ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மெல்லகற்போருக்கு சிறப்பு கைடு தயாரித்து வழங்க,கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது

பொதுத்தேர்வு எழுதவுள்ள, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களில், மெல்லகற்போருக்கு சிறப்பு வகுப்பு மற்றும் கைடு தயாரித்து வழங்க,கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அதற்கான பணியில், தனி ஆசிரியர் குழுவினர்ஈடுபட்டுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களில், மெல்ல கற்கும் (ஸ்லோ லேனர்)
மாணவர்களை அடையாளம் கண்டு, சிறப்பு வகுப்பு (ஸ்பெஷல் கிளாஸ்) எடுக்கப்படுகிறது. மேலும், ஸ்லோ லேனர்களுக்காக, சிறப்பு கையேடு தயாரிக்க, மாவட்டம் வாரியாக,கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளியில், வழக்கம்போல், பள்ளி வேலை நாட்களில்,
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
மாலை, 4.30க்கு பள்ளியின் வேலை நேரம் முடிந்தவுடன், அடையாளம் காணப்பட்ட, 'ஸ்லோ லேனர்'
மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், கூடுதல் வகுப்பு எடுக்க வேண்டும். அந்த ஸ்பெஷல் கிளாஸில்,வகுப்பு தேர்வு, புரியாத பாடங்களை திரும்ப நடத்துதல், மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துதல்ஆகிய பணிகளை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும். அதேபோல், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், 'ஸ்லோ லேனர்'களின் கல்வித்தரம் மேம்படுத்த, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.தேர்ச்சி சதவீதத்தை கூட்ட, கல்வித்துறை அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு,பாடப்புத்தகம் மட்டுமின்றி, 'ஸ்லோ லேனர்'களுக்காக சிறப்பு கைடுகள் மூலம், பாடம் நடத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது. எளிய முறையில் பாடங்கள் நடத்தி, அதிக தேர்ச்சி சதவீதம் எடுக்க,
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் திறமையான ஆசிரியரை கொண்டு, சிறப்பு கைடு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், கைடு தயாரிக்கும் பணியில், தனி ஆசிரியர்
குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தனி புத்தகமாக அச்சடித்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும்
வழங்கப்படும். இதிலுள்ள குறிப்புகளை கற்றாலே, முழு தேர்ச்சியை காட்ட முடியும். இவ்வாறு, அவர்கள்
கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக