வெள்ளி, 31 அக்டோபர், 2014

ஐ.ஐ.டி. மாணவிகள் சேர்வதற்காக உதான் திட்டத்தில் பயிற்சி அளிக்கக்கூடிய மையங்கள் தமிழ்நாட்டில் கூடுதலாகதேவை

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. நிறுவனங்களில்மாணவிகள் சேர்வதற்காக உதான் திட்டத்தில்
பயிற்சி அளிக்கக்கூடிய மையங்கள்தமிழ்நாட்டில் கூடுதலாகதேவை என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ளகடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரிகளானஇந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்(ஐ.ஐ.டி.க்கள்) மற்றும் தேசிய தொழில்நுட்பநிறுவனங்கள் (என்.ஐ.டி.க்கள்) போன்றவற்றில் திறமை மிக்க மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்காக தேர்வு எழுத 'உதான்' என்ற புதிய திட்டத்தை 'சி.பி.எஸ்.இ.'அறிவித்துள்ளதை அறிவேன். இந்த திட்டத்தின்கீழ் அனைத்து கல்வி வாரியங்களில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என்.ஐ.டி.க்களில் சேர சிறப்பு ஆன்லைன் மூலம்நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முன்னிலை அதற்கான விண்ணப்ப படிவம் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பயிற்சி வகுப்பு மையங்களில் கிடைக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 நகரங்களில் மட்டுமே பயிற்சி மையங்கள் உள்ளன.
இங்கு இந்த திட்டத்தின்கீழ் தகுதி பெற்ற மாணவிகள் அதிக அளவில் உள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள 151 பயிற்சி வகுப்பு மையங்களில் தமிழ்நாட்டுக்கு 2 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி மையங்கள் போதாது அதேநேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு பல மையங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மாணவிகளை கொண்டபெரிய மாநிலமான தமிழகத்துக்கு 2 மையங்கள் மட்டும் போதுமானது அல்ல. மேலும் பயிற்சி மைய வகுப்புகளுக்கு செல்ல நீண்டதூரம் பயணம் செய்ய அச்சம் நிலவுவதால் தகுதியானமாணவிகள் பங்கேற்பது குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் சென்னை மிகப்பெரிய நகரமாகும். மெட்ரோ பாலிடன் நகரமான அது பயிற்சி மைய பட்டியலில்இடம்பெறவில்லை. எனவே தகுதியான மாணவிகள் பலர் பங்கேற்க வாய்ப்பில்லாமல் போகும். எனவே தகுதியுள்ளமாணவிகள் பங்கேற்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கவேண்டும். விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கவேண்டும் எனவே, உதான் திட்டத்தில் மாணவிகள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் தமிழ்நாட்டில்சென்னையை சேர்த்து அதிக இடங்களில் பயிற்சி மையம் அமைக்கவேண்டும். மேலும், அதிக அளவில் மாணவிகள்சேரும் வகையில் அதற்கான விண்ணப்பிக்கும் தேதியை நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக