வெள்ளி, 25 செப்டம்பர், 2015

கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும்அரசு பல வகைத்தொழில் நுட்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:–
மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், தரமான கல்வியை வழங்கும் நோக்கிலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்பொருட்டும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும்அரசு பல வகைத்தொழில் நுட்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.