வியாழன், 31 அக்டோபர், 2013

குரூப் 2 தேர்வு எழுத்து தேர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 1ம்  தேதி நடக்கும் : தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம்

குரூப் 2 தேர்வு எழுத்து தேர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 1ம் 
தேதி நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் 
தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 1064
அரசு பணிகளில் புதிய அலுவலர்களை நியமிக்க
குரூப் 2 தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் 
தேர்வாணையம்ஏற்கனவே தேதி அறிவித்தது. முதல்
நிலை எழுத்து தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடக்கும்
என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குரூப் 2
தேர்வு நடக்கும் நாளான டிசம்பர் 1ம் தேதி,
வேறு சில துறைகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் 
நடக்க உள்ளது என்றும், அதனால் குரூப்2 க்கான 
முதல் நிலைத் தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும்
என்று குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்
கோரிக்கை வைத்தனர்.
 இந்தகோரிக்கைகயை தேர்வாணையம் பரிசீலித்தது. 
குரூப் 2 தேர்வு எழுத 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
 தேர்வுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே அடுத்தடுத்து வரும் வார
இறுதி நாட்களில் மற்ற தேர்வுகள் நடக்க இருப்பதால் 
குரூப் 2 தேர்வை விரைந்து முடித்து முடிவுகளை 
வெளியிட முடிவு செய்துள்ளது. 

அதனால் தேர்வாணையம் அறிவித்தபடி டிசம்பர் 1ம் தேதியே 
குரூப் 2 தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது