வியாழன், 10 அக்டோபர், 2013

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத
அகவிலைப்படி உயர்வினை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல்
தெரிவித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1-ஆம் தேதி முதல், முன்தேதியிட்டு இந்தஅகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால்ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் கூடுதலாக அதிகபட்சம்
ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள்
தெரிவித்தன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்
நேரங்களில் எல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில்
அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த
இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம்
அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அதே அளவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை முதல்வர்
ஜெயலலிதா அளித்துள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனக்
கூறப்படுகிறது
. எவ்வளவு கிடைக்கும்?:
10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் போது, மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், இந்தஅகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கிடைக்கும்.

Source  Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக