திங்கள், 21 அக்டோபர், 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்குப் முன்
பதவி உயர்வு பட்டியலில் உள்ளபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர்.கே.சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:                                               
            அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக சிலமாதங்களுக்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. 
முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் அக்டோபர் 23, 24-ம் தேதிகளில் சான்றிதழ்சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. 
இந்நிலையில் பணியில் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள்பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவோ, உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களாகவோ பணி நியமணம் செய்வதற்கான பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகின்றன. ஆனால் இதற்கானகவுன்சிலிங் இதுவரை நடத்தப்படவில்லை.இதற்கிடையே பணியில் மூத்தபட்டதாரி ஆசிரியர் விருப்பத்தின் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக அல்லது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம். முதுநிலை பட்டதாரி ஆசிரியராக சென்று உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வரக்கூடாது என முன்னாள் கல்வித்துறை இயக்குநர் தேவராஜ் உத்தரவிட்டிருந்தார். 
இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலை ப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றுள்ளது.எனவே, பணியில் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.அதன் பின்னர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமண ஆணை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக