திங்கள், 30 செப்டம்பர், 2013

தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா? இன்று  (செப் 30) தெரியவரும்

  . முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன. இதனால், கேள்விகளின்அர்த்தமே மாறிவிட்டன. சில கேள்விகளை, புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு, அதிக எழுத்துப்பிழைகள் இருந்தன. காங்கிரஸ் என்பதை,காதுரஸ் என்றும், அவுரங்கசீப் என்பதற்கு, அவுரதுசீப் என்றும், கணியன் பூங்குன்றனார் என்பதை, கனியன்பூதுகுன்றனார் என, பிழைகள் நீள்கின்றன
 
இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்
உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்   மதுரை புதூர் விஜயலட்சுமி எனும் மனுதாரரால்  வழக்குத் தொடரப்பட்டது. 
 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்து.
இந்த வழக்கை   செப். 25ம்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறி மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு  உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது

இவ்வழக்கு  திங்கள்கிழமை 30தேதி  காலையிலேயே  10  வது வழக்காக  
விசாரணை செய்யப்படவுள்ளது. இதன்  இறுதி உத்தரவு  இன்று  (செப் 30)  பிறப்பிக்கப்படும்  எதிர்பார்க்கப்படுகின்றது  மாலைக்குள்  தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.
 முதுகலை ஆசிரியர்  நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து  பட்டதாரிகளும் நீதிமன்றத்தின்  உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக