வியாழன், 10 செப்டம்பர், 2015

பி.எட். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை ( செப்.11) கடைசி நாளாகும்

 தமிழகத்தில் உள்ள 7 அரசுக் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2 ஆயிரம் பி.எட் (கல்வியியல் இளங்கலை படிப்பு) இடங்கள் உள்ளன. பி.எட் படிப்பில் சேர குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 3-ம் தேதி முதல் இன்று மாலை வரை விநியோகம் செய்யப்பட்டு வந்தன. சென்னையில் 2 மையங்கள் உட்பட தமிழ்நாட்டில் 13 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழகத்தில் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, நேற்று வரை 7500 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நாளை ( செப்.11) மாலை 5 மணிக்குள் வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு இந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முதல் நாளான 28-ம் தேதி நடைபெறும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக