திங்கள், 26 ஆகஸ்ட், 2013

TNPSC GROUP IV ANOUNCEMENT BY CHAIRMAN

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 எழுத்துத் தேர்வில் 12 லட்சம் பேர்பங்கேற்றனர். இந்தத் தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்என்று தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்உள்ளிட்ட 5 ஆயிரத்து 566 காலியிடங்களை நிரப்புவதற்கானதேர்வு அறிவிக்கையை தமிழ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி வெளியிட்டது. மொத்தம் 17 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 லட்சம்பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தேர்வு எழுத 14 லட்சம் பேர்இறுதியாகத் தகுதி பெற்றனர். இதற்கான தேர்வு மாநிலம் முழுவதும்244மையங்களில்ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் தேர்வு மையங்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் நுழைவுச் சீட்டில் தேர்வுக்கூட முகவரியுடன் அதன்தொலைபேசி எண் மற்றும் தேர்வுக்கூடத்தின் அருகில் அமைந்துள்ள பிரபலமான இடத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தன. தேர்வாணையம் மேற்கொண்ட சிறப்பு ஏற்பாட்டால் எவ்வித குழப்பமும்இன்றி தேர்வு மையத்தை எளிதாக அடைய முடிந்ததாக தேர்வர்கள்தெரிவித்தனர். 70 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்: மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 755 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், சுமார் 70 ஆயிரத்து 230 கண்காணிப்பாளர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீத கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்வுக்குத் தகுதியான 14 லட்சம்பேரில் 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் தேர்வை எழுதினர். 3 சதவீதம் அதிகம்: கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 266பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். தற்போது நடைபெற்று முடிந்த தேர்வில் 5 ஆயிரத்து 566பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். இது கடந்த
ஆண்டைவிட 3 சதவீதம் அதிகமாகும். விடைத்தாள் மதிப்பீடு: தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) ஓரிரு நாள்களில்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். விடைத்தாள் மதிப்பீட்டின்போது எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல்இருக்க விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முழுவதும் விடியோவில்பதிவு செய்யப்படவுள்ளன என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக