வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

NEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 2 ஆயிரத்து 408 இடங்கள்!

இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்றும், அந்த இடங் களை நிரப்புவது குறித்தும்ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
நிலுவையில் இருக்கும் பணியிடங்கள் 845 அவற்றில் பெண்களுக்கு 307 இடங்கள்.
மேலும் ஆதிதிராவிடர்களுக்கு அதிக இடங்கள்இருக்கின்றன.
நிலுவையில் இல்லாமல் இந்த வருட காலிப்பணியிடங்கள் 830. அவற்றில் தமிழ் வழியில் படித்தபெண்களுக்கு மட்டும் 88 இடங்கள் உள்ளன. பெண்களுக்கு 327 இடங்கள் உள்ளன
.மேலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும்பிற்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளில் 64 இடங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669பணியிடங்களும் உள்ளன.

மொத்தத்தில் 2 ஆயிரத்து 408 இடங்கள் உள்ளன.இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.