வியாழன், 23 ஜனவரி, 2014

உலகின் மிகப்பெரிய 10 நூலகங்கள்


உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியலில் 10 நூலகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்கள்....
 லைப்ரரி ஆப் காங்கிரஸ் 
வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசியநூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம் அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது.தற்போது ஏறத்தாழ 3,21,24,001 புத்தங்கள் இடம் பெற்றுள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது. 

லைப்ரபி ஆப் ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ்
 ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் என்றுமிடத்தில் இந்நூலகம் அமைந்துள்ளது.1714ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான இந்தூலகம் உலகின் மிகப்பெரியநூலகங்களில் ஒன்றாகும். இதில் 2,05,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன. ரஷ்யன் ஸ்டேட் நூலகம் ரஷ்யாவி, மாஸ்கோவில் அமைந்துள்ளது இந்த நூலகம். 1862ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதில் 1,70,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன. 247 மொழிகளில் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல இசை மற்றும் பல வசதிகளைக்
கொண்டுள்ளது.

 பிரிட்டிஷ் நூலகம் லண்டனின் (பிரிட்டன்)
 உள்ள இந்த நூலகம் 1753ம் ஆண்டு கட்டப்பட்டது.மிகப்பெரிய நுலகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு ஏறத்தாழ 2,90,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ரஷ்ய தேசிய நூலகம் ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் என்னுமிடத்தில் உள்ள இந்த நூலகம் 1795ல்கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான இதில் 1,47,99,267
நூல்கள் இடம் பெற்றுள்ளன.

 வெர்நாட்ஸ்கி தேசிய அறிவியல் நூலகம்
 உக்ரைனின் தலைநகரமான கீவ்-ல் அமைந்துள்ள இந்நூலகம் 1919ல் கட்டப்பட்டது. 1,50,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அறிவியல் சம்மந்தப்பட்ட அதிகமான தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.இது மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.

 பூஸ்டன் பொது நூலகம்
 அமெரிக்காவில் உள்ள பூஸ்டர் நகரில் அமைந்துள்ளதால் இதற்கு பூஸ்டன் பொது நூலகம் என்று பெயர் வந்தது. 1895ல் கட்டப்பட்ட இந்நூலகத்தில் 1,57,60,879 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

 கனடா தேசிய நூலகம்
 கனடாவில் உள்ள ஒட்டவா என்ற இடத்தில் இந்நூலகம் அமைந்துள்ளது. 1953-ல் கட்டப்பட்ட இந்நூலகம் உலகின் மிகப்பெரிய நூலகங்களின் ஒன்றாகும். இதில் 1,95,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

 தேசிய நூலகம்
 ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் பகுதியில் அமைந்துள்ள இந்நூலகம் 1990ல் கட்டப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இதில்
2,22,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

 ஹார்வார்டு பல்கலைக்கழக நூலகம்
 அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள இந்த நூலகம் 1638-ல் கட்டப்பட்டுள்ளது. பழைய கட்டிட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 16மில்லியன் பதிப்புகள் இடம் பெற்றுள்ளன. 1,58,26,570 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இது உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக