சனி, 22 பிப்ரவரி, 2014

தமிழாசிரியர்கள், படைப்பாளிகள் சமூகப் போராளிகளாக இருக்கவேண்டும்

தமிழாசிரியர்கள், படைப்பாளிகள் சமூகப் போராளிகளாக இருக்கவேண்டும்என்று சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் வீ.அரசு குறிப்பிட்டார்.

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம்சார்பில், அறிஞர் தொ. பரமசிவனுக்கு பாராட்டு விழா, ஒரு நாள் தேசியகருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும்விழா வெள்ளிக்கிழமை கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கல்விச் சங்கப் பொருளாளர் தளவாய் தீ. ராமசாமி தலைமை வகித்தார்.
கல்லூரிச் செயலர் மு. செல்லையா கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார்.

கருத்தரங்கில் வீ. அரசு பேசியதாவது: தமிழாசிரியர்கள், படைப்பாளிகள் சமூகப் போராளிகளாக இருக்க வேண்டும்.காலப்போக்கில் இந்தத் தன்னமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள்தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பதிவு செய்யவேண்டும். மனிதன்மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்; கூட்டமாக வாழ வேண்டும் என சங்க
இலக்கியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் தொ. பரமசிவன் பேசியதாவது: தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது புதிய புதிய அறிவைப் பெறமுடிகிறது. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு விதகருத்துக்கள் கிடைக்கின்றன என்றார் அவர்.

கருத்தரங்கில், "அறிஞர் தொ.ப.வின் ஆய்வுலகம்' என்ற நூலை, கல்விச் சங்கப்
பொருளாளர் தளவாய் தீ. ராமசாமி வெளியிட, தமிழக அரசின் கூடுதல் சுங்க
ஆணையர் சா. ரவிசெல்வன் பெற்றுக்கொண்டார். "ஆய்வுச் சிந்தனைகள்' நூலை கல்லூரிச் செயலர் மு. செல்லையா வெளியிட முதல்வர் ப. சின்னத்தம்பி பெற்றுக்கொண்டார்.

.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக