வியாழன், 31 அக்டோபர், 2013

தமிழ்நாடு, புதுவை வழக்குரைஞர்கள் இன்று (31 oct) நீதிமன்றப் புறக்கணிப்பு

 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
தமிழ்நாடு, புதுவை வழக்குரைஞர்கள் இன்று ஒருநாள் மட்டும் நீதிமன்றப்
புறக்கணிப்பு செய்கின்றனர். சுமார் 60 ஆயிரம் வழக்குரைஞர்களின் நீதிமன்றப் 
புறக்கணிப்பில்ஈடுபட்டுள்ளதால் நீதிமன்றப் பணிகளில் பாதிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-
க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ்
வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.  ""கணினி வழித் தமிழ் மொழி
பரவிட வகை செய்யும் வகையில் கணினித்
தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள்
உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர்
கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 இந்த  விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1.00 இலட்சமும் 1
சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் தமிழ்ப்
புத்தாண்டு அன்று வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
விருது பெற  விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 31.12.2013 ஆகும்.
 மேலும் விவரங்களுக்கு http://www.tamilvalarchithurai.org என்ற
இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த கட்டண கமிட்டி முன் ஆஜராகாத 1000 பள்ளிகள் மீது நடவடிக்கை

தமிழகத் தில் செயல் படும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த கட்டணகமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 2010 முதல் அந்த கமிட்டி தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது. 2013 முதல் 2016 வரைக்கான கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கட்டண கமிட்டி பள்ளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது.
 
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் செயல் படும் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் நேற்று கட்டண
கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வாயிலில் அமர்ந்து கோஷமிட்டனர்.  இதனால்
நேற்று காலை டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கட்டண கமிட்டி தலைவர் நீதிபதி சிங்காரவேலு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை ஆகியோர் அவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும்
போது ஆசிரியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை கட்டண கமிட்டி குறைக்கிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளிக்கான கட்டணத்தை,  ஆசிரியர்களின் சம்பளம் பாதிக்காத வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது; தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்க விசாரணை நடக்கிறது. இதுவரை 10,780 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் 35 பள்ளிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் செயல் படும் ஸ்ரீவிஜய்
வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 100 ஆசிரியைகள்
கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதை கமிட்டி பரிசீலனை செய்யும். மேலும், பள்ளி நிர்வாகம் கமிட்டியிடம் கொடுக்கும் வரவு செலவு பட்டியலின் அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயிக்கிறோம். எந்த பள்ளியின் மீதும் விருப்பு வெறுப்பு கிடை யாது. எனவே ஆசிரியர்கள்
அச்சப்படத் தேவையில் லை. தற்போது நடக்கும் விசாரணையில் 1000 பள்ளிகள்
கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இதுவரை 3 சம்மன்கள் அனுப்பி விட்டோம். அந்த பள்ளிகள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் கேட்டிருக்கிறோம். அந்த பள்ளிகள் இயங்குகிறதா, அங்கீகாரம் வாங்கியுள்ளார்களா, அங்கீகாரம் புதுப்பிக்கவில்லையா என்றும் கேட்டுள்ளோம்.அதற்கான விளக்கம் கிடைத்ததும் அந்த பள்ளிகளிடம் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு நீதிபதி சிங்காரவேலு தெரிவித்தார்.

TRB PG TAMIL : IF 40 ERRONEOUS QUESTIONS DELETED AND VALUED FOR 110 QUESTIONS WHAT WILL BE THE RESULT. -HONARABLE JUDGE NAGAMUTHU IN HIS JUDGEMENT


The learned Advocate General suggested a third course also.
According to him, after deleting the above 40 erroneous questions, total number
of marks may be reduced to 110 and the correct 110 questions may be valued.
This action, in my considered opinion, will not serve the purpose.  The
prospectus states that the question paper is for 150 marks.  It cannot be
reduced to 110, because it will be against the prospectus.  Assuming that this
Court could permit the said course in exercise of its equity jurisdiction, even
then, as I have already pointed out, this will only result in injustice to the
meritorious candidates.  This again can be illustrated in the following manner.
There are two candidates who answered 'A' series questions.  The first
candidate answered 10 questions  other than the erroneous questions and 40
questions which are under dispute.  Thus he has secured  50 marks.
The second candidate has answered 25 questions other than the questions
under dispute.  He has offered no answer or incorrect answers for the 40
questions under dispute. Thus he has secured only 25 marks.
Now, if the above method suggested by the learned Advocate General is adopted,
the 1st candidate will lose 40 marks  and thus will get only 10 marks and the
second candidate will retain 25 marks.  Thus, in respect of two candidates who
answered 'A' series question paper, a meritorious candidate is pushed back and
the non-meritorious candidate goes to the top.  Therefore, this method also will
not create a common platform. This is because the incorrect question papers were
not distributed to all the candidates  as had happened in the examinations dealt
with in the judgments of the Hon'ble Supreme Court  cited supra.  Therefore,
this course also is not possible to be adopted

குரூப் 2 தேர்வு எழுத்து தேர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 1ம்  தேதி நடக்கும் : தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம்

குரூப் 2 தேர்வு எழுத்து தேர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 1ம் 
தேதி நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் 
தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 1064
அரசு பணிகளில் புதிய அலுவலர்களை நியமிக்க
குரூப் 2 தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் 
தேர்வாணையம்ஏற்கனவே தேதி அறிவித்தது. முதல்
நிலை எழுத்து தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடக்கும்
என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குரூப் 2
தேர்வு நடக்கும் நாளான டிசம்பர் 1ம் தேதி,
வேறு சில துறைகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் 
நடக்க உள்ளது என்றும், அதனால் குரூப்2 க்கான 
முதல் நிலைத் தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும்
என்று குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்
கோரிக்கை வைத்தனர்.
 இந்தகோரிக்கைகயை தேர்வாணையம் பரிசீலித்தது. 
குரூப் 2 தேர்வு எழுத 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
 தேர்வுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே அடுத்தடுத்து வரும் வார
இறுதி நாட்களில் மற்ற தேர்வுகள் நடக்க இருப்பதால் 
குரூப் 2 தேர்வை விரைந்து முடித்து முடிவுகளை 
வெளியிட முடிவு செய்துள்ளது. 

அதனால் தேர்வாணையம் அறிவித்தபடி டிசம்பர் 1ம் தேதியே 
குரூப் 2 தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது

ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:– இடஒதுக்கீடு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. இந்த தகுதி தேர்வு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்தப்படுகிறது. ஆனால் ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. எனவே தமிழகத்திலும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். 
.
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், ‘தகுதியான, திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது’ என்று கூறியிருந்தது. 
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பழனிமுத்து ஆஜராகி, ‘கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிந்துவிட்டது. தேர்வின் முடிவினை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதம் செய்தார். 
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 18ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதேநேரம், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், அதைத்தொடர்ந்து நடைபெறும் பணி நியமனம் ஆகியவை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று உத்தரவிட்டனர்

ஆசிரியர் தகுதி தேர்வு  வழக்கில் டி.ஆர்.பி., தலைவருக்கு ரூ.5,000 அபராதம் 

ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான
விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், முழு மதிப்பெண் வழங்க
தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல்
செய்யாததால், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யாருக்கு,
5,000 ரூபாய் அபராதம் விதித்து, மதுரை ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டது. 
விக்கிரமசிங்கபுரம் சூர்யா தாக்கல் செய்த மனு:
எம்.எஸ்.சி., - பி.எட்., படித்துள்ளேன். டி.ஆர்.பி., மூலம்,
2012ல், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில், எனக்கு,
பி வரிசை வினாத்தாள் வினியோகித்தனர். டி.ஆர்.பி.,
இணையதளத்தில் வெளியான கீ ஆன்சரில்,
ஒன்பது கேள்விகளுக்கு, தவறான விடைகள் இடம்பெற்றன. 
அவற்றிற்கு நான், சரியான விடைகளை எழுதியுள்ளேன்.
எனக்கு, 86 மதிப்பெண் வழங்கியுள்ளனர். தேர்ச்சி பெற, 90
மதிப்பெண் வேண்டும். கீ ஆன்சர் தவறாக உள்ளதால்,
எனக்கு கூடுதலாக, ஒன்பது மதிப்பெண் வழங்க
உத்தரவிட வேண்டும். இதனால், என், கட்-ஆப் மதிப்பெண்
உயரும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார். நீதிபதி, எஸ்.நாகமுத்து 
முன், மனு விசாரணைக்கு வந்தது. 
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கு, ஓராண்டாக
நிலுவையில் உள்ளது. பலமுறை விசாரணைக்கு வந்தும்,
டி.ஆர்.பி., தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
அரசுத் தரப்பிற்கு, கால அவகாசம் அளித்தும், நடவடிக்கை இல்லை. 
இதனால், மனுதாரர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 
டி.ஆர்.பி., தலைவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர்,
தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும். விசாரணை, நவ., 11க்கு 
ஒத்தி வைக்கப்படுகிறது. 
இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.

புதன், 30 அக்டோபர், 2013

TRB PG TAMIL : IF TRB DELETE DISPUTED 40 QUESTIONS AND GIVE 40 GRACE MARAK WHAT IS THE RESULT .-HONARABLE JUDGE S. NAGAMUTHU

During the course of the hearing, this Court made every endeavour
to find a course which would  comparatively result in minimum hardship to the
candidates. The learned Advocate General submitted that after deleting the above
40 questions, the rest of the 110 questions would be valued and for every
candidate 40 marks would be given as grace marks as against the 40 questions
deleted and thus, the total number of marks will still be maintained at 150.
This course is not agreeable to this Court, because, this will certainly
materially and drastically affect the results.  This will pave way for
meritorious candidates to sink in the sea of confusion.  This can be illustrated
in the following manner.
There are two candidates who have answered 'A' series question paper. The
first candidate has answered 40 questions, other than the questions which are
now under dispute.  He has also answered all the 40 questions under dispute,
rightly.  Thus, he has secured 80 marks.
The second candidate has similarly answered 50 questions, other than the
questions under dispute.  So far as the 40 questions which are under dispute, he
has not answered correctly.  Thus he has secured only 50 marks.
If by following the process suggested by the learned Advocate General if
40 questions under dispute are omitted, then as per the illustration, the first
candidate will maintain the same 80 marks; whereas the second candidate will now
get 40 grace marks, thus making the total 90.
This illustration will squarely demonstrate as to how a candidate who had
originally secured 50 marks will now rise upto 90 and compete with the candidate
who has secured 80 marks.  Thus, this less meritorious candidate will get
selected and the meritorious candidate will not.

If wrong questions are negligible, in my considered opinion, the
above process may not materially affect the outcome, though it will cause
minimum imbalance.  But, here, in this case, almost 1/3rd  of the questions are
wrong and, therefore, if the above method suggested by the learned Advocate
General is followed, it will surely cause prejudice to the meritorious
candidates and therefore this course cannot be followed

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்

 தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக, புதுக்கோட்டை மாவட்டம்
விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வான விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இத்துறையின்
அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக செயலாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

TRB PG TAMIL :மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப்
பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின்
இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,
பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.
பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக்
கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்
பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்

. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்
செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்
தாக்கல் செய்துள்ளனர்.
அதன் விவரம்: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியருக்கான போட்டித்
தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 31 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர்.
ஏ,பி,சி,டி என நான்கு பிரிவாக வழங்கப்பட்ட வினாத் தாளில் பி வரிசையில்
8,002 பேர் எழுதியுள்ளனர். நான்கு பிரிவு வினாத்தாளும் ஒன்றே,
கேள்விகளின் வரிசையில் மற்றும் மாற்றம் இருக்கும். இருப்பினும்,
பி வரிசை வினாத்தாளில் 54 இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அதுவும் ங் என்ற எழுத்து து எனவும், ழ் என்பது துணைக் காலாகவும் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்ணை எடுத்தவர், பி வரிசை வினாத்தாளில்
தான் எழுதியிருக்கிறார். அதோடு, அதிக மதிப்பெண் எடுத்த முதல் 10
பேரில் 6 பேர் பி வரிசை வினாத்தாளில் எழுதியவர்கள். ஆனால், இரு தேர்வர்கள்
மட்டுமே எழுத்துப் பிழையான 21 கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கக்
கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்ப்
பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால்,
பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்
வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110
மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள்
முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக்
கொள்ளவில்லை.
 அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித்
தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய
நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால்
இந்தப் பணி மேலும் தாமதமாகும். மேலும், 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத்
தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும்
செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில்
அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சில
தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே,மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த மனுவை விசாரித்த எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர்
அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இந்த
வழக்கு விசாரணை வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

PG VACANT FOR SOME SUBJECTS : KRISHNAGIRI DISTRICT

DISTRICT : KRISHNAGIRIPlease note it is for your information only kindly verify it corectness


BOTANY

BARGUR BOYS -
THALI BOYS
SANTHOOR BOYS
RAYAKKOTTAI BOYS
 
 
 
 ENGLISH
 
M.NADUPPATTI -
VEPPANAPALLI BOYS
 BERIGAI
MAGANOORPPPATTI
VELAMPAATTI
PERITHALLAPPAADI
THENKANIKOTTAI BOYS
ORAPPAM
RAYAKKOTTAI GIRLS
KELAMANGALAM
VEPPANAPALLI GIRLS
BARGUR BOYS
GERIGAPPALLI
MATHUR BOYS
KARAPPATTU
 

 MATHS
 
 
BERIGAI  
THENKANIKOTTAAI BOYS
BARGUR BOYS
KAARAPPATTU
ANJCHETTI
TOGARAPPALLI GIRLS
ANJUR JEGADEVI
MORANAHALLI
HALE SEEBAM
SAAMALPPATTI
NAGARASAMPATTI BOYS
 
 PHYSICS

ANJCHETTI  
SAMALPATTI
THALI BOYS
IGUNTHAM
BARAUR
CHENNASANTHIRAM
 
 
 CHEMISTRY
 
BERIGAI 
MAGANOORPATTI
THENKANIKOTTAI BOYS
RAYAKKOTTAI GIRLS
KAPPALVAADI
ANANTHUR
SANTHUR BOYS
AGARAM
PANNANTHUR BOYS
KALLAAVI BOYS
SULSGIRI BOYS
ANJUR JEGADEVI
 
 ECONOMICS
 
THENKANIKKOOTTAI BOYS
ORAPPAM
KELAMANGALAM
BARGUR BOYS
ANCHETTI
THALI BOYS
ANANTHUR
PULIYAMPATTI
POCHAMPALLI GIRLS
RAYAKKOTTAI BOYS
MELKOTTAI
 
 COMMERCE

BERIKAI   
THALI BOYS
ANANTHUR
POCHAMPALLI BOYS
ENUSENAI
MATHUR GIRLS
BETHTHA PELAKONDAPALLI
KANNANDAHALLI
BARGUR GIRLS
KUNNATHTHUR BOYS
 
 ZOOLOGY
 
VEPPANAPALLI BOYS 
MAGANOORPATTI
ANJCHETTI
THALI BOYS
KAPPALVADI
KALLAVI BOYS
KEELKUPPAM
ULLUKKURUKKAI
PULIYAMPATTI
POCHAMPALLI BOYS
POCHAMPALLI GIRLS
THOGARAPPALLI BOYSசெவ்வாய், 29 அக்டோபர், 2013

TRB PG ANOTHER CHANCE FOR ABSENT CANDIDATES


                                            Government of Tamil Nadu
                     TEACHERS RECRUITMENT BOARD
                                                4th Floor, EVK Sampath Maaligai, DPI Compound, College Road, Chennai -600 006
                                       NOTIFICATION
Dated : 28.10.2013
Intimation of certificate verification venue and date for the candidates in the additional list published on 24.10.2013. The candidates are instructed to report for certificate verification on 5th and 6th November 2013 at Government Girls Higher Secondary School, Ashok Nagar, Chennai.
Also during the certificate verification held on 22nd and 23rd October 2013 as per the Provisional List dated 11.10.2013. A few candidates were absent for certificate verification and some candidates who attended the certificate verification did not produce the required certificates.
Now, it is decided by the Board to give both of them another opportunity to attend the certificate verification or to produce the certificates at the venue and date mentioned below.
Date : 06.11.2013
Venue : Government Girls Higher Secondary School, Ashok Nagar, Chennai
page1image4908
No other chance shall be given.
                                                                                                             Member Secretary 

PG TAMIL list of 40 qustions accepted by TRB (B series)

Table : 2 (B series Tamil Question Paper)

Teachers Recruitment Board decision on the questions has printing errors.


Sl.N Question  Whether    Whether        Board decision
 o.    No.     printing   printing
               error in   error in
               Question    right
                           option
1.   10       No         Yes        Already deleted in the
                                               Tentative Key
2.   17       No         No         May be deleted
3.   19       Yes        No         May be deleted
4.   22       Yes        Yes        May be deleted
5.   26       Yes        No         May be deleted
6.   35       Yes        No         May be deleted
7.   36       Yes        No         May be deleted
8.   45       No         Yes        May be deleted
9.   46       No         Yes        May be deleted
10.  47       Yes        No         May be deleted
11.  51       No         Yes        May be deleted
12.  52       No         Yes        May be deleted
13.  53       Yes        No         May be deleted
14.  58       Yes        No         May be deleted
15.  62       No         Yes        May be deleted
16.  70       Yes        Yes        May be deleted
17.  75       Yes        No         May be deleted
18.  76       Yes        No         May be deleted
19.  77       Yes        No         May be deleted
20.  83       Yes        Yes        May be deleted
21.  85       Yes        No         May be deleted
22.  87       No         Yes        May be deleted
23.  88       Yes        No         May be deleted
24.  89       Yes        No         May be deleted
25.  91       Yes        No         May be deleted
26   92       Yes        Yes        May be deleted
27   93       No         Yes        May be deleted
28   96       Yes        No         May be deleted
29   97       Yes        No         May be deleted
30   101      Yes        No         May be deleted
31   102      Yes        No         May be deleted
32   104      No         Yes        May be deleted
33   105      Yes        No         May be deleted
34   109      Yes        No         May be deleted
35   115      Yes        No         May be deleted
36   117      No         Yes        May be deleted
37   137      Yes        No         May be deleted
38   139      No         Yes        May be deleted
39   145      Yes        No         May be deleted
40   148      No         yes        May be deleted

 தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்பணிக்கு மறு தேர்வு-தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு  2 வாரகால  இடைக்கால  தடை


.தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு பி பிரிவு கேள்வித்தாளில் பிழையான
கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட் கிளையில்
மதுரை கே.புதூரை சேர்ந்தவிஜயலெட்சுமி ,ஆண்டனி  கிளாரா  ஆகியோர்மனுத்தாக்கல்
செய்தனர். இந்த மனுவை விசாரித்து, தமிழ்முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
பணி தேர்வு முடிவை வெளியிட நீதிபதி தடை விதித்தார். மேலும்,மறு தேர்வு நடத்துவது தொடர்பாகஅரசு ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில்,மதுரையை சேர்ந்த மகாராஜன், அன்புதவமணி,
சிவகங்கை ராம்நகரை சேர்ந்த பாலமுருகன், ராமநாதபுரம் சிக்கலை சேர்ந்த சாந்தகுமார்
ஆகியோர் இந்த வழக்கில் தங்களையும்எதிர்மனுதாரர்களாக சேர்க்கவும்,
தேர்வு முடிவு வெளியிட விதிக்கப்பட்டதடையை விலக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இவ் வழக்கின்விசாரணைக்கு டிஆர்பி தலைவர் விபுநய்யர், உறுப்பினர்கள் அறிவொளி,தங்கமாரி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.மேற்படி பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன்இருப்பதாகவும், அக் கேள்விகளை நீக்கிவிட்டு 110மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாகத் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த நீதிபதி, மறுதேர்வு நடத்துவது குறித்துஅரசின்
கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
 இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்டார். வினாத்தாளில் பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு, அவ் வினாத்தாளில்தேர்வெழுதியவர்களுக்கு 110மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்குவது அல்லது தமிழ்ப் பாடத்துக்கான அனைத்து வரிசை வினாத்தாளில் எழுதியவர்களுக்கும்ஒரே மாதிரியாக 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது இவற்றில்ஏதாவதொரு பரிந்துரையை அரசு ஏற்கத் தயாராக உள்ளது என்றார்


 இந்த வழக்கை விசாரித்து நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் அட்வகேட்ஜெனரல் மூன்று யோசனைகளை தெரிவித்துள்ளார். பி பட்டியல் கேள்வித்தாளில் பிழையான 40கேள்விகளை நீக்கி, 110 மதிப்பெண்ணை மொத்த மதிப்பெண்ணாக கணக்கிடுவது அல்லது தமிழ்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வழங்கப்பட்ட ஏ, பி, சி, டி கேள்வி பட்டியலில் மொத்தமதிப்பெண்ணை 110 ஆக மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 கேள்விகளுக்கும்கருணை மதிப்பெண் வழங்கலாம் என அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.அவரது யோசனையை ஏற்க முடியாது அந்த யோசனைகள் மாணவர்களுக்கு அநீதி ஏற்படுத்தும். போட்டித்தேர்வில்அனைத்து மாணவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். பிழையான 40 கேள்விகளுக்கும் கருணை மதிப்பெண் வழங்கினால் அந்த கேள்விகளுக்கு பதில் எழுதாத மாணவர்களும் பலனடைவர். 110 மதிப்பெண்ணை மொத்த மதிப்பெண்ணாக கருதினால், தேர்வின் நோக்கம்நிறைவேறாது.மறு தேர்வு நடத்துவதுதான் ஒரே தீர்வு. இந்த முடிவுக்கு வர ஆசிரியர்தேர்வு வாரியமே காரணம். கேள்வித்தாள் பிழை தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு கோர்ட்டில்வந்தபோது, இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளனர்.இந்த வழக்கில் வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டவை பிரச்னைக்கு தீர்வாகாது.மறுதேர்வு நடத்துவது தொடர்பாக தேர்வு வாரியத்துக்கு பல்வேறு சிரமங்கள்ஏற்படும் என்பதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது. மறுதேர்வு இல்லையெனில், நன்றாகத் தேர்வெழுதியவர்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்து விடும் 

எனவே, ஜூலை 21ல் நடந்த தமிழ்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. புதிதாக தேர்வு நடத்த வேண்டும்.இந்த தேர்வில் ஏற்கனவே பங்கேற்றவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பங்கள் பெறக்கூடாது. பழைய ஹால் டிக்கெட்டுகளை பயன்படுத்தலாம். 6 வாரத்தில் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தனி  நீதிபதியின்  இத் தீர்ப்பை எதிர்த்து  trb  மேல்முறையீடு  செய்தது  அவ்வழக்கு  நீதிபதிகள் M. ஜெயச்சந்திரன் ,S. வைத்தியநாதன்  ஆகியோர்  அடங்கிய பெஞ்ச்  முன்பு  விசாரணைக்கு  வந்தது. TRB. யின்  சார்பில்  தலைமை வழக்கறிஞர் சோமயாஜி  ஆஜராகி  TRB  பிழையான 40  வினாக்களுக்கு  40 கிரேஸ்  மதிப்பெண்  வழங்கி  பட்டியல்  தயாரித்து  நீதிமன்றத்தில்  தாக்கல் செய்வதாகக்  கூறி தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு தடைவிதிக்க  கோரினார் .அதனையடுத்து  நீதிபதிகள்  தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு  2 வாரகால  இடைக்கால  தடை விதித்து  உத்தரவிட்டனர். வழக்கு  விசாரணை  நவம்பர்  12  ந் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது .
  

இவ் வழக்கு தொடர்பான  செய்திகளை  ஆண்டனி  கிளாராவின்    வழக்கறிஞர் திரு  லூயிஸ் அளித்துள்ளார்

TRB PG TAMIL FLASH NEWS

THE MADRAS HIGHCOURT MADURAI  BENCH  JUDGES ISSUED INTERIM STAY TO THE JUDGEMENT GIVEN BY HONARABLE JUDGE S NAGAMUTHU  REGARDING CONDUCT RE EXAM FOR PG TAMIL .

DETAIL NEWS WILL  POSTED  IN THIS BLOG SOON

TRB NEWS UPDATE PG ADDITIONAL CV DATE ANOUNCED

Additional list certificate verification date and place anounced by TRB
TRB UPLOADED  CALL LETTER TO CANDIDATES
Date
05-Nov-13

Place:
Govt.Girls Higher Secondary School,Ashok Nagar(Near Ashok Pillar),Chennai

PG VACANCIES FOR SOME SUBJECTS

PG VACANCIES IN DHARMAPURI DISTRICIT

PLEASE NOTE THIS IS FOR YOUR INFORMATION ONLY 
KINDLY CONFIRM IT

1.GHSS. Jakkasamuthiram English 
2 GHSS Kottappatti English 
3 GHSS Sellamudi English 
4 GHSS Panjappalli English 
5 GHSS Indur English 
6 GHSS Bandahalli English
 7.GBHSS Pennagaram English 
 8 GGHSS Pennagaram English 
 9 GBHSS Karimangalam English 
 10 Model.Sch. Karimangalam English 
11 Model.Sch. Palacode English 
12 GHSS Thoppur English 
13 GHSS Thoppur English 
14 GHSS Perumbalai English 
15 GHSS V.Muthampatti English 
16 GHSS Jollypudur English 
17 GHSS.  Bommahalli English
 

 1 GHSS Malluppatti Maths 
2 GHSS Maniyadhahalli Maths 
 3 GHSS B.Agraharam Maths
 4 GGHSS  B.Mallapuram Maths 
5 GHSS Amanimallapuram Maths 
6 GHSS Thoppur Maths 
 7 GGHSS Morappur Maths 
 8 GHSS V.Muthampatti Maths 
GBHSS Kadathur Maths 

 Subject  -Physics 
 1 GHSS Bandahalli Physics
 2 GHSS Amanimallapuram Physics 
 3 GBHSS Pennagaram Physics 
 4 GHSS Mangarai Physics 
5 GBHSS Marandahalli Physics 
6 GHSS. Narippalli  Physics 
 7 GBHSS B.Mallapuram Physics 
8 GHSS Kottappatty Physics 
9 GHSS Bairnatham Physics  

 Subject  -Chemistry 
1 GBHSS Paupparappatti Chemistry 
 2 GHSS Narippalli Chemistry 
3 GHSS Perumbalai Chemistry 
4 GHSS Eriyur Chemistry 
 5 GHSS Panjappalli Chemistry 
 6 GBHSS B.Mallapuram Chemistry 
 7 GHSS Neruppur Chemistry
 8 GHSS Kottappatti Chemistry 
9 GHSS Eriyur Chemistry 
10 GHSS. Sellamudi  Chemistry 
 11 GHSS Krishnapuram Chemistry 
12 G.Model.S. Pennagaram(Chinn) Chemistry
 13 GHSS M.Doddampatti Chemistry 

Subject - Zoology 
1 GHSS Solaikottai Zoology 
 2 GHSS Naripalli Zoology 

  Subject  - Economics 
1 GHSS Thoppur Economics
2 GHSS Mangarai Economics 
3 GBHSS Palacode Economics 
4 GHSS Bantharahalli Economics 
5 GGHSS Palacode Economics 
6 GHSS Pulikarai Economics 
 7 GGHSS Marandahalli Economics 
8 GBHSS Karimangalam Economics
9 GHSS Laligam Economics 
 10 GHSS Kannipatti Economics 
 11 GGHSS Pappireddippatti Economics
 12 GHSS Bandahalli Economics 
 13 GHSS Maniyathahalli  Economics 
14 GGHSS Karimangalam Economics 
 15 GHSS. Periyampatti  Economics 
 16 GHSS Begarahalli Economics 
 17 GHSS. Hanumanthapuram  Economics 
 18 GHSS Thonganur Economics 
 19 GHSS. Hanumanthapuram  Economics 
20 GGHSS Kadathur Economics 
21 GHSS Nathamedu Economics 
 22 GHSS Navalai Economics 
23 GHSS Nallampalli Economics 
24 GHSS V.Muthampatty Economics 
 25 GHSS Jollypudur Economics 
26 GHSS Bommahalli Economics  

Subject  -Commerce 
 1 GBHSS Pennagaram Commerce 
 2 GHSS Navalai Commerce 
 3 GHSS Indur Commerce 
4 GHSS Venkatampatti Commerce 
 5 GHSS Maniyathahalli Commerce 
6 GHSS Periyampatti Commerce 
7 GHSS Begarahalli Commerce
 8 GHSS Hanumanthapuram Commerce 
9 GGHSS Karimangalam Commerce 
10 GHSS Nathamedu Commerce
11 GHSS V.Muthampatty Commerce
12 GHSS Jollypudur Commerce 
13 GGHSS Palacode Commerce 
  

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை':கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு தொடர்பாக, சட்டசபையில், நேற்று விவாதம் நடந்தது. அதன் விவரம்: 

இ.கம்யூ., குணசேகரன்: டி.என்.பி.சி., குரூப் - 1, தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கான மதிப்பெண்ணை, இட ஒதுக்கீடு அடிப்படையில், மாற்றி அமைக்க வேண்டும்.

 அமைச்சர் பழனியப்பன்: மத்திய அரசு, கட்டாய கல்வி சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ஆசிரியர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என, சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வில், ஒருவர் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், தமிழகத்தில், 150
மதிப்பெண்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை, மாநில அரசு விரும்பினால் குறைக்கலாம். ஆனால், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்தால், குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும். எனவே, மதிப்பெண் குறைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, முதல்வர் உத்தரவு படி, தோல்வி அடைந்தவர்களுக்காக, மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. 

மா.கம்யூ., பாலபாரதி: பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதலில் நடத்தப்பட்டபோது, 90 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
அடுத்து நடந்த தேர்வில், 96 மதிப்பெண் எடுத்தவர், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கட்ஆப்' மதிப்பெண், சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அமைச்சர்  பழனியப்பன் : தொடக்கக் கல்வி ஆசிரியர் தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் வித்தியாசம் உண்டு. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. முதுகலை ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பணி மூப்பு அடிப்படையில், பணி அமர்த்தப்படுகின்றனர். முதுகலை ஆசிரியர் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வேலை வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்படுவது போல், முதுகலை ஆசிரியர் பணிக்கும், 'கட் ஆப்' மதிப்பெண், நிர்ணயம் செய்யப்படுகிறது.
 இவ்வாறு, விவாதம் நடந்தது.

TRB PG : NEWS UPDATE

2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தமிழ் தவிர மீதமுள்ள  முதுநிலைப் பட்டதாரி
போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற. 2,276,பேருக்குஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்.22, 23 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு  வகுப்புவாரி  இடஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள்  அனைவரும்  அழைக்கப்படவில்லை .வயதில்  மூத்தோர்  மட்டுமே  அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை      எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜோதி ஆபிகாரம் உள்ளிட்ட  மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து
,தேர்வு எழுதியவர்களில்தகுதியானவர்கள், விடுபட்டவர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்தபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என
 உத்தரவிட்டார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடவும்இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக்.28 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

 நீதிமன்ற  உத்தரவுப்படி  123  பேர்கள்  அடங்கிய  கூடுதல்  பட்டியல்   ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.


நேற்று  (அக் 28) நீதியரசர்  எஸ் .நாகமுத்து  முன்னிலையில்  6 வழக்குகள் விசாரணைக்கு  வந்தது  இவை வெவ்வேறு  கோரிக்கைகளுக்காக  தொடுக்கப்பட்டுள்ளதால்  3   தொகுப்பாக  பட்டியளிடப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது. இன்று  TRB சார்பில்  சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர்  மற்றும்  நீதிமன்ற  உத்தரவுப்படி  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டார்  பட்டியல்  நீதிமன்றத்தில்   சமர்ப்பிக்கப்பட்டது

   முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக தாக்கல்  செயப்பட்ட வழக்குகள் மனுதாரர்களின் பெயர்கள்  கோர்ட்  உத்தரவிப்படி  கூடுதல்  சான்றிதழ்  சரிபார்ப்பு  பட்டியலில்  இடம் பெற்றுள்ளதால்  3   வழக்குகள்  பைசல்  செய்யப்பட்டது .     முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக  தொடுக்கப்பட்ட மற்ற 3 வழக்குகள் விசாரணைக்கு  ஒத்திவைக்கப்பட்டன.

கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட்கிளை உத்தரவிட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம், பழநி பழைய ஆயக்குடி உச்சமன்புதூரை சேர்ந்த வினோத் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்தமனு: நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஏ (இங்கிலிஷ் வித்கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்) படித்துள்ளேன். 2012ல் பிஎட் முடித்தேன். கடந்த 2012, அக். 14ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று,
 
சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். ஆனால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ
ஆங்கிலத்திற்கு இணையானது இல்லை என்பதால் பணி வழங்க முடியாது என அதிகாரிகள்
தெரிவித்தனர். இப்படிப்பு பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை கவனத்தில் எடுக்காமல் என்னை ஆசிரியர் பணிக்கு நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்த்தேன்
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் படிப்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரித்து 12 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என பள்ளி கல்வி செயலாளர் ஏப்ரல் 30ல் உத்தரவிட்டார். அதன் பிறகும் என்னை பட்டதாரி ஆசிரியராக
நியமிக்கவில்லை. ஐகோர்ட் கிளை உத்தரவை உயர்கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, உயர் கல்வி செயலாளர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் 2 வாரத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

திங்கள், 28 அக்டோபர், 2013

2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது-DINAKARAN

அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்
என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்த
போட்டி நிலவுகிறது. அரசு பணியாளர்தேர்வாணையம் எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும்
லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர். ஆனால் தேர்வு செய்யப்படுபவர்கள் என்னவோ ஆயிரத்துக்கு உள்ளாகத்தான் இருக்கும்.
அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கானோர்
காத்திருப்பது ஒருபக்கம், ஆசிரியர் பணி, அரசு ஊழியர் பணி என்று லட்சக்கணக்கான காலியிடங்கள்மறுபக்கம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.
 இவை ஒருபுறம் இருக்க வரும் ஆறு மாத காலத்திற்குள் அதாவது 2014 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய
காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது நடப்பு நிதியாண்டு நிறைவு பெறும்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சீருடை பணியாளர்கள் தவிர்த்து மாதத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் வீதம் என ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் ஓய்வு பெற இருக்கின்றனர்என்கிறது ஒரு புள்ளி விபரம். 
தமிழகத்தில் 1980 முதல் 1984 வரை அதிக அளவில் பணி நியமனங்கள் நடந்தன. மேலும் 1984ல்எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ‘யூத் சர்வீஸ்‘ என்ற பெயரில் சிறப்பு தேர்வு ஒன்று நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து 1984க்கு பிறகு அடுத்து வந்த ஐந்தாண்டு காலத்தில் அதிக அளவில் பணி நியமனங்கள் ஏதும் நடைபெறவில்லை. பின்னர் 1989ல் இருந்து பணி நியமனங்கள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் நடந்தன. அவ்வாறு 1984 வரை நியமனம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் 58 வயதை நெருங்கியுள்ளதால் நடப்பு நிதியாண்டுடன் ஓய்வுபெற  உள்ளனர். அரசு துறைகளில் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளில் ஆபீசர் நிலையில் உள்ளவர்கள் முதல் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை தமிழகத்தில் 13.30 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். சி மற்றும் டி பிரிவுகளில் ஊழியர்கள் வரும் நாட்களில் அதிகம் ஓய்வுபெறஉள்ளனர். மொத்த பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற உள்ளதால் ஏற்கனவே பணி பளுவுடன் செயல்படுகின்ற ஊழியர்கள் மேலும் பணி பளுவில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. 

மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு துறைகளில் கூடுதல் பணியிடங்கள்
உருவாக்கப்படவில்லை. மாறாக பணியிடங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைக்கப்படுகிறது. கணினிமயம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகிறது. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஏற்ப புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படாதது நீண்டகால குறையாக இருந்து வருகிறது. வருடத்திற்கு 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரை ஓய்வுபெற்று வந்த நிலை மாறி இப்போது 2 லட்சம் ஊழியர்கள் வரை வருடத்திற்கு ஓய்வுபெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சுமார் 40 ஆயிரம் பேர் வரை மட்டுமே புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் புதிதாக பணி நியமனங்கள் ஏதும் நடைபெறாததும் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகவும், அரசு துறைகளில்
காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக ஓய்வுபெறும் ஊழியர்கள் வயது வரம்பை 60 ஆக அதிகரிக்கும் எண்ணமும் அரசிடம் உள்ளது. இது பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திடாது என்கிறது அரசு ஊழியர் சங்கங்கள். 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார் கூறுகையில், ‘‘தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் 2 லட்சம் பேர் ஓய்வுபெற உள்ளதால் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறையில்தான் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் காலியிடங்கள் ஏற்படப்போகிறது. இதனால் மக்கள் நல திட்டங்கள்தான் அதிகம் பாதிக்கும். இப்போதே அரசு துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். இதனால் காலி பணியிடங்கள் இல்லை என்பதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் ஏற்படுகிறது. மேலும் கொல்லைப்புறம் வழியாக அவுட்சோர்சிங் என்ற முறையில் ஆட்களை தேர்வு செய்கின்றனர். மருத்துவ துறையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் அவுட்சோர்சிங் வழியாக ஸ்டாப் நர்சுகள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவ துறை அளிக்கின்ற ஊதியம். Rs 5500 ஆனால்ஏஜென்சிகளுக்கு கமிஷன் போக ஸ்டாப் நர்சுகளுக்கு கிடைப்பது வெறும் Rs 4000 ம்தான். பேரூராட்சிகளில் துப்புரவு வாகனங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கு டிரைவர்  ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. டெண்டர் மூலம் டிரைவர்களை தேர்வு செய்கின்றனர். Rs 4000,Rs 3000 மாத சம்பளத்திற்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். அதுபோன்று எல்லா அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது. ஆனால் கம்ப்யூட்டர்
ஆப்ரேட்டர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படவில்லை. மாறாக எம்சிஏ பட்டதாரிகள் கூட       Rs 2000,Rs 2500  சம்பளத்திற்கு பேரூராட்சிகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
இப்போது ஊராட்சிகளில் புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு சம்பளம் 2ஆயிரம்தான். தற்போதைய
விலைவாசியில் ரூ.2 ஆயிரத்தை கொண்டு என்ன செய்ய முடியும்? குறைவான சம்பளத்தை கொடுப்பதின் மூலம் இவர்களிடம் இருந்து நிறைவான பணியை எதிர்பார்ப்பதும்
இயலாது போகிறது. மேலும் அவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை. மற்றொருபுறம்
பணியிடங்களே காணாமல் போகிறது. உதாரணத்திற்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கருவூலஅலுவலகத்தில் 80 பேர் பணியாற்றி வந்தனர். தற்போது அது 60 பணியிடங்களாக
குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 60 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 23 பணியிடங்கள்நீண்டநாட்களாக காலியாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் முதல் ஓய்வூதியர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதுபோன்று இங்குள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் எழுத்தர் நிலையில் 14 பேர் பணிபுரிந்தஇடத்தில் பணியிடங்கள் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் இப்போது 6இடங்களில் ஆள் இல்லை.  இதுபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும்பணியிடங்கள் குறைப்பு, ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங் வாயிலாக அரசு துறைகளில் ஆட்கள் நியமனம் என்று பணியாளர் நியமனத்தில் ஒரு புதுமுறையை அரசு செயல்படுத்துவது போன்று உள்ளது என்றார். எனவே புதிதாக ஆட்களை தேர்வு செய்து காலியிடங்களை நிரப்புவது மூலம் நடைபெறுகின்ற முறையான ஊழியர் நியமனமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். எனவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
காலி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 
 தமிழகத்தில் ஏற்கனவே சுமார் 2லட்சம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த சூழலில் மேலும் 2லட்சம் ஊழியர்கள் வரும் 6 மாத காலத்திற்குள் பணி ஓய்வுபெற இருப்பதுடன் அடுத்து 2016ம்ஆண்டுக்குள் மேலும் 2 லட்சம் பேர் பணி ஓய்வு பெற இருப்பதும் அரசு இயந்திரத்தின் இயல்பானசெயல்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கும் அபாயம் உள்ளது.  என்றார். வேலைப்பளு அதிகரிப்புஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள்தேர்வு என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி என்பது போன்று உள்ளது. உதாரணமாக குமரி மாவட்டத்தில் கல்வித்துறையில் 40 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. பொதுவாகஇளநிலை உதவியாளர் நிலையில் இருந்து உதவியாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.இப்போது 1800 உதவியாளர் பணியிடம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளது. இவற்றுக்கு 243 பேரை மட்டும் குரூப்&2 தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர்.இவர்களை கொண்டு எவ்வாறு எல்லா அலுவலகத்திலும் பணிகளை செய்ய இயலும்?இப்போதே பெரும்பாலான துறைகளில் 2 ஊழியரின் பணியை சேர்த்து ஒரு ஊழியர் கவனிக்கிறார்.இனி காலியிடங்கள் அதிகரிப்பால் இந்த பணி பளு மேலும் அதிகரிக்கவே செய்யும்.
இவ்வாறு  கூறினார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார் 

Th