சனி, 22 பிப்ரவரி, 2014

அரியலூரில் பிப். 26-ல் பெண்கள், இளைஞர்கள் மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அரியலூரில் பிப். 26-ல் பெண்கள், இளைஞர்கள் மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரியலூர் மாவட்டத்தில் 2013- 14 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஆண்டிமடம்,ஜயங்கொண்டம், தா. பழூர் ஆகிய ஒன்றிய, ஊரகப் பகுதிகளில் இரண்டாம்கட்டமாக படித்த இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு (18
வயது முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள்) வேலைவாய்ப்பு முகாம் பிப். 26-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில்காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில்முன்னணி நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்துகொண்டு வேலைக்காகஇளைஞர்களை நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர். எனவே, இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆண்டிமடம், ஜயங்கொண்டம், தா.
பழூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தங்களது வயதுச்சான்று, கல்விச் சான்றுகளுடன் கலந்துகொண்டு பயனடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக