சனி, 31 ஆகஸ்ட், 2013

"அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்"- அமைச்சர் வைகை செல்வன்

"அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்" மதுரை: "அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்" என மதுரை புத்தக விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன். பேசினார்
. மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), மாவட்ட நிர்வாகம் சார்பில் 8வது புத்தகத் திருவிழா தமுக்கம் மைதானத்தில் துவங்கியது. கலெக்டர் சுப்ரமணியன்தலைமை வகித்தார். "பபாசி" தலைவர் சண்முகம் வரவேற்றார். 

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த,அவர்களுக்கு குறிக்கோளை எடுத்துக்காட்ட, இந்திய பெருமையை, தமிழுக்காக பாடுபட்டோரை அறிய புத்தகங்கள் உதவுகின்றன. கல்விக்காக முதல்வர் ஜெயலலிதா பல ஆயிரம்
கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்," என்றார்.

விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: "நிறைய புத்தகங்களை படித்தால்தான்நம்மை நாம் அறிய முடியும். ஒருவர் வாழ்வில் வெற்றி பெற உடல், மனம், அறிவு ஆகிய                      3 தளங்கள் வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் மாறுபட்டுக்
கொண்டே இருக்கும் மனதை, ஒருமுகப்படுத்தி, ஒரே புள்ளியில் சந்திக்கும் யுக்தியை அறிய
வேண்டும். அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும். நூல்கள் அறிவுபூர்வமான
விஷயங்களை தருகின்றன. எனவே நூலகங்களுக்கு நூல்களை வாங்க முதல்வர் ஜெயலலிதா ரூ. 30
கோடி நிதி தந்துள்ளார். செம்மொழி தமிழ் 20 ஆயிரம் ஆண்டுகளை கடந்தது என சமீபத்தில் படித்த
ஒரு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. தமிழை சைவமும், வைணமும் வளர்த்தன. அதனால்தான் 2000
ஆண்டுகளாக சிதையாமல் நிற்கிறது. இத்தகைய தமிழ்மொழி நூல்களை தினமும் 100
பக்கங்களாவது படிக்க வேண்டும். படிக்க படிக்க மகத்தான உயரத்தை அடைவீர்கள். நூல்களை பாதுகாக்க புத்தகக் கொள்கையை உருவாக்க வேண்டும் என எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்
கூறினார். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஆணை பெற்று, பொக்கிஷமாக
விளங்கும் புத்தகங்களை பாதுகாக்க "புத்தகக் கொள்கையை" வெளியிடுவோம்." இவ்வாறு அவர்
பேசினார்.

நன்றி : தினமலர்

TRB NEWS UPDATE.:கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம். விரைவில்

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம்:
கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளது. காலியாக உள்ள, 652 பணியிடங்களை, இரு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு, தேவையான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
. இதையடுத்து, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பட்டதாரிகளை, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தேர்வு செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பழைய காலி பணியிடங்களுடன், கூடுதலாக தேவைப்படும் இடங்களுக்கும் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 இதுகுறித்த டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பணியிடத்திற்கு, ஐந்து பேர் வீதம், பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, தகுதியானவர், தேர்வு செய்யப்படுவர்.


தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!- -  சா. கந்தசாமி

 நன்றி :தினமணிஇந்திய அரசு 1954-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமியை அமைத்தது.
தன்னாட்சி பெற்றது. ஒவ்வொரு மொழியில் இருந்தும் உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர் உண்டு. சாகித்ய அகாதெமியின் முதல்
தலைவராக அன்றைய பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள்
- தனது இறுதிக் காலம் வரையில் - தலைவராக இருந்த அவர் சாகித்ய
அகாதெமி விருது பெறவில்லை. அகாதெமி வழியாகத் தன் நூல்களை வெளியிட்டுக் கொள்ளவில்லை. சாகித்ய அகாதெமியின் பல இலக்கிய நோக்கங்களில் ஒன்று, ஆங்கிலம்
உள்பட இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த
படைப்புகளுக்கு விருது வழங்குவது; அவற்றைப் பிற மொழிகளில்
மொழி பெயர்த்து வெளியிடுவது. ஒவ்வொரு மொழியிலும் இருக்கும்
அசலான படைப்புகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது.
நாடு முழுவதும் இலக்கியக் கருத்தரங்கு, கவிதை வாசிப்பு, கதை வாசிப்பு உள்பட இலக்கிய மாநாடுகள் நடத்துவது என்பதாகும்.
இலக்கியத்திற்காக இந்திய அரசு அளிக்கும் மிக உயர்ந்த விருது சாகித்யஅகாதெமி வழங்கும் விருதுதான்.அது ஒரு எழுத்தாளருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. சாகித்யஅகாதெமி விருது பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அடிக்கடி குற்றம் குறை கூறப்பட்டு வருகிறது. ஆனாலும்அது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிறந்த நூற்களுக்கு மட்டுமே விருது வழங்கி வந்த சாகித்ய அகாதெமி, சமீபகாலமாக மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், இளம் படைப்பாளர்விருது என்று தன் இலக்கியப் பரப்பை விரிவாக்கி உள்ளது. 2013, ஆகஸ்டு 23-இல் சாகித்ய அகாதெமியின் செயற்குழு கூட்டம் முதல்முறையாக சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழ், சமஸ்கிருதம், இந்தி,மைதிலி, சந்தாவி, மலையாளம், கன்னடம் போன்ற இருபத்திரண்டு மொழியினர் கலந்து கொண்டார்கள். இளம்படைப்பாளருக்கான விருதை யுவபுரஸ்கார் என முடிவு செய்தார்கள்.அதோடு தாய்மொழி படிப்புப் பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அது, சாகித்ய அகாதெமி என்பது விருது கொடுப்பது, புத்தகங்கள் பிரசுரம்செய்வது, கருத்தரங்குகள் நடத்துவது, வெளிநாடுகளுக்குச் சென்று வருவது போன்றவற்றை மட்டும் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் அல்ல. சமூகத்தின் தலையாய பிரச்னைகளைக் கூர்ந்து கவனித்து கருத்துகளைத் தைரியமாகச் சொல்லும் எழுத்தாளர்கள்  கொண்டது  என்பதையும் நிலைநாட்டியிருக்கிறது. 

சாகித்ய அகாதெமி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கூடி தாய்மொழியில் படிப்பைக் கொடுங்கள் என்று மாநில அரசுகளைக்
கோரியிருப்பது    தற்செயலாக நடந்ததுதான். ஆனால், சரியான இடத்தில்தான்
நிகழ்ந்து இருக்கிறது. மொழிகள் பற்றிய அம்சங்களில்
தமிழ்நாடு எப்போதும் முன்னே இருப்பதாகும். தமிழ்மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் இருந்து வருகிறது. அது தனித்து இயங்கும்
தன்மை கொண்ட மொழி. திராவிட மொழி குடும்பத்தின் மூத்தமொழி.
அது இன்னொரு மொழியில் இருந்து கிடைத்தது அல்ல; அதன் எழுத்தும்,
இன்னொரு எழுத்து வடிவத்தில் இருந்து பெற்றதில்லை. தொன்மையான அசலான படைப்பிலக்கியங்களான சங்கப் பாடல்கள்,சிலப்பதிகாரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், அருட்பா, பாரதியார் கவிதைகள், புதுமைப்பித்தன் கதைகள் என்று இழையறாத தொடர்
படைப்பிலக்கியங்கள் கொண்டது. பழைமையின் தொடர்ச்சியாக ஜெயகாந்தன்,
அசோகமித்திரன் போன்றோர் எழுதி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது. ஆனால்,இங்கு முப்பதாண்டு காலமாகத் தமிழ் பெருமளவில் தடைபட்டுவிட்டது.
மழலையர் பள்ளியில் இருந்து கல்லூரிப் படிப்பு வரையில் தமிழ் இல்லை.தமிழ்நாட்டில் ஒரு மாணவனோ - மாணவியோ தமிழ்
மொழி ஒரு எழுத்தைக்கூட படிக்காமல் முனைவர் பட்டப்
படிப்பையே முடித்துக்கொண்டு விடலாம். இந்தியாவில் வேறு பல மாநிலங்களில் இது சாத்தியம் இல்லை. ஏனெனில்
அவை மூன்று மொழி மாநிலங்கள். அவர்களின் படிப்பில்
தாய்மொழி சேர்ந்து விடுகிறது. எதன் பொருட்டும் மொழிவாரி மாநிலங்களின் - எந்த மொழியைத்
தாய்மொழியாக, பேச்சுமொழியாக, எழுத்து மொழியாகக் கொண்டவர்கள்
அதிகம் வசிக்கிறார்களோ, அந்த மாநிலங்களின் - மாநில மொழியே படிப்பில்
இருந்து துரத்தப்படுவதைத்தான் சாகித்ய அகாதெமி கண்டிக்கிறது. முதல் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை தாய்மொழியில்
படிப்பதற்கு வசதி செய்து கொடுங்கள்; படிக்கச் செய்யுங்கள்
என்கிறது அகாதெமி. அதில் மொழி திணிப்பு கிடையாது. அசலான படிப்பு என்பது பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடிப்படையான
படிப்புதான். அதற்கு மேலான படிப்பு என்பது பயிற்சி. படிப்பின் வழியாகப்
பெறுவதுதான். படிப்பு என்பதே பயிற்சி ஆகி விட்டதால் - அதுவே படிப்பு -
கல்வி என்றாகிவிட்டது. உலகத்தின் மகத்தான விஞ்ஞானிகள், படைப்பு எழுத்தாளர்கள், கலைஞர்கள்,
சமூகச் சிந்தனையாளர்கள் எல்லாம் படித்து மேதையானவர்கள். அவர்களின்
மேதைமையை அவர்கள் கண்டுபிடிப்புகள் - செயற்பாடுகள் - படைப்புகள்
வழியாக நிலைநாட்டியிருக்கிறார்கள். உலகத்திலேயே மகத்தான ஞானி என்று போற்றப்படும் புத்தர் மகாதி என்ற
மக்கள் மொழியில்தான் பேசினார்; அவர் ஒரு வரிகூட எழுதி வைக்கவில்லை. சாக்ரட்டீஸ் கிரேக்க மொழியில்தான் பேசினார். மனிதர்களின்
கண்டுபிடிப்புகளிலேயே உச்சமென சொல்லப்படும் மொழிகளையும்
எழுத்துகளையும் அச்சிடும் முறையைக் கண்டுபிடித்த ஜோனான்
கூடன்பர்க்கிற்கு ஜெர்மன் தவிர வேறு மொழியே தெரியாது. அறிவு எந்த மொழியிலும் இல்லை. ஆனால், அறிவை எந்த மொழியின்
மூலமாகவும் பெறலாம். வெளிப்படுத்தலாம். ஆனால், அதில்
தாய்மொழிக்குத்தான் முதல் இடம். ஏனெனில் தாய்மொழி இயல்பானது.
அது ஒருவனுடைய வாழ்க்கை, கலாசாரம், பண்பாடு ஆகியவை சார்ந்தது.
பரம்பரையான அம்சங்கள் - சொல்லத் தெரிந்ததும் சொல்ல முடியாததும்
சொல்லக்கூடாததும் - தாய்மொழியோடு சேர்ந்து வருகிறது. ஆகையால்தான் உலகம் முழுவதிலும் தாய்மொழியில் படிக்க வேண்டும்
என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒரு மனிதனிடம் இருக்கும் மகத்தான
அறிவை தாய்மொழி வழியாகவே துல்லியமாகச் சொல்ல முடிந்திருக்கிறது.
அதுவும் சரித்திரமாக இருக்கிறது. உலகத்தின் மகோன்னதமான
படைப்பிலக்கியங்களையெல்லாம் தாய்மொழியில்தான்
படைத்து இருக்கிறார்கள். அறிவியல், தத்துவக்
கட்டுரைகளை தாய்மொழியில்தான் எழுதியிருக்கிறார்கள். அவற்றை அந்தந்த மொழியில்தான் படிக்க வேண்டும். அதற்காக, பல மொழிகள்
கற்க முடியாது. தாய்மொழியில் மொழிபெயர்த்து படிப்பதுதான்
இயல்பானது. மொழி பெயர்ப்பில் விட்டுப்போனதை தாய்மொழிப்
படிப்பு கொடுத்து விடுகிறது. சாகித்ய அகாதெமி சரியான நேரத்தில் எல்லாத் தாய்மொழிகளுக்கும்
ஆதரவாகக் குரல் கொடுத்து இருக்கிறது. அது வேறு யார் காதில்
விழுகிறதோ இல்லையோ, தமிழ் மக்களின், தமிழ்நாடு அரசின் காதில் விழ
வேண்டும். ஏனென்றால், தாய்மொழிக்காகத் தொடக்கம் முதல் குரல்
கொடுப்பவர்கள் நாம்தானே!
 கட்டுரையாளர்: எழுத்தாளர்.

மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., இடம் இழுத்தடிப்பு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

 :மதுரையை சேர்ந்த மாணவிக்கு, திருத்தி அமைக்கப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண்
பட்டியல்படி, எம்.பி.பி.எஸ்., இடம் ஒதுக்காமல்இழுத்தடித்ததற்காக, அரசுத் தேர்வுகள் இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர தேர்வுக்குழு செயலர் ஆகியோர் 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
மதுரை கோசாகுளத்தை சேர்ந்த பிளஸ் 2மாணவி அம்ரிதா. இவரது தந்தை ஜெயக்குமார்ஏற்கனவே தாக்கல் செய்த மனு: பிளஸ் 2 தேர்வு வேதியியல் பாடத்தில், அம்ரிதாவிற்கு 195 மதிப்பெண் கிடைத்தது. "கீ' விடைகளை ஒப்பிட்டு பார்த்தார். வினா எண் (57, 65 (ஏ) 68 (ஏ) க்கு, சரியாக விடையளித்தும், 4 மதிப்பெண் வழங்கவில்லை. மறு மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கி, மருத்துவ (எம்.பி.பி.எஸ்.,) படிப்பிற்கு அனுமதிக்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.மணிக்குமார் உத்தரவு:
அம்ரிதாவிற்கு அரசுத் தேர்வுகள்துறை இயக்குனர், தகுந்த மதிப்பெண் வழங்க வேண்டும்.
திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் விபரத்தை, மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலருக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி, "கட்-ஆப்' தரவரிசை பட்டியலை,
மாற்றி அமைத்து வெளியிட வேண்டும். தகுதி பெறும் பட்சத்தில், மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், என்றார். இதை எதிர்த்து அரசுத்தரப்பில், "மதிப்பெண் வழங்குமாறு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டிற்கு இல்லை. நிபுணர் குழு பரிந்துரைப்படிதான் வழங்க முடியும். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இதில், நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் உத்தரவு: மாணவியின் விடைத்தாளை, நிபுணர் குழு மதிப்பீடு செய்து, 3.5 மதிப்பெண் வழங்க பரிந்துரைத்தது. அரை, முக்கால் மதிப்பெண இடும்போது, அதை முழுமையாக்கி வழங்க விதிகளில் இடம் உண்டு. மாணவிக்கு தற்போது, வேதியியலில் 199 மதிப்பெண் கிடைத்துள்ளது. இந்த திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை, மருத்துவக் கல்வி இயக்குனரக
தேர்வுக்குழு செயலருக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குனர் அனுப்ப வேண்டும். மாணவி பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவரது "கட்-ஆப்' மதிப்பெண்- 197. "மாணவிக்கு,அரசு மருத்துவக்
கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும்' என, ஆக., 21 ல், ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டது. மறுநாள், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலர், "திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலின் உண்மைத தன்மையை ஆராய, அரசு தேர்வுகள் துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
இதுவரை அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்தில் இருந்து பதில் இல்லை. மாணவர்களின் விடைத்தாட்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது? என்பதற்கு, இது நல்ல உதாரணம்.
மறு மதிப்பீடும் சரியாக மேற்கொள்ளவில்லை. மாணவி, ஐகோர்ட்டை அணுகியதால், உரிய மதிப்பெண்கிடைத்துள்ளது. ஏற்கனவே, மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், மதிப்பெண் பட்டியல்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பவில்லை. இம்மாணவியின்மதிப்பெண் பட்டியலை மட்டும் அனுப்பி, பாகுபாடு காட்டியுள்ளனர். மாணவி, 3 மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இம்மாணவிக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் 30 ஆயிரம் ரூபாய்; மருத்துவக்கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலர் 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவிக்கு எம்.பி.பி.எஸ்.,
படிக்க இடம் ஒதுக்க வேண்டும். அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

Sourrce : dinamalar

அங்கீகாரம் பெறாத 21 கல்லூரிகளின் எம்.எட். தேர்வு முடிவு நிறுத்திவைப்பு


தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (நேக்) அங்கீகாரம் அளிக்காத 21
கல்லூரிகளுக்கான எம்.எட்., தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம்
நிறுத்திவைத்துள்ளது. இதன் காரணமாக தேர்வு முடிவுகள் தெரியாமல் மாணவர்கள்
அவதிப்படுவதோடு, அவர்களுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகும்
நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் 674 கல்லூரிகளில் பி.எட்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் சில கல்லூரிகளில் எம்.எட்., படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளன. இணைப்புக் கல்லூரிகள் அனைத்துக்கும் பாடத் திட்டங்களை வகுப்பது,
தேர்வுகளை நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது என்பன
உள்ளிட்ட பணிகளைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இது போல் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட எம்.எட்.,
தேர்வு முடிவுகளைக் கடந்த திங்கள்கிழமை (ஆக.26) பல்கலைக்கழகம்
வெளியிட்டது. இதில் 21 கல்லூரிகளுக்கான எம்.எட்.,
தேர்வு முடிவுகளை மட்டும் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. இதை அறியாமல், தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்காக
கல்லூரிகளுக்குச் சென்ற மாணவர்கள், தேர்வு முடிவுகள் வரவில்லை என
கல்லூரி நிர்வாகம் அளித்த பதிலைக் கேட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். வேறு கல்லூரிகளில் படித்த தங்களுடைய நண்பர்களுக்குத் தேர்வு முடிவுகள்
வெளிவந்துவிட்ட நிலையில், தங்களுடைய கல்லூரிக்கு மட்டும் ஏன்
வெளியிடவில்லை என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எம்.எட்., நடத்த "நேக்' அங்கீகாரம் அவசியம்:
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர்
இடங்களுக்கு உள்பட்டு இருந்தால் "நேக்' அங்கீகாரம் பெறத் தேவையில்லை. ஆனால், பி.எட். படிப்பில் 100 இடங்கள் மற்றும் அதற்கு மேலும் இடங்களைப்பெற்றிருக்கும் கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்
ஜி. விஸ்வநாதன் கூறியது: பி.எட்., கல்லூரிகளைப் பொருத்தவரை, கல்லூரியில் பி.எட்., படிப்பில் 100
(என்.சி.டி.இ.) அனுமதியோடு, "நேக்' அங்கீகாரமும் பெற்றிருக்க
வேண்டியது அவசியம். இது போல், எம்.எட்., படிப்பை நடத்துவதற்கும் "நேக்' அங்கீகாரம் அவசியம்.
இந்த அங்கீகாரம் இல்லாவிட்டால், எம்.எட்., படிப்பை நடத்தவே முடியாது. ஆனால், மாணவர்கள் இதை அறியாமல் எம்.எட்., படிப்பில்
சேர்ந்துவிடுகின்றனர். அங்கீகாரம் பெறாத கல்லூரிகள், எம்.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கையைச்
செய்யக் கூடாது என பல்கலைக்கழகத்தின் சார்பில்
தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள ஏராளமான கல்லூரிகள் (எம்.எட்.
நடத்தும் கல்லூரிகள்) "நேக்' அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. இந்தக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டபோது,
கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த
வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில், அந்தக் கல்லூரிகளில்
எம்.எட்., படித்த மாணவர்களுக்கு தேர்வு எழுத பல்கலைக்கழகத்தின் சார்பில்
அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து, அதற்கான
அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், பல்கலைக்கழக அறிவுறுத்தலின்பேரில் சில கல்லூரிகள் "நேக்'
நடைமுறைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், அவற்றுள் 21 கல்லூரிகள்
"நேக்' அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியை இதுவரை எடுக்கவில்லை. எனவே, இந்த கல்லூரிகளுக்கான எம்.எட்., தேர்வு முடிவுகள்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கல்லூரிகளிடம் விளக்கம்
அதிகாரிகள், என்.சி.டி.இ. அதிகாரிகள் ஆகியோருடன் இந்தப்பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதன்
கேட்டு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செப்.14-க்குப் பின் வெளியிடப்படும்: வரும் செப்டம்பர் 14-ம் தேதி "நேக்'
பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதே நேரம், குறிப்பிட்ட 21
கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவு செய்யப்படும்
என்றார். இந்த நிலையில், இதுபோன்ற அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் படித்த
மாணவர்களின் எம்.எட்., படிப்பு, வேலைவாய்ப்புக்குச்
செல்லும்போது அங்கீகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே,
பி.எட்., எம்.எட்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் முன்னர் "நேக்'
அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் எவை, எந்தெந்தக் கல்லூரிகள் அங்கீகாரம்
பெறாதவை என்ற பட்டியலை மாணவர்கள் எளிதில் காணும் வகையில் பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

TNPSC GROUP IV COUNSELING SCHEDULE

 கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்
சரிபார்ப்புப் பணிகள் வரும் 4- ஆம் தேதி தொடங்கவுள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

516 காலிப் பணியிடங்களுக்கான நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 4-ஆம் தேதி முதல்தொடங்குகிறது. இரண்டு நாள்கள் அவை நடைபெறும். சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. நான்காம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின பதிவெண்கள், எந்தத் தேதியில் அவர்கள்
கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற விவரம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்கள், சான்றொப்பமிட்ட ஒளிநகல் சான்றிதழ்கள் இரண்டையும் கலந்தாய்வுக்கு வரும் போது தவறாமல் கொண்டு வர வேண்டும் எ தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posts included in GROUP-IV Services, 2007 - 08 to 2012 -13
(Date of Written Examination:07.07.2012)
IV PHASE OF COUNSELLING SCHEDULE
JUNIOR ASST/BILL COLLECTOR GR.I/FIELD SURVEYOR/DRAUGHTSMAN

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

காலாண்டு தேர்வு பிளஸ் 2வுக்கு, செப்டம்பர்,10ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு, செப்., 12ம் தேதியும் துவங்குகிறது.


தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல்,காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அனைத்தும்
ஒரே சமயத்தில் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில், 

பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு,        
 செப்டம்பர், 10ல் தமிழ் முதல்தாளுடன் தேர்வு துவங்குகிறது. 
செப்டம்பர், 11ம் தேதி தமிழ்இரண்டாம் தாள், 
செப்டம்பர், 12ம் தேதி ஆங்கிலம்முதல்தாள், 
செப்டம்பர், 13ம் தேதி ஆங்கிலம்இரண்டாம்தாள்,
 செப்டம்பர், 14ம் தேதி கணிதம்,விலங்கியல், 
செப்டம்பர், 17ம் தேதி வணிகவியல், புவியியல், ஹோம்சயின்ஸ், 
செப்டம்பர், 18 தேதி,இயற்பியல், பொருளியல்,
 செப்., 19ம் தேதி, கம்யூட்டர்சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, புள்ளியியல்,
 செப்டம்பர்,20ம் தேதி, வேதியியல், அக்கவுண்டன்ஸி
 செப்டம்பர், 21ம் தேதி உயிரியல், தாவரவியல், பிஸினெஸ் மாத்ஸ் தேர்வு,

காலை, 10 மணி முதல் மதியம், 1.15 மணி வரை நடத்தப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு,

 செப்டம்பர்,12ம் தேதி,தமிழ் முதல்தாள், 
செப்டம்பர், 13ம் தேதி தமிழ்இரண்டாம்தாள்,
 செப்டம்பர், 14 ம் தேதி ஆங்கிலம்முதல்தாள்,
 செப்டம்பர், 17ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள்,
 செப்டம்பர், 18 கணிதம்,
செப்டம்பர், 19ம் தேதி அறிவியல், 
செப்டம்பர், 20ம் தேதி, சமூக அறிவியல்

தேர்வு, காலை, 10 மணி முதல், மதியம், 12.45 மணி வரை நடக்கிறது.

அரசுப் பள்ளி பாழல்ல .....அன்னைத் தமிழும் பாழல்ல .....அறியா மனமே பாழென்பேன்....

நிலவு நாயகன் மயில்சாமி அண்ணாதுரை பழகுவதற்கு இனிமையான ,எளிமையான மனிதர் அவர் !அவருடன் உரையாடிய இரவு என்னை ஈர்த்த பிள்ளை என என்னைப்போன்ற எளியவனை எல்லாம் குறித்த பரந்த மனதுக்காரர் !அவரிடம் பேசி அவரைப்பற்றி சுட்டிவிகடனில் வெளியான என் டென் இதோ உங்கள் அனைவருக்கும் !
நிலவை நோக்கி கனவுகளை முடுக்கிய நாயகன் …இளைஞர்களின் அறிவியல் திசைகாட்டி மயில்சாமி அண்ணாதுரை, பொள்ளாச்சி அருகி
ல் உள்ள கோதவாடி கிராமத்தில் ஜூலை 2, 1958-ல் பிறந்தார். தந்தை, மயில்சாமி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். மாலையில் தையல் வேலையும் செய்வார். அறிஞர் அண்ணாவின் மீதான ஈடுபாட்டால், தன் பிள்ளைக்கு ‘அண்ணாதுரை’ எனப் பெயர் சூட்டினார்.
மயில்சாமி அண்ணாதுரையின் பள்ளிப் பருவம், அரசுப் பள்ளியிலே அமைந்தது. ஒழுங்கான வகுப்பு அறைகள்கூட கிடையாது. ‘மாட்டுக் கொட்டகையில் ஒரு வருஷம், கோயில் திண்ணையில் மறு வருஷம், கோணிப் பையே குடையாக, செருப்பே இல்லா நடைப் பயணம்’ எனக் கவிதை மூலம் குறிப்பிட்டு இருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்க, 5 கிலோ மீட்டர் நடந்து செல்வார்.
தினமும் ‘பகவத் கீதை’ படிப்பதை வழக்கமாகக்கொண்டு இருக்கிறார். திருக்குறளின் மீது எல்லையற்ற பற்றுதல் உண்டு. பள்ளிக் காலத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை வெகுவேகமாகச் சொல்வார். ‘அரசாங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஊக்கத் தொகையைப் பெறக் கூடாது’ என்ற அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொண்டாலும், 11-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக, அரசாங்கம் ­­தங்கப் பதக்கம் வழங்கி, படிப்புச் செலவையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது.
‘நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம்’ கல்லூரியில் எம்.ஏ. மின்னணுவியல் பயின்றார். தமிழ் வழியில் இருந்து, ஆங்கில வழிக் கல்விக்கு மாறியதால் முதலில் சிரமப்பட்டார். பிறகு, தமிழ் ஆசிரியர் சிற்பி அய்யாவின் ஊக்குவிப்பால், முதன்மையான மாணவனாக ஜொலித்தார். தான் எழுதிய ‘கையருகே நிலா’ என்கிற கட்டுரைத் தொகுப்புக்கு, முன்னுரையை சிற்பியிடம் இருந்தே பெற்றார்.
இளநிலைக் கல்வி படிக்கும்போது, மற்ற மாணவர்கள் ஒரு புராஜெக்ட் செய்யவே திணறியபோது, நான்கு புராஜெக்ட்கள் மற்றும் முதுநிலைக் கல்வியில் மூன்று புராஜெக்ட்கள் செய்தவர் மயில்சாமி அண்ணாதுரை. ‘இதற்குக் காரணம், அன்னைத் தமிழ் வழி கற்ற கல்வியே’ எனப் பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.
‘ஆரோலேக்’ என்கிற ஃப்ரெஞ்ச் கம்பெனியில் வேலை கிடைத்தபோதும், அதைவிடக் குறைந்த ஊதியம் கிடைக்கும் இஸ்ரோவில் பணியாற்றினார். பிறகு, நாசாவில் வேலை வாய்ப்பு வந்தது. அன்னை நாட்டுக்குப் பணியாற்றுவதே நிறைவு’ என்று அதை மறுத்துவிட்டார்.
இஸ்ரோவில் பணியாற்ற நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, நுண்செயலியைப் (Microprocessor) பற்றிய இவரின் அறிவு, அங்கே இருந்தவர்களைப் பிரமிக்கவைத்தது. வேலைக்குச் சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே, செயற்கைக்கோள்களின் இயக்கத்துக்கான மென்பொருள் முன்மாதிரியை உருவாக்கலாம் எனச் சொன்னார். அதை, வெற்றிகரமாகவும் செய்து முடித்தார். இதன் மூலம், சென்ஸார் செயல் இழந்தாலும் செயற்கைக்கோள் செயலாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
விஞ்ஞானிகள் கூட்டத்தில்… பிறரின் கருத்துக்களில் தவறு இருந்தால், உடனே சுட்டிக்காட்டிவிடுவார். ‘இது சரியான அணுகுமுறை அல்ல. தனியே அந்த அறிஞரிடம் சென்று விளக்க வேண்டும்’ என்ற முனைவர் நாகபூஷணம் அவர்களின் அறிவுரை, தன் வாழ்வைத் திருப்பியது என்பார். இவரின் புதிய அணுகுமுறை, சந்திராயனின் இயக்குனராக இவரை உயர்த்தியது.
சந்திராயன் மூலம் நிலவில் தண்ணீர் உருவான இடத்தைக் கண்டறிந்து, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தார். அந்த செயற்கைக்கோள் எடுத்த படங்களின் துல்லியம், உலக நாடுகளைப் பிரமிக்கவைத்தது. ‘இது கூட்டு முயற்சியின் வெற்றி’ என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார். மேலும், ‘சாதாரணக் கிராமங்களில் இருந்து கிளம்பிய நாம், இந்த வெற்றியை… நாம் புறப்பட்ட மண்ணில் உள்ள இளம் பிள்ளைகளுக்குச் சொல்லி உத்வேகப்படுத்த வேண்டும்” என்று தன் குழுவினருக்குச் சொன்னார்.
விடுமுறை நாட்களில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களோடு உரையாற்றி உத்வேகப்படுத்துகிறார் மயில்சாமி அண்ணாதுரை. அன்னைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு என்பார். இதையே…
‘அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்’
எனத் தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.
By Poo.ko. Saravanan

அரசுப் பள்ளி பாழல்ல .....அன்னைத் தமிழும் பாழல்ல .....அறியா மனமே பாழென்பேன்....

நிலவு நாயகன் மயில்சாமி அண்ணாதுரை பழகுவதற்கு இனிமையான ,எளிமையான மனிதர் அவர் !அவருடன் உரையாடிய இரவு என்னை ஈர்த்த பிள்ளை என என்னைப்போன்ற எளியவனை எல்லாம் குறித்த பரந்த மனதுக்காரர் !அவரிடம் பேசி அவரைப்பற்றி சுட்டிவிகடனில் வெளியான என் டென் இதோ உங்கள் அனைவருக்கும் !
நிலவை நோக்கி கனவுகளை முடுக்கிய நாயகன் …இளைஞர்களின் அறிவியல் திசைகாட்டி மயில்சாமி அண்ணாதுரை, பொள்ளாச்சி அருகி
ல் உள்ள கோதவாடி கிராமத்தில் ஜூலை 2, 1958-ல் பிறந்தார். தந்தை, மயில்சாமி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். மாலையில் தையல் வேலையும் செய்வார். அறிஞர் அண்ணாவின் மீதான ஈடுபாட்டால், தன் பிள்ளைக்கு ‘அண்ணாதுரை’ எனப் பெயர் சூட்டினார்.
மயில்சாமி அண்ணாதுரையின் பள்ளிப் பருவம், அரசுப் பள்ளியிலே அமைந்தது. ஒழுங்கான வகுப்பு அறைகள்கூட கிடையாது. ‘மாட்டுக் கொட்டகையில் ஒரு வருஷம், கோயில் திண்ணையில் மறு வருஷம், கோணிப் பையே குடையாக, செருப்பே இல்லா நடைப் பயணம்’ எனக் கவிதை மூலம் குறிப்பிட்டு இருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்க, 5 கிலோ மீட்டர் நடந்து செல்வார்.
தினமும் ‘பகவத் கீதை’ படிப்பதை வழக்கமாகக்கொண்டு இருக்கிறார். திருக்குறளின் மீது எல்லையற்ற பற்றுதல் உண்டு. பள்ளிக் காலத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை வெகுவேகமாகச் சொல்வார். ‘அரசாங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஊக்கத் தொகையைப் பெறக் கூடாது’ என்ற அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொண்டாலும், 11-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக, அரசாங்கம் ­­தங்கப் பதக்கம் வழங்கி, படிப்புச் செலவையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது.
‘நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம்’ கல்லூரியில் எம்.ஏ. மின்னணுவியல் பயின்றார். தமிழ் வழியில் இருந்து, ஆங்கில வழிக் கல்விக்கு மாறியதால் முதலில் சிரமப்பட்டார். பிறகு, தமிழ் ஆசிரியர் சிற்பி அய்யாவின் ஊக்குவிப்பால், முதன்மையான மாணவனாக ஜொலித்தார். தான் எழுதிய ‘கையருகே நிலா’ என்கிற கட்டுரைத் தொகுப்புக்கு, முன்னுரையை சிற்பியிடம் இருந்தே பெற்றார்.
இளநிலைக் கல்வி படிக்கும்போது, மற்ற மாணவர்கள் ஒரு புராஜெக்ட் செய்யவே திணறியபோது, நான்கு புராஜெக்ட்கள் மற்றும் முதுநிலைக் கல்வியில் மூன்று புராஜெக்ட்கள் செய்தவர் மயில்சாமி அண்ணாதுரை. ‘இதற்குக் காரணம், அன்னைத் தமிழ் வழி கற்ற கல்வியே’ எனப் பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.
‘ஆரோலேக்’ என்கிற ஃப்ரெஞ்ச் கம்பெனியில் வேலை கிடைத்தபோதும், அதைவிடக் குறைந்த ஊதியம் கிடைக்கும் இஸ்ரோவில் பணியாற்றினார். பிறகு, நாசாவில் வேலை வாய்ப்பு வந்தது. அன்னை நாட்டுக்குப் பணியாற்றுவதே நிறைவு’ என்று அதை மறுத்துவிட்டார்.
இஸ்ரோவில் பணியாற்ற நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, நுண்செயலியைப் (Microprocessor) பற்றிய இவரின் அறிவு, அங்கே இருந்தவர்களைப் பிரமிக்கவைத்தது. வேலைக்குச் சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே, செயற்கைக்கோள்களின் இயக்கத்துக்கான மென்பொருள் முன்மாதிரியை உருவாக்கலாம் எனச் சொன்னார். அதை, வெற்றிகரமாகவும் செய்து முடித்தார். இதன் மூலம், சென்ஸார் செயல் இழந்தாலும் செயற்கைக்கோள் செயலாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
விஞ்ஞானிகள் கூட்டத்தில்… பிறரின் கருத்துக்களில் தவறு இருந்தால், உடனே சுட்டிக்காட்டிவிடுவார். ‘இது சரியான அணுகுமுறை அல்ல. தனியே அந்த அறிஞரிடம் சென்று விளக்க வேண்டும்’ என்ற முனைவர் நாகபூஷணம் அவர்களின் அறிவுரை, தன் வாழ்வைத் திருப்பியது என்பார். இவரின் புதிய அணுகுமுறை, சந்திராயனின் இயக்குனராக இவரை உயர்த்தியது.
சந்திராயன் மூலம் நிலவில் தண்ணீர் உருவான இடத்தைக் கண்டறிந்து, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தார். அந்த செயற்கைக்கோள் எடுத்த படங்களின் துல்லியம், உலக நாடுகளைப் பிரமிக்கவைத்தது. ‘இது கூட்டு முயற்சியின் வெற்றி’ என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார். மேலும், ‘சாதாரணக் கிராமங்களில் இருந்து கிளம்பிய நாம், இந்த வெற்றியை… நாம் புறப்பட்ட மண்ணில் உள்ள இளம் பிள்ளைகளுக்குச் சொல்லி உத்வேகப்படுத்த வேண்டும்” என்று தன் குழுவினருக்குச் சொன்னார்.
விடுமுறை நாட்களில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களோடு உரையாற்றி உத்வேகப்படுத்துகிறார் மயில்சாமி அண்ணாதுரை. அன்னைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு என்பார். இதையே…
‘அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்’
எனத் தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

வீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர் -DINAMANI

 ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் செழிப்பும் சீர்மையும் அந்த நாட்டிலுள்ள இயற்கை வளங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில் துறையில் முன்னேற்றம்,கல்வியாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றினால் மட்டும் அமைவதன்று. ஒவ்வொரு வீட்டினரின் பங்களிப்பும் அதில் அடங்கியிருக்கிறது. ஒரு நாடு என்பது பல சமுதாயங்களின் கூட்டமைப்பு ஆகும். சமுதாயம் என்பது பல வீடுகளில் வாழும் மக்களின் தொடரமைப்பு ஆகும்.சமுதாயத்தின் அடிப்படை அமைப்பாக குடும்பம் விளங்குகிறது. குழந்தைகளுக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். பெற்றோர்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். ஒரு வீடானது, மக்களை நல்லவர்களாக அடையாளப்படுத்தும் பண்புகளான அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்து தூண்களைத் தாங்கியதாகவும், தூய்மை, நல்லறிவு, இரக்கம், பொறுமை ஆகிய
நான்கு சுவர்களைக் கொண்டதாகவும், அமைதியை கூரையாகவும், சிரத்தையை தளமாகவும், இறை வழிபாட்டினை வாயிலாகவும், அருள் அதனுள் வீசும் காற்றாகவும், ஆனந்தம் அங்கு நிகழும் இசையாகவும் கொண்டு அமைய வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டிலுள்ளவர்கள் அன்பு, பொறுமை, தியாகம், அருள், சகிப்புத் தன்மை, அறம் சார்ந்த பண்புகள் ஆகியவை உடையவர்களாகஇருப்பார்கள். நாம் வசிக்கும் வீடே அறிவு வளர்ச்சிக்கும் ஒழுக்கலாற்றுக்கும் களனாக அமைகிறது. ஒழுக்க இயல்புகள் வீட்டின் வழிதான் அமையும்."குலஞ்சிறக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்' என்கிறார் கம்பர். உயர்ந்த  எண்ணங்களை உருவாக்கும் உலைகளனாக ஒருவனுக்கு அவன் வீடு அமைகிறது. 
வீட்டில் உள்ள முதியோரும், பெற்றோரும், உற்றார் உறவினர்களும் எந்நிலையில் இருக்கிறார்களோ, அந்நிலையில்தான் அங்கு வளரும் குழந்தைகளும் இருப்பார்கள். அந்த வீட்டில் அன்பு வாசம் வீசினால், அவர்களின் பண்பு நலன்கள் வெளியிலும் அவ்வாறே மணம் வீசும். ஒருவன் வீட்டிலிருந்து என்ன மனநிலையில் கிளம்புகிறானோ அந்தமனநிலையில்தான் வெளியில் அவன் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கும். எனவே, ஒருவனின் நன்மையும், தீமையும் அவனுடைய வீட்டில் உள்ளவர்களின் செயல்பாடுகளில் தான் அமைந்துள்ளது. அதாவது, ஒருவனுக்கு இரு கண்களாக இருக்கும் கல்வி, ஒழுக்கம் ஆகிய
இரண்டையுமே அவனுக்கு கற்றுத் தருவது அவன் வசிக்கும் வீடே. ஒழுக்கம் என்பது ஒருவன் தன் உயர்வை விரும்பி தனக்கு என சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு அவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்பதாகும். நமக்கு தீமை செய்வாரும் நாமே, நமக்கு நன்மை செய்வாரும் நாமே என்பதை உணர்ந்து வீட்டிலுள்ளவர்கள் செயல்பட்டால், சமுதாயமும் நாடும் நேரிய வழியில் செல்லும். கூடையிலுள்ள ஒரு அழுகிய பழம் அடுத்தடுத்த பழங்களை அழுக வைத்திடும்.ஒரு தொற்று நோய் ஓரிருவருக்குவரினும் அது ஊரையே பலியாக்கி விடும். அதுபோல, ஒரு வீட்டில் துன்பமும் வன்முறை எண்ணமும் காழ்ப்புணர்ச்சியும் துளிர் விட்டால், அது அந்த வீட்டிலுள்ளவர்களை அழிப்பதோடு, சமுதாயத்திற்குள் புரையோடிய
புண்ணாகி பின்னர் நம் உயிராகிய நாட்டையே அழிக்க முற்படுகிறது. ஒரு நல்லவனின் உள்ளம் சார்ந்தது சாராதது எதையும் கெடுக்காது. எனவே, வீட்டிலுள்ளவர்கள் நல்லறிவோடு நல்லுணர்வோடு தாங்கள் கெடாத தன்மையோடு பிறர் கெடாமல் இருக்கத் தக்க சூழலையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் ஒருவர் விட்டுக் கொடுத்தால்
மற்றவர்கள் கெட்டுப் போவதில்லை. இல்லையெனில் வீட்டில் யார் பெரியவர்,
யார் சம்பாதிக்கிறவர், யார் அறிவாளி, யார் அறிவிலி, படிக்காதவன், படித்தவன்
ஆகிய தன்னுணர்ச்சி, தற்பெருமை, அகங்காரம், தன்நலம் ஆகிய களைகள் முளைத்து வீட்டையே அழித்து சமுதாயத்திற்குள் அவப்யெரையும் உண்டாக்கி நாட்டையே இன்னல்களுக்கு உள்ளாக்கும். அரசு குடிமக்களைக் காக்கும் கடன் கொண்டதாயினும், வீடே பெற்றமக்களை வழி நடத்தும் பொறுப்பு வாய்ந்தது.
 எனவே, நாம் வாழும்வீடு ஒரு கோயிலாக இருக்க வேண்டும். நம் பெற்றோர் நமக்கு தெய்வங்கள் என்றால், நமது உற்றார் உறவினர்கள் நமக்கு காவல் தெய்வங்கள். நாம் செய்யும்
நல்வினை, தீவினைகளைப் பொறுத்தே நம் வாழ்வும் அமையும். ஒருவன் வீட்டின் சூழ்நிலையைப் பொறுத்தே அவன் வாழ்வில் சொர்கமும் நரகமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் பாரதியாரும், "வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில்
எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழ தகுந்த இடத்திற்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும். விடத்தக்கது வீடு என்ற பிற்கால உரை ஒப்பதக்கதன்று. வீடு துயரிடம் ஆவதற்கு காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே' என்கிறார்.

 ஒரு நாள் ஈசாப் ஏதென்ஸ் நகருக்கு சென்றிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம் வந்து "ஏதென்ஸ் நகர மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா' எனக் கேட்டான். உடனே ஈசாப், "உன் வீட்டில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்' என்று கேட்டார். அதற்கு அவன் "ஐயோ என்
வீடு ஒரு சண்டைக்காடு யாரிடமும் ஒற்றுமை இல்லை' என்றான். ஈசாப் "அப்படியானால் ஏதென்ஸ் நகரமும் அப்படித்தான் இருக்கும்' என்றார். இன்னொருவன் வந்து அதே கேள்வியை அவரிடம் கேட்டான். அவனிடமும் ஈசாப் "உன் வீட்டில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்' என்று கேட்டார். அதற்கு அவன்  "என் வீடு ஒரு அமைதிப் பூங்கா, அங்கு எப்போதும் அன்பு மணம் வீசும்,ஒருவரையொருவர் பழிப்பதில்லை' என்றான். அப்போது ஈசாப் "அப்படியானல்
ஏதென்ஸ் நகரமும் அப்படித்தான் இருக்கும்' என்றார்.
 வீட்டிலுள்ளவர்கள் நல்லறிவும் நல்லன்பும் நல்லெண்ணமும் நற்செய்கையும் உடையவராக இருந்தால் நாடும் அவ்வாறே இருக்கும். எனவே, உண்மையான மகிழ்ச்சி என்பது அவரவர் வீட்டில்தான் இருக்கிறது. வெளியில் எங்கும் தேடிப் போக வேண்டியதில்லை. உள்ளம் அமைதி பெறவே உறையுள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் : ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

                                            மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்
கோரி வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள்பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, புதுக்கோட்டை, சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல்உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய
இடங்களில் மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட  ஆசிரியர்கள்ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை   சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த 120 பெண்கள் உள்பட மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

"கல்வி சிறந்த தமிழ்நாடு' -DINAMANI REGARDING. TNPSC- TRB EXAM


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி நான்கு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வில், இதுவரை இல்லாதவாறு, பன்னிரண்டு இலட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். தேர்வெழுதிய இலட்சக்கணக்கானவரின் கனவு நனவாவது, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரேஒரு வினாத்தாளைப் பொறுத்ததே. ஆனால் அதிலும் பிழையான வினாக்களும் விடைகளும் இடம்பெற்றிருப்பது, தேர்வர்களின் நெஞ்சில் உதைத்ததுபோல் உள்ளது.

இந்த விடைகள் தாற்காலிகமானவை (டென்டேடிவ் கீ ஆன்சர்) என ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு வினாவுக்குத் தாற்காலிக விடையென்றும் நிரந்தரமான விடையென்றும் இருவகையான விடைகள் உண்டா?

அதுமட்டுமின்றி, விடைகள் தொடர்பாக ஆட்சேபம் இருந்தால், ஐந்து நாள்களுக்குள் ஆணையத்திற்குத் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர். அப்படியானால், புலமை மிக்கவர்கள் வினா-விடை தயாரித்த வல்லுநர்களா? அதைவைத்துத் தேர்வெழுதிய தேர்வர்களா?

தொகுதி நான்கு தேர்வு பத்தாம் வகுப்புக் கல்வியை அடிப்படையாகக் கொண்டது.

இருநூறு வினாக்களுக்கு முந்நூறு மதிப்பெண் கொண்ட இதற்கான வினாத்தாளில் செம்பாதியாக நூறு வினாக்கள் தமிழ்ப் பாடத்திற்குரியவை.

தேர்ச்சிபெற தமிழே துணையாகும் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் வினாத்தாளின் தமிழ்ப்பகுதியில் பல பிழைகள் இடம்பெற்றுள்ளன.

தேர்வாணைய வினாத்தாளில் "மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப்போல விரிவடைந்து' என்று ஒரே வரியில் பாடல் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பாடலுக்குரிய விடைகளில் பொருந்தாதது எது எனக்கேட்டு, அடிமோனை, அடியெதுகை, அடிஇயைபு, சீர்மோனை என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வினாவுக்கு ஆணையம் அறிவித்துள்ள விடை அடிஇயைபு என்பது. அதாவது, இப்பாடலடியில் அடிஇயைபு இல்லையென்பதாகும். முதலில் பாடலை இரண்டடிகளில் கொடுத்ததால்தான் அடிமோனை, அடி எதுகை, அடி இயைபு ஆகியவற்றைத் தேர்வர்கள் கண்டறிய முடியும். பாடலின் அடிதோறும் அமைவது அடி மோனை முதலியன. ஓரடியில் உள்ள சீர்களில் அமைவது சீர் மோனை முதலியன.

எனவே பாடல் அமைப்பு தவறாகத் தரப்பட்டுள்ளது. அது ஒருபுறம் இருக்க, இப்பாடலடியில் அடி எதுகையும் இல்லை. எனவே அதுவும் பொருந்தாததே ஆகும். இவ்வினாவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியாக இருக்க, ஆணையம் ஒன்றைமட்டும் அறிவித்துக் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. வினாவிலும் பிழையிருக்கிறது. அறிவித்த விடையிலும் பிழையிருக்கிறது.

மற்றொரு பிழையான வினா "தித்திக்கும் தெள்ளமுதாய் தெள்ளமுதின்' என மூன்று சீர்களில் ஓரடி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே தவறாக உள்ளது. நான்கு சீர்களையுடைய அளவடியைக் கொடுத்துத்தான் தொடை கேட்பது வழக்கம். இதில் "எதுகை வந்துள்ளது', "மோனை மட்டும் வந்துள்ளது', "எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன', "எதுகையும் மோனையும் வந்துள்ளன' என்று நான்கு விடைகள் கொடுத்து, எது சரியானது என வினா கேட்கப்பட்டுள்ளது, இவற்றுள் "எதுகையும் மோனையும் வந்துள்ளன' என்பதை சரியான விடையென ஆணையம் அறிவித்துள்ளது. இது எப்படிச் சரியாகும்?

கொடுக்கப்பட்டதோ மூன்று சீர்கள். முதற் சீரை வைத்துத்தான் எதுகை மோனை காண முடியும். அப்படியிருக்க, இதில் எதுகை எப்படி அமைந்ததென்று தெரியவில்லை. மோனை மட்டுமே இவ்வடியில் உள்ளது.

இப்படிப் பிழையான வினாக்களையும் விடைகளையும் அடுத்தடுத்துத் தந்திருப்பது தேர்வர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.

"ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய தூய நல்லறம் என்று இங்கு இணையன காப்ப' என்னும் கம்பராமாயண அடிகளைக் கொடுத்து "சீதையை அழியாது காப்பாற்றியவை எவை' என பன்மையில் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு "கற்பும் அருளும்' என்று ஆணையம் விடை தந்துள்ளது. கொடுக்கப்பட்டுள்ள இரண்டு அடிகளையும் நோக்க, "சீதையின் கற்பும் தலைவனாகிய இராமனின் அருளும் தூய நல்லறனும்தாம் சீதையைக் காப்பாற்றின' என்பது பொருளாகும். சான்றோர் பலரும் இப்படித்தான் உரை எழுதியுள்ளனர். அதன்படி "கற்பும் அருளும் அறனும்' என விடை தந்திருக்க வேண்டும். வினா, விடை இரண்டிலும் ஏற்பட்டுள்ள மூன்றாவது தவறு இது.

ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல்லறிதல் என்பது ஒருவகை வினா. இதில் தரப்பட்டுள்ள 'fangle ' ,'fantail' என்னும் ஆங்கிலச் சொற்கள், சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் கூடக் காணப்படவில்லை. இது தேர்வர்களின் தகுதியறியாது கேட்கப்பட்ட வினாவாகும்.

அதுபோலவே முதல் தாளில் பகுபதம், பகாப்பதம் பற்றி நான்கு செய்திகளைத் தந்து இவற்றில் எவை தவறானவை எனக் கேட்கப்பட்டுள்ளது.

இவற்றில் மூன்று செய்திகள் தவறாக இருக்க, விடைக்குறிப்பில் அதற்கு வாய்ப்பு காணப்படவில்லை. இது வினாவில் ஏற்படட தவறு.

அதேபோன்று, இரண்டாம் தாளில் "பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க' என்னும் செய்யுள் தொடரைக் கொடுத்து அதில் உள்ள தொடை விகற்பத்தைக் கண்டறிய வினவப்பட்டுள்ளது. தொடரின் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைக்குறிப்புகளும் தவறாகவே உள்ளன.

பல இலட்சம் பேருக்குத் தேர்வை நடத்துவதில் ஆற்றல் பெற்றுள்ள ஆணையமும் வாரியமும் பத்து பாட வல்லுநர்களைக் கொண்டு, பிழையில்லாத வினாத்தாளை வெளிக்கொணர முடியாதா?

------ தமிழ்ப்பெரியசாமி

புதன், 28 ஆகஸ்ட், 2013

TN TET NEWS UPDATION:ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தவிடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன்ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள்தேர்வர்கள் மனு செய்யலாம். இந்த மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ளபெட்டியிலோ   அல்லது தபால் மூலமாகவோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள்வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம்தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ம் தேதியும் நடைபெற்றது.இந்தத் தேர்வுகளை மொத்தம் 6.50 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு இப்போது ஸ்கேன் செய்யும் பணிகள்நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள்மூலம் முழுநேரமும் தீவிரமாகக்கண்காணிக்கப்பட்டு வருகிறது.இப்போது விடைகள்வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, முக்கிய விடைகள் தொடர்பான ஆட்சேபங்கள் பெறப்பட்டவுடன் ஒவ்வொரு பாடவாரியாக அவை பரிசீலிக்கப்படும்.இதைப் பரிசீலிப்பதற்காக ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுக்கள்  அமைக்கப்படும். அந்தக் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சேபங்களை  ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து, இறுதிசெய்ய்பட்ட
விடைகளுடன் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீட்டுக்குப் பிறகு இறுதி விடைகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.                                                        செப்டம்பர் மாத இறுதிக்குள்     ஆசிரியர் தகுதித்
தேர்வு    முடிவுகளை  வெளியிடுவதற்கான பணிகள் வேகமாக. நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

TRB CERTIFICATE VERIFICATION FOR CERTIFICATE NOT PRODUCED AND ABSENT CANDIDATES FOR 2012 TET PASSED


TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2012CERTIFICATE VERIFICATION FOR CERTIFICATE NOT PRODUCED AND ABSENT CANDIDATES                                     Teachers Recruitment Board                                   Click here for Message

Dated: 27-08-2013

Chairman