வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமைக்குள் வெளியிடப்படும்

பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமைக்குள் வெளியிடப்படும்
தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் மொத்தமாக இந்த ஆண்டு 2,582 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 1,649 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப்
பட்டியல் மட்டும் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட பிற துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளுக்காக. 900-த்துக்கும் அதிகமானஇடைநிலை ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வரும் வியாழக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன