திங்கள், 27 அக்டோபர், 2014

இந்த மாத இறுதிக்குள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் -பள்ளிக் கல்வி இயக்குநர்

இந்த மாத இறுதிக்குள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் -பள்ளிக் கல்வி இயக்குநர்

நிகழாண்டு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 50 பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட20 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பு அக்டோபர் 29-ஆம்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்தச் சங்கம் அறிவித்தது.
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன்சென்னையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்த மாத இறுதிக்குள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 50 பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும்எனவும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்காக சிறப்பு மாறுதல் கலந்தாய்வு நடத்துவதாகவும் ராமேஸ்வர முருகன் உறுதியளித்துள்ளார். மேலும், இதர கோரிக்கைகள்சார்பாக அரசிடம் எடுத்துக்கூறி நிறைவேற்றித் தருவதாக அவர் தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று தலைமை ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தாற்காலிகமாக
தள்ளி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக