வியாழன், 23 ஜனவரி, 2014

நிகர்நிலை பல்கலை விவகாரம் : யு.ஜி.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


'போதிய அடிப்படை வசதிகள் இல்லை' என கூறி, "தமிழகத்தில் உள்ள சில
பல்கலைக் கழகங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள, 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களின்
அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு, சுப்ரீம்
கோர்ட்டில் அறிக்கை அளித்தது. இந்த வழக்கு, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது,
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட, 44 நிகர்நிலை பல்கலைகள் குறித்து, இரண்டு
மாதங்களுக்குள், யு.ஜி.சி., ஆய்வு செய்து, அது தொடர்பான ஆலோசனையை, மத்திய
அரசுக்கு அளிக்க வேண்டும். இதையடுத்து, மத்திய அரசு, இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக