ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர விரும்புவோருக்கு, நவம்பர், 10ம் தேதி, எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு உறுப்பினர் தேர்வு : செப்டம்பர் 2 முதல் விண்ணப்பங்கள் வினியோகம் 
. இதற்கான விண்ணப்பங்கள், செப்டம்பர் 2 முதல் வினியோகிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப, அக்., 1ம் தேதி,
கடைசி நாள்.
 "தமிழகத்தில், போலீசாருக்கு உதவியாக, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர்
படை உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர்' என, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, சிறப்பு காவலர் இளைஞர் படை அமைக்க, கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது, தேர்வுக்கானஅறிவிப்பு, வெளியிடப்பட்டு உள்ளது. நவம்பர், 10ம்தேதி, எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தகுதி : சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;
திடகாத்திரமாக, நல்ல நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும்; தமிழகத்தில் வசிக்க வேண்டும்; 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். தேர்வு நடைபெறும் ஆண்டின், ஜனவரி, 1ம் தேதி, 25 வயது முடிந்திருக்கக் கூடாது; 
எஸ்.சி., - எஸ்.டி.,இளைஞர்களின் வயது வரம்பு, 30. 
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயது வரம்பு, 27.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர், 40 வயது வரை பணிபுரியலாம். 
ஒவ்வொரு மாதமும்,கவுரவத் தொகையாக, 7,500 ரூபாய் வழங்கப்படும். 
எழுத்து தேர்வு : தேர்வில் வினாக்கள்,நான்கு விடைகளில், ஒன்றை தேர்வு செய்யும் முறையில்
இடம்பெறும். வினாத்தாள் தமிழில் இருக்கும். 10ம்வகுப்பு நிலையிலான, பாடக் கேள்விகள்,
நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்து சைகைகள்,முதலுதவி குறித்த கேள்விகள் கேட்கப்படும். எழுத்து தேர்வில், குறைந்தபட்சம், 35 மதிப்பெண் பெற வேண்டும். தேர்ச்சி பெறுவோரில், மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கு ஏற்ப, 1:5 விகிதாசாரப்படி, அடுத்தக் கட்ட தேர்வான, உடல் தகுதி தேர்வுக்கு, விண்ணப்பதாரர் அழைக்கப்படுவர். 
விண்ணப்பம் : விண்ணப்பிக்க விரும்புவோர், 100 ரூபாய்க்கான தேர்வு கட்டணத்தை, மாவட்டத்தில் உள்ள,எஸ்.பி., அலுவலகங்களில் செலுத்தி, விண்ணப்பம் மற்றும் அறிவுரை கையேடினை, நாளை (2ம் தேதி) முதல்,காலை, 10:00 மணியிலிருந்து, 30ம் தேதி மாலை, 5:45 மணி வரை, அனைத்து வேலை நாட்களிலும், பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக விண்ணப்பத்தை பெற இயலாதோர், www.tnsurb.tn.gov.in, www.tnpolice.gov.in ஆகிய இணையதளங்களில், பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இவர்கள் விண்ணப்பிக்கும்போது, 100 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, விண்ணப்பிக்க விரும்பும், மாவட்ட எஸ்.பி., அல்லது மாநகர காவல் துணை கமிஷனர் பதவி பெயருக்கு எடுத்து, விண்ணப்பத்துடன் இணைத்து, இணையதளத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர், எந்த மாவட்டத்தை பணிபுரிய தேர்வு செய்கிறாரோ, அந்தமாவட்டத்திற்கு, விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை, வரும், அக்., 1ம் தேதி, மாலை, 5:45மணிக்குள் கிடைக்கும்படி, தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக