புதன், 21 ஆகஸ்ட், 2013

TRB PG NEWS: இரண்டு வாரத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு?


       
 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.  இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். 

முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.தவறான கேள்விகள், அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக, முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தேர்வு நடந்து முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்டதால், முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று தேர்வு எழுதியவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், தேர்வு முடிவு இன்னும் இரண்டு வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.  ஆனால், தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து எந்த பத்திரிகைகளுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவிக்கவில்லை. 
தற்போது, நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் மொத்த மதிப்பெண் 150 ஆகும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி, ஆசிரியர் பணி அனுபவம் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். 
சிறப்பு மதிப்பெண் சீனியாரிட்டி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு கால அளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 
அதன் விவரம் வருமாறு:- 
சீனியாரிட்டி 
1 முதல் 3 ஆண்டுகள் வரை - 1 மார்க் 
3 முதல் 5 ஆண்டுகள் வரை - 2 மார்க் 
5 முதல் 10 ஆண்டுகள் வரை - 3 மார்க் 
10 ஆண்டுக்கு மேல் - 4 மார்க் 
பணி அனுபவம் 
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை - 1 
மார்க் 2 முதல் 5 ஆண்டுகள் வரை - 2 மார்க் 
                 5 ஆண்டுகளுக்கு மேல் - 3 மார்க் 


THANKS  TO  TEACHERTN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக