வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

 தர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளில், 415 ஆசிரியர் பணியிடங்கள் காலி

 தர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளில், 415 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.கல்வி அறிவில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில்,கிராம பகுதிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கிராம பகுதி மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்காமல், மாவட்டத்தில், மாணவர்கள் உயர்
கல்வியை எட்ட முடியாத நிலையுள்ளது. குறிப்பாகபெண்கள் கல்வி கேள்விக்குறியாக இருந்து வருகிறது.கிராம பகுதியில் இருந்து உயர் கல்விக்கு வரும்மாணவர்களுக்கு உரிய பஸ் வசதியின்மை, விடுதியில் இடம் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.                                                                                                                                மாவட்டத்தில், 390 நடுநிலைப்பள்ளிகளும், 115 உயர்நிலைப்பள்ளிகளும், 119 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
 பள்ளிகளில் மாணவர்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின்கல்வி தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது.குறிப்பாக கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில்ஆசிரியர் பணியிடங்கள் காலியாக  உள்ளன கிராமங்கள் மற்றும்மலைக்கிராமங்களில் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள்                                              
நகரப்பகுதி பள்ளிக்கு இடமாறுதல் பெற்று வந்து விடுகின்றனர். கிராம பகுதிகளில் உள்ள பல பள்ளிகளில்ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், மாணவர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பள்ளிக்கு செல்வதும்,படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் முழுக்க, முழுக்க அரசு பள்ளிகளை நம்பியுள்ள நிலையில், ஆசிரியர்கள்பற்றாக்குறையால், அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. மாவட்டதத்டல், 129முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட, 415 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழ் ஆசிரியர் பணியிடம், 42, ஆங்கில ஆசிரியர் பணியிடம், 101, கணித ஆசிரியர்கள், 16, அறிவியல், 67,வரலாறு, 187 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. குறிப்பாக கிராம பகுதி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள், 40 முதல், 60 சதவீதம் உள்ளது.நகரப்பகுதி ஆசிரியர் பணியிடங்கள் திருப்தியாக இருந்த போதும், முறையான கல்வி கிடைக்காமல் மாணவர்கள் சுயமாக கற்கும் திறன்கள் மூலம் அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் நிலையுள்ளது. பல பள்ளிகளில் பி.டி.ஏ.,மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிய போதும், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.மாவட்டத்தில் காலியாகஉள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் ஆசிரியர் வருகைகளை உறுதி செய்யவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SOURCE: DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக