால், 2012–ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.

அரசின் இந்த உத்தரவு, ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதியவர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்துக் கொண்டவர்களுக்கு மட்டும் சலுகை என்ற உத்தரவு நியாயமற்றது ஆகும். இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

எனவே 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும், தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்


அரசு பரிவுடன் தங்கள் கோரிக்கையை பரிசீலித்து தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்க உத்தரவிடவேண்டும் என 2012ல் தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்க்கின்றனர்


Sent from my iPad

பிளஸ் 2 தத்கல் தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (பிப்.27) முதல் ஹால் டிக்கெட்

தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பிளஸ் 2 தனித்தேர்வர்கள்வியாழக்கிழமை (பிப்.27) முதல் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள்இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு செய்ய வேண்டியதேதிகள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தின்முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே ஆன்-லைனில் விண்ணப்பித்து ஹால் டிக்கெட்டுகளைப்பதிவிறக்கம் செய்துகொள்ளாத தனித்தேர்வர்களும்,இணையதளத்திலிருந்து உடனடியாக ஹால டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையானஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம்இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநாள் அடையாள
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆறாவது ஊதியக் குழுவில் மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. இதனால்தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு, இப்போது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டப் போராட்டம் தொடர்பாக எங்களது செயற்குழுவில் கூடி முடிவு செய்வோம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் கூறினார்.

2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் 5 சதவீத சலுகை கோரி வழக்கு :அரசுக்குசென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.மகேஸ்வரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

பி.எஸ்.சி., (வேதியியல்) மற்றும் பி.எட்., படித்துள்ளேன். கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி நடந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். அதில், 150 மதிப்பெண்களுக்கு 85 மதிப்பெண் பெற்றேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதில் 2013 ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், எதிர் காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் இந்தத் தளர்வு வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக 82 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நான் 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். 2013-ஆம் ஆண்டிலும், எதிர்காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்குவது போல், எனக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு புதன்கிழமை (பிப்.26) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இது போன்றே 2012 ல் தாள் 1 ,தாள் 2 ஆகியவற்றில் தேர்வு எழுதிய 10 க்கும் மேற்பட்டோர்  தனித்தனியாக  5 சதவீத சலுகை கோரி வழக்கு தொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 26 பிப்ரவரி, 2014

TET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 .02.14 ல் வழக்குகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
TRB அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 27.02.14 பிற்பகல் 2.15 விசாரணைக்கு வருகின்றன.
particulars of writs
GROUPING MATTERS

1..WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING

2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING

3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I AND PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES
COVERED JUDGMENT

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்
பணி துவங்கவுள்ளது.
தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் 42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Paper - CV finished + 55% relaxation = total
தாள் 1 ல் - 12596. + 17996. =30592
தாள் 2 ல் - 16932. + 24651. =41583

TOTAL. - 29528. + 42647. =72175

TET 2013 : ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு district wise passed candidates PAPER I. ( list 2)

PAPER I. ( list 2)

16. Karur. 330

17 Perambalur 193

18. Ramanatha 404
Puram

19. Salem 1098

20. Sivaganga 335

21. Thanjavur. 676

22. Theni 540

23. Thoothukudi 517

24. Thiruvarur 390

25. Tirunelveli. 818

26. Tiruchirappalli 777

27. Thiruvallur 617

28. Tiruppur. 395

29. Tiruvannamalai. 680

30. Vellore . 896

31. Villupuram. 859

32. Virudhunagar. 774


THANKS TO MR ANANTHA KRISHNAN, THANJAVUR .

TET 2013 : district wise passed candidates PAPER 1. (List I )

1. Chennai. 561

2. Ariyalur 219

3. Coimbatore 663

4. Cuddalore. 591

5. Dharmapuri 624

6. Dindigul 693

7. Erode. 905

8. Kanchipuram 531

9. Kanniyakumari 187

10. .Pudukkottai 436

11. Krishnagiri 574

12. Madurai 799

13. Nagapattinam 508

14. Namakkal 313

15. Nilgiris 93

Other district details follows

THANKS TO MR ANANTHA KRISHNAN, THANJAVUR .


Sent from my iPad

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு :தாள் 2 ல் 25651பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது.
தற்போது தாள் 2 ல் 25651 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TET 2013 : district wise passed candidates PAPER 2

TET 2013 : district wise passed candidates PAPER 2

16. Karur. 509

17 Perambalur 339

18. Ramanatha 459
Puram

19. Salem 1570

20. Sivaganga 406

21. Thanjavur. 892

22. Theni 642

23. Thoothukudi 638

24. Thiruvarur 282

25. Tirunelveli. 1194

26. Tiruchirappalli 1086

27. Thiruvallur 616

28. Tiruppur. 401

29. Tiruvannamalai 1052

30. Vellore . 994

31. Villupuram. 1261

32. Virudhunagar. 984THANKS TO MR. SENTHIL KUMAR. KILAKKARAI,

TET 2013 : district wise passed candidates PAPER 2

TET 2013 : district wise passed candidates PAPER 2
1. Chennai. 561

2. Ariyalur 361

3. Coimbatore 850

4. Cuddalore. 888

5. Dharmapuri 1284

6. Dindigul 983

7. Erode. 1157

8. Kanchipuram 540

9. Kanniyakumari 668

10. .Pudukkottai 547

11. Krishnagiri 756

12. Madurai 1257

13. Nagapattinam 473

14. Namakkal 893

15. Nilgiris 108


Next list follows......

THANKS TO MR SENTHIL KUMAR KILAKKARAI

TNTET 2013:Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.


Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006

 

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013

Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.

As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2013 on 17.08.2013 and 18.08.2013 and provisional result and final answer key were published on 11.01.2014 in the TRB website.

Now the Board has released the revised additional provisional C.V list for TNTET Paper I and II as per G.O.Ms.No.25, School Education (TRB) Department, dated 06.02.2014 by giving 5% relaxation in the qualifying marks. Candidates who have secured 55% marks and above (82 marks to 89 marks) in Paper I and Paper II are also being called for Certificate Verification. 

TNTET Paper-I Candidates are advised to download the certificate verification letters etc., and attend the certificate verification as per the schedule given therein. Call letters will not be sent through post.Certificate Verification of other papers will follow subsequently. It is also decided to give one more chance to the candidates who were absent for the Certificate Verification conducted during 20.01.2014 to 26.01.2014 and also to those candidates who have not submitted the required certificates. They are permitted to attend on the last day of the Certificate Verification with all records. 

Calling for Certificate Verification is not a guarantee for selection. The provisional list and the outcome of this Certificate Verification exercise is subject to final orders in various writ petitions challenging Answer Keys etc., filed before the Hon'ble High Court of Madras. 

Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

          

 

Dated: 26-02-2014

 

Member Secretary

Next

Home


Sent from my iPad

TRB NEWS UPDATE: Provisional List of Candidates called for Certificate Verification due to 5%

Relaxation in the qualifying marks. As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test2013 on 17.08.2013 and 18.08.2013 and provisional result and final answer key were published on 11.01.2014 in the TRBwebsite.Now the Board has released the revised additional provisional C.V list for TNTET Paper I and II as perG.O.Ms.No.25,School Education (TRB) Department, dated 06.02.2014 by giving 5% relaxation in the qualifying marks.Candidates who have secured 55% marks and above (82 marks to 89 marks) in Paper I and Paper II are also being called for
Certificate Verification. TNTET Paper-I Candidates are advised to download the certificate verification letters etc., and attend the certificateverification as per the schedule given therein.Call letters will not be sent through post.Certificate Verification of other follow subsequently. It is also decided to give one more chance to the candidates who were absent for theCertificate Verification conducted during 20.01.2014 to 26.01.2014 and also to those candidates who have not submitted therequired certificates. They are permitted to attend on the last day of the Certificate Verification with all records.Calling forCertificate Verification is not a guarantee for selection. The provisional list and the outcome of this Certificate Verification exercise is subject to final orders in various writ petitions challenging Answer Keys etc., filed before the Hon'ble High Court of Madras.Utmost care has been taken in preparing the listand in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

GENERAL KNOWLEDGE 6 :BOOKS AND AUTHORS. 5

GENERAL KNOWLEDGE 5:BOOKS AND AUTHORS 4

GENERAL KNOWLEDGE 4 :BOOKS AND AUTHORS 3

GENERAL KNOWLEDGE 3:BOOKS AND AUTHORS 2

General knowledge 2 :BOOKS AND AUTHERS

GENERAL KNOWLEDGE 1 :பூமியின் தோற்றமும் அமைப்பும்!

பேரண்டவெளியில் உள்ள 100 பில்லியன் நட்சத்திரத் தொகுதிகளுள் (Galaxies) ஒன்றான சுழல் வடிவ பால்வெளி நட்சத்திரத் தொகுதியில் நமது சூரியக் குடும்பம் உள்ளது. சூரியக் குடும்பம் என்பது, சூரியன், எட்டுக் கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள், பறக்கும் பாறைகள் மற்றும் விண்வெளித் துகள்களை உள்ளடக்கியது. இந்தச் சூரியக் குடும்பத்தில் சூரியன் எனும் 5 பில்லியன் ஆண்டுகள் வயதான நடுவயது நட்சத்திரமே மிகப் பெரிய உறுப்பினர். ஹைட்ரஜன் வாயுவை உட்கரு இணைவு மூலமாக ஹீலியம் வாயுவாக மாற்றி ஆற்றலை வெளியிடும் சூரியனே சூரியக் குடும்பத்தின் ஆற்றல் மூலமாகத் திகழ்கிறது.

கோள்கள் தத்தம் துணைக் கோள்களுடன் தங்கள் அச்சில் தனித்தனியாகச் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. அவற்றைக் கீழ்க்காணும் இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. சிறிய, அடர்த்தி மிகுந்த, பெருமளவு பாறைகளையும், சிறிதளவு வாயுக்களையும் கொண்ட புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய உள்வட்டக் கோள்கள் (அ) பாறைக் கோள்கள்.

2. அளவில் பெரிய, அடர்த்தி குறைந்த, சிறிதளவு பாறைகளையும், பெருமளவு வாயுக்களையும் கொண்ட வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய வெளிவட்டக் கோள்கள் (அ) வாயுக் கோள்கள்.

பூமியின் தோற்றம்

பூமி மற்றும் பிற கோள்களின் தோற்றம் பற்றி பல அறிவியல் வல்லுநர்கள், பல புனை கொள்கைகளையும் (Hypotheses) கோட்பாடுகளையும் (Theories) வெளியிட்டு உள்ளனர்.

1950-களில் வெளியிடப்பட்ட பெரு வெடிப்புக் கோட்பாடே பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்தக் கோட்பாட்டின்படி, 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு ஒற்றை வெப்பப் பந்திலிருந்துதான் பேரண்டம் உருவானது. அந்த வெப்பப் பந்து ஒரு காஸ்மிக் வெடிப்புக்குள்ளானது. இவ்வெடிப் பிலிருந்துதான் நமது பூமி உட்பட பேரண்டத்தின் அனைத்து பருப் பொருள்களும் ஒரே நேரத்தில், ஒரு கணப்பொழுதில் தோன்றின. மேலும், அதிலிருந்த பல நட்சத்திரத் தொகுதிகள் ஒன்றிடமிருந்து மற்றொன்று விலகி, விலகி விரிவடைந்தன. இவ்வாறு விரிவடைந்த அண்டமும் அதில் முன்னம் இருந்த வெப்பப் பந்தும் விரிவடைந்ததால் குளிரடைந்தன என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது.அறிவியல் அறிஞர்கள் இப்பெருவெடிப்புக் கொள்கையை பிரான்ஸ், சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனிவா நகரை ஒட்டி அமைந்துள்ள உலகின் மிகப்பெரும் பார்ட்டிகிள் பிஸிக்ஸ் சோதனைக் கூடமான CERN பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்து வருகிறார்கள்.

இங்குள்ள 27 கிலோமீட்டர் நீளமுள்ள விசேஷ குகை ஒன்றில் புரோட்டானைப் புரோட்டானுடன் மோதவிடும் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்தக் குகையில் பெருவெடிப்பு நடந்தபோது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கினர். லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் (Large Hedron Collider) என்ற சாதனத்தின் மூலம் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.

இந்தச் சோதனையிலிருந்து 'ஹிக்ஸ் போஸான்' எனும் துகள் கண்டறியப்பட்டுள்ளது. பிரபஞ்சம் பற்றி நாம் அறியாத பல விஷயங்களை அறிய நமக்குத் தேவையான மிஸ்ஸிங் லிங்க் அல்லது தொடர்புப் பகுதிதான் 'கடவுள் துகள்' எனச் செல்லப் பெயர் சூட்டப்பட்ட இந்த 'ஹிக்ஸ்போஸான்'. லியான் லெடன்மேன் என்ற விஞ்ஞானிதான் இந்தப் பெயரை முதன்முதலில் கூறினார்.

புவியின் அமைவிடம்

கோள வடிவம் கொண்ட பூமி. சூரியனிடம் இருந்து அகலாது அணுகாது தீக்காய்வார் போல, சரியான தொலைவில் அமைந்துள்ள காரணத்தால், உயிரினங்கள் தோன்றி வளர உகந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது.

புவியின் வயது

'தொடக்கத்தின் எந்த மிச்சமும் இல்லை; முடிவின் எந்த தோற்றமுமில்லை' எனப் புவியின் தோற்றம் பற்றி அறிய எந்தத் துப்பும் இல்லாதது குறித்து ஜேம்ஸ் ஹட்டன் எனும் அறிஞர் வருந்தினார். இருப்பினும் புவியின் வயது சற்றேறக்குறைய 4.6 பில்லியன் வருடங்களாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

புவியின் உள்ளமைப்பு

புவியின் உள்ளமைப்பு பற்றி அறிய சீஸ்மாலஜி எனப்படும் நிலநடுக்கம் பற்றிய அறிவியல் படிப்பு உதவுகிறது. பாறைகளின் அடர்த்தி, பாறைகள் மற்றும் மேற்பகுதியில் உள்ள எடையினால் (Super incumbent load) ஏற்படும் அழுத்தம், சுரங்கங்களுக்குள் செல்லச் செல்ல அதிகரிக்கும் வெப்பநிலை, எரிமலை வெடிப்புப் பொருட்கள் மற்றும் புவி அதிர்வு அலைகள் போன்றவற்றின் மூலம், புவியின் உள்ளடுக்குகளின் தன்மையை அறிவியல் வல்லுநர்கள் அறிந்தனர். புவியின் உட்பகுதியானது வேதிப்பொருட்களின் கட்டமைப்பு மற்றும் பண்புகளின் அடிப்படையில் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவை:

i. புவிமேலோடு (Crust)

ii. கவசம் (Mantle)

iii. கருவம் (Core)

சூயஸ் என்ற அறிஞர் புவி உள்ளடுக்குகளின் வேதிக்கூட்டுப் பொருள் அமைவினைப் பொருத்து, அவற்றை சியால் (SIAL), சிமா (SIMA) நைஃப் (NIFE)என வகைப்படுத்தி உள்ளார்.புவிமேலோடு

நிலக்கோளத்தின் மேற்பகுதி மேலோடு (Crust) எனப்படுகின்றது. இந்த மேலோடு குறைந்த அடர்த்தி உடைய படிவுப் பாறைகளால் ஆனது. மிக மெல்லிய அடுக்கான இது, சிலிகேட், மைக்கா, ஃபெல்ஸ்பார் போன்ற வேதிப்பொருட்களைக் கொண்ட பாறைகளால் ஆனது. புவி மேலோடு பெரிதும் எரிமலைச் செயல்களால் உருவானதாகும். இது சிலிக்கா (Si) மற்றும் அலுமினியம் (Al) ஆகியவற்றை மிகுதியாகக் கொண்ட சியால் (SIAL) எனும் மேல் அடுக்கினையும், சிலிக்கா (Si) மற்றும் மக்னீசியம் (Ma) ஆகியவற்றை மிகுதியாகக் கொண்ட சிமா (SIMA) எனும் கீழ் அடுக்கினையும் உள்ளடக்கியது. இவற்றை முறையே, கண்ட மேலோடு, கடலடி மேலோடு எனவும் அழைக்கலாம்.

கண்டங்களின் மேலோடு சியால் என அழைக்கப்படுகிறது. இவ்வடுக்கு கிரானைட் அடுக்குகளால் உருவானது ஆகும்.

கடலடி மேலோடு சிமா என அழைக்கப்படுகிறது. பசால்ட் அடுக்குகளால் உருவானது. இவ்வடுக்கே எரிமலை வெடிக்கும் போது வெளிப்படும் மேக்மா மற்றும் லாவா குழம்புகளின் ஆதாரமாக விளங்குகிறது என சூயஸ் கூறுகிறார். இந்தக் கடலடி மேலோடு, கண்ட அடுக்கைவிட, தடிமன் குறைந்ததாகும். இதன் ஆழம் 0-10 கி.மீ ஆகும். பெருங்கடல் ஓட்டில் உள்ள பசால்ட் பாறைகள், கண்ட ஓட்டில் உள்ள கிரானைட் பாறைகளை விட, அதிக அடர்த்தியாகவும் கனமாகவும் உள்ளன. ஆகையால், லேசாக உள்ள கண்ட மேலோடு அதிக அடர்த்தி கொண்ட பெருங்கடல் மேலோட்டின் மீது மிதந்த வண்ணம் உள்ளது.

கவசம்

கவசம், புவிமேலோட்டுக்கும் கருவத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தக் கவசம் ஏறக்குறைய 2,900 கி.மீ. தடிமன் உடையது. பூமியின் எடையில் 83 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதன் சராசரி அடர்த்தி 4.6 கிராம் செ.மீ ஆகும். இது பல தட்டுக்களைக் கொண்டுள்ளது. இவ்வடுக்கு பெரிடோடைட் (Peridotite) எனும் கனிமத்தால் உருவானது ஆகும். இவ்வடுக்கின் மேல்பகுதி அஸ்தினோஸ்பியர் (Asthenosphere) என அழைக்கப்படுகிறது. இது 100 கி.மீ தடிமன் உடையது.

அஸ்தினோஸ்பியர் மிருதுவான மற்றும் குறைந்த வலிமையை உடைய அடுக்காகும். இதற்குக் கீழ் அமைந்துள்ள கீழ்க் கவசப்பகுதி 2,900 கி.மீ ஆழம் வரை பரவி உள்ளது. இந்தப் பகுதி மேக்மா (Magma) எனும் குழம்பு நிலையையும் நெகிழும் தன்மையையும் கொண்டுள்ளது. இந்தப் பகுதி மிகுந்த வெப்பத்தையும், உயர் அழுத்தத்தையும் கொண்டுள்ளது.

கருவம்

பூமியின் உள்மைய அடுக்கான கருவம் பேரிஸ்பியர் (Barysphere) எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வடுக்கில் நிக்கல் (Ni) மற்றும் இரும்பு (Fe) ஆகியன இருப்பதன் காரணமாக நைஃப் (NIFE) எனவும் கூறப்படுகிறது.

பிளஸ் 2 :ஒவ்வொரு தேர்வறைக்கும், தனித்தனியே, கவரில் வினாத்தாள்

பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, 'கவர்'
செய்யப்பட்டு உள்ளதால், தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க,
உத்தரவிட்டு உள்ளது. இதனால், முன்கூட்டியே வினாத்தாள், 'அவுட்'ஆவதற்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய, பார்கோடு எண் கொண்ட விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதே போல்,வினாத்தாள்கள் வினியோகத்திலும், பல மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு வரை,வினாத்தாள் கட்டுகளாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள,
கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து, ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும்தேவையானவற்றை பிரித்து, தனி கவரில் வைத்து, தேர்வு நாளன்று,
மையத்துக்கு வினியோகிக்கப்படும்.
தேர்வு நேரத்துக்கு, முன்பே, அந்த கவரை பிரித்து,ஒவ்வொரு தேர்வறைக்கும் தேவையான அளவு, கவரில் வைத்து, தேர்வு மைய அலுவலர், அறை கண்காணிப்பாளரிடம் வழங்குவது வழக்கம்.இதனால், சில தனியார் பள்ளிகளில், சற்று முன்னதாகவே,
வினாத்தாள்களை பிரித்து, கடைசி நேரத்தில் மாணவர்களிடம், 'அவுட்' செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
அப்பள்ளிகளுக்கு, பறக்கும் படை உள்ளிட்டோர் கண்காணிக்க சென்றாலும்,
'வினாத்தாள்களை பிரித்து வினியோகிக்கவே, கவர் 'சீல்' உடைக்கப்பட்டது' என, காரணம் கூறி தப்பினர்.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், இப்புகார் எழாத வகையில், பல்வேறு மாற்றங்கள்செய்யப்பட்டு உள்ளன.ஒவ்வொரு தேர்வறையும், அதில்அமரக்கூடிய மாணவர்கள் விவரம் வரை, அனைத்தும்,இயக்குனரகமே முடிவு செய்துள்ளது.
இதனால், ஒவ்வொரு தேர்வறைக்கும், தனித்தனியே, கவரில் சரியானஎண்ணிக்கையில் வினாத்தாள் வைக்கப்பட்டு, 'சீல்'வைக்கப்பட்டு உள்ளது. இக்கவர்கள் அனைத்தும், தனித்தனி பெட்டிகளாக்கப்பட்டு, அவை கட்டுக்காப்பு மையங்களுக்கு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இப்பெட்டி, தேர்வு மையத்துக்கு, தேர்வு நாளன்று அனுப்பப்பட்டாலும்,அதற்குள்ளும், தனித்தனி கவரில், வினாத்தாள்கள் 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது.தேர்வு மைய அலுவலர், இக்கவர்மற்றும் 'பிளேடு' ஒன்றையும், அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இக்கவர் தேர்வெழுதும்மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கிய பின் கவரை பிரித்து, வினாத்தாள்களை மாணவர்களிடம் வினியோகிக்கவும், தேர்வுத் துறைஉத்தரவிட்டு உள்ளது.
எச்சரிக்கை:தேர்வு நேரத்துக்கு முன், வினாத்தாள் கவர் 'சீல்' உடைக்கப்பட்டிருந்தால், கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது; இதை கண்காணிக்க, பறக்கும்படையினருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இதனால், நடப்பாண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், யாரும்தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட முடியாது.


Sent from my iPad

15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல் தவிப்பு

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம்
முழுவதும், 15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்
.தமிழகத்தில், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இலவசமாக கணினி,
லேப்-டாப் ஆகியவை கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள்
இல்லாததால், அவை, பயன்படுத்தப்படாமல், முடங்கிகிடக்கின்றன. அதே சமயம், தனியார் பள்ளிகளில், கணினி கல்விக்காக, தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனாலும், பெற்றோர், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

எனவே,அரசு பள்ளிகளிலும், கல்வி தரம் உயர, கணினி பாடப்பிரிவு துவங்கி, அதற்கான,ஆசிரியர்களை நியமிக்கவேண்டுமென, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, 'ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை,கணினி பாடப்பிரிவு துவங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது; ஆனால், செயல்படுத்தவில்லை. இதனால், கணினி துறையில், அரசு பள்ளி மாணவர்கள் பலர் ஈடுபாடு காட்டுவதில்லை. கணினி பாடப் பிரிவில்,பி.எட்., முடித்த பட்டதாரிகளும், வேலையில்லாமல் தவித்துவருகின்றனர்
.பி.எட்., கணினி பட்டதாரிகள்கூறியதாவது:மாநிலம் முழுவதும், 15 ஆயிரம் கணினி பட்டதாரிகள், வேலைக்காக காத்திருக்கிறோம்.அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு உள்ளது. ஆனால், பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை,கணினிக்கு என, தனியாக பாடப்பிரிவு இல்லை. பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளில், கணினி ஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.-

ரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு - அதிமுக தேர்தல்அறிக்கை

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: இப்போதுள்ள வருமான வரிச் சட்டத்தின்படி, ரூ.2 லட்சத்துக்கு மேல்ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டும். இதன்காரணமாக, சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே,அவர்களுக்கு ஓரளவு பயன் அளிக்கும் வகையில், ரூ.5 லட்சம் வரை வருமானம்பெறும் தனி நபருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும் என்று தேர்தல் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. ஆட்சிமன்ற குழுவில் அரசுப் பிரதிநிதிகள்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றகுழுவுக்கு மூன்று உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கு அரசுப்பிரதிநிதிகளாக ஓய்வுபெற்ற பொருளாதாரத் துறை பேராசிரியர் பி.பொன்னுசாமி, சென்னையைச் சேர்ந்தஎஸ். தென்னரசு மற்றும் மதுரை பயோனியர் என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனர் தனுஷ்கோடி ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர்களது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் எனஅரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு - அதிமுக தேர்தல்அறிக்கை

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது: இப்போதுள்ள வருமான வரிச் சட்டத்தின்படி, ரூ.2 லட்சத்துக்கு மேல்
ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டும். இதன்காரணமாக, சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே,அவர்களுக்கு ஓரளவு பயன் அளிக்கும் வகையில், ரூ.5 லட்சம் வரை வருமானம்பெறும் தனி நபருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க அதிமுக நடவடிக்கை

NEWS IN DETAIL :ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை மூலம்தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12-ஆம் தேதி முதல் சான்றிதழ்சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை மூலம்தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12-ஆம் தேதி முதல் சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

முதல்கட்டமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும்,அதனைத் தொடர்ந்து இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்
பிறகு கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நாள்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in விரைவில் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவு எண்ணைக் குறிப்பிட்டு அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர்
தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 5 மண்டலங்களாகப் பிரித்து சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால், மொத்தமாக சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த முடியாது என்பதால் 40 நாள்கள் வரை இந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாதவர்களும் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

FLASH NEWS :ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 : 5 சதவீதமதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ல் தொடங்குகின்றது

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 : 5 சதவீதமதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ல் தொடங்குகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ம் தேதி தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. முதல்தாளைத் தொடர்ந்து 2-ம் தாளுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதியை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் விரிவான செய்தி விரைவில்....

10 ஆம் பொதுத்தேர்வு முறையில் மாற்ரம் வருமா?

10ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை 26.02.2013 முதல் 07.03.2014 முடிய நடத்திட தேர்வு துறை இயக்குனர் உத்தரவு .

அரசு ஊழியர் மருத்துவ நல நிதி சிகிச்சை தொகையை மறுத்தது தவறு : ஐகோர்ட் உத்தரவு

அரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்டமருத்துவமனையில், மனுதாரர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்கமறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருதய ஆப்பரேஷனுக்கான தொகையை திரும்ப வழங்க வேண்டும்,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை விளாங்குடி சிதம்பரம் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் வேளாண்விற்பனைக்குழு அலுவலகத்தில், ஊழியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். இருதய ஆப்பரேஷனுக்கு 1 லட்சத்து 94 ஆயிரத்து 982 ரூபாய் செலவானது. தமிழ்நாடு அரசு ஊழியர் மருத்துவ நல
நிதி திட்டத்தின் கீழ், தொகையை திரும்ப வழங்குமாறு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்
வணிகத்துறை இயக்குனர், திண்டுக்கல் விற்பனைக்குழு செயலாளருக்கு விண்ணப்பித்தேன்; நிராகரித்தனர்.தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவு:
அரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், மனுதாரர்சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்க மறுத்துள்ளனர். ஒரு மனிதன் உயிருக்கு போராடும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை எது? அங்கீகரிக்கப்படாதமருத்துவமனை எது? என ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.
செலவு செய்த தொகையை, திரும்பப் பெற முடியுமா? இல்லையா? என சிந்திக்கவும் முடியாது.உடல்நிலை மோசமடைந்தால், பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை தேவை. இத்திட்டத்தின் நோக்கமே,இதுபோல் திடீர் மருத்துவச் செலவு ஏற்பட்டால், அதை சமாளிக்கத்தான். செலவு தொகையை, திரும்பவழங்குவதுதான். மனுதாரருக்கு, மறுப்பதன் மூலம், திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், சிகிச்சை பெறவில்லை என்பது போன்ற தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி, தொகை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. தொகையை வழங்க மறுத்த உத்தரவை, ரத்து செய்கிறேன். மருத்துவ செலவு தொகையை மனுதாரருக்கு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர்வழங்க வேண்டும், என்றார்.

ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொடுப்போம்

அந்தச் சிறுவனுக்குப் பதினோரு வயது. முகத்தில் மீசை அரும்புவதன் அறிகுறிகூடத் தெரியவில்லை. அவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான். நல்லவேளையாகக் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மனநல ஆலோசனைக்காக என் முன் அமர்ந்திருந்தான்.

"ஏம்ப்பா மருந்தைக் குடிச்சே?"

"டீச்சர் திட்டிட்டார் சார்."

"திட்டினதுக்கா சாக நினைச்சே?''

"ஃப்ரெண்ட்ஸ் எல்லார் முன்னாலயும் திட்டிட்டார் சார்."

அந்த வாரத்தில் அவன் மூன்றாவது சிறுவன்.

இன்னொரு நிகழ்ச்சி. அவர் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். "தூக்கமே வரவில்லை டாக்டர்.'' என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால், மன அழுத்தம் தாங்காமல், ஏற்கெனவே தினம் மூன்று மாத்திரைகள் போட்டுத்தான் தூங்குகிறார் அவர். "நான் பரவாயில்லை. எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் தினம் ஐந்து தூக்க மாத்திரைகள் போட்டுக்கொள்கிறார். அவரைவிட நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எல்லாம் இந்த பசங்க தரும் டென்ஷன்தான் டாக்டர். லேசா ஏதாவது சொன்னாலே பொசுக்குனு தூக்குல தொங்கிடறாங்க. யாரையும் எதுவும் சொல்ல முடியவில்லை" என்றார்.

இரண்டும் ஒரே பிரச்சினையின் இருவேறு பக்கங்களே. இன்றைய இளம்வயதினர், சிறு ஏமாற்றத்தை, அவமதிப்பை, தோல்வியைக் கூடத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். தன்னைப் பற்றிய சுய பிம்பத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

என்னுடைய சிறுவயதைப் பற்றிச் சற்று நினைத்துப் பார்த்தேன். இவன் வயதில் தற்கொலை என்பதை சினிமாவில் வில்லனால் ஏமாற்றப்பட்ட கதாநாயகனின் தங்கை விஷம் குடிக்க முயன்று, கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டுக் கதாநாயகனால் முறியடிக்கப்படும் ஒரு செயலாக மட்டுமே அறிந்திருந்தேன்.

என் தந்தையின் தலைமுறையினரைப் பள்ளியில் சேர்க்கும்போதே பெற்றோர்கள் "கண்ணை மட்டும் விட்டுட்டு உடம்புல எங்க வேணாலும் அடிங்க சார்" என்று சொல்லியே சேர்ப்பார்கள். அவர்கள் எத்தனையோ அடிவாங்கினாலும், தற்கொலை என்பது எந்த மொழிச் சொல் என்றுகூட அறிந்திருக்க மாட்டார்கள். மிஞ்சிமிஞ்சிப்போனால், ஊரைவிட்டு ஓடிப்போவார்கள்.

குழந்தைகளைக் கண்டிக்கக் கூடாது; திட்டக் கூடாது; அடிக்கவே கூடாது என்பதெல்லாம் சிறுவர்களுடன் பழகுவதன் பாலபாடமாகவே போதிக்கப்பட்டிருக்கிறது. எள்முனையளவு மூளை இருக்கும் எவருமே இதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால், இது பிரச்சினையின் ஒரு பகுதிதான். குழந்தைகளை அடிக்கும், காரணமின்றித் தண்டிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனால், சிறுவயதிலேயே தற்கொலை முயற்சிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் முரணை நாம் எப்படி விளக்குவது?

நம்முடைய குழந்தைகளுக்கு கராத்தே, குதிரையேற்றம், ஸ்பானிஷ் மொழியெல்லாம் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால், ஏமாற்றத்தைத் தாங்கக் கற்றுக்கொடுக்கிறோமா? இல்லை என்றே தோன்றுகிறது. ஏமாற்றமெனும் சிறு ஊசிகூட வீங்கிப்போன பலூன் போன்ற ஈகோவை நொடிப்பொழுதில் உடைத்துவிடுகிறது. தன்னைப் பற்றிய பிம்பத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கக் காரணங்கள் எவை?

கூட்டுக் குடும்பம் என்பது பலவிதமான மனிதப் பறவைகள் வசிக்கும் கூடாக இருந்தது. அம்முறை சிதைந்து, ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகளே இருக்கும்போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் அதிகம். பிறருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும், பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகள் இல்லாமல் தன்முனைப்பாகவே வளர்கிறார்கள்.

கூட்டுக் குடும்ப முறை மறைந்தது மட்டுமின்றி, குடும்பத்துக்குள்ளேயே கூடியிருந்து உரையாடும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது. இன்று ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாகத்தான் இருக்கின்றனர். நண்பர்கள் மத்தியிலும் அப்படியே. நான்கு சிறுவர்கள் ஒன்றாக இருந்தாலும், ஆளுக்கொரு செல்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு அதிலுள்ள விஷயங்களையே பெரும்பாலும் பகிர்ந்துகொள்கின்றனர்.

இதன் விளைவாக எல்லாத் தேர்வுகளிலும் முதல் மாணவனாக வர வேண்டும், எல்லாப் போட்டிகளிலும் முதல் பரிசு பெற வேண்டும் என்கிற தன்முனைப்பு வெறியாக மாறுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதல் பரிசு கிடைக்காமல் கதறி அழுகிறவர்களைத்தான் நாளும் காண்கிறோம்.

வாழ்வே பொருள்மயமாக மாறிப்போன சூழலில், ஒரு மாணவனின் இயல்பான ஆர்வம் பற்றி அறிந்துகொள்ளாமல் பள்ளிக்கூடங்கள் ஒரே மாதிரியான பிரதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியிருக்கின்றன. இரா.நடராசனின் கதையில் வரும் ஆயிஷாவைப் போன்றவர்களின் சிறகுகள் முளைக்கும் முன்னேயே கத்திரிக்கப்படுகின்றன. இச்சூழல், ஏமாற்றமெனும் காளான் எளிதில் முளைக்க உரம் போடுகின்றது.

எல்லாக் கோபங்களுமே ஏமாற்றங்களில்தான் பிறக்கின்றன. தன்மீது வரும் கோபம் தற்கொலை முயற்சியாக மாறுகிறது. பிறர்மீது வரும் கோபம் விதிமீறல், வன்முறை ஏன் கொலைவரை கொண்டுசெல்கிறது. பள்ளி மாணவன் ஆசிரியரைக் கொலை செய்வதும் கல்லூரி ஆசிரியரை மாணவர்களே வெட்டிச் சாய்ப்பதும் சமுகத்தைப் பீடித்திருக்கிற பெருநோயின் அறிகுறிகள். ஆசிரியர்கள், மாணவர்கள் என்று இரு தரப்பினரையுமே மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது இந்த நிலைமை.

விளம்பரம் ஒன்றில், ஒரு சிறுவன் இரண்டாம் பரிசு பெற்றதை இனிப்போடு கொண்டாடுவான். அந்தப் போட்டியில் கலந்துகொண்டதே இரண்டு பேர்கள் என்பதுதான் வேடிக்கை! இதுபோன்று ஏமாற்றங்களையும் தோல்விகளையும் ரசிக்கக்கூட வேண்டாம். குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளவாவது நம் குழந்தைகளைப் பழக்குவோம். அந்தத் தலைமையாசிரியரும் ஓரிரு தூக்க மாத்திரைகளைக் குறைத்துக்கொள்வார்.

- ஜி. ராமானுஜம், மனநல மருத்துவர், தொடர்புக்கு: ramsych2@gmail.com
Sent from my iPad

10, 12-ம் வகுப்பு தேர்வுகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், இயக்குநர்கள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது:

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ள 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க கீழ்க்கண்ட அதிகாரி கள் குறிப்பிட்ட மாவட்டங் களுக்கு நியமிக்கப் படுகின்றனர். தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் என்.மகேஸ்வரன் ஐஏஎஸ் – சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், அரசு துணைச் செய

லாளர் எஸ்.பழனிச்சாமி ஐஏஎஸ் – கன்னியாகுமரி, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் – சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் – காஞ்சிபுரம், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் – திருவள்ளூர், ஆர்.எம்.எஸ்.ஏ. மாநில திட்ட இயக்குநர் எஸ்.சங்கர் – விழுப்புரம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை – கடலூர், பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன் – வேலூர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் – ஈரோடு, திருப்பூர்

இணை இயக்குநர்கள் தர்ம.ராஜேந்திரன் – கோவை, நீலகிரி, ஏ.கருப்பசாமி – திருச்சி, புதுக்கோட்டை, எம்.பழனிச்சாமி – திருநெல்வேலி, செ.கார்மேகம் – திருவண்ணாமலை, எஸ்.உமா – நாமக்கல், என்.லதா – பெரம்பலூர், சி.செல்வராஜ் – தஞ்சாவூர், திருவாரூர், வி.பாலமுருகன் – தர்மபுரி, சி.உஷாராணி – கரூர், பி.குப்புசாமி – தூத்துக்குடி, கே.சசிகலா – அரியலூர், எஸ்.நாகராஜமுருகன் – மதுரை, தேனி, பி.ஏ.நரேஷ் – விருதுநகர், எஸ்.செல்லம் – திண்டுக்கல், சுகன்யா – கிருஷ்ணகிரி, கே.ஸ்ரீதேவி – சேலம், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் எஸ்.சேதுராம வர்மா – நாகப்பட்டினம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sent from my iPad

பத்தாம் வகுப்பு தேர்வை 9.15 மணிக்குத் தொடங்குவது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்

பத்தாம் வகுப்பு தேர்வை வழக்கமான நேரமான காலை 10 மணிக்குப் பதிலாக9.15 மணிக்குத் தொடங்குவது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என தலைமையாசிரியர்களும் கல்வியாளர்களும் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்புத் தேர்வு வரும் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வு வழக்கமான நேரத்தை விட 45 நிமிஷங்கள் முன்கூட்டியே 9.15 மணிக்குத் தொடங்கும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த நேர மாற்றத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதோடு, பத்தாம் வகுப்புத் தேர்வை மீண்டும் பழைய நேரத்திலேயே தொடங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் பி.இளங்கோவன்:கிராமப்புற மாணவர்கள், காலை 9.30 மணிக்கு பள்ளிக்கூடம் என்றாலே போதிய பஸ் வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 15 நிமிஷங்கள் வரை தாமதமாகத்தான் பள்ளிகளுக்கே வருவார்கள். தேர்வுக்கு இதுபோல் தாமதமாக வந்தால் அவர்கள் பதற்றமடைந்துவிடுவார்கள். மூன்று மணி நேரம் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை காலை 10 மணிக்குத்தொடங்குவதும், இரண்டரை மணி நேரம் நடைபெறும் பத்தாம் வகுப்புத்தேர்வை காலை 9.15 மணிக்குத் தொடங்குவதும் முரண்பாடாக உள்ளது.
பிளஸ் 2மாணவர்களாவது ஏற்கெனவே ஒரு பொதுத்தேர்வை எழுதியிருப்பார்கள். முதல்
முறையாக பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்பதற்றத்தோடு இருப்பார்கள். வீட்டிலிருந்து முன்னதாகவே கிளம்ப வேண்டும் என்றால் காலை உணவையும் தவிர்ப்பார்கள். இதனால் தேர்வுகளில் சரியாக எழுத முடியாததோடு, தேர்வு மையங்களில் மாணவர்கள் மயக்கமடைதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.
எனவே, இந்தத் தேர்வு காலை 10 மணிக்கே மீண்டும் தொடங்கப்பட வேண்டும். பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு: பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத பஸ்களில் செல்லும் மாணவர்களையும் கிராமப்புற மாணவர்களையும் இந்த நேர மாற்றம் பாதிக்கும். அந்த மணவர்கள் காலையில் எழுந்தவுடன் நேராக தேர்வு மையத்துக்குச் செல்வதற்குத்தான் நேரம் இருக்கும். தேர்வுக்காக இரவு முழுவதும் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்தவற்றை காலையில் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்வார்கள். நேர மாற்றத்தால் அதற்கு வாய்ப்பில்லாமல் போகும். குறைந்தபட்சம் 300 மாணவர்கள் இருந்தால் மட்டுமே தேர்வு மையம்வழங்கப்படுகிறது.
எனவே, ஒரு தேர்வு மையத்தில் 3 அல்லது 4 பள்ளிகளின் மாணவர்கள் தேர்வு எழுதுவர். தேர்வு மையங்கள் சற்று தொலைவில் இருந்தாலும், காலை 10 மணிக்குத் தேர்வு என்றால் மாணவர்கள் நிதானமாகவும், பதற்றமில்லாமலும் சென்று தேர்வு எழுதுவார்கள். தேர்வை முன்கூட்டியே நடத்தினால் இவர்கள் பதற்றத்துடன் தேர்வு மையங்களுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவர்களின் நலன் கருதி தேர்வு நேரத்தை மாற்றக் கூடாது.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி: தேர்வை முன்கூட்டியே தொடங்குவது நிச்சயமாக இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும். புதிய தேர்வு நேரத்தால்மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது 1 மணி நேரமாவது பாதிக்கப்படும்.மாணவர்களின் நலன் கருதி இந்தத் தேர்வு நேரத்தை வழக்கமான நேரத்திலேயே நடத்த வேண்டும்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்: பத்தாம் வகுப்புத் தேர்வு நேர மாற்றம் நகர்ப்புற மாணவர்களைப் பெரிய அளவில் பாதிக்காது என்றாலும் கிராமப்புற மாணவர்களை நிச்சயமாகப் பாதிக்கும். காலை 9.15 மணி தேர்வுக்கு அவர்கள் 30 நிமிஷங்கள் முன்னதாகவே தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். காலை 8.45 மணிக்குத் தேர்வு மையங்களுக்குச் செல்லும் பஸ் வசதிகள் அனைத்து ஊர்களிலும் இருக்கும் எனக் கூற முடியாது. எனவே, இந்த மாணவர்கள் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.