வெள்ளி, 31 அக்டோபர், 2014

பள்ளிகள் மொழிப்பாடங்களுக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை :மாணவர்கள், மொழித்திறன் குறைகிறது

ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வியடைந்துள்ளனர். மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ஐஐடியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். பொதுவாக ஐஐடிக்களில் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படுவதால், அங்கு படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.எனினும், அனைத்து ஐஐடிக்களும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை நடத்தி மாணவர்களின் ஆங்கில
திறனை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆங்கில பயிற்சி மற்றும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில்,ஒருவார்த்தை கேள்விகள், கட்டுரைகள், ஆங்கில இலக்கண திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு நடைபெற்றது. இதில் 1,310 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 1,071 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று, 239 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:பொதுவாக பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களை விட மாற்றப்பாடங்களுக்கு தான் அதிக அக்கறை எடுத்து படிக்கின்றனர். 12ம் வகுப்பு முடித்த பிறகு ஐஐடியில் சேரவிரும்பும் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்கின்றனர். அங்கேயும், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. மொழிப்பாடங்களுக்கு பயிற்சி இல்லை.இதுவே, மாணவர்களின் மொழித்திறன் குறைவதற்கு காரணமாக அமைகிறது. இதை கருத்தில் கொண்டே ஐஐடி சார்பில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஐஐடி மாணவர் ஒருவர் கூறுகையில், 'பள்ளிகளில் பொதுவாக மொழிப்பாடங்களுக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை. நான் பள்ளியில் படிக்கும் போது, எனது பெரும்பாலான மொழிப்பாட வகுப்புகளின் போது அறிவியல் ஆசிரியரோ அல்லது கணித ஆசிரியரோ வந்து அவரது பாடத்தை எடுப்பார். மொழிப்பாடங்களை மனப்பாடம் செய்ய சொல்லுவார்கள் அவ்வளவுதான். மேலும், ஐஐடி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு மொழிப்பாட மதிப்பெண்களை கேட்பதில்லை. மாறாக கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே மதிப்பீடு செய்கின்றனர். இதனால், மொழித்திறன் குறைகிறது,' என்றார்.

குரூப்-4 :வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்!

குரூப்-4 தேர்வுக்கு தயாராவோர், பள்ளி இறுதி வகுப்பு வரையுள்ள வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம்,இந்திய அரசியல் அமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திறனறிவு கேள்விகள், அறிவுக்கூர்மை தொடர்பான கேள்விகள், நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.

நடப்பு நிகழ்ச்சிகளுக்கு தினசரி செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகள், தரம் வாய்ந்த மாதாந்திர, வருடாந்திர பொது அறிவு புத்தகங்களைப் படிக்க வேண்டும். பொதுத்தமிழில் 100 கேள்விகள் கேட்கப்படுவதால், 6-வது வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ் புத்தகங்களையும், இலக்கணத்தையும் நன்கு படித்து விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். தீவிரமாக படியுங்கள், பலமுறை திரும்பத் திரும்ப படியுங்கள், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்.

அலகு-1 (பொது அறிவியல்)

இயற்பியல்: பேரண்ட உலகத்தின் இயற்கை அமைப்பு, பொது அறிவியல் விதிகள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தேசிய அளவிலான ஆய்வகங்கள், எந்திரவியல் மற்றும் இயற்பொருள்களின் தன்மைகள், பவுதிக அளவிலான நிலைகள், அலகுகள் விவரம், பவுதிக விசை, இயக்கம், ஆற்றல், காந்தம், மின்சாரம், மின்னணுவியல், வெப்பம், ஒளி, ஒலி.

வேதியியல்: தனிமங்கள், சேர்மங்கள், அமிலம், காரம், பலவகை உப்புகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லிகள்.

தாவரவியல்: உயிர் அறிவியலின் கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடுகள், உணவு முறைகள்.

விலங்கியல்: விலங்குகளின் ரத்தம், இனப்பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், தடுப்பு முறைகள் மற்றும் குணப்படுத்தும் வழிகள்.

அலகு-2 (நடப்பு நிகழ்ச்சிகள்)

வரலாறு: சமீபத்தில் நடந்த சம்பவங்கள், தேசிய அடையாளச் சின்னங்கள், அனைத்து மாநிலங்கள் பற்றிய வரலாறுகள், சமீபத்தில் செய்தித்தாள்களில் வரப்பெற்ற முக்கிய மனிதர்கள் மற்றும் இடங்கள் பற்றிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள், பிரபலமான புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் வழங்கப்படும் பரிசுகள்.

அரசியல் அறிவியல்: பொதுத்தேர்தல், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் விழிப்புணர்வு, ஆட்சியாளர்களின் நிர்வாக முறை, அரசின் நலத்திட்டங் களும், அவற்றின் பயன்களும்.

புவியியல்: இந்திய மாநிலங்கள், தேசிய நிலக்குறியீடுகள்.

பொருளாதாரம்: தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்.

அறிவியல்: அறியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தற்போதைய கண்டுபிடிப்புகள்.

அலகு 3 (புவியியல்)

பூமி, பேரண்டம், சூரிய மண்டல அமைப்பு, பருவமழை, பருவக்காற்று, தட்பவெப்பநிலைகள், இந்திய நீர்வளங்கள், ஆறுகள், நதிகள், இயற்கை வளங்கள், காடுகள், வனவிலங்குகள், வேளாண்மை தொழில்கள், போக்குவரத்து விவரங்கள், தகவல் தொடர்பு, மக்கள்தொகை பற்றிய முழு விவரங்கள், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்.

அலகு 4 (இந்திய, தமிழக வரலாறு- பண்பாடு)

சிந்துச் சமவெளி நாகரீகம், குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகரம், பாமினிய அரசுகள், தென்னிந்திய வரலாறு, தமிழர் களின் பாரம்பரியம், பண்பாடு, சுதந்திரத் துக்குப் பின் இந்தியாவில் நிகழ்ந்தவை, திராவிட இயக்கங்கள், பகுத்தறிவாளர் கள், தமிழக அரசியல் கட்சிகள்.

அலகு 5 (இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்)

அரசியலமைப்பின் முகவுரை, முக்கிய அம்சங்கள், மத்திய-மாநில அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள், குடி யுரிமை, அடிப்படை உரிமைகள், மக்களின் கடமைகள், மனித உரிமைச் சட்டங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துராஜ் சட்டம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான நீதித்துறை அமைப்புகள், அரசின் அலுவல்மொழி, பொது வாழ்வில் நிகழும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், மத்திய-மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

அலகு 6 (இந்திய பொருளாதாரம்)

இந்திய பொருளாதாரத்தின் அமைப்பு, ஐந்தாண்டுத் திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, கிராமம் சார்ந்த திட்டங்கள், சமூகப் பிரச்சினைகள், கிராம மக்கள் நலன், வேலைவாய்ப்பு, வறுமை.

அலகு 7 (இந்திய தேசிய இயக்கம்)

இந்திய தேசியத் தலைவர்களான காந்திஜி, நேரு, தாகூர் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகள், இந்திய விடுதலைக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், தியாகங்கள், தமிழ்நாடு சுந்திரப் போராட்ட வீரர்களான ராஜாஜி, வ.உ.சி., பெரியார், பாரதியார் மற்றும் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற விவரங்கள் தொடர்பானவை.

அலகு 8 (திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை)

கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தகவல்களைத் தொகுப்பது, மாற்றுவது, அட்டவணை, வரைபடங்கள், படங்கள் தயாரிப்பது, கணக்கியலின் அங்கங்களான சுருக்குதல், சதவீதம், தனிவட்டி, கூட்டுவட்டி, அதிகம் மற்றும் குறைந்த வகு எண் காணுதல், பரப்பளவு, கனஅளவு, காலமும் வேலையும், எண்களின் தொடக்க வரிசைகள், எண்கள் பகுத்தாய்வு

குரூப்-4 :வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்!


குரூப்-4 தேர்வுக்கு தயாராவோர், பள்ளி இறுதி வகுப்பு வரையுள்ள வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம்,இந்திய அரசியல் அமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திறனறிவு கேள்விகள், அறிவுக்கூர்மை தொடர்பான கேள்விகள், நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.

நடப்பு நிகழ்ச்சிகளுக்கு தினசரி செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகள், தரம் வாய்ந்த மாதாந்திர, வருடாந்திர பொது அறிவு புத்தகங்களைப் படிக்க வேண்டும். பொதுத்தமிழில் 100 கேள்விகள் கேட்கப்படுவதால், 6-வது வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ் புத்தகங்களையும், இலக்கணத்தையும் நன்கு படித்து விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். தீவிரமாக படியுங்கள், பலமுறை திரும்பத் திரும்ப படியுங்கள், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்.

அலகு-1 (பொது அறிவியல்)

இயற்பியல்: பேரண்ட உலகத்தின் இயற்கை அமைப்பு, பொது அறிவியல் விதிகள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தேசிய அளவிலான ஆய்வகங்கள், எந்திரவியல் மற்றும் இயற்பொருள்களின் தன்மைகள், பவுதிக அளவிலான நிலைகள், அலகுகள் விவரம், பவுதிக விசை, இயக்கம், ஆற்றல், காந்தம், மின்சாரம், மின்னணுவியல், வெப்பம், ஒளி, ஒலி.

வேதியியல்: தனிமங்கள், சேர்மங்கள், அமிலம், காரம், பலவகை உப்புகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லிகள்.

தாவரவியல்: உயிர் அறிவியலின் கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடுகள், உணவு முறைகள்.

விலங்கியல்: விலங்குகளின் ரத்தம், இனப்பெருக்கம், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், மனிதர்களைப் பாதிக்கும் தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், தடுப்பு முறைகள் மற்றும் குணப்படுத்தும் வழிகள்.

அலகு-2 (நடப்பு நிகழ்ச்சிகள்)

வரலாறு: சமீபத்தில் நடந்த சம்பவங்கள், தேசிய அடையாளச் சின்னங்கள், அனைத்து மாநிலங்கள் பற்றிய வரலாறுகள், சமீபத்தில் செய்தித்தாள்களில் வரப்பெற்ற முக்கிய மனிதர்கள் மற்றும் இடங்கள் பற்றிய செய்திகள், விளையாட்டுச் செய்திகள், பிரபலமான புத்தகங்கள், அவற்றின் ஆசிரியர்கள், இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் வழங்கப்படும் பரிசுகள்.

அரசியல் அறிவியல்: பொதுத்தேர்தல், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் விழிப்புணர்வு, ஆட்சியாளர்களின் நிர்வாக முறை, அரசின் நலத்திட்டங் களும், அவற்றின் பயன்களும்.

புவியியல்: இந்திய மாநிலங்கள், தேசிய நிலக்குறியீடுகள்.

பொருளாதாரம்: தற்போதைய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்.

அறிவியல்: அறியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தற்போதைய கண்டுபிடிப்புகள்.

அலகு 3 (புவியியல்)

பூமி, பேரண்டம், சூரிய மண்டல அமைப்பு, பருவமழை, பருவக்காற்று, தட்பவெப்பநிலைகள், இந்திய நீர்வளங்கள், ஆறுகள், நதிகள், இயற்கை வளங்கள், காடுகள், வனவிலங்குகள், வேளாண்மை தொழில்கள், போக்குவரத்து விவரங்கள், தகவல் தொடர்பு, மக்கள்தொகை பற்றிய முழு விவரங்கள், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்.

அலகு 4 (இந்திய, தமிழக வரலாறு- பண்பாடு)

சிந்துச் சமவெளி நாகரீகம், குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகரம், பாமினிய அரசுகள், தென்னிந்திய வரலாறு, தமிழர் களின் பாரம்பரியம், பண்பாடு, சுதந்திரத் துக்குப் பின் இந்தியாவில் நிகழ்ந்தவை, திராவிட இயக்கங்கள், பகுத்தறிவாளர் கள், தமிழக அரசியல் கட்சிகள்.

அலகு 5 (இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்)

அரசியலமைப்பின் முகவுரை, முக்கிய அம்சங்கள், மத்திய-மாநில அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள், குடி யுரிமை, அடிப்படை உரிமைகள், மக்களின் கடமைகள், மனித உரிமைச் சட்டங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துராஜ் சட்டம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான நீதித்துறை அமைப்புகள், அரசின் அலுவல்மொழி, பொது வாழ்வில் நிகழும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், மத்திய-மாநில ஊழல் தடுப்பு அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

அலகு 6 (இந்திய பொருளாதாரம்)

இந்திய பொருளாதாரத்தின் அமைப்பு, ஐந்தாண்டுத் திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, கிராமம் சார்ந்த திட்டங்கள், சமூகப் பிரச்சினைகள், கிராம மக்கள் நலன், வேலைவாய்ப்பு, வறுமை.

அலகு 7 (இந்திய தேசிய இயக்கம்)

இந்திய தேசியத் தலைவர்களான காந்திஜி, நேரு, தாகூர் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகள், இந்திய விடுதலைக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், தியாகங்கள், தமிழ்நாடு சுந்திரப் போராட்ட வீரர்களான ராஜாஜி, வ.உ.சி., பெரியார், பாரதியார் மற்றும் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற விவரங்கள் தொடர்பானவை.

அலகு 8 (திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை)

கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு தகவல்களைத் தொகுப்பது, மாற்றுவது, அட்டவணை, வரைபடங்கள், படங்கள் தயாரிப்பது, கணக்கியலின் அங்கங்களான சுருக்குதல், சதவீதம், தனிவட்டி, கூட்டுவட்டி, அதிகம் மற்றும் குறைந்த வகு எண் காணுதல், பரப்பளவு, கனஅளவு, காலமும் வேலையும், எண்களின் தொடக்க வரிசைகள், எண்கள் பகுத்தாய்வு.


 

ஹோமி ஜஹாங்கீர் பாபா 

இந்திய அணுவியல் துறை தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபா பற்றிய அரிய முத்துகள்.

• மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட அத்தனை புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டார்.

• பட்டப் படிப்பு முடித்தவுடன் மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் படிப்பதற்காக அவரை பெற்றோர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவருக்கு இயற்பியலில்தான் ஆர்வம். அப்பாவிடம் அணு இயற்பியல் படிக்க விரும்புவதாக கூறினார்.

• அதன்படியே, பாபாவை அவரது அப்பா இயற்பியல் படிக்க வைத்தார். 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

• 1934-ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இந்த கால கட்டத்தில் இவர் நீல்ஸ் போர் என்பவருடன் மேற்கொண்ட ஆய்வுகள் குவாண்டம் கோட்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மேலும் வால்டர் ஹைட்லருடன் மேற்கொண்ட இவரது ஆராய்ச்சிதான் காஸ்மிக் கதிர்களைப் புரிந்துகொள்வதில் மிக முக்கிய பங்கு வகித்தது.

• இந்தியா திரும்பிய அவர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் துறை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கினார்.

• அமெரிக்காவில், 1942-ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாட்டாவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, மும்பையில் இதற்கான ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு நிலையத்தின் இயக்குநராக ஹோமிபாபா பொறுப் பேற்றார்.

• இந்தியா விடுதலை அடைந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள இந்திய விஞ்ஞானிகளை தாயகம் திரும்பும்படி கேட்டுக்கொண்டார். இவரது அழைப்பை ஏற்று இந்தியா வந்த அவர்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி வளர்ச்சிக்காக பணிபுரியத் தொடங்கினர்.

• அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.

• 1955ல் ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதல் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மேலும், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவை அடுத்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளை விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார்.

• ஜஹாங்கீர் ஹோமி பாபா ஸ்விட்சர்லாந்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 56-ஆவது வயதில் மரணமடைந்தார்.மனம் தளராமல் போராடி படிப்பில் சாதித்த பார்வையற்ற மாணவி

 திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவி எஸ்.சகாய மனோஜிக்கு பட்டமளிப்பு விழாவின்போது தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மனம் தளராமல் போராடி படிப்பில் சாதித்த அந்த மாணவிக்கு, அமைச்சர் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகேயுள்ள சின்னவிளை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சகாயதாசன்- மங்களமேரி தம்பதியரின் மூத்த மகள் சகாய மனோஜி (21). நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி யில் பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா பாடம் பயின்றார். அப்பாடத்தில் இவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவி சகாய மனோஜிக்கு தங்கப்பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் பாராட்டினார்.

தற்போது கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். பயின்று வருகிறார். சகாய மனோஜிக்கு 9 வயது இருக்கும்போது மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து அவரது இரு கண்களிலும் பார்வை பறிபோனது. எனினும், படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி கற்றார். 10-ம் வகுப்பு தேர்வில் 395 மதிப்பெண்களையும், 12-ம் வகுப்பு தேர்வில் 1,040 மதிப்பெண்களையும் பெற்றிருந்தார். கல்லூரி கல்வியை நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார்.

பார்வையற்றவர் என்பதற்காக பிரத்யேக வகுப்புகளுக்கு இவர் செல்லவில்லை. வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கேட்டறிந்து, தனது கேள்வி ஞானத்தால் தேர்வுகளில் சிறப்பிடத்தை பிடித்தார். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை சி.டி.யில் பதிவு செய்து, வீட்டில் அதை கேட்டு படித்ததாகவும், பிரெய்லி முறையிலான புத்தகங்களையும் வாங்கி படித்ததாகவும் சகாய மனோஜி தெரிவித்தார்.

தங்கப்பதக்கம் பெற்றது குறித்து அவர் கூறும்போது, `இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. பி.எட். படித்தபின் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்று தெரிவித்தார்.கருப்பு பணம் என்றால் என்ன?

வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு, பணப் பரிவர்த்தனை மூலமே நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு மளிகைப் பொருட்கள் வாங்கு கிறோம். அதற்குப் பதிலாகப் பணம் கொடுக் கிறோம். அதற்குப் பெரும்பாலும் ரசீது இல்லை. அந்தப் பணம் கருப்பு பணமாக மாறுகிறது. இதுதவிர ரியல் எஸ்டேட், உற்பத்தி பொருட்கள், தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கு வதில் ஏராளமான கருப்பு பணம் புழங்குவதாகக் கூறப்படுகிறது. கருப்பு பணம் எப்படி கை மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

ரசீது இல்லாமல் புழங்கும் கருப்பு பணம்

ஒரு நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கான பொருட்களை இன்னொரு நிறுவனத்துக்குச் சப்ளை செய்கிறது. ஆனால், அதற்குரிய ரசீதை வழங்க வில்லை. அதன்பிறகு சப்ளை செய்த பொருட்களின் மதிப்பில் ரூ.60 ஆயிரத்துக்கு மட்டும் ரசீது வழங்குகிறது.

பொருட்களை வாங்கிய நிறுவனம், ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறது. ரூ.20 ஆயிரத்தை வரியாகக் கழித்து விடுகிறது.

ஒரு மாதம் கழித்து, மீதித் தொகை ரூ.40 ஆயிரம், பொருட்கள் சப்ளை செய்த நிறுவனத்துக்கு பணமாகக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் கணக்கிலேயே வராது. இதுதான் கருப்பு பணம்.

தனியார் நிறுவனங்களில் முதலீடு

ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் ரூ.10 கோடி கடனை பணமாகக் கொடுக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட நிறுவனம், தனது விற்பனையாளர்களுக்கு பணமாக முதலீடு செய்கிறது. கடைசியில் அந்த நிறுவனம் நுகர்வோர்களிடம் இருந்து காசோலையாகப் பணத்தைத் திரும்பப் பெறுகிறது. அதன்பின், 10 கோடி ரூபாய் கடனாக வழங்கியவர், பணத்துக்குப் பதில் நிறுவனத்திடமிருந்து பங்குகளாக வாங்கிக் கொள்கிறார்.

ரியல் எஸ்டேட்

ஒருவர் தன்னுடைய நிலத்தை ரூ.20 கோடிக்கு இன்னொருவருக்கு விற்கிறார். அதில் 50 சதவீதத் தொகையை (ரூ.10 கோடியை மட்டும்) பணமாகப் பெற்றுக் கொள்கிறார். மீதி 50 சதவீதத் தொகையை காசோலையாகப் பெறுகிறார். ரூ.10 கோடிக்கான காசோலையை வங்கியில் செலுத்தி, ஒரு பெருந் தொகையை பணமாக எடுத்துக் கொள்கிறார். மீதியை தங்கம் வர்த்தகம் செய்வதற்காக வங்கியில் இருந்து டிமாண்ட் டிராப்டாக பெற்றுக் கொள்கிறார்.

இந்த விஷயத்தில் முதலில் பணமாகப் பெற்ற ரூ.10 கோடி அரசுக்கு கணக்குக் காட்டப்படாமல் போகும். அது கருப்பு பணமாக மாறி விடும். இப்படி பல வழிகளில் அரசுக்குக் கணக்குக் காட்டாமல், வரியைத் தவிர்க்க சேர்க்கப்படும் பணம்தான் கருப்பு பணம்.நெட்பேக் கட்டண உயர்வை கண்டித்து செல்போன் இணைய சேவையை புறக்கணிக்க வலைதளத்தில் கோரிக்கை


செல்போனில் இணைய சேவைக்கான (நெட் பேக்) பயன்பாட்டுக் கட்டணம் நேரடியாக வும், மறைமுகமாகவும் தொடர்ந்து உயர்த்தப் பட்டு வருவதால் அக்டோபர் 31-ம் தேதிக் குப் பிறகு அதைப் புறக்கணிக்க கோரும் பதிவு சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல் போன்களை பயன்படுத்துபவர்களின் எண் ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதை உணர்ந்த சில செல்போன் சேவை நிறுவனங்கள் அண்மைக்காலமாக, 'நெட் பேக்' கட்டணத்தை ஓசையின்றி உயர்த்தி வருகிறது.

செல்போன் சேவை நிறுவனங்களின் இந்த போக்கைக் கண்டித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துகளைக் காட்டமாக பதிவு செய்துவருகின்றனர். "மொபைல்கள் மூலம் இணையதளத்தை பார்ப்பதற்கான கட்டணம் கடந்த 4 மாதங்களில் 90 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் 3 நிறுவனங்கள் இணைய பேக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் மொபைல் இன்டர்நெட் சந்தையில் 50 சதவிகிதத்துக்கும் அதிக பங்கை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது" என்று பேஸ்புக்கில் பயன்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களின் இந்தக் குற்றச்சாட்டை செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரர்களும் ஆமோதிக்கின்றனர். இந்நிலையில் அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகு செல்போன் நெட்பேக்-ஐ புறக்கணிக்கவேண்டும் என்று 'வாட்ஸ் ஆப்' போன்ற செல்போன் செயலி மூலமாகவும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அதில், "இங்கிலாந்தில், ஒரு ரொட்டி நிறுவனம் விலையை அடிக்கடி உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, அந்த ரொட்டியை வாங்காமல் புறக்கணிப்பது என அங்குள்ள மக்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து, அந்த நிறுவனம் இறங்கி வந்தது. அதுபோல், செல்போன் இணைப்பை அளிக்கும் நிறுவனங்கள், கட்டணத்தை குறைக்க முடிவெடுக்கும் வரை அவ்வசதியைப் புறக்கணிப்போம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் படுவேகமாக பரவிவருகிறது.

வாடிக்கையாளர்களின் இந்தப் புதுமையான போராட்டத்துக்கு அந்நிறுவனங்கள் அசைந்து கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


ஐ.ஐ.டி. மாணவிகள் சேர்வதற்காக உதான் திட்டத்தில் பயிற்சி அளிக்கக்கூடிய மையங்கள் தமிழ்நாட்டில் கூடுதலாகதேவை

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. நிறுவனங்களில்மாணவிகள் சேர்வதற்காக உதான் திட்டத்தில்
பயிற்சி அளிக்கக்கூடிய மையங்கள்தமிழ்நாட்டில் கூடுதலாகதேவை என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ளகடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரிகளானஇந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்(ஐ.ஐ.டி.க்கள்) மற்றும் தேசிய தொழில்நுட்பநிறுவனங்கள் (என்.ஐ.டி.க்கள்) போன்றவற்றில் திறமை மிக்க மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்காக தேர்வு எழுத 'உதான்' என்ற புதிய திட்டத்தை 'சி.பி.எஸ்.இ.'அறிவித்துள்ளதை அறிவேன். இந்த திட்டத்தின்கீழ் அனைத்து கல்வி வாரியங்களில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என்.ஐ.டி.க்களில் சேர சிறப்பு ஆன்லைன் மூலம்நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முன்னிலை அதற்கான விண்ணப்ப படிவம் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பயிற்சி வகுப்பு மையங்களில் கிடைக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 நகரங்களில் மட்டுமே பயிற்சி மையங்கள் உள்ளன.
இங்கு இந்த திட்டத்தின்கீழ் தகுதி பெற்ற மாணவிகள் அதிக அளவில் உள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள 151 பயிற்சி வகுப்பு மையங்களில் தமிழ்நாட்டுக்கு 2 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி மையங்கள் போதாது அதேநேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு பல மையங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மாணவிகளை கொண்டபெரிய மாநிலமான தமிழகத்துக்கு 2 மையங்கள் மட்டும் போதுமானது அல்ல. மேலும் பயிற்சி மைய வகுப்புகளுக்கு செல்ல நீண்டதூரம் பயணம் செய்ய அச்சம் நிலவுவதால் தகுதியானமாணவிகள் பங்கேற்பது குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் சென்னை மிகப்பெரிய நகரமாகும். மெட்ரோ பாலிடன் நகரமான அது பயிற்சி மைய பட்டியலில்இடம்பெறவில்லை. எனவே தகுதியான மாணவிகள் பலர் பங்கேற்க வாய்ப்பில்லாமல் போகும். எனவே தகுதியுள்ளமாணவிகள் பங்கேற்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கவேண்டும். விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கவேண்டும் எனவே, உதான் திட்டத்தில் மாணவிகள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் தமிழ்நாட்டில்சென்னையை சேர்த்து அதிக இடங்களில் பயிற்சி மையம் அமைக்கவேண்டும். மேலும், அதிக அளவில் மாணவிகள்சேரும் வகையில் அதற்கான விண்ணப்பிக்கும் தேதியை நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அரையாண்டுத் தேர்வு பிளஸ் 2, பத்தாம்வகுப்பு தேர்வு கால அட்டவணை

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம்வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் எனபள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மாநிலம்முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20
லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 11 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 15 திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 17 புதன்கிழமை -
கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல்,
நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்,
உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி,
அரசியல்அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)

டிசம்பர் 18 வியாழக்கிழமை -
இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல்மெஷினிஸ்ட்,
எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில்,
எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ்,
ஆட்டோ மெக்கானிக்,டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை -
தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம்,
கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்),
தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 22 திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல்

டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்
கணிதம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 15 திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 17 புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - கணிதம்
டிசம்பர் 22 திங்கள்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்

அரையாண்டுத் தேர்வு பிளஸ் 2, பத்தாம்வகுப்பு தேர்வு கால அட்டவணை

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம்வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் எனபள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மாநிலம்முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20
லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:

டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 11 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 15 திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

டிசம்பர் 17 புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல்,
நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்,
உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி,
அரசியல்அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)
டிசம்பர் 18 வியாழக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல்மெஷினிஸ்ட்,
எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில்,
எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ்,
ஆட்டோ மெக்கானிக்,டெக்ஸ்டைல் டெக்னாலஜி. டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம்,
கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்),
தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 22 திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல்

டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்
கணிதம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 15 திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 17 புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - கணிதம்
டிசம்பர் 22 திங்கள்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்:தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை!

கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்அண்மையில் வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள்,தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. முதல் தாள், இரண்டாம் தாள்இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 89 பேர் மட்டுமே! எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள், எத்தனை பேர் எழுதினார்கள் என்கிறபுள்ளிவிவரங்களுக்குள் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. எந்தெந்தமாவட்டங்களிலிருக்கும், எந்தெந்த கல்வியியல் கல்லூரிகளில் இந்த 89 பேர்படித்தார்கள் என்பதெல்லாம்கூட இந்த இடத்திற்கு தேவையில்லாதது. இந்தநேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் - நாம் அகில இந்திய அளவிலான ஆசிரியர் தொழில்வாய்ப்புகளைத் தவறவிடுகிறோம் என்பதை மட்டுமே!

தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், எந்த ஊரிலும் சிறந்தஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்றநிலைமை இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. பிறமாநிலங்களுக்கு மட்டுமன்றி, பிலிப்பின்ஸ், ஆப்பிரிக்க நாடுகள்போன்றவற்றுக்குக்கூட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்என்று சொல்வதே ஒரு தகுதியாக அறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. கணித ஆசிரியர்களாக, அறிவியல் ஆசிரியர்களாக, ஆங்கில ஆசிரியர்களாக தமிழர்கள் பலதிசைகளிலும் பறந்து சென்று பணியாற்றிய காலம் அது. கேரளத்தவர் செவிலியர்களாக உலகம் முழுதும் வலம் வருவதைப்போல,தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அண்டை நாடுகளிலும்ஆசிரியர்களாக வலம் வந்தனர். இப்போதும் அந்த வாசல்கள்திறந்தே இருக்கின்றன. ஆனால், செல்வதற்குத்தான் ஆசிரியர்கள் இல்லை.
இந்தியா முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரியவித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியராகச் சேரும் வாய்ப்பை தமிழர்கள் ஏன் இழக்க வேண்டும்?

தமிழ்நாட்டின் தனியார் கல்வியியல் கல்லூரிகள் பலவும், பி.எட் பட்டம்இருந்தாலே போதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்துவிட்டு, அரசியல் செல்வாக்கினால் அரசுப் பள்ளி களில் சேர்ந்துவிடலாம் என்று எண்ணிய காலகட்டத்தில் தோன்றியவை.
இவற்றில் பலவும் பட்டம் வழங்கும் நிறுவனங்களாக மட்டுமே செயல்பட்டவை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர்பணி கிடைக்கும் என்ற நிலை உருவான பிறகு, தமிழகக் கல்வி உலகில் புதிய மாற்றம் ஏற்பட்டது. அரசியல் செல்வாக்குகள் மூலம் பணி நியமனம் பெறும்தகுதியில்லாத, சம்பளம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஆசிரியர்கள்எண்ணிக்கை கணிசமாகக் குறையும், தரமான ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் வலம் வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், தகுதியை உயர்த்தும், உயர்த்திக்கொள்ளும் முயற்சிகளில் யாரும்இறங்கவில்லை. தகுதித் தேர்வை தங்கள் தகுதிக்கு ஏற்ப குறைக்கும் நடவடிக்கைகளைத்தான் பல வகைகளிலும் காண்கிறோம். தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்கக் கோரியும், சிறப்புச் சலுகை தரக்கூடாது என்றும், இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப் படவில்லை என்றும் ஒவ்வொரு காரணத்துக்கும் ஒரு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் பின்னணி, பெரும்பான்மையான கல்வியியல் கல்லூரிகளின் தாளாளர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதுதான். தமிழ்நாட்டை விட்டால் வேறு எங்கும் நம்மால் ஆசிரியர் தொழில் செய்ய முடியாது என்கிற தாழ்வு மனப்பான்மையில் ஆசி ரியர் பட்டம் பெற்றவர்கள் சிக்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் தங்களை இயக்குபவர்களின் கைப்பாவைகளாக மாறிப்போகிறார்கள். இன்றைய தேவை, கல்வியியல் நிறுவனங்களைத் தரமானவையாக ஆக்குவதும், அவற்றின் அனுமதியை மறுபரிசீலனைக்கு உள்படுத்துவதும்தான். தமிழ்நாட்டில் புற்றீசல் போலத் தோன்றியுள்ள கல்வியியல் கல்லூரிகளை முறைப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டாகவேண்டும். லாபம் கருதித் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் (போதிய வருவாய் இல்லை என்பதற்காக பி.எட். தொடங்கிய பல்கலைக்கழகங்கள் உள்பட) அனைத்தையும் ஆய்வுக்கு உள்படுத்தி, தரமில்லாத, தேர்ச்சி விகிதம் குறைவான, பயிற்றுநர்கள் இல்லாத கல்வியியல் கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்வதோடு பாடத்திட்டம், பயிற்சி அனைத்தையும்வலுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கல்வியியல் கல்லூரிகள் தரமானவையாக இருக்குமெனில், தங்கள் மாணவர்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகள் மட்டுமே கதி என்று இல்லாமல், இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் தமிழர்களுக்கு உள்ள கற்பித்தல் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளதுணை புரியும். தமிழகத்தில் பணியாற்றுவோரும், அடுத்த தலைமுறைக்கு தரமான கல்வியைக் கற்பிப்பார்கள்.

Thanks:DINAMANI

மாணவனின் கன்னத்தில் குத்தி, காதை திருகிய ஆசிரியை வழக்கில் சமரசம்

மாணவனின் கன்னத்தில் குத்தி, காதை திருகிய ஆசிரியை, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர, முன் வந்துள்ளார். இதையடுத்து, மாணவனின் தாயார் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்றத்தில் பைசல் செய்யப்பட்டது.
சென்னை, மயிலாப்பூர் தனியார் பள்ளி ஒன்றில்,ராமகவுரி என்பவர், ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதே பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனின் கன்னத்தில் நகத்தால் குத்தியதாகவும்; காதை பிடித்து திருகியதாகவும், அதனால் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக, ஆசிரியை ரமாகவுரி மீது மாணவனின் தாயார் மெகருன்னிசா புகார் அளித்தார். கடந்த 2007 மார்ச் மாதம், சம்பவம் நடந்தது. இதையடுத்து,ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், மாநில மனித உரிமை ஆணையத்தில்,மெகருன்னிசா புகார் அளித்தார். அதை விசாரித்த ஆணையம், மனித உரிமை மீறலுக்காக, 1,000 ரூபாய், இழப்பீடு வழங்க, தனியார் பள்ளிக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவை, ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆசிரியை ரமாகவுரி, மனு தாக்கல்செய்தார். இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி, மெகருன்னிசாவும், மனு தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களும், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. ஆசிரியை சார்பில், வழக்கறிஞர் கே.ஆர்.ரமேஷ்குமார், மெகருன்னிசா சார்பில்,வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி, ஆஜராகினர்.
குற்ற நடவடிக்கை மனுக்களை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: ஆசிரியை மீதான புகாரில் பேரில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கடிதமும், ஆசிரியை அளித்துள்ளார். அதோடு நிற்காமல், ஆசிரியைக்கு எதிராக, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்ற நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அவர் சந்தித்து வருகிறார். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியுடன், இந்த பிரச்னைக்கு, சுமுகதீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, மாணவனின் பெயரில், 50 ஆயிரம் ரூபாயை, ஆசிரியை ரமாகவுரி, வழங்குவார்.அதன்மூலம், இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். நிலுவையில் உள்ள வழக்கை, சமாதானமாக முடித்துக் கொள்ள, சைதை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை, ஆசிரியை அணுக வேண்டும். மாணவனின் தாயார், சமரச நடவடிக்கைக்கு உதவ வேண்டும்.ஆறு வாரங்களுக்குள், 50 ஆயிரம் ரூபாய்க்கான, டி.டி.,யை, இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் சமரசம் ஏற்பட்டதால், இத்துடன் பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'
என, கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை:

கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு, கல்வி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், நவம்பர், 2ம் தேதி முதல், பிரசாரம் செய்கிறது.இறுதியில், டிசம்பர், 4ம் தேதி, மத்திய பிரதேச தலைநகர், போபாலில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம்நடக்கிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, கல்வி ஆர்வலர்கள் பலர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில்,பல்வேறு இடங்களில், பிரசாரம் நடக்கிறது.
பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும்; கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது; மாவட்டந்தோறும், மத்திய பல்கலை துவக்க வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள்,வலியுறுத்தப்படும்.
இவ்வாறு, பிரின்ஸ் கூறியுள்ளார்.

கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு:டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் அனுப்ப வேண்டாம்!

'கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில்
மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)கேட்டுக் கொண்டுள்ளது.

டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர்காலி பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர். இந்த வேலை தொடர்பாக, டி.ஆர்.பி., விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை. எனவே,பதிவுதாரர்கள், டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கானகலந்தாய்வு :248 பேருக்கு பதவி உயர்வு

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான
கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், இணையதள வழியில், நேற்று நடந்தது. இதில், 248 பேருக்கு,பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில், 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.இந்த பள்ளிகளுக்கு, புதிய தலைமை ஆசிரியர் நியமனம் மற்றும் பிற பள்ளிகளில் காலியாகஇருந்த, 248 இடங்களை நிரப்ப, நேற்று, இணையதள வழியில் கலந்தாய்வு நடந்தது. இதில், 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்; காலியாக இருந்த, 248 இடங்களும் நிரப்பப்பட்டன.

இன்று,450 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியராக இருந்த, 100 பேருக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியவை நடக்கிறது.

புதன், 29 அக்டோபர், 2014

குரூப்-4 தேர்வுக்கான.. டிப்ஸ்.. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில் நுட்பத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.

குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன வெனில் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எனவே, போட்டி கடுமையாக இருக்கும்.

எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது. அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண். பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது. அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.

பெரும்பாலான வி்ண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாண வர்கள் பொது தமிழ் பாடத் தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.


டிப்ஸ்.. டிப்ஸ்..

• அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பல்கலைக்கழக தேர்வுகள் போல் எண்ணி படிக்கக் கூடாது. இங்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வேலை. எனவே, அதிக மதிப்பெண் பெற விரிவாக படிக்க வேண்டியது அவசியம்.

• கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து தற்போது நாம் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.

• முன்பு தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களை அணுகி, எந்தெந்த புத்தகங்கள், பொது அறிவு, மாத, வார இதழ்கள், பத்திரிகைகள் உபயோகமாக இருந்தன என்பதை கேட்டு அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.

• என்னதான் முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தால் உடனுக்குடன் ஏற்படும் சந்தேகமும், தயக்கமும் நீங்கிவிடும். மாதிரித் தேர்வுகளும், முனைப்போடு தன்னுடன் படிக்கும் பிற பயிற்சியாளர்களின் உத்வேகமும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் அதிகம்.

• தற்போதைய கேள்விகள், கடுமையாகவும், யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே, இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒரு நாளுக்கு 5 மணி நேரம் படிக்க ஆரம்பித்து 8 மணி நேரம் வரை படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

• உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 01.11.2014 அன்று பதவி உயர்வு கலந்தாய்வு

தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள்,தொடக்கப்பள்ளிகள் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளதென தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ் கூறினார்.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு தடை இன்று நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது

2014-15ம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்று நீதிமன்ற தடையால் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்பொழுது அத்தடை இன்று நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதால் விரைவில் அப்பணியிடத்தில் ஏற்கெனவே கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் விரைவில் சேர உள்ளதாக வெளியாகியுள்ளத

News update இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு.

SSTA சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளன.அதில் ஒன்று (WP10546/2014) இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் இறுதிகட்ட விசாரணை பட்டியலில் இடம்பெற்றிருந்தது எனினும் அவ்வழக்கு விசாரணை நிலயை எட்டவில்லை.மீண்டும் அடுத்த வாரம் புதன்கிழமை விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

DSE NOTIFICATION :PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION 30.10.2014 10 AM AT CEO OFFICE

2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 30-ந்தேதி காலை 10மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

DSE NOTIFICATION :உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல்

2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கும் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

DSE NOTIFICATION: BT TO PGT PROMOTION BT TO PGT PROMOTION

DSE NOTIFICATION: BT TO PGT PROMOTION BT TO PGT PROMOTION

2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 900 முதுகலை ஆசிரியர்பணியிடங்களில் 450 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. எஞ்சியவை நேரடிநியமனம் மூலம் நிரப்பப்படும்.450 பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

20000 பேர் கணினி அறிவியல் /பி.எட் பட்டங்கள் பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு இன்று(29.10.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது

			HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH  9.   MP.5/2014       SPL. GOVT. PLEADER      MR.R.SASEETHARAN                (Service)                                          AND          To Vacate the interim order     MP.4/2014       DT.20/06/2014 MP.2/2014 IN WP.15925/2014                          SPL. GOVT. PLEADER      DO                   AND          To Implead     MP.3/2014       M/S.G.SANKARAN        MR.K.SASEETHARAN FOR R1 TO 3                 S.NEDUNCHEZHIYAN       SPL GP (EDN) FOR R4 & 5        AND          For Direction     MP.2/2014       IN WP.15925/2014       SPL GP (EDN) FOR RESPONDENTS                 MR.R.SASEETHARAN                           AND          For Injunction     MP.1/2014       IN WP.16217 TO 16219/2014   SPL GP FOR RR1 TO 4                      M/S.J.SELVARAJAN       COUNTER FILED FOR RR1 TO 4                  M.KULANDAIVELU & A.PRISKHAN  IN WP.NOS.16217 TO 16219/2014     to           For Injunction     MP.1/2014       - DO -                            TO IMPLEAD IN WP 34599/2012  
 

30, 31ம் தேதிகளில் "தலைமை ஆசிரியர்" கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு, வரும், 30,31ம் தேதிகளில் நடக்கிறது.
பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த பள்ளி களில், தலைமை ஆசிரியர் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, வரும், 30ம்தேதியும், தற்போது இந்த பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர் (உயர்நிலைப் பள்ளி) பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, 31ம் தேதியும் நடக்கிறது. இணையதள வழியில், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில், காலை, 10:00 மணி முதல், கலந்தாய்வு நடக்கும்.
மேலும், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில், 450 முதுகலை ஆசிரியரை, பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, 31ம் தேதி நடக்கும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது

பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2014-2015 கல்வி ஆண்டில் 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சில
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன.தரம் உயர்த்தப்பட்ட
மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலைமை ஆசிரியர் காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும்
தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது.
இதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் 100அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது. இந்தகலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த தகவலை வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் நியமன அறிவிப்புக்குத் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை

ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும்
முன்னுரிமை அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்
கிளை இடைக்காலத் தடை விதித்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்தைச் சேர்ந்த ஏ.சுடலைமணி தாக்கல் செய்தமனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இவ்வாறு உத்தரவிட்டார். மனு விவரம்: நான் சீர்மரபினர் பிரிவுக்கு உள்பட்ட மறவர் வகுப்பைச் சேர்ந்தவன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 98 மதிப்பெண்
பெற்றுள்ளேன். இடைநிலை ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்நிலையில் கள்ளர்சீரமைப்புத்துறை பள்ளிகளில் 64 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 669 ஆசிரியர்பணியிடங்களை நிரப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பிரமலை கள்ளர் சமூகத்தினருக்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, அருந்ததியினர்
வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து பணிகள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 1993-இல் தமிழக அரசு நிறைவேற்றிய இடஒதுக்கீடு சட்டத்துக்கு முரணாக உள்ளது. நான் 98 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் எனக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது எனகுறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2014 ஆகஸ்ட் 21 ஆம்தேதி அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மனுவுக்கு 10 நாள்களில்பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

திங்கள், 27 அக்டோபர், 2014

பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள 652 தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடங்கள் ஆசிரியர்தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது. இதற்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

# இப்பணிக்கு பி.எஸ்சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பத்துடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும்.

#முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைத்து பதிவுதாரர்களும்,

#முன்னுரிமையற்ற பிரிவில்

எஸ்.டி., பிரிவினர் 3.9.2011 வரையிலும்,
எஸ்.சி.,அருந்ததியினர் 20.12.2010 வரையிலும்,
பி.சி., முஸ்லிம் 17.8.2009 வரையிலும்,
எஸ்.சி.,-எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட இதர பிரிவினர் 22.8.2008 வரையிலும்
பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில்தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை வரும் 31.10.2014ம் தேதிக்குள் நேரில் சென்று உறுதி செய்துக் கொள்ளவேண்டும்.

652 Computer Science Cut Off Seniority

Non Priority
MBC/BC/OC- 22.08.2008
BCM- 17.8.2009
SC 24.4.2008.
SCA - 20.12.2010.
ST - 3.9.2011.
PH: 24.06.2014.

Priority

All candidates

இந்த மாத இறுதிக்குள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் -பள்ளிக் கல்வி இயக்குநர்

இந்த மாத இறுதிக்குள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் -பள்ளிக் கல்வி இயக்குநர்

நிகழாண்டு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 50 பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட20 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பு அக்டோபர் 29-ஆம்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்தச் சங்கம் அறிவித்தது.
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன்சென்னையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்த மாத இறுதிக்குள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 50 பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும்எனவும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்காக சிறப்பு மாறுதல் கலந்தாய்வு நடத்துவதாகவும் ராமேஸ்வர முருகன் உறுதியளித்துள்ளார். மேலும், இதர கோரிக்கைகள்சார்பாக அரசிடம் எடுத்துக்கூறி நிறைவேற்றித் தருவதாக அவர் தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று தலைமை ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தாற்காலிகமாக
தள்ளி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறினார்.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக பதவி உயர்வு

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக பதவி உயர்வு
அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக,பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நடந்தது. காலியாக உள்ள, 67இடங்களை நிரப்ப, பணிமூப்புஅடிப்படையில், 160 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 67 பேர், பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும், பதவி உயர்வுக்கான உத்தரவுகளை,தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழங்கினார். பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும் என,இயக்குனர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம்,பாலக்கோடு வட்டாரப்பள்ளிகளுக்கு மட்டும் மழைகாரணமாக விடுமுறை அறிவிப்பு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப கோரிக்கை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என,தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்
தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை மேம்பாலம்
அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார். நிர்வாகி ரமேஷ்,மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலைவகித்தார்.

#முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும். ஒளிமறைவு இல்லாத கலந்தாய்வு நடத்த வேண்டும்.
# அகவிலைப்படி,50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவேண்டும்.
# தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க, கடுமையாக உழைக்கும் நிலையில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை,இரவிலும் நீட்டிக்க வேண்டும், என்று கட்டாயப்படுத்துவதை முதன்மை கல்வி அலுவலர் தவிர்க்க வேண்டும்.
# தேர்வு காலங்களில் மற்றும் ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியின்போது,பணி மூப்பு பதிவேடு முன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பராமரித்து அனைவரின் பார்வைக்கு வைக்க வேண்டும்,

என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று கனமழை காரணமாக விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்..

வெள்ளி, 24 அக்டோபர், 2014

கூடுதல் கல்வி :ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம்உத்தரவு!

கூடுதல் கல்வி :ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம்உத்தரவு!

'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்குவழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1987 செப்டம்பரில், இடைநிலை ஆசிரியராக, மீனலோசினி என்பவர்,நியமிக்கப்பட்டார். அப்போது, பி.ஏ., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தார். இடைநிலை ஆசிரியர்தகுதி உள்ளவர்கள்கிடைக்காததால், பட்டதாரி ஆசிரியரான மீனலோசினியை, இடைநிலை ஆசிரியராக நியமித்தனர்.ஆனால், பட்டப் படிப்பு மற்றும் பி.எட்., படிப்புக்கு, ஊக்க ஊதியம் கோரக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில், நியமிக்கப்பட்டார்.
பணி நியமனத்துக்குப் பின், எம்.எட்., மற்றும் எம்.ஏ., பட்டங்களை பெற்றார். அதற்காக, ஊக்க ஊதியம், 1990,1999, மீனலோசினிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2002, செப்டம்பரில், தணிக்கையின் போது, 'கூடுதல்கல்வி தகுதி பெற்ற, மீனலோசினிக்கு, ஊக்க ஊதியம் பெற உரிமையில்லை' எனக்கூறி, அதை திரும்பப் பெறுவதற்கானஉத்தரவை, கணக்கு அதிகாரி பிறப்பித்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மீனலோசினி, மனுத் தாக்கல்செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன் ஆஜரானார்.
மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
முதுகலை பட்டங்களான, எம்.ஏ., மற்றும் எம்.எட்.,படிப்புக்காக, ஊக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கூடுதல் தகுதி பெறுவதற்காக தான், ஊக்க ஊதியம்வழங்கப்படுகிறது. கடைசியில், மாணவர்களுக்கு தான், பலன் கிடைக்கிறது. கூடுதல் தகுதியை பெறுவதன் மூலம்கிடைக்கும் அறிவுத் திறனுக்காக, ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. மனுதாரர் பெற்ற, முதுகலை பட்டங்களுக்காக, ஊக்க ஊதியம் வழங்கப்படுவதுசரிதான். 'கூடுதல் தகுதிகளை பெற்றதற்காக,ஊக்க ஊதியம் பெற, மனுதாரருக்கு உரிமை இல்லை' என, தணிக்கைத் துறை ஆட்சேபனை தெரிவித்துள்ளது, துரதிர்ஷ்டவசமானது.
இடைநிலை ஆசிரியர் கிடைக்காததால் தான், பட்டதாரி ஆசிரியரை, அந்தப்பணிக்கு நியமித்துள்ளனர். அப்போது, பி.ஏ., பிஎட்., படிப்புக்கான, ஊக்க ஊதியம் கோர கூடாது என்ற நிபந்தனையின்பேரில், நியமனம் நடந்துள்ளது. அந்த நிபந்தனையை, முதுகலை பட்டங்களுக்கும் நீட்டிக்க முடியாது. எனவே,மனுதாரருக்கு வழங்கப்பட்ட, ஊக்க ஊதியத்தை, திரும்பப் பெறக் கூடாது. ஊதியத்தை மாற்றி நிர்ணயிக்கவும் கூடாது.
இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று(Oct 24, 2014)விடுமுறை.

கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று(Oct 24, 2014)விடுமுறை.
கன மழை காரணமாக சென்னை,திருவள்ளுர்,காஞ்சிபுரம், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

பள்ளிகளில் இரண்டாம் பருவம் தொடங்கிவிட்டது.... 300 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலைநீடித்து வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம்அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல இந்த ஆண்டு 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ளன.ஆனால், உயர்நிலைப் பள்ளிகளை பொருத்தவரை 300 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்இதுவரை நியமிக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலைப் பள்ளிகளில் ஒய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள்
பணியிடங்கள் அல்லது பணியில் இறந்துபோனால் ஏற்படும் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவார்கள். கடந்த ஆண்டு இது போல ஏற்பட்ட பணியிடங்களை டிசம்பரில் தான் நிரப்பினர். இந்த ஆண்டு தலைமைஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் வரை கணக்கெடுப்பு நடத்தி,ஜூலை மாதம் கவுன்சலிங் நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் 300 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிப்பதற்கானபணிஆணைகள் வழங்கப்படவில்லை.
பள்ளிகளில் இரண்டாம் பருவம் தொடங்கிவிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் மேனிலைப்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வை எழுத வேண்டிய நிலையில் உள்ளனர்.அவர்களை தேர்வுக்கு தயார் படுத்த தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த வழக்கு முடிந்து எப்போது தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதையும்தெளிவாக்கவில்லை.
வரும் டிசம்பர் மாதத்திலாவது பணி நியமன ஆணைகள் வழங்கினால் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய முடியும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் +2 படிக்காமல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்

25-10-2014 அன்று நடைபெறவுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள்மேல்நிலைக் கல்விக்கு இணையாக கருதி அவர்களும் உ.தொ.க.அ. கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் எனபள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் அரசாணை எண் 165 நாள் 15-10-2014 ஐ மேற்கோள்காட்டி அனைத்து மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை வழங்கியுள்ளார்.
முன்னுரிமையில் விடுபட்ட தகுதியுடையவர்கள் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். பேனலில் விடுபட்டவர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற்று கலந்தாய்வில்கலந்து கொள்ளலாம்.

வியாழன், 23 அக்டோபர், 2014

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-பொதுத் தமிழ் 3

இசையமுது
சொல்பொருள்
* வானப்புனல் - மழைநீர்
* வையத்து அமுது - உலகின் அமுதம்
* வையம் - உலகம்
* தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
* புனல் - நீர்
* பொடி - மகரந்தப் பொடி
* தழை - செடி
* தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையா வெப்பம்
* தழைத்தல் - கூடுதல், குறைதல்
* தழைக்கவும் - குறையவும்.

* புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் - பாரதிதாசன்.
* இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
* பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய
பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
* காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
* பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
* திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
* படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப
விளக்கு.
* கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
* கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
* இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
* பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.

பழமொழி நானூறு சொல்பொருள்:
* ஆற்றவும் - நிறைவாக
* நாற்றிசை - நான்கு + திசை
* ஆற்றுணா - ஆறு + உணா
* வழிநடை உணவு - இதனை கட்டுச்சோறு என இக்காலத்தில் கூறுவர்.
* பழமொழி நானூறு ஆசிரியர் - முன்றுறை அரையனார்.
* முன்றுறை என்பது ஊர்ப்பெயர்
* அரையன் - அரசனைக் குறிக்கும் சொல்
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - பழமொழி நானூறு.
* பழமொழியில் உள்ள பாடல்கள் - 400
* ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
.

பொருள்: * ஆற்றுணா வேண்டுவது இல் - "கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்"
* ஆற்றுணா - வழிநடை உணவு(கட்டுச்சோறு)
* குறிப்பு: ஆறு - ஒர் எண்(6), ஆறு - நதி, ஆறு - வழி.


உரைநடை: மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்
* நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவர்கர்லால்
நேரு
* நேருவின் துணைவியார் பெயர் - கமலா
* தாகூர் ஆரம்பித்த விஸ்வபாரதி கல்லூரி மேற்குவங்கத்தில் சாந்தி நிகேதன்
என்னுமிடத்தில் உள்ளது.
* நேரு தன் மகள் இந்திரா காந்திக்கும் 42 ஆண்டுகள்(1922-1964) கடிதம்
எழுதியுள்ளார்.
* பாடப்பகுதியில் உள்ள கடிதம் அல்மோரா மாவட்டச் சிறையில் இருக்கும்
போது 1935 பிப்ரவரி 22 அன்று எழுதப்பட்டது.
* நேருவின் கடிதம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
உள்ளது.
* நேரு விரும்பி படித்தது - ஆங்கில நூல்கள்.
* போரும் அமைதியும் யாருடைய நாவல் - டால் ஸ்டாய்
* அல்மோரா சிறை உள்ள இடம் - உத்திராஞ்சல்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உள்ள இடம் - இங்கிலாந்து.
* இந்திரா காந்தி படித்த பல்கலைக்கழகம் - விஸ்வபாரதி.
* தழை என்பதன் பொருள் - செடிகொடி. குறிப்பு:
* சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.
* மில்டன் - ஆங்கில கவிஞர்.
* பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாள்ர்.
* காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் (சகுந்தலம் நாடகம்).
* டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர் (போரும் அமைதியும் நாவல் -
உலகில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று என இதனை நேரு குறிப்பிடுகிறார்.
* பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர். * பேட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாள்ர், கல்வியாளர்(நேருவுக்கு மிகவும்பிடித்த கல்விச் சிந்தனையாளர்).
* கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
* நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் அதிகம் கூறியது - நூல்கள் பற்றி.

* ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை. அதனைப் புரிந்துகொள்ளவும்,
முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் - நேரு எவ்வளவு துன்பமான நேரத்திலும், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கைவிடக்
கூடாது என்று கடிதத்தின் மூலம் வாழ்க்கைப் பண்பை தெரிவித்தவர் - நேரு

குறிப்பு: உலகம் - ஞாலம், புவி - பூமி. முகில் - எழில், கொண்டல் - மேகம், மன்னன் - வேந்தன், கொற்றவன் -அரசன்.

இலக்கணம்: * ஓளியை உணர்த்தும் சொற்கள்இரண்டு இரண்டாக சேர்த்து வருவது,
பிரித்தால் பொருள் தராது. எ.கா: கண கண, சள சள, தணதண, பட பட, குடுகுடு, வளவள, பளபள.
இதனை இரட்டைக்கிளவி என்பர்.

செய்யுள்: சித்தர் பாடல்
* சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில்
வாழ்ந்தவர்கள்

* "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச்
சித்தர்.
* உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் -
கடுவெளிச் சித்தர்.
* சித்து - அறிவு
* கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
* நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் -
கடுவெளிச் சித்தர்.
* பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் -
இவை காரணப்பெயர்கள்.
* வேம்பு - கசப்பான சொற்கள்.
* வீறாப்பு - இறுமாப்பு
* கடம் - உடம்பு.
* சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
* வெய்யவினை - துன்பம் தரும் செயல்
* சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
* பலரில் - பலர் + இல்(வீடுகள்)


கவிதை: தாகம்
* யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால்
கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது.
* கவிஞர் அப்துல் ரகுமானின் "ஆலா பனை" என்னும் நூல் சாகித்ய
அகாடமி விருது பெற்றது.
* இவரின் பிற படைப்புகள்- சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.
* புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் - கவிக்கோ அப்துல்ரகுமான்.
* தாகம் என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது -பாலவீதி

உரைநடை: இளமையில் பெரியார் கேட்ட வினா

* இயற்பெயர்: இராமசாமி
* பெற்றோர்: வேங்கடப்பர், சின்னத்தாயம்மாள்.
* பிறந்த ஊர்: ஈரோடு.
* தோற்றுவித்தவை: பகுத்தறிவாளர் சங்கம், சுயமரியாதை இயக்கம்
.* போராட்டம்: கேரளாவில் வைக்கம் என்ற ஊரில்தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடி வெற்றிபெற்றதால் வைக்கம் வீரர்என அழைக்கப்பட்டார்.

* தன்னைத் தானே மதிப்பதும், தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்வதும் -
சுயமரியாதை.
* பெரியாரின் காலம்: 17.09.1879 முதல் 24.12.1973
* சமூக சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகளின் சபையின்
யுனெஸ்கோ விருது 1970 ஆம் ஆண்டு பெரியாருக்கு வழங்கப்பட்டது.
* மத்திய அரசு 1978 ஆம் ஆண்டு பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
* பெரியார் - பெண் விடுதலை மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர்.
* பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில்
எத்தனை நாட்களை செலவு செய்தார் - 8600 நாட்கள்.
* பெரியார் மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம்
செய்தார் - 13,12,000 கி.மீ
* பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம்
உரையாற்றினார் - 10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்.

பெரியார் பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை;
அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.

செய்யுள்: புறநானூறு: * புறநானூறு = புறம் + நான்கு + நூறு.

* தமிழர்களின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல்.
* இந்நூல் புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
* அரிய நெல்லிக்கனியை அதியமானின் பெற்றவர், நண்பர் - ஔவையார்.
* சங்கப்புலவர்களில் ஒருவர் - ஒளவையார்.
* நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார். சங்ககால பெண் கவிஞர்களில் அதிகப்பாடல் பாடியவர் - இவரும்ஆத்திச்சூடி பாடிய ஔவையாரும் வேறுவேறானவர்.
* ஔவை என்பதன் பொருள் - தாய்.

பாடல் வரிகள்:
* எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே - ஔவையார்

பொருள்:
* அவல் - பள்ளம்
* மிசை - மேடு,
* நல்லை - நன்றாக இருப்பாய்

புதன், 22 அக்டோபர், 2014

How to install WhatsApp on an iPad


Shown above is a 16GB iPad Mini Wi-Fi with WhatsApp enabled and the donor iPhone 5S
Shown above is a 16GB iPad Mini Wi-Fi with WhatsApp enabled and the donor iPhone 5S

WhatsApp is the most-used messaging and social networking platform today. However, WhatsApp is limited to smartphones and you cannot use it on most tablets and all PCs as yet. Certain 3G Android tablets which allow you to make phone calls are the only ones which can use WhatsApp for now. The iPad and iPod touch, even though they feature 3G SIM card slots for the Internet, cannot have WhatsApp working because of incompatibility with the device.

However, there is a method, using which, you can install WhatsApp on an iPad or iPod and use it without any issues. And the best part is that you don't need to have your iPad or iPod jailbroken to get this working. All you need is an iPad/iPod, a Mac or Windows PC and an iPhone. The procedure is pretty simple, and you can get it up and running within half an hour. If you are a techie, you can get it done within a few minutes.

Before we begin, let us inform you about a few crucial conditions, which will ensure that WhatsApp functions on your iPad/iPod. As you should know, WhatsApp can only run on a smart device which has a working SIM card installed in it. When installing WhatsApp, the app sends a message to its servers, and then intercepts an incoming SMS to the device to confirm and activate it. Also, you cannot use WhatsApp with the same SIM card or phone number on more than one phone. To use it on another smartphone, you need to have a new number or transfer the old data to the new phone.

Hence, in order to get WhatsApp running on your tablet, we suggest you either use a new number or use WhatsApp on your tablet only. You will have to uninstall WhatsApp from your smartphone.

Let's begin. In order to have WhatsApp running on your iPad, you will need an iPhone and a computer to help transfer the data. So ensure you have the iPhone, iPad and computer ready.

Step 1: We assume that you are having a new number (SIM card) and want to use WhatsApp on the tablet with that number. Alternatively, you can also use the same number you have and transfer the WhatsApp to the iPad. Insert the SIM in the iPhone, download WhatsApp and install it. Register the WhatsApp by following the procedure on the screen as usual. Once done, simply send and receive a message to a friend to confirm that WhatsApp is functioning.

Step 2: Now you need a simple free utility to transfer this activation of WhatsApp from your iPhone to the iPad. iFunBox is a simple free utility and file manager for iOS devices and is available for Windows and Mac OS platforms. Download and install it. If you have a jailbroken iOS device, then you can use any other alternate file manager for the procedure. All we need to do is to install WhatsApp on the iPad and transfer the database from the iPhone to the iPad, and for this, we shall use iFunBox.

Step 3: Now connect the iPhone to the PC and run iFunBox. Let the phone's drivers get installed, and iFunBox will recognize the device and open it. Ensure you have iTunes installed on your PC or Mac before you do so since you have to build the trust between the computer and the iOS device. Yes, iTunes is necessary. Don't worry, it's free too.

Step 4: Once you connect your iPhone to the computer, sync it with iTunes so that the software can back up the apps from the iPhone to the computer. We need the WhatsApp app file (.ipa) so that we can install it on the iPad. WhatsApp cannot be installed on the iPad from the App Store, and hence we need to get the app .ipa file using this procedure. Copy the WhatsApp.ipa file from the folder where iTunes stores the data to the desktop. Usually on a Windows PC, it should be in this location:'C:\Users\Username\My Music\iTunes\iTunes Media\Mobile Applications\'. On a Mac machine, it would be in '/Music/iTunes/iTunes Media/Mobile Applications/'. Once done copying, start iFunBox.

Step 5:  Now that iFunBox has access to your device, you need to copy the iPhone WhatsApp's database to the desktop. In iFunBox, you should find it under '\connected devices\your phone name\user applications\WhatsApp\'. From here you need to copy two folders to your PC's desktop. Select the folders 'Documents' and 'Library' and hit the 'Copy to PC' button from the menu bar. Copy the two folders to the desktop. You are finished with Part 1.

Step 6: Now that the WhatsApp app and database are copied, you can thank the donor iPhone for its services. Make sure you remove the SIM card from the iPhone and then uninstall WhatsApp from it. Also make sure you don't install and activate the same SIM card with WhatsApp on another device.

The image above shows the error when you have two devices activated with the same number.

Step 7: Now connect the iPad/iPod to the PC and run iFunBox. Now we need to install WhatsApp to the iPad, and you can do this by hitting the 'Install App' button in the menu bar. Navigate to the place where you saved the WhatsApp.ipa file and install it. Once done, you need to copy the database from your desktop to the iPad. Navigate to the same location as the iPhone to get to the WhatsApp folder. It should be under '\connected devices\your iPad name\user applications\WhatsApp\'. Delete the folders 'Documents' and 'Library' and copy the ones from your desktop to this location. You can choose to replace/overwrite the files to the iPad, but we recommend deleting the old folders and replacing with the ones we saved from the iPhone.

The image above shows that if another device is activated with the same WhatsApp account, the iPad will deactivate

That's it, WhatsApp has been successfully installed to the iPad, and you can test your application to check if it works. We did the same procedure in our office using an iPhone 5S as the donor phone and an iPad Mini 16GB Wi-Fi. It has been successfully working.