வியாழன், 31 அக்டோபர், 2013

தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த கட்டண கமிட்டி முன் ஆஜராகாத 1000 பள்ளிகள் மீது நடவடிக்கை

தமிழகத் தில் செயல் படும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த கட்டணகமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 2010 முதல் அந்த கமிட்டி தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது. 2013 முதல் 2016 வரைக்கான கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கட்டண கமிட்டி பள்ளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது.
 
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் செயல் படும் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் நேற்று கட்டண
கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வாயிலில் அமர்ந்து கோஷமிட்டனர்.  இதனால்
நேற்று காலை டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கட்டண கமிட்டி தலைவர் நீதிபதி சிங்காரவேலு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை ஆகியோர் அவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும்
போது ஆசிரியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை கட்டண கமிட்டி குறைக்கிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளிக்கான கட்டணத்தை,  ஆசிரியர்களின் சம்பளம் பாதிக்காத வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது; தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்க விசாரணை நடக்கிறது. இதுவரை 10,780 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் 35 பள்ளிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் செயல் படும் ஸ்ரீவிஜய்
வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 100 ஆசிரியைகள்
கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதை கமிட்டி பரிசீலனை செய்யும். மேலும், பள்ளி நிர்வாகம் கமிட்டியிடம் கொடுக்கும் வரவு செலவு பட்டியலின் அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயிக்கிறோம். எந்த பள்ளியின் மீதும் விருப்பு வெறுப்பு கிடை யாது. எனவே ஆசிரியர்கள்
அச்சப்படத் தேவையில் லை. தற்போது நடக்கும் விசாரணையில் 1000 பள்ளிகள்
கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இதுவரை 3 சம்மன்கள் அனுப்பி விட்டோம். அந்த பள்ளிகள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் கேட்டிருக்கிறோம். அந்த பள்ளிகள் இயங்குகிறதா, அங்கீகாரம் வாங்கியுள்ளார்களா, அங்கீகாரம் புதுப்பிக்கவில்லையா என்றும் கேட்டுள்ளோம்.அதற்கான விளக்கம் கிடைத்ததும் அந்த பள்ளிகளிடம் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு நீதிபதி சிங்காரவேலு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக