வியாழன், 17 அக்டோபர், 2013

பொதுத்தேர்வு எழுதுவோர் விவரங்கள் 15க்குள் தெரியும்

வரும் மார்ச், ஏப்ரலில், பொதுத்தேர்வு எழுத உள்ளமாணவ, மாணவியர் குறித்த பட்டியலை, நவ., 15ம்தேதிக்குள் இறுதி செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டு உள்ளது. 
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ,
மாணவியரிடம் இருந்து, பல்வேறு விவரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை,
சமீபத்தில், தேர்வுத் துறை வழங்கியது. இந்தவிண்ணப்பங்கள், மாணவ, மாணவியரிடம் வழங்கப்பட்டு,உரிய விவரங்களை, பள்ளி நிர்வாகங்கள் பெற்றுள்ளன. இந்த விவரங்களை, பள்ளிகளில் இருந்தே, பிரத்யேகஇணையதளத்தில் பதிவு செய்ய, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பானவழிகாட்டுதல்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.
அடுத்த வாரத்தில் இருந்து, தேர்வெழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்தப் பணி, நவம்பர், முதல் வாரம் வரை நடக்கும் என, தெரிகிறது. இணையதளத்தில், விவரங்கள் ஏற, ஏற,
அது குறித்த புள்ளி விவரங்களை, உடனுக்குடன் பெறவும், தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பணிகளை, தனியார் நிறுவனம் ஒன்று செய்து கொடுக்கிறது. 

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில், நவ., 15ம் தேதிக்குள்,
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த புள்ளி விவரங்கள் தயாராகி விடும். பொதுத்தேர்வுக்கு, போதுமான கால அவகாசம் இருப்பதால், ஒவ்வொரு பணியையும், நிதானமாக செய்வோம், என, தெரிவித்தார். சமீபத்தில் நடந்த பிளஸ் 2, 10ம் வகுப்பு தனி தேர்வுகள், ஒரே தேதிகளில் நடந்தன. இதில், எவ்வித குளறுபடிகளும் ஏற்படவில்லை. இதேபோல், பொதுத் தேர்வுகளையும் நடத்தலாமா என, தேர்வுத் துறை ஆலோசித்து வருகிறது. எனினும், இதுகுறித்து, தற்போது வரை, எவ்வித முடிவும் எடுக்கவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Source dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக