திங்கள், 24 பிப்ரவரி, 2014

மதுரை :முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி

மதுரை மாவட்டத்தில், காலியாகஉள்ள முதன்மை கல்வி அலுவலரின்நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற ஆசிரியர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முதன்மை கல்வி அலுவலருக்கு, மேல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு என இரண்டு நேர்முகஉதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில்,உயர்நிலை பள்ளிகள் நேர்முக உதவியாளராக இருந்த சீனிவாசன், பதவி உயர்வில், சிவகங்கை மாவட்டகல்வி அலுவலராக
சென்றதால், அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
பொதுவாக, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், இப்பதவிக்கு விருப்பம் தெரிவிப்பர். வயது மற்றும்பணி மூப்பு, அனுபவம், அலுவலக நடைமுறைகளை நன்கு தெரிந்தவர் மற்றும் பணிக்காலத்தில் புகார்களுக்கு ஆளாக இருப்பது போன்ற அடிப்படையில், பள்ளிக் கல்வி இயக்குனரே நேர்முகஉதவியாளரை தேர்வு செய்வார்.ஆனால், மதுரையில் இப்பதவியை பெற ஆசிரியர்களுக்குள் கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களும் களத்தில் இறங்கி, தங்கள் சங்க நிர்வாகிகளை கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால், எப்போதும் இல்லாத வகையில், இப்பதவிக்கு தற்போது கடும்
போட்டி ஏற்பட்டுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாவட்ட கல்வித் துறையில், அதிகாரிக்கும்,ஆசிரியர்கள், சங்கங்களுக்கும் பாலமாக இருக்கும் பதவி இது. மாவட்டத்தில் மூத்த லைமையாசிரியருக்கே இதை வழங்க வேண்டும். தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக