ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு

தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண்
தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர்
தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால
உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டம், கசகனூர் கிராமத்தைச் சேர்ந்த
பி.தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: 2012-2013-ஆம்
ஆண்டு முதுநிலை உதவி ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம்
தேர்வு நடத்தியது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான பதில்
கொடுக்கப்பட்டிருந்தது.தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் நான் சரியான 
பதில் எழுதினேன்.இது போன்ற கேள்விக்கு பதில் அளித்தால் அதற்கு ஒரு 
மதிப்பெண் வழங்கவேண்டும். ஒரு மதிப்பெண் வழங்கினால் பிற்படுத்தப்பட்டோர் 
ஒதுக்கீட்டுக்கு தேவையான 94 மதிப்பெண் எனக்கு கிடைக்கும். அதனால், கட்-ஆஃப்
மதிப்பெண்ணுக்கு தேவையான ஒரு மதிப்பெண்ணும், வேலையும்
எனக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என
மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
தரப்பில் வழக்குரைஞர் அன்பரசு ஆஜரானார். விசாரணைக்குப்
பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தேர்வில் கேட்கப்பட்ட
கேள்விக்கு வினாத்தாளில் தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் மனுதாரர்
சரியான பதில் எழுதியுள்ளார். கேள்விக்கு பதில் அளித்ததால்
அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். இதன் மூலம்,
மனுதாரருக்கு தேவையான கட்- ஆஃப் மதிப்பெண்
கிடைத்துவிடும். அதனால், மனுதாரரை முதுநிலை உதவி ஆசிரியர் பணியில்
நியமிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதி இடைக்கால
உத்தரவு பிறப்பித்தார்.

News source: dinamani
There is no details about the case,subject,qustion etc -THAMIL THAMARAI
--------------------------------------------------------------------------------------------------------------------------
NEWS IN DETAIL
முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வில்,விண்ணப்பதாரர் ஒருவரை, சான்றிதழ் சரிபார்க்க
அழைக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும்,சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
 சேலம் மாவட்டம், கசகரனூரைச் சேர்ந்த,தேன்மொழி என்பவர் தாக்கல் செய்த மனு: தாவரவியலில்,முதுகலை பட்டம், பி.எட்., பட்டம் பெற்றுள்ளேன்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள்.முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். கடந்தஜூலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. எனக்கு, 93 மதிப்பெண் கிடைத்தது. 'கீ" விடைத்தாளை பார்க்கும் போது, மூன்று கேள்விகளுக்கு தவறான விடைகள்
அளிக்கப்பட்டது தெரிய வந்தது. முதுகலை தாவரவியல் ஆசிரியர் பணிக்கு, பிற்படுத்தப்பட்ட பிரிவில், குறைந்தபட்சம், 94 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கூடுதலாக கிடைத்தால், நான் தகுதி பெற்று விடுவேன். மூன்று கேள்விகளுக்கும் எனக்கு மதிப்பெண் கிடைத்தால், பணி நியமனம் கிடைத்து விடும். இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, இம்மாதம், 15ம் தேதி, மனு அனுப்பினேன். எனவே, முதுகலை தாவரவியல்
ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை காலியாக வைக்க, இடைக்கால உத்தரவிட வேண்டும். மூன்று மதிப்பெண் வழங்கவும், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், பணி நியமனம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள்
தாட்சாயணி ரெட்டி, ஜி.அன்பரசு, அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு: ஒரு கேள்விக்கு, மனுதாரர் சரியான பதில் அளித்துள்ளார். அதற்கு, ஒரு மதிப்பெண் வழங்கினால், 94 பெற்று விடுவார். எனவே, இடைக்கால நடவடிக்கையாக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மனுதாரரை அழைக்க வேண்டும்; ஒரு இடத்தை காலியாக வைக்க வேண்டும். இவ்வாறு,
நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்v

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக